ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

மௌனி...:மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை நீண்ட முத்த மொன்றில் கழிப்பதுபோலத்தான்....

தமிழில் பிற எழுத்தாளர்கள் மொழியின் எல்லைக்குள் நின்றபடி, மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி மொழியின் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்.

இதில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், மௌனி தொடங்கிய இடமே மொழியின் எல்லைதான். பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அப்பால் எட்டிப் பார்க்க முயல்வதுபோல்.

மொழியை மீறிச் செல்ல முயன்றவர் என்று மட்டும் மௌனியை வர்ணித்தால் அது பெரும் பிழை. அனுபவத்தையும் சிந்தனையையும் மீற முயன்றவர் அவர். அதனால்தான், 'காதலின் வசீகரக் கடுமை', 'எவற்றின் நடமாடும் நிழல்கள்', 'வாழ்க்கை? ஒரு உன்னத மனவெழுச்சி' போன்ற அற்புதங்களெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன.

'நினைவுச் சுவடு' கதையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஒரு வீட்டு வாசலில் நிற்கிறான் நாயகன் சேகரன். வீட்டின் வாயிற்புறம் இருட்டாக இருக்கிறது அப்போது 'சேகரா- வரக் கூடாதா' என்ற அசரீரியான சப்தம் கேட்கிறது. அந்த சப்தம் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று மௌனி சொல்வது பேரற்புதம்: 'எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்!'

கால-வெளி

மௌனியின் தருணங்கள் காலமும் இடமும் முயங்கியவை, ஐன்ஸ்டைன் சொன்ன கால-வெளி போன்று. நகுலன் கவிதையில் வருவதுபோலக் காலம் இடமாகத் தெரியும் தருணங்கள் அவை.

மௌனியின் கதைகளைப் படிப்பவர் கனவுலகத்தில் நடமாடுவதுபோல உணர்வார். கனவைப் போன்று தர்க்கத் துக்குள் அகப்படாத சம்பவங்கள் மௌனியின் கதைகளில் நிறைய வரும். நாம் கனவு காணும்போது ஒரு சாதனம் நம் கனவை அப்படியே மொழி வடிவில் பிரதியெடுத்தால் எப்படி இருக்கும்?

அதைப் போன்றவைதான் மௌனியின் கதைகளும். ஆனால் வெறுமனே சம்பவங்களைக் குலைத் துப் போடுவதாலோ கால-வெளி பின்னணியைச் சரித்துவிடுவதாலோ மட்டும் மௌனி இதையெல்லாம் சாதிக்கவில்லை. அர்த்தமற்ற சம்பவங் களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்றுசேர்த்து ஒரு சரடுபோல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்குப் பிரதானக் காரணம். அர்த்தமின்மையின் கடலிலிருந்து திடீர் திடீரென்று தெறித்து விழும் மொழியின் அந்தத் தெறிப்புகள் அபாரமானவை.

பிரபஞ்ச ஒருமை

மொழியின் மீறல்கள், சிதைந்த கால-வெளி ஆகிய எல்லாவற்றுக்கும் அடியில் பிரபஞ்ச ஒருமையைப் பற்றிய ஆழ்ந்த தேடல் ஒன்று மௌனியின் கதைகளில் புதைந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா சப்தங்களையும் ஆழ்ந்த நிசப்தம் ஒன்றின் வெளிப்பாடுகளாகத்தான் அவர் காண்கிறார்:

'எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது.' 'மாபெரும் காவியம்' கதையில் தனது காவியம் அழிந்ததில் ஆனந்தப்படும் கிட்டு இப்படி உணர்கிறான்: "மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழை விட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும் 'அவன்' ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஆனந்தத்திற்காகவா?' இதேபோல், 'பிரபஞ்ச கானம்' சிறுகதையிலும், பிரபஞ்சமும், பிரபஞ்சத்தின் சப்தங்களும் காட்சிகளும் ஏதோ குறைவுபட்டவைபோல் தோன்றுகின்றன. காரணம்?

"அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டது… அவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்."

பிரபஞ்சமும் தன்னிடம் குறைவு பட்ட ஒன்றை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவளிடம் அடைபட்டுக்கிடக்கும் பிரபஞ்சத்தின் அம்சமும் ஆரம்பத்திலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. இறுதியில் பாடிப்பாடி பாடலின் முடிவில் உயிரை விடு கிறாள். பிரபஞ்சத்திடம் குறைவுபட்ட அம்சம் மறுபடியும் பிரபஞ்சத்தோடு இணைந்து கொண்டது. அப்போது 'உலகப் பேரிரைச் சல் ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது'.

பிரபஞ்சமும் பிரபஞ்ச அம்சமும் ஒன்றுதான் எனினும் ஏதோ ஒரு விஷயம் அவற்றைப் பிரிக்கிறது. பிறகு ஒன்றை யொன்று அடைய முயல்கின்றன. இதன் நிழலாட்டம்தான் வாழ்க்கையோ என்று மௌனி கேள்வி எழுப்பிவிட்டுச் செல்கிறார்.

நீண்ட முத்தத்தில் வாழ்க்கை

மௌனி கதைகளில் வரும் உறவுகள் விசித்திரமானவை. வழக்கமான உறவு களில்கூட அசாதாரணமான பிணைப்பை ஏற்படுத்திவிடுவார் மௌனி. 'சிகிச்சை' கதை அற்புதமான அன்பைச் சுமந்த கதை. சாகும் தறுவாயில் இருக்கும் மனைவி (கமலா) 'தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வை யில் பதித்துச் செல்ல முயலுவது போன்று' தன் கணவனைப் (சீனு) பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவள் இறந்த பின் தன் வாழ்க்கை எப்படிக் கழியும் என்று அரற்றிக்கொண்டிருந்த கணவனை அருகில் வரச் சொல்லி ஒரு முத்தம் அளித்துவிட்டு இப்படிச் சொல்வாள்:

"இப்போது தெரிந்ததா உங்களுக்குப் பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?" ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்.' இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் கோமதி ஆண்களையும் திருமணத்தையும் வெறுப்பவர். ஆனால், அவர் மனதிலும் ஒரு சலனம் ஏற்படுகிறது.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இவ்வளவு அன்பு இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. பிறகு, சீனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கோமதி இறுதியில் சொல்கிறாள்: "உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத்தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்.

"ஒருவரின் நினைவு எப்போதும் ததும்பி இருக்கும் மனது எவ்வளவு களங்கமில்லாத, அற்புதமான மனது! அதற்காகவே அந்த மனதைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மனது இன்னும் எவ்வளவு அற்புதமானது! அந்த உறவுதான் எவ்வளவு ஆனந்த வசீகரம்!

ஒருவரில் இன்னொருவரைக் காண்பது, ஒருவரின் இருத்தல் இன்னொருவரின் இருத்தலை (அந்த இன்னொருவர் இறந்துவிட்டாலும்கூட) நிஜப்படுத்திக்கொண்டிருப்பது, நீட்டித்துக்கொண்டிருப்பது என்பன தொடர்ந்து மௌனியின் கதைகளில் (மலைக்கோட்டை, பிரக்ஞை வெளியில், நினைவுச் சுழல், எங்கிருந்தோ வந்தான்) வரும்.

