ஞாயிறு, 22 மார்ச், 2015

PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை வரும் 28.03.2015 ல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு இப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்.

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும் தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும்

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 8508774178

ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் , ஜாக்டோ முடிவு


ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

 சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்  நடத்த ஜாக்டோ முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச்30ம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது

 

வாட்ஸ் அப்பில் கணித தேர்வு வினாத்தாள்: அரசு தேர்வுகள் இயக்குனர் விரைவில் விசாரணை

'வாட்ஸ் அப்'பில் கணித வினாத்தாள் 

தமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை 'வாட்ஸ் அப்' மூலம் சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பப்பட்டது.

4 ஆசிரியர்கள் கைது 


 இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆவார்கள்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஊத்தங்கரை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்வி அதிகாரிகள் விசாரணை 


கணித பாடத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய விவகாரம் குறித்தும், மேலும் இதில் யார்–யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 ஓசூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஓசூருக்கு வர இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கணித தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட முறைகேடு பற்றி சென்னையில் நேற்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு தினங்களில் தான் ஓசூர் செல்ல இருப்பதாக தெரிவித்தார். என்றாலும் கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

118 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் 


இந்தநிலையில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய வேறு பள்ளிகளைச் சேர்ந்த 68 ஆசிரியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நடவடிக்கை எடுத்து உள்ளார். அவர்களுக்கு பதிலாக நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள பிளஸ்–2 தேர்வுக்கு ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி தேர்வு அறைகளுக்கு தலா 2 பேர் வீதம், 88 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள அதே ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு பள்ளியில் 25 தேர்வு அறைகளுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்த 50 ஆசிரியர்கள் அங்கிருந்து மாற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு பதிலாக 50 கண்காணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுதவிர மாவட்டம் முழுவதும் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்களை தேர்வு மைய கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? 


இந்த முறைகேடு தொடர்பாக, மகேந்திரன் உள்ளிட்ட 4 ஆசிரியர்களும் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில், பிளஸ்–2 தேர்வு நடந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகேந்திரன் செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சோதனை செய்து பார்த்த போது, கணித தேர்வு வினாத்தாள், புகைப்படம் எடுக்கப்பட்டு சிலருக்கு அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் அதில் அனுப்பப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் பிறரிடம் இருந்து அவருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் வந்து உள்ளது. அந்த விடைகளை தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வு மையங்களில் பணியாற்றும் வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள், தங்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதிய, விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்களில் ஒரு சிலருக்கு அந்த விடைகளை தெரிவித்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதற்காக அந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம்.

அழிக்கப்பட்ட தகவல்கள் 


இதன் மூலம் தாங்கள் வேலைப்பார்க்கும் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய, தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக சென்ற ஆசிரியர்கள் இந்த 'வாட்ஸ் அப்' தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் மகேந்திரன் அனுப்பிய 'வாட்ஸ் அப்' மெசேஜ் மூலம் அவருடைய பள்ளி மாணவர்கள் விடைகள் எழுதினார்களா? என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

ஆசிரியர் மகேந்திரனை பிடித்த சிறிது நேரத்திலேயே, அந்த 'வாட்ஸ் அப்' தகவல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்று கண்காணித்தோம். அதில் சிலரது செல்போன் எண்களில் வினாக்கள் மற்றும் விடைகள் எடுத்த பிரதிகள் அழிக்கப்பட்டு (டெலிட்) இருந்தது தெரிய வந்தது.

'வாட்ஸ் அப்'பில் வந்த தகவல்களை அழித்து விட்டால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணி உள்ளார்கள். வல்லுனர்களை அணுகி, ''ரெக்கவரி சாப்ட்வேர்'' மூலமாக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்ப எடுக்க இருக்கிறோம்.