மௌனியின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும்போது 'தமிழர்கள் பாக்கியசாலிகள்' என்றார் க.நா.சு. தமிழ் மொழியின் சாத்தியங்கள் எவையெவை என்பதை ஒருவர் அறிய விரும்பினால் மௌனியின் கதைகளைப் படித்தே ஆக வேண்டும். ஒருவர் மகத்தான எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதற்கு 24 கதைகள் மட்டுமே போதுமா என்று மௌனியைப் படிக்காத ஒருவர் கேட்கலாம்.

ஆனால், அவரே மௌனியை ஊன்றிப் படிப்பாரெனில் ஒரு வாழ்க்கைக்கு இந்தக் கதைகள் மட்டுமே போதுமானவை என்றும் சொல்லத் தோன்றும். ஆம், மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை நீண்ட முத்த மொன்றில் கழிப்பதுபோலத்தான்.

-asaithambi.



பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுமா?

பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுமா? துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன்தெரிவித்ததாவது:
கல்லூரி, பள்ளிகள் இருக்கும் வரை பிஎட் படிப்புக்கான மவுசு குறையாது.முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது,1-5ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர்பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

6-ம்வகுப்பு முதல் வாய்ப்பு கொடுக்கப்படுவதால், பிஎட் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல வெளிநாடுகளிலும் தமிழக பிஎட் கல்விப்பாடத்திட்டத்தை பின்பற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீடிப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. துணைவேந்தர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக எங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம்.அதை வெளிப்படையாக கூறஇயலாது. என்றார் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன்.

B.Ed சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளிலுள்ள 2,169 B.Ed
இடங்களுக்கு விண்ணப்பிக்க 29 இடங்களில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது.
இதில் 10,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,169 தகுதியான
மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும். ஒற்றைச்சாளர முறையில் நெல்லை, மதுரை, சேலம்,
கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு முடிந்தவுடன் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

தமிழகத்தில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல்
கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர்
ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4)வெளியிடப்படும்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4)
வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம்பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்.

Source :dinamani reporter

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது.......ஆசிரியப் பட்டதாரிகள் ஏமாற்றம் !

அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ,
அதோ என்று டி.ஆர்.பி. தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறானவழக்குகள் என்று இழுத்துக்கொண்டு சென்றதால், அரசுப் பள்ளிகளுக்கானஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்யும்படி,தேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில், புதிய வெயிட்டேஜ் முறைப்படி, தேர்வெழுதியவர்கள்
ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதனையடுத்து, அதில் பிழைகள் இருந்தால் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜுலை 30ம் தேதி, தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என்று TRB தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஜுலை 30ம் தேதி இல்லையெனில், 31ம் தேதியாவது முடிவுகள் வெளியாகும், எப்படியாவது, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், TRB இணையதளத்தின் முன், தேர்வர்கள் தவமாய் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொறுமையின் எல்லைக்கே சென்றனர் தேர்வர்கள். ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து செய்தித்தாள்களிலும் இவ்வாறு செய்திகள் வெளிவந்தன. "தேர்வு செய்யப்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் 11,226 பேர் உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4,000 பேர் அடங்கிய பட்டியலையும் சேர்த்து, மொத்தம் 15,226 பேருக்கான இறுதி பட்டியல், ஆகஸ்ட் 1ம்
தேதி காலையோ அல்லது பிற்பகலிலோ வெளியிடப்பட்டு விடும்" என்பதுதான் அந்த செய்தி. அவற்றைப் படித்த தேர்வர்கள், மீண்டும் மகிழ்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். ஆனால், அன்றும், முழுநாள் தவம் கிடந்ததுதான்மிச்சம். முடிவுகள் வெளியாகவில்லை.
டி.ஆர்.பி. என்னதான் சொல்ல வருகிறது? என்று அவர்கள்கேள்வி எழுப்புகின்றனர்?

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது...

தேர்வர்கள் சிலர் கூறியதாவது: பி.எட்., முடித்து 10 ஆண்டுகள் ஏன், அதற்கும் மேலாக 20 ஆண்டுகளை கழித்தவர்கள்எல்லாம் உள்ளனர். இவர்களில், சாதி ஒதுக்கீடு, கலப்புத் திருமணம், ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய பல்வேறு சலுகைகள், TET தேர்வுமுறை கொண்டு வரப்படும் முன்னதாக, பிராந்திய மற்றும் DPI அளவில் சான்றிதழ்
சரிபார்ப்பை முடித்தவர்கள் என்று பல்வேறு முன்னுரிமை சலுகைப் பெற்றவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்காதா? எனமிகப்பெரிய ஏக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்.

புதிய பட்டதாரிகளின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை? கடந்தாண்டு அல்லது இந்தாண்டு பி.எட்., படிப்பை முடித்தவர்களுக்கு பெரிதாக எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை.
அவர்கள் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவுமில்லை. கடந்த 2012ம் ஆண்டு, அதே ஆண்டில் பி.எட்., முடித்த பலர், TETதேர்வையெழுதி, எந்தவித அனுபவமோ, அறிமுகமோ இல்லாமல், தகுதியான ஆசிரியர்கள் என்ற போர்வையில்,உடனடி பணி வாய்ப்புகளைப் பெற்றனர். மேலும், 2013ம் ஆண்டிலும், உடனடியாக TET தேர்வை நடத்தாமல், புதிதாக படித்துவரும் பி.எட்., பட்டதாரிகளும்
தேர்வையெழுத வேண்டும் என்று, பல்லாண்டுகளாக பி.எட்., முடித்து காத்திருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆகஸ்ட்மாதம் தேர்வை நடத்தியது டி.ஆர்.பி. இதனால், அந்த கல்வியாண்டில், வேறு மேற்படிப்புகள் எதிலேனும் சேரலாம்என்று நினைத்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்தது. எனவே, அனைத்துவித தகுதிகளையும், ஏன், தேவைக்கும் அதிகமான தகுதிகளைப் பெற்றிருந்தும், பல்லாண்டுகளாக அரசுப்பணிகளுக்கு ஏங்கி நிற்கும் நபர்களை மனதில் வைத்து, இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.தேவையின்றி, எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் என அவர்கள் ஆவேசமாய் தெரிவித்தனர

பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பளஉயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி,
கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணிபுரிகின்றனர். பகுதி நேரம் என்றாலும் அரசு நியமனம் என்பதால் தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த ஆசிரியர்கள்,அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர். சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும்கோரிக்கை விடுத்து வந்தனர்

இவர்களுக்கு 1.4.2014 முதல் 7,000 ரூபாய் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
'விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும், உடனடியாக ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து,இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர்தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என,
டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும்ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,
இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி.,வட்டாரம் உறுதியாக தெரிவித்தது.

இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள்
தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல்காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை,தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம்.அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும்
தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்
மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம்.
அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

சனி, 2 ஆகஸ்ட், 2014

மூக்கு கண்ணாடிக்கு டாட்டா...


அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) மற்றும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஆய்வாளர்களின் ஆய்வு வெற்றி பாதையில் நீளுமானால், மூக்கு கண்ணாடிக்கும், கான்டாக்ட் லென்ஸ்-க்கும் டாட்டா சொல்லிவிடலாம்.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில், ஒருவரின் பார்வைக் கோளாறை கணினி வழிமுறைப்படி சரிசெய்ய இயலும். பார்வை திருத்தும் காட்சிகள் (Visual correcting displays) என்ற தொழில்நுட்பத்தின் மூலம், கண்ணாடியின் உதவியோ, கான்டாக்ட் லென்ஸின் உதவியோ இல்லாமல் எழுத்துகளைப் படிக்கவும், படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடியும்.

அருகில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதற்குக் கூடச் சிரமப்படும் முதியோர்கள், இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கண்ணாடி இல்லாமல் சிறந்த பார்வை பெற முடியும். இதுகுறித்துக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரென் பார்ஸ்கை கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பத்தால், பிற்காலத்தில் மிகவும் கடினமான கண்பார்வைக் கோளாறுகளைக்கூடச் சரிசெய்ய முடியும்", என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தூரப் பார்வை கொண்டவர்கள் கண்ணாடி அணியாமல் பார்த்தால், மங்கலாகத் தெரியும் புகைப்படங்கள் சிலவற்றை, ஒரு கேமராவின் லென்ஸில் இந்தத் தொழில்நுட்பத்தின் முன்மாதிரியைப் பயன்படுத்தி பார்த்தபோது, மங்கலான படங்கள் தெளிவாகத் தெரிந்தன. "பார்வைக் கோளாறை திருந்துவதற்கு ஒளியியலைப் (optics) பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாங்கள் கணிக்கை முறையைப் (Computation) பயன்படுத்துவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு", என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஃபூசுங் ஹுவாங் தெரிவித்தார்.



நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,
தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், செப்., 1ம் தேதி ஆஜராக வேண்டும் என,'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கும்பகோணத்தில், கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் நடந்த தீ விபத்தில், 94 குழந்தைகள்
பலியாகினர். 14 பேர், தீக்காயம் அடைந்தனர். 2004ல், இச்சம்பவம் நடந்தது. இவ்வழக்கில், பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு, ஆயுள் தண்டனையும், தாளாளர் உள்ளிட்ட, எட்டு பேருக்கு,ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி, கடந்த மாதம், 30ம்தேதி தீர்ப்பளித்தார். 11 பேர், விடுதலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, போதியஇழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்
என்றும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்பராஜ் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை நியமித்து உத்தரவிட்டார். 2012ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தஉத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில், 'அப்பீல்' மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை,
நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, மனுவை, தள்ளுபடி செய்தது. கடந்த ஏப்ரலில், இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னும், ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் தொடர்பாக, தமிழக அரசு, எந்தஉத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, தலைமைச் செயலர், மோகன் வர்கீஸ் சுங்கத், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, இன்பராஜ், தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது,உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்திருப்பதாக, தமிழக அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின், 'அப்பீல்' மனுவை, கடந்த மாதம், 30ம் தேதி, உச்ச நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார்,ரவிச்சந்திரபாபு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தமிழரசன் ஆஜரானார். இவ்வழக்கில், செப்., 1ல் ஆஜராக,தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், பள்ளிக்கல்வித் துறை செயலர், சபீதா ஆகியோருக்கு, 'நோட்டீஸ்'
அனுப்ப, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.


Sent from my iPad

விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது

விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின்
சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது.இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்
நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.

சீர்திருத்த நடவடிக்கை
நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன்
அடைகிற விதத்தில்அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில்ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்தபல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில்அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.
சான்றளிப்பு முறை
அந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில்வேலை பெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும்விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை 'கெஜட்டட் ஆபிசர்ஸ்' என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவு பெற்றஅதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறை உள்ளது. இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடி அலைவதில் பொதுமக்களுக்கு நேரமும்,பயணச்செலவும் விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது. இந்தசான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர்
நரேந்திர மோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார். சுய சான்றளிப்பு அந்த வகையில் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப்பெற்று பயன்படுத்துவதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களே தங்களது சான்றிதழ் நகல்களை சுயசான்றளிப்பு செய்யும் நடைமுறை வருகிறது. நேர்முகத்தேர்வு போன்ற கடைசி கட்ட நடவடிக்கையின்போது,அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்து உறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
இதற்கான வழிவகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தவறு செய்தால் நடவடிக்கை
இந்த சுய சான்றளிப்பு முறையினைப் பயன்படுத்தி யாரேனும் தவறாகவோ, பொய்யாகவோ சுயசான்றளிப்பு செய்தால், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.


Sent from my iPad

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை ஆகஸ்ட் 14-ஆம்தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் கே.பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த பொதுநல மனு விபரம்: தமிழக அரசின் தொடக்கக்
கல்வி இயக்குநரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் மழலையர் பள்ளி நடத்த
வேண்டும். ஆனால், சென்னையில் செயல்படக் கூடிய 760 பள்ளிகள் அரசின்
அனுமதி பெறாமல், சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகள்
பெற்றோர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் பல
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, சென்னையில் சட்ட விரோதமாகச் செயல்படும் 760பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும்,
செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என
மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்திய நாராயணன்
ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சில பள்ளிகள் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட
தனியார் பள்ளிகள் சட்டம் எங்களுக்குப் பொருந்தாது எனவும், சிலர் நாங்கள்
பகல் நேர மையம் நடத்துகிறோம் எனவும், சிலர்ஏற்கெனவே எங்களுக்கு அங்கீகாரம் உள்ளது எனவும் பள்ளிகள் தரப்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நாங்கள் சரிபார்க்க முடியாது. இது அரசைப்பொருத்தது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தகால அட்டவணையை அரசு தலைமை வழக்குரைஞர் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த 25-ஆம்தேதி ஏற்கெனவே அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகும் அவர்கள்விதிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில் பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எனவே, விதிமுறைகளை பின்பற்ற கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, பள்ளியை மூடுவது தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்த காலஅட்டவணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய
வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Sent from my iPad

பள்ளி மாணவர்களுக்குஇலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது

அரசு, அரசு உதவி பெறும் இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக்காலணிகள், புத்தகப் பைகள் ஆகியவை இந்த ஆண்டு முதல் கடுமையான தரப்பரிசோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளன. இவற்றின் தரத்தை தனியார் ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த நிலையில், முதல்முறையாக இலவசப் பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்கும்பொறுப்பு மத்திய அரசு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்),காலணிகள் வடிவமைப்பு, மேம்பாட்டு நிறுவனம் (எஃப்.டி.டி.ஐ.) ஆகியமத்திய அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு நிலையிலும் இந்தப் பொருள்களின்தரத்தை உறுதிசெய்யும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக
வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம்வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி இலவசக்காலணிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் ரூ.120 கோடியில்செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார்ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசப் புத்தகப் பைகள் ரூ.150 கோடியில் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு வரை இலவசக் காலணிகள், புத்தகப்பைகளைப் பரிசோதனை செய்யும் பொறுப்பு தனியார் ஆய்வகங்களிடம்
வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்
என்பதற்காக மத்திய அரசு நிறுவனங்களிடம் தரத்தைப் பரிசோதிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள்கூறியது: இலவசக் காலணிகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஆணைகள் 6நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காலணிகளின் தரத்தைப்பரிசோதிக்கும் பொறுப்பு காலணி வடிவமைப்பு,மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், காலணிகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்குச் சென்று ஒவ்வொரு லட்சம் காலணிகளிலும் சில ஜோடி காலணிகளை எடுத்துப் பரிசோதிப்பார்கள். இதில் ஏதேனும்குறைபாடுகள் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட அந்தக் காலணியின் பிரிவில்(பேட்ச்) உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துக் காலணிகளும் நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு பெட்டியிலும் அந்தக் காலணி விநியோகிக்கப்பட வேண்டியமாவட்டம், பேட்ச் எண் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.பரிசோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்ட காலணிகள் போக மீதமுள்ளகாலணிகள் உள்ள பெட்டிகளில் எஃப்.டி.டி.ஐ. பரிசோதித்ததற்கானஹாலோகிராம் குறியீடு பொறிக்கப்படும். இந்தக் குறியீடு இடப்பட்டபெட்டிகள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்தான் பிரிக்கப்பட வேண்டும் என்கிறஉத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