 வழக்கு பதிவு 


வினாத்தாளை பிரதி எடுத்து அனுப்பியது, விடைகளை தயார் செய்து, அந்த நகலை பிரதி எடுத்து 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியது என்று இந்த விவகாரத்தில் சுமார் 20 முதல் 30 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது கைதான 4 பேர் மீதும், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

பள்ளிக் கல்வி :1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான கலந்தாய்வு வருடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும். முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்தமாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும்போது
1.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,
2 தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று,
3. அசல் கல்விச் சான்றிதழ்கள்

உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றே மாதங்களில் பணி நியமனம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1.90 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வருகிற 28-ஆம் தேதி பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தேர்வு நடைபெற்ற பிறகு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனத்துக்கும்குறைந்தது 6 மாதங்கள் ஆகும். ஆனால், 1,789 ஆசிரியர்கள் 3 மாதங்களில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

வாட்ஸ் அப் மூலம் பிளஸ் 2 வினாத்தாளை கசியவிட்ட விவகாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 131 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

வாட்ஸ் அப் மூலம் பிளஸ் 2 வினாத்தாளை கசியவிட்ட விவகாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 131 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப் பேசியின் வாட்ஸ் அப் மூலம் கசியவிட்ட விவகாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 தனியார் பள்ளிகளில் தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக இருந்த 131 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட 5 பள்ளிகளிலும் வரும் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ள தேர்வுகளில் ஓர் அறைக்கு 2 பேர் வீதம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் தின்னூரில் தனியார் பள்ளி உள்ளது. கடந்த 18-ஆம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வு நடந்தபோது இங்கு கண்காணிப்பாளராக இருந்த ஒசூர் தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் சக ஆசிரியர்களான கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பினார். இது தொடர்பாக ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் தனியார் பள்ளித் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களையும்,வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளி, அதன் குழுமப் பள்ளி என மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 93 கண்காணிப்பாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி கூறியது: கணித வினாக்களுக்கான விடைகள் மாணவர்கள் சிலருக்குத் தெரிவிப்பதற்காக செல்லிடப்பேசியில் இருந்து கணித வினாத்தாள் புகைப்படம் எடுக்கப்பட்டு வாட்ஸ் அப் மூலம் சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலரது செல்லிடப்பேசி எண்களில் இருந்த வினா, விடைகள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட தகவல்களைத் திரும்ப எடுக்க உள்ளோம். இப்பிரச்னையில் சுமார் 20 முதல் 30 பேருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது கைதான ஆசிரியர்கள் 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார். ஒசூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் இருந்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஒசூர் வருகை தர உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில்...: கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிக் குழுமத்தினருக்கு தருமபுரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் உள்ளன. இந்த 2 பள்ளிகளின் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களாக இருந்த 38 பேரும் இரு பள்ளிகளிலும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக இருந்த 2 பேரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார். இவர்களுக்குப் பதிலாக வரும் திங்கள்கிழமை முதல் நடைபெறும் தேர்வுகளுக்கு ஒவ்வொரு தேர்வறைக்கும் தலா 2 பேர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மகேஸ்வரி தெரிவித்தார்.

அமெரிக்க உளவியல் நிபுணர், சமூக நடத்தைகள் ஆய்வாளர் பர்ஹஸ் ஃபிரெடரிக் ஸ்கின்னர்


அமெரிக்க உளவியல் நிபுணர், சமூக நடத்தைகள் ஆய்வாளர் பர்ஹஸ் ஃபிரெடரிக் ஸ்கின்னர் (Burrhus Frederic Skinner) பிறந்த தினம்  மார்ச் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் பென்சில்வே னியா மாநிலத்தில் (1904) பிறந்த வர். ஹாமில்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது எழுத்தில் ஆர்வம் பிறந்தது. கவிதைகள், சிறுகதைகள் எழுதி னார்.

* 1926-ல் பட்டம் பெற்ற பிறகு, முழு நேர எழுத்தாளராக விரும்பினார். முயற்சி கைகூடாததால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அப்போது, விலங்குகள் நடந்துகொள்ளும் விதங்கள் குறித்து ஆராய்ந்தார்.