காலணி விநியோகத்துக்குப் பிறகும் பரிசோதனை: மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்கு சிறிய, நடுத்தர, பெரியவகை காலணிகளில் வகை வாரியாக 5 ஆயிரம்காலணிகளுக்கு ஒரு ஜோடி காலணியை எடுத்து சென்னைக்கு அனுப்புமாஅந்தக் காலணிகள் மீண்டும் எஃப்.டி.டி.ஐ. நிறுவனத்துக்கு அனுப்பப்படும். காலணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்தப் பிரிவில் உள்ளஅனைத்துக் காலணிகளையும் தயாரிப்பாளரே மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகப் பைகள்: அதேபோல், புத்தகப் பைகளின் தரத்தை மத்திய பிளாஸ்டிக்பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகள் பரிசோதிப்பார்கள்.இந்தப் பைகளில் உள்ள இழைகளின் தரத்தை அறிய,அவற்றை அழுத்தத்துக்கு உள்படுத்துதல், எரித்தல் என பல்வேறு வகைகளில்சோதிக்கப்படும். பைகளில் ஏதேனும் குறை இருந்தால் அந்தப் பிரிவில் உள்ள புத்தகப் பைகள்அனைத்தும் நிராகரிக்கப்படும். காலணிகளில் இருக்கும் அனைத்துப்பரிசோதனைகளும் புத்தகப் பைகளுக்கும் பொருந்தும்.

கலர் பென்சில்கள்,கிரேயான்கள் உள்ளிட்டவற்றுக்கும் இதேபோன்ற சோதனை நடைமுறைகள்கடைப்பிடிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் விநியோகம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், புத்தகப் பைகள்விநியோகமும் அக்டோபருக்குள் முடிவடையும் என அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்

தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 114 பல்பொருள் அங்காடிகள்,நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 23 அமுதம் அங்காடிகள் என 137அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரூ.37.17கோடி செலவில் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

110வது விதியின் கீழ் அறிவிப்புகள்: 1,112 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்!

''கடந்த கல்வி ஆண்டில் உருவான, 1,112 கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்நிரப்பப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில், 10 ஏக்கரில், கல்வியியல்வளாகம், நிர்வாக வளாகம் ஆகியவை, 95 கோடி ரூபாயில் கட்டப்படும்.

மயிலாடுதுறை, மணல்மேடு பகுதியில், இரு பாலர்பயிலும், அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்படும்.

சென்னை அண்ணா பல்கலை முதன்மை வளாகத்தில், இளம்நிலை மாணவ, மாணவியர் விடுதி,
சென்னை பொறியியல் கல்லூரி நிர்வாக வளாகம், அக்கல்லூரி மாணவர்
விடுதி ஆகியவை, 30.70 கோடி ரூபாயில் கட்டப்படும்.

கடந்த 2013 - 14ல், பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால், அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் ஏற்பட்டுள்ள, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் நிரப்பப்படும்.

தமிழகத்தின், 13 பல்கலைக்கழங்கள், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள்ஆகியவை இணைய தளம் மூலம் இணைக்கப்படும்.இதற்காக, அண்ணா பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், மின்தொடர்பு நூலக களஞ்சியங்கள், இணைய தள வசதியுடன் அமைக்கப்படும்.பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும்
கல்லூரிகள், இந்த இணைய தளத்துடன் இணைக்கப்படும். மின் நூல்கள், இதழ்கள், ஒளிப் படங்களை, இதன்மூலம் பதவிறக்கம்செய்யலாம். இத்திட்டம், 1.86 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.
இவ்வாறு, அவர்அறிவித்துள்ளார்.


Sent from my iPad

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு புது பாடத்திட்டம்எப்போது?

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால்,ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.
கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன.ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களைஅமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அரசின் ஒப்புதலுக்கு...:
இதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்து முடித்ததும், தமிழக அரசின்ஒப்புதலுக்கு, கல்வித் துறை, கோப்பை அனுப்பியது. பல மாதங்கள் ஆகின்றன; இதுவரை ஒப்புதல்கிடைக்கவில்லை.

நடப்பு கல்வி ஆண்டில் (2014 - 15), பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டு (2015 - 16), பிளஸ் 2புதிய பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.பணிகள் முடியாததால், அடுத்தகல்வி ஆண்டில் (2015 - 16), பிளஸ் 1 பாடத் திட்டமும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2016 - 17) பிளஸ் 2
பாடத்திட்டமும்அறிமுகப்படுத்தப்படும் என, பின்னர் அறிவிக்கப்பட்டது. வரைவு பாடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின், பாடங்களை எழுதுவதற்கான குழுக்களை ஏற்படுத்தி, பாடங்கள் எழுத வேண்டும். இதற்கு, ஒரு ஆண்டு முழுமையாகதேவைப்படும்என, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
இது குறித்து, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்த ஆசிரியரில், ஒருவர் கூறியதாவது:பாடத் திட்ட தயாரிப்பு பணிகளை,மற்ற பணிகளைப் போல், வேகமாகச் செய்ய முடியாது. சிறிய தவறுகள் வந்தாலும், அது, மாணவர்கள் மத்தியில், தவறான
கருத்துக்களை கற்பிப்பது போல் ஆகிவிடும்.வரைவு பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில்,ஆறு மாதங்களுக்கு மேலாக இழுபறி உள்ளது. இதைப் பற்றி, முதல்வரிடம் எடுத்துக் கூற, அதிகாரிகள் தயங்குகின்றனர்.முதல்வரிடம், விவரத்தை தெரிவித்தால், அவர், உடனடியாக ஒப்புதல்அளிப்பார்.
நெருக்கடி கொடுத்தால்...:
பாடத் திட்டங்களை எழுத, குறைந்தபட்சம், ஒருஆண்டு தேவைப்படும். எழுதி முடித்த பின், பிழைகள் பார்ப்பது உள்ளிட்ட, பலபணிகள் உள்ளன. எனவே, இனிமேல், தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும், எங்களது பணியை,முழுமையாகச் செய்ய முடியாது.நெருக்கடி கொடுத் தால், புத்தகங்கள், முழு தரத்துடன் வெளி வராதுதமிழக அரசு,போதியநிதியை ஒதுக்கீடு செய்து, போதிய கால அவகாசம் தர வேண்டும். அப்போது தான், தரமான பாடத் திட்டங்களை தயாரிக்கமுடியும்.இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.திட்டமிட்டபடி, நடப்பாண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்தாமல், கால தாமதம் செய்வதால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.


Sent from my iPad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

Srmu 2 குறிப்பிசை


4.8.7 குறிப்பிசைi
 

எழுத்தாகவோ சொல்லாகவோ இல்லாத சில ஓசைகளை நாம் பேச்சில் பயன்படுத்துகிறோம் அவை குறிப்பிட்ட சில பொருள்களை (அர்த்தங்களை)  உணர்த்தப் பயன்படுகின்றன.  வீளை (Whistle),  முற்கு (முக்குதல்) போன்றவை அவை. அவற்றுடன் சோவென, கோவென, பளீரென,  படபடவென்று என்பன போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களும் பேச்சில் பயன்படுகின்றன. இத்தகையவை குறிப்பிசை எனப்படும். இவை செய்யுளிலும் வரும். செய்யுளில் வரும்போது ஏனைய சொற்களைப் போலவே சீர், தளை, அடி, தொடை பிழையாமல் அவற்றை அலகிட வேண்டும்.
 

(எ-டு)
பொள்ளென ஆங்கே புறம்வேரார்; காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

(திருக்குறள், 487)
 

மேற்கண்ட திருக்குறள் பாவில் 'பொள்ளென' எனும் சொல் 'உடனடியாக' எனும் பொருளைத் தரும் ஒலிக் குறிப்புச் சொல். பொள்/ளென என அசைபிரித்துக் கூவிளச் சீராகக் கொண்டு இதனை அலகிட வேண்டும்.
 

4.8.8 ஒப்பு
 

ஒப்பு =  ஒப்புமை.   புலவர்களின் செய்யுட்களில் சில யாப்பிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள சீர்,  தளை,  அடி,  பா,  பாவினம் ஆகியவற்றின் இலக்கணங்களிலிருந்து சற்றுத் திரிந்தும்,  மிகுந்தும், குறைந்தும் வருவதுண்டு.  அவற்றை என்ன செய்வது?  அத்தகைய செய்யுட்களை ஓரளவு ஒப்புமை  நோக்கி, ஒப்புமையுடைய செய்யுளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

(எ-டு)
கோழியும் கூவின குக்கில் குரல்காட்டும்
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியும் மன்னுவான் என்றேலோர் எம்பாவாய்.

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
 

மேற்காட்டிய பாடல் கலிவிருத்தத்தோடு ஓரளவு ஒத்துள்ளது.  கலிவிருத்தம் நான்கடியுடையது. இப்பாடல் ஐந்தடியாயினும் ஓரளவு ஒப்புமை நோக்கி இதனைக் கலிவிருத்தத்தில் அடக்கிக் கூறுவர்.
 

4.8.9 வண்ணம், புனைந்துரை, அடியின்றி நடப்பன ஆகியவை
 

இவ்விலக்கணங்கள் நூற்பாவில் நேரடியாகக் குறிப்பிடப்படாதவை.  உரையாசிரியர் இவற்றை விளக்கிக் கூறுகிறார். 
 

 வண்ணம்
 

வண்ணம் என்பதற்கு இசை என்பது பொருள்.  இசைப்பாடலை வண்ணப்பா என்று சொல்வர். பாக்களில் தோன்றும் இசை,  வண்ணம் ஆகும்.  அடிப்படையாக வண்ணம் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என ஐந்தாகும். இவை ஒவ்வொன்றும் 20 வகைப்படும். ஆக வண்ணம் மொத்தம் 100 ஆகும். இது அவிநயனார் போன்ற யாப்பிலக்கண ஆசிரியரின் பாகுபாடு.  தொல்காப்பியர் இருபது வண்ணங்களைக் கூறியுள்ளார்.  நூறு வண்ணங்களின் வகைமையை யாப்பருங்கலக் காரிகை உரையில் காண்க.
 

செய்யுளில் அமையும் எழுத்தொலிகளின் தன்மை கொண்டு வண்ணங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இங்குச் சிலவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் காண்போம்.
 

வல்லின எழுத்து மிகுந்து வருவது வல்லிசை வண்ணம் ஆகும்.
 

(எ-டு)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(திருக்குறள், 350) 
 

மெல்லின எழுத்து மிகுந்து வருவது மெல்லிசை வண்ணம் ஆகும்.
 

(எ-டு)
பொன்னின் அன்ன புன்னை நுண்தாது

(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)
 

நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடில் வண்ணம்.
 

(எ-டு)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

(திருக்குறள், 397)


Sent from my iPad

TRB PG TET TNPSC :எழுத்து - சொல்


எழுத்து - சொல்

     ஓரெழுத்துத் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது சொல் என வழங்கப் பெறும்.

சொல்லின் இரண்டு பிரிவுகள்

  • இலக்கண வகைச் சொற்கள்

  • இலக்கிய வகைச் சொற்கள்

  • இலக்கண வகைச் சொற்கள்

  • பெயர்ச்சொல்

  • வினைச் சொல்

  • இடைச்சொல்

  • உரிச்சொல்

  • இலக்கிய வகைச் சொற்கள்

  • இயற்சொல் 
    (சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)

  • திரிசொல் 
    (சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)

  • திசைச் சொல் 
    (அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)

  • வடசொல் 
    (பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)

  • இலக்கண வகையான நால்வகைச் சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ஒளவையார்

    இச்செய்யுளில் நான்குவகைச் சொற்களும் உள்ளன.

    ஆலயம் - பெயர்ச்சொல்
    தொழு - வினைச்சொல்
    சால - உரிச்சொல்
    உம் - இடைச்சொல்

    இவற்றை நினைவுபடுத்தி நெஞ்சகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.

    பகுபத உறுப்புகள்

         சொல், பதம், மொழி, கிளவி ஆகிய யாவும் சொல் எனப் பொருள் தரும் சொற்கள்.

         பகுக்கக் கூடிய சொல்லைப் பகுபதம் எனவும், பகுத்தால் பொருள் தராத (பகுக்க முடியாத) சொல்லைப் பகாபதம் எனவும் வழங்குவர்.

    பகுக்கக் கூடிய ஒரு சொல்லுக்கு ஆறு உறுப்புகள் உண்டு. அவற்றைப் பகுபத உறுப்புகள் என்பர்.

  • பகுதி

  • விகுதி

  • இடைநிலை

  • சாரியை

  • சந்தி

  • விகாரம்

  • ஆகிய ஆறும் பகுபத உறுப்புகள்.