* சரியான நடத்தை முறை உத்தியை (Behavioral Technique) பயன்படுத்தி, மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை மேம்படுத்த முடியும் என்று நம்பினார். விளைவுகளைப் பொருத்தே உயிரினங்களின் நடத்தை முறைகள், எதிர்வினைகள் அமைகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். உயிரினங்களின் நடத்தையை பகுப்பாய்வு செய்து அறிய உதவும் ஆபரன்ட் கண்டிஷனிங் (Operant Conditioning) என்ற ஆய்வக சாதனத்தை மேம்படுத்தினார்.

* இதற்காக ஆபரன்ட் கண்டிஷனிங் கூண்டு ஒன்றை உருவாக்கினார். இது 'ஸ்கின்னர் பாக்ஸ்' எனப்படுகிறது. எலிகள், புறாக்கள் ஆகியவை வாழும் சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை இதன் உதவியுடன் ஆராய்ந்தார்.

* சூழலுக்கு ஏற்ப அவை தங்களது நடத்தை முறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்கின்றன என்பதையும் கண்டறிந்தார். இதில் கண்டறிந்தவற்றைத் தொகுத்து 'தி பிஹேவியர் ஆர்கானிசம்ஸ்' என்ற கட்டுரையை வெளியிட்டார். நடத்தை உளவியல் குறித்து 21 புத்தகங்கள், 180 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

* இண்டியானா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைத் தலைவராக 1945-ல் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் கழித்து ஹார்வர்டு திரும்பினார். இறுதிவரை அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

* தனது கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட சமுதாயத்தை விவரிக்கும் 'வால்டன் டூ' என்ற நாவலை எழுதினார். 'குழந்தைகளுக்குப் பொருத்தமான பரிசுகள், தண்டனைகள் வழங்கி அவர்களது பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ள உதவுங்கள். அதன்மூலம், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும்' என்று இந்த நாவலில் கூறியுள்ளார். குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முறை குறித்து ஆராய்ந்தார். 'தி டெக்னாலஜி ஆஃப் டீச்சிங்' என்ற நூலை எழுதினார்.

* சமுதாய, மனித நடத்தை முறைகள் தொடர்பான இவரது பல கோட்பாடுகள் சர்ச்சைகளைக் கிளப்பின. அதே நேரம், நடத்தை முறை உளவியல் களத்தில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற இவரது ஆய்வுகள் அடித்தளமாக அமைந்தன.

* இவரது பல கோட்பாடுகள் அதிகம் பயன்படுத்த முடியா மல் போனாலும் இவரது நேர்மறை வலுவூட்டும் உத்தி (Positive Reinforcement Technique) இவரை அடையாளப் படுத்தும் முக்கிய கோட்பாடாகப் புகழப்படுகிறது.

* பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். சிக்மண்ட் ஃபிராய்டுக்குப் பிறகு சிறந்த உளவியலாளராக புகழ்பெற்ற பி.எஃப்.ஸ்கின்னர், 86 வயதில் (1990) மறைந்தார்.


 

சனி, 21 மார்ச், 2015

TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் நீதிமன்ற வழக்குகள்?

திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது.
.ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வுகட்டாயமாக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெற அவகாசம்கொடுக்கப்பட்டது. அந்த காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகின்றது. 2012 ல் இரு முறையும் 2013 அம் ஆண்டு ஒரு முறையும் தேர்வு நடந்தது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம்
செய்வதிலும் அதில் பின்பற்றப்படும் முறைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள காரணத்தினால் 2014ஆம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பே வெளியாகாமல் இருக்க, 2015 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு நேரமும் நெருங்கி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதாவிடம் விளக்கம் கேட்டபோது நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதாகவும், இந்தாண்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விளக்கமேதும் கொடுக்கப்படவில்லை. இதனிடையே, இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், வெயிட்டேஜ் முறை நீக்கப்பட வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம்