    எடுத்துக்காட்டுகள் :

    விகுதி

    1. வாழ்க = வாழ் + க 
         (வாழ் - பகுதி ; க - விகுதி)

    இடைநிலை

    2. சொல்கிறேன் = சொல் + கிறு + ஏன் 
             (சொல் - பகுதி ; கிறு-இடைநிலை ; ஏன்-விகுதி)

    சந்தி

    3. படித்தேன் = படி + த்+ த்+ ஏன்
         (படி - விகுதி ; த்-சந்தி ; த்-இடைநிலை ; ஏன்-விகுதி)

    சாரியை

    4. படித்தனன் = படி + த் + த் + அன்+ அன்
         (படி-பகுதி ; த்-சந்தி ; த்-இடைநிலை ; அன்-சாரியை ; அன்-விகுதி)

    விகாரம்

    5. வாழ்ந்தனன் = வாழ்+ (ந்)த் + த் + அன் + அன்
         (வாழ்-பகுதி ; (ந்)த்-சந்தி ந்(த்)ஆனது விகாரம் ; த்-இடைநிலை ; 
    அன்-சாரியை ; அன்-விகுதி)

    மூன்று காலங்கள்

  • இறந்த காலம்

  • நிகழ்காலம்

  • எதிர்காலம்

  • காலங்காட்டும் இடைநிலைகள்

    இறந்தகால இடைநிலைகள் - த், ட், ற், இன்

    நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று

    எதிர்கால இடைநிலைகள் - ப், வ்

    எதிர்மறை இடைநிலைகள் - ஆ, ஆல், இல்

    பால் உணர்த்தும் விகுதிகள்

    ஆண்பால் - அன், ஆன்

    பெண்பால் - அள், ஆள்

    பலர் பால் - அர், ஆர், ப, மார்

    ஒன்றன்பால் - து, று

    பலவின் பால் - அ, ஆ

    வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, இய, இயர்

    பெயரெச்ச விகுதிகள் - அ, (உம்)

    வினையெச்ச விகுதிகள் - உ, இ

    வினைச் சொல்


         ஒரு பொருளின் (புடைபெயர்ச்சியை) செயலை (அல்லது) வினையைத் தெரிவிப்பது வினைச் சொல்.

    முடிவுபெற்ற வினைச்சொல் முற்று எனவும், முடிவு பெறாது எஞ்சி நிற்பது எச்சம் எனவும் படும்.

    தெரிநிலை வினைமுற்று

         செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் தெளிவாக உணர்த்துவது தெரிநிலை வினைமுற்றாகும்.

    குறிப்பு வினைமுற்று

         மேற்கூறிய ஆறினுள், கருத்தாவை மட்டும் விளக்கி, காலத்தைக் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினைமுற்றாகும்.

    ஐவகைத் தொகை நிலைத் தொடர்கள்

    வ. எண்ஐவகை தொகைதொகையின் விளக்கம்எடுத்துக்காட்டுகள்
    1வேற்றுமைத் தொகைவேற்றுமை 
    உருபு மறைந்து 
    வருவன 
    வேற்றுமைத் 
    தொகை.
    தண்ணீர்க் குடித்தேன் - "தண்ணீரைக் 
    குடித்தேன்" என்பது, 'ஐ' என்ற, 
    2ஆம் வேற்றுமை உருபு மறைந்து 
    வந்துள்ளது. இது போல்வன 
    வேற்றுமைத் தொகையாம். (நூல் 
    கற்றேன் ; பிணி மருந்து, வள்ளுவர் 
    நூல்)
    2பண்புத் தொகைபண்பை 
    விளக்கும் உருபு 
    மறைந்து 
    வருவது பண்புத் 
    தொகை.
    செந்தமிழ் - செம்மை + தமிழ் = 'மை' 
    என்ற பண்பு உருபு மறைந்து 
    வந்துள்ளது. இது போல்வன பண்புத் 
    தொகையாம்
    . 
    (வெண்குடை, 
    கார்மேகம், செந்தாமரை போல்வன)
    3உவமைத் தொகைஉவம உருபு 
    மறைந்து 
    வருவது உவமத் 
    தொகை.
    மயிலாட்டம் - மயில் (போலும்) 
    ஆட்டம். 'போலும்'என்ற உவம உருபு 
    மறைந்து வந்துள்ளது. இதுபோல்வன 
    உவமைத் தொகை. (பவளவாய், 
    கனிமொழி, போல்வன)
    4உம்மைத் தொகை'உம்' என்ற 
    இடைச்சொல் 
    மறைந்து 
    வருவது 
    உம்மைத்தொகை.
    "சொல் பொருள்" - சொல்(லு)ம் 
    பொருளும் இதில் 'உம்' என்ற இடைச் 
    சொல் மறைந்து வந்துள்ளது. 
    இதுபோல்வன, உம்மைத் தொகை. 
    (இரவுபகல், கபிலபரணர் போல்வன)
    5வினைத்தொகைமுக்காலமும் 
    மறைந்து வரும் 
    பெயரெச்சத்தை 
    வினைத்தொகை 
    என்பர்.
    குடிநீர் - (முன்பு) குடித்த நீர் ; 
    (இப்பொழுது) குடிக்கின்ற நீர் ; 
    (இனி) குடிக்கும் நீர் என 
    முக்காலமும் மறைந்து வருதலின் இது 
    வினைத் தொகை. இதுபோல்வன 
    வினைத்தொகையாம். (கடிநாய், 
    ஊறுகாய், எழுஞாயிறு, கொல்களிறு 
    போல்வன.

         ம

         பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு வகைச்
    சொற்களுக்கும் பொதுவான இலக்கணம் கூறும் பகுதியைப் பொதுவிலக்கணம் அல்லது
    பொதுவியல் என்று வழங்குவர்.

        இப்பகுதியில், அறுவகை வினாக்கள், எட்டு வகை விடைகள்  சுருக்கமான நினைவுபடுத்திக் கொள்க.

    எண்

    அறுவகை வினாக்கள்

    எடுத்துக்காட்டுகள்

    1

    அறிவினா

    ஆசிரியர் மாணாக்கரை நோக்கி, 
    "மனோன்மணீயத்தை இயற்றியவர் 
    யார்?" என்று வினவுதல்.

    2

    அறியா வினா

    "ஐயா ! இப்பாடலின் பொருள் 
    யாது?" என மாணவன் ஆசிரியரை 
    வினவுதல்.

    3

    ஐயவினா

    "அம்மரக்கிளையில் தொங்குவது 
    கயிறா? பாம்பா?" என ஐயமுற்று 
    வினவுதல்.

    4

    கொளல் வினா (ஒன்றினைக் 
    கொள்ளும் பொருட்டு 
    வினவும் வினா)

    "ஐயா ! பாண்டியன் பரிசு நூல் 
    உள்ளதா?" என்று (புத்தகத்தை 
    வாங்கும் நோக்கத்துடன் வினவுதல்).

    5

    கொடை வினா

    "வழிச் செலவுக்குப் பணம் 
    உள்ளதா?" என்று தந்தை மகனிடம் 
    வினவுதல் (செலவுக்குப் பணம் 
    கொடுக்கும் நோக்கத்தில் வினவுதல்)

    6

    ஏவல் வினா

    தம்பீ ! திருக்குறளில் 'கல்வி' 
    அதிகாரம் படித்தாயா? என 
    வினவுதல். (இல்லையேல் 'படி' 
    என்று ஏவுதல்பொருட்டு வினவுதல்)

    எட்டுவகை விடை

    எண்

    எட்டுவகை விடை

    எடுத்துக்காட்டுகள்

    1

    சுட்டு விடை

    "நூலகத்திற்குச் செல்லும் வழி 
    யாது?" என்னும் வினாவுக்கு 'இது' 
    (அல்லது) 'அது' எனச் 
    சுட்டிக்காட்டுதல் - சுட்டுவிடை.

    2

    மறைவிடை

    "உனக்கு இசை தெரியுமா?" 
    என்னும் வினாவுக்கு, "தெரியாது" 
    என்று எதிர்மறையாக விடை 
    கூறுதல் மறைவிடை

    3

    நேர் விடை

    "உனக்கு நீந்தத் தெரியுமா?" என்ற 
    வினாவுக்கு, "தெரியும்" என்று 
    உடன்பாட்டு முறையில் விடை 
    கூறுவது நேர்விடை

    4

    ஏவல் விடை

    "கடைக்குப் போய் வருவாயா? 
    என்னும் வினாவுக்கு, "நீயே போய் 
    வா" ! என்று கேட்டவரையே 
    ஏவுவது ஏவல் விடை.

    5

    வினா எதிர் வினாதல் விடை

    "நீ நாள்தோறும் படிப்பாயா? 
    என்னும் வினாவிற்கு, "நான் 
    படிக்காமல் இருப்பேனா" என்று, 
    எதிர்வினா எழுப்பி விடை கூறுவது 
    வினா எதிர் வினாதல் விடை 
    ஆகும்.

    6

    உற்றது உரைத்தல் விடை

    நீ தொலைக்காட்சி பார்த்தாயா? 
    என்னும் வினாவுக்கு, "கண்வலித்தது 
    என்று, முன்னர்த் தனக்கு 
    நிகழ்ந்ததைக் கூறுவது உற்றது 
    உரைத்தல் விடை
     ஆகும்.

    7

    உறுவது கூறல்

    நீ இந்த மலை ஏறுவாயா? என்னும் 
    வினாவுக்குக் 'கால் வலிக்கும்' எனத் 
    தனக்கு நேர விருப்பதை 
    விடையாகக் கூறுவது உறுவது 
    கூறல் விடை
     ஆகும்.

    8

    இனமொழி

    உனக்குக் கதை படிப்பது 
    பிடிக்குமா? என்னும் வினாவுக்குக் 
    "கவிதை படிப்பது பிடிக்கும்" 
    என்று, (கதைக்கு இனமானது 
    கவிதை) விடைகூறுவது இனமொழி 
    விடை
    யாகும்.

        வினா, விடைகளை இவ்வாறு பகுத்துக் காணும் திறம் தமிழ்மொழிக்குரிய சிறப்பாகும்
    என்பதனை மாணாக்கர் அறிக. 

        அன்பு மாணாக்கச் செல்வங்களே !

        ஒரு செய்யுளில் உள்ள சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ப
    அமைத்துக் கொள்ளும் முறைமையைப் பொருள்கோள் என்று வழங்குவர். இதனை
    ஆங்கிலத்தில் Prose order என்பர் என்று அறிக.

        பொருள்கோள் எட்டுவகைப் படும்.

    எண்

    எட்டுவகை பொருள்கோள்

    விளக்கம்

    1

    ஆற்றுநீர்ப் பொருள்கோள்

    ஓடுகின்ற ஆற்றின் நீரோட்டம் 
    போலச் செய்யுளில் உள்ள 
    சொற்கள் முன்பின் மாறாமல் 
    நேராகப் பொருள் கொள்ளும் 
    முறையில் அமைவது.

    2

    மொழிமாற்றுப் பொருள்கோள்

    செய்யுள் தரும் பொருளுக்குப் 
    பொருத்தமாகச் சொற்களை, ஒரே 
    அடிக்குள் மாற்றிப் பொருள் 
    காணும் முறைக்கு மொழிமாற்றுப் 
    பொருள்கோள்
     என்பது பெயர்.

    3

    நிரல்நிறைப் பொருள்கோள்

    (இது, முறை நிரல்நிறை, எதிர் 
    நிரல்நிறை என இருவகை) ஒரு 
    செய்யுளில் வரும் சொற்கள் முறை 
    பிறழாமல் நிரல் நிறையாக 
    (வரிசைமுறையில்) அமைந்து நிற்பது 
    நீரல்நிறைப் பொருள்கோள்.

    4

    பூட்டுவில் பொருள்கோள்

    ஒரு செய்யுளின் இறுதிச் சொல்லை, 
    முதற்சொல்லோடு சேர்த்துப் 
    பொருள் கொள்ளுதல், பூட்டுவிற் 
    பொருள்கோள்
     ஆகும்.

    5

    தாப்பிசைப் பொருள்கோள்

    (தாம்பு + இசை) கயிறு அசைவது 
    ஒரு செய்யுளின் நடுவில் உள்ள 
    ஒருசொல், ஊஞ்சல் கயிறு போன்று 
    முன்னும் பின்னும் சென்ற பொருள் 
    கொள்ளும் முறைமையைத் 
    தாப்பிசைப் பொருள்கோள் 
    என்பர்,.

    6

    அளைமறிபாப்புப் பொருள்கோள்

    (புற்றுக்குள் பாம்பு மடங்கிச் 
    செல்லுதல் போன்றது. அளை - 
    புற்று, மறி - மடங்கி, பாப்பு - 
    பாம்பு.) பாம்பு புற்றுக்குள் நுழைகிய 
    பொழுது தலையை மேலாகவும், 
    வாலைக் கீழாகவும் கொண்டு 
    செல்வது போல, செய்யுளின் 
    இறுதிச் சொல் அல்லது அடி கீழ், 
    மேலாய்ச் சென்று பொருள் தருவது, 
    அளைமறிபாப்புப் 
    பொருள்கோள்
    .

    7

    கொண்டு கூட்டுப்
    பொருள்கோள்

    ஒரு செய்யுளின் பல அடிகளுக்குள் 
    சிதறிக் கிடக்கும் சொற்களைப்
    பொருள் உணர்வுக்கேற்பக் 
    கொண்டு கூட்டிப் பொருள் காணும் 
    முறைமைக்கு, கொண்டு கூட்டுப் 
    பொருள்கோள்
     என்பது பெயர்.

    8

    அடிமறிமாற்றுப் பொருள்கோள்

    ஒரு செய்யுளின் அடிகளைப் பொருள் 
    உணர்வுக்கு ஏற்றபடி அமைத்துப் 
    பொருள் காணும் முறை 
    அடிமறிமாற்றுப் பொருள்கோள் 
    எனப்படும்.

        மாணாக்கர்களே !

        ஒரே அடிக்குள் சொற்களை முறை மாற்றிக் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள்.
    வெவ்வேறு அடியில் உள்ள சொற்களைக் கொண்டு கூட்டுவது கொண்டுகூட்டுப்
    பொருள்கோள் என்னும் வேறுபாட்டையும் அறிந்து கொள்க.

        இவ்வாறு, பொருள் கொள்ளும் முறைமையறிந்து செய்யுள்களுக்குப் பொருள்
    உணர்ந்தால், செய்யுள் சுவையை முழுமையாக உணரவும், இலக்கிய இன்பம் பெறவும்
    இயலும்.

    வேற்றுமை (Case)

    வேற்றுமை உருபுகள் (Case endings)

         பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும்.

    அவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவதற்கு பெயர்ச்சொல்லின் இறுதியில் வரும் உருபுகள்
    வேற்றுமை உருபுகள் எனப்படும்.

    இவ்வேற்றுமை எட்டு வகைப்படும். அவை :

    1)முதல் வேற்றுமை, (எழுவாய் வேற்றுமை)
      
    2)

    இரண்டாம் வேற்றுமை

      
    3)

    மூன்றாம் வேற்றுமை

      
    4)

    நான்காம் வேற்றுமை

      
    5)

    ஐந்தாம் வேற்றுமை

      
    6)

    ஆறாம் வேற்றுமை

      
    7)

    ஏழாம் வேற்றுமை

      
    8)எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

    எண்

    வேற்றுமைகள்

    வேற்றுமை உருபுகள்

    1

    முதல் வேற்றுமை (எழுவாய் 
    வேற்றுமை என்றும் பெயர்)
     
    (Nominative case)

    இதற்கு உருபு இல்லை

    2

    இரண்டாம் வேற்றுமை 
    (செயப்படு பொருள் 
    வேற்றுமை என்று பெயர்) 
    (Accusative case)

    இரண்டாம் வேற்றுமை உருபு - ஐ 
    (ஆக்கல், அழித்தல், அடைதல், 
    நீத்தல், ஒத்தல், உடைமை - ஆகிய 
    பொருள்களையுணர்த்தும்.)