ஓசூரில், ப்ளஸ் 2 வினாத்தாளை, "வாட்ஸ்- அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து,
தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம்
செய்யப்பட்டனர்.ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 18ம்
தேதி நடந்த ப்ளஸ் 2 கணிதத்தேர்வின் போது, தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த, ஓசூர்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், கணித வினாத்தாளை,
மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து, அதனை தனது சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, "வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பினர்.இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்களும்கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் பணியாற்றி வந்த தனியார் பள்ளியில், தேர்வு மையகண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, 68 ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பதிலாக, , ப்ளஸ் 2 தேர்வுக்கு, ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள, 44 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 88 ஆசிரியர்களும், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள, 25 தேர்வுஅறைகளுக்கு, தலா இருவர் வீதம், 50 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆசிரியர் பயிற்றுனர்களும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், தேர்வு முடிந்த பின்னர், மீண்டும் மாற்றப்படுவார்கள் என, சி.இ.ஓ., ராமசாமி தெரிவித்தார்.தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர், தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியதாக, ஒரே பள்ளியைச் சேர்ந்த, நான்கு ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியதாக, ஒரே பள்ளியைச் சேர்ந்த, நான்கு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும், கடந்த, 5ம் தேதிமுதல், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. ஓசூர் கல்வி மாவட்டத்தில், 9,206 மாணவ, மாணவியர், 17 மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர். பொதுத் தேர்வில், காப்பி அடிப்பதைத் தடுக்க, முறைகேடுகளை கண்காணிக்க, பள்ளி கூடுதல் ஆய்வாளர் சென்னீரப்பன் மேற்பார்வையில், பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர், -தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, தின்னுார், பரிமளம்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 18ம் தேதி காலை, கணிதத் தேர்வு நடந்தது. இந்த மையத்தில், 323 பேர் தேர்வு எழுத இருந்தனர். பள்ளியில் இருந்த, 14 வகுப்பு அறைகளில், ஒரு அறையில் மட்டும், 20 மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அந்த அறையில், ஒரு மாணவன் மட்டும் தேர்வு எழுத வரவில்லை.அந்த அறையில், தேர்வு கண்காணிப்பாளராக, ஓசூர், பாகலுார், ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் பணியாற்றினார். தேர்வு துவங்கிய சிறிது நேரத்தில், அவர், மொபைல் போன் மூலம், தேர்வுக்கு வராத மாணவனின், வினாத்தாளை புகைப்படம் எடுத்தார். அதை, 'வாட்ஸ் அப்' மூலம், மத்துாரில் உள்ள, ஒரு தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய, அதே பள்ளி ஆசிரியர் உதயகுமார் என்பவருக்கு அனுப்பினார். அதை மேலும், இருவருக்கு அனுப்பினார்.