    3

    மூன்றாம் வேற்றுமை 
    (Instrumental case)

    ஆல், ஆன், ஒடு, ஓடு - என்பன 
    உருபுகள். (கருவிப் பொருள், 
    கருத்தாப் பொருள், பொருள்களில் இவை வரும்.)

    4

    நான்காம் வேற்றுமை 
    (Dative case)

    நான்காம் வேற்றுமை உருபு - கு 
    (இது, கொடை, பகை, நட்பு, தகுதி, 
    அதுவாதல், பொருட்டு, முறை 
    என்னும் பொருள்களில் வரும்)

    5

    ஐந்தாம் வேற்றுமை 
    (Ablative case)

    ஐந்தாம் வேற்றுமை உருபுகள் - 
    இல், இன். (இவை நீங்கல், ஒப்பு, 
    எல்லை, ஏது என்னும் நான்கு 
    பொருள்களை உணர்த்தும்.

    6

    ஆறாம் வேற்றுமை 
    (Genitive case)

    அது, ஆது, அ- ஆகிய மூன்றும் 
    ஆறாம் வேற்றுமை உருபுகள். 
    (இவை, கிழமை (உரிமைப்) 
    பொருளை உணர்த்தும்.

    7

    ஏழாம் வேற்றுமை 
    (Locative case)

    இல், கண், இடம், உள், மேல் - 
    ஆகியவை ஏழாம் வேற்றுமை 
    உருபுகள். (இவை இடப்பொருளை 
    உணர்த்தும்)

    8

    எட்டாம் வேற்றுமை (விளி - 
    அழைத்தல் வேற்றுமை 
    என்றும் கூறுவர்) 

    (Vocative case)

    எட்டாம் வேற்றுமைக்குத் தனி 
    உருபு இல்லை.

    அறுவகைப் பெயர்கள்

         பெயர்ச் சொற்களை, அவையுணர்த்தும் பொருள் அடிப்படையில் ஆறு வகையாகப்
    பிரித்துக் கூறுவர். அவை :

    1

    பொருட்பெயர்
    2இடப்பெயர்

    3

    காலப் பெயர்

    4

    சினைப் பெயர்

    5

    குணப் (பண்புப்) பெயர்

    6

    தொழிற் பெயர்

    என்பனவாம்.

    எண்

    அறுவகைப் பெயர்கள்

    எடுத்துக்காட்டுகள்

    1

    பொருட்பெயர்

    இளங்கோ, யானை, கிளி, 
    நாற்காலி - போல்வன.

    2இடப்பெயர்கோவில், பள்ளி, குளம், தெரு, 
    வீடு - போல்வன

    3

    காலப் பெயர்

    குளிர்காலம், வைகறை, தைத் 
    திங்கள், வெள்ளிக்கிழமை - 
    போல்வன

    4

    சினைப் பெயர்

    தலை, பூ, கொம்பு, வால் - 
    போல்வன.

    5

    பண்புப் (குணப்) பெயர்

    வெண்மை, சதுரம், அன்பு, இனிப்பு - 
    போல்வன.

    6

    தொழிற் பெயர்

    படித்தல், ஆடுதல், விளையாடுதல், 
    தேடுதல் - போல்வன

    ஆகுபெயர் (Metonymy)

         ஒரு பொருளினுடைய இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு
    தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவருவது ஆகுபெயர்
    எனப்படும்.

    எண்

    ஆகுபெயர்

    எடுத்துக்காட்டுகள்

    1

    பொருளாகு பெயர்

    "மல்லிகை மலர்ந்தது"- (மல்லிகை 
    என்னும் சொல், வேர், செடி, சிலை, 
    மலர் ஆகிய அனைத்தையும் 
    உணர்த்தும். ஆயினும், இங்கு 
    அதன் சிறப்பாகிய மலரை மட்டும் 
    உணர்த்தி வருவதால் இதனைப் 
    பொருளாகு பெயர் என்பர்.

    2

    இடவாகுபெயர்

    "தலைவரை வரவேற்க, ஊரே 
    திரண்டது
    ."- (ஊர் என்ற 
    இடப்பெயர் ஊரிலுள்ள மக்களுக்கு 
    ஆகிவந்தது.)

    3

    காலவாகு பெயர்

    "டிசம்பர் பூத்தது" - (டிசம்பர் 
    மாதத்தில் பூக்கும் பூ, பூத்தது 
    எனக் காலத்தின் பெயர் 
    அக்காலத்தில் பூக்கும் பூவுக்கு 
    ஆகி வந்தது.)

    4

    சினையாகு பெயர்

    "விளையாடுவதற்கு ஒரு கை 
    குறைகிறது"-இத்தொடரில் 'கை' 
    என்ற உறுப்பின் பெயர், 
    முழுமையான ஒரு மனிதனைக் 
    குறித்து வருகிறது.)

    5


    குணவாகு பெயர்

    (பண்பாகு பெயர்)

    "காவி அணிந்தார்" - 
    (இத்தொடரில் காவி என்பது, 
    நிறத்தைக் குறிக்காமல் 
    அந்நிறத்திலுள்ள ஆடையைக் 
    குறித்தது.)

    6

    தொழிலாகு பெயர்

    "வற்றல் எனக்குப் பிடித்த உண் 
    பொருள்" - (இத்தொடரில், வற்றல் 
    என்னும் தொழிற்பெயர் அதனை 
    உணர்த்தாமல் அத்தொழிற்பட்ட 
    உண்பொருளுக்கு ஆகி வந்தது.)

     

     

    பட்டதாரி ஆசிரியர்கள் :அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்வர்கள் ஆவல்!

    பட்டதாரி ஆசிரியர்கள் :அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்வர்கள் ஆவல்!
    இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில்(www.trb.tn.nic.inவெளியிடப்படும் என்று தெரிவித்தார். The hind

    நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம்தெரிவித்தது. எனவே, 11,226 பேர் அடங்கிய,
    இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

    எனவே அதிகரிக்கவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு பட்டதாரி எனஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    செப்.30ம் தேதி வரை மாணவர் சேர்க்கலாம்

    6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த காலஅவகாசம் வழங்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குனரின் உத்தரவில்கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி மாணவர் சேர்க்கைக்கானகாலக்கெடு பொதுவாக ஜூலை 31ம் தேதி வரை ஆகும். எனினும் 201415ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம்தேதி வரை நீட்டித்து ஆணையிடப்படுகிறது.

    இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்

    இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய,
    இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar

    இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu

    இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani

    மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    TET PAPER I:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

    TET PAPER I:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று
    வருகிறது
    இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    பட்டதாரி ஆசிரியர் : இறுதி தேர்வு பட்டியல் இன்று ( 01.08.14 )பிற்பகல் வெளியிடப்படும்

    பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும்மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும்அறிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில்(www.trb.tn.nic.inவெளியிடப்படும் என்று தெரிவித்தார்