பரிமளம் மெட்ரிக் பள்ளிக்கு வந்த, சி.இ.ஓ., ராமசாமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில், தேர்வு கண்காணிப்பாளர் மகேந்திரனை சோதனை செய்தனர்.அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில், மொபைல் போன் இருந்தது. தேர்வு மையத்திற்குள் விதிமுறைகளை மீறி, மொபைல் போன் எடுத்து வந்தது குறித்து, பறக்கும் படை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மொபைல் போனை வாங்கி சோதனை செய்த போது, அதில், 'வாட்ஸ் அப்' மூலம், கணிதத் தேர்வு வினாத்தாள் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு மைய கண்காணிப்பு பொறுப்பாளரான, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ முருகனிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.இ.ஓ., ராமசாமி, கொடுத்த புகாரின் பேரில், எஸ்.பி., கண்ணம்மாள் விசாரணை நடத்தினார். இதில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், கணித வினாத்தாளை அனுப்பியதும், பெற்றதும் தெரிய வந்தது.நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்; ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், ஓசூர் தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் சம்பத்குமார் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் கூறியதாவது :இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு நடக்கும் அனைத்து பள்ளிகளும், ஓசூர், சப் - கலெக்டர் தலைமையில், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு, கலெக்டர் கூறினார். இந்த விவகாரத்தில், எத்தனை மாணவர்பயன் அடைந்தனர்; இதே போல், எந்தெந்த தேர்வுக்கு, 'வாட்ஸ் அப்' மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டது என்பது குறித்து, போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குறிப்பிட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா : ஆசிரியர் மகேந்திரன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் அப்' மூலம், மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட காட்சிகள், தேர்வு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதை, பரிமளம் பள்ளி நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர்.
ஆனால், இதை உறுதிப்படுத்த போலீசார் மறுத்து விட்டனர்.
ஆசிரியர் மீது என்ன நடவடிக்கை?
ஆசிரியர் மகேந்திரன் கைது செய்யப்பட்டதுடன், அவரை, 'டிஸ்மிஸ்' செய்ய, தனியார் பள்ளிக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் காப்பியடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது. இப்போது ஆசிரியர் பிடிபட்டதால், அவரின் படிப்பு சான்றிதழை, சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கலாமா என, கல்வித்துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அறை கண்காணிப்பாளர் நியமனம், பறக்கும் படை சோதனையில் பாரபட்சமான நிலை உள்ளது. அரசு பள்ளி மாணவர் என்றால் தீவிரமாக சோதிக்கின்றனர். தனியார் பள்ளி தேர்வு மையங்கள், தனியார் பள்ளி மாணவர்கள் எழுதும் அரசுப் பள்ளி தேர்வு மையங்களை, கண்டும் காணாமல் செல்கின்றனர். இதனால், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மட்டும், பறக்கும் படையிடம் பிடிபடுகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வேறு மாவட்ட தேர்வுப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் அருகருகிலேயே தேர்வுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்கேட்டிங்கில் உலக சாதனையை முறியடித்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி

குழந்தைபருவத்தில் 60 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து புதிய வரலாறு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி, 60 மீட்டர் தூரத்தை 7நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

PG TRB 2013-14 AND 2014-2015 பணி நியமன ஆணை மார்ச்28.

TRB NEWS: TRB releases the fresh C.V list in the 1:1 ratio for the unfilled notified vacancies in the subject English, Physics, Chemistry, Botany, Maths, History, Economics and Commerce.



  

Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2013 - 14 and 2014 - 15

    

Provisional Result and Certiificate Verification List  for the subject Physical Director Grade I.

 As per the Notification No.8/2014 published on 07.11.2014, the Board conducted  Written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts on 10.01.2015 and provisional selection list  for the same was  published on 25.02.2015.

Now, the Board  releases the result for the subject Physical Education Director Grade I  and provisional list of candidates called for C.V  in the 1:1 ratio following communal rotation.

Board also releases the fresh C.V list in the 1:1 ratio for the unfilled notified vacancies in the already publishing provisional results for the subject English, Physics, Chemistry, Botany, Maths, History, Economics and Commerce.  Board also decided on humanitarian grounds to offer one more opportunity as final one for those absentees who are eligible to be consider for the said unfilled vacancies in the already published provisional selection list.

Board proposes to conduct C.V for the above mentioned vacancies on 10.04.2015 at the office of the Chief Educational Officer, Villupuram. The individual call letter will be uploaded separately.

This  is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras.

  Utmost care has been taken in preparing the list and in publishing it.  Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.  Incorrect list would not confer any right of enforcement.


பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்படி ?

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம்மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். பொதுவாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய பணியில்சேர்ந்த தேதி மற்றும் தகுதிகாண்பருவம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். ஆனால் சில ஒன்றியங்களில் தேர்வு வாரியம் மூலமாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி காண்பருவம் பற்றி எடுத்து கொள்ளாமல் நியமன தேதியை மட்டும் எடுத்துக்கொண்டு தகுதிகாண்பருவம் முடித்த பதவி உயர்வு ஆசிரியர் களுக்கு முன்னாள் வைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - இது தவறு.தொடக்க கல்வி இயக்குனர் செயல் முறைகள் ந. க. எண் 36679/ டி 3/2008, நாள்18. 11. 2008 ன்படி01.06.2006 அன்று முதல் பணியில் சேர்ந்ததாகக் கொண்டும் தகுதிகாண் பருவத்தையும்
கணக்கில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்வாணைய ஆசிரியர்களுக்கு நியமன தேதி அடிப்படையில் மட்டும் முன்னுரிமை நிர்ணயம் பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே. தொடக்க கல்வி துறைக்கு அல்ல.தகவல் அறியும் உரிமை மூலமும் தகவல் பெறப்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி!

தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்தகல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
. தமிழகத்தில் 5000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் மட்டும் சுமார் 30 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் தங்களின் பள்ளிகளின் பெயர்பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு கூடுதலாக சில பாடங்களை வைத்து அதை நடத்துகின்றனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும்என்பதற்காக 10ம் வகுப்பு பாடங்களை 9ம் வகுப்பிலும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களை பிளஸ் 1 வகுப்பிலும் முன்கூட்டியேநடத்துகின்றனர்.இதனால் பத்தாம் வகுப்பு பாடங்களையும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் 2 ஆண்டுகள் படிக்க
வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அந்த வகை பாடங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்யும்படியும் ஆகிறது. இது மாணவர்களின் மன நிலையை பாதிப்பதாக இருக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் அதுகுறித்து தனியார் பள்ளிகள் கண்டு கொள்வதே இல்லை.இதற்காக தனயார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமேபாடங்களை நடத்த தொடங்கிவிடுகின்றனர்.
இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளிலும் அதே முறையை பின்பற்ற கல்வி
அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். அதாவது கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் வரை காத்திராமல் மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களை அரசுப் பள்ளிகளில் நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதனால் இந்த ஆண்டில் மேற்கண்ட இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை கிடையாது. மேலும், மேற்கண்ட வகுப்புகளின் ஆசிரியர்களையும் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த வேண்டும்
என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளி, 20 மார்ச், 2015

ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு! வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்!

அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தஆசிரியர்களின் பிரமாண்ட கண்டனப் பேரணி தமிழக அரசை திகைக்க வைத்திருக்கிறது.அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின்
ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ' என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். ஆட்சிக்கு எதிரான முதல்போராட்டத்தைஜாக்டோ நடத்தி இருக்கிறது.

'ஜாக்டோ' கூட்டமைப்பின் மதுரை உயர்மட்ட குழு உறுப்பினரான கே.பி.ஓ.சுரேஷிடம்பேசினோம். ''தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய
ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. எங்களுடைய நியாயமான கோரிக்கைகள்கூட மாநில அரசால்கண்டுகொள்ளப்படுவது இல்லை. தேர்தல் நேரத்தில் எங்களுடைய ஓட்டுகளைப் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், 6-வது ஊதியக் குழு பரிந்துரையைஅமல்படுத்துதல், அகவிலைப்படி 100 சதவிகிதத்தைக் கடந்துவிட்டதால் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் சேர்த்து வழங்குதல், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல அமல்படுத்தப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பல ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் அலவன்ஸ்களை
வழங்குதல் போன்ற 15 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைநடத்தினோம்.அவர்களும் 25-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க வைப்பதாகஉறுதியளித்திருந்தனர். சொன்ன தேதியில் நாங்கள் குழுவாகச் சென்று முதல்வரைப் பார்க்க மனுவோடு நின்றுகொண்டிருந்தோம். மூன்று மணி நேரமாகியும்அவரைச் சந்திக்க முடியவில்லை. இனி ஆட்சியாளர்களை நம்பினால் ஏமாற்றமே மிஞ்சும்... போராட்டம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும் என்றுகூட்டத்தில் முடிவு எடுத்தோம். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரமாண்ட பேரணிகளை நடத்தினோம்.தொடக்க நிலை, இடைநிலை, முதுநிலை என கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் பேரணியில்கலந்துகொண்டனர். எங்களுடைய போராட்டம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்குச் சென்றிருக்கும் என்றுநம்புகிறோம். போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோம்'' என்றார் உறுதியாக.
'ஜாக்டோ' கூட்டமைப்பின் சென்னை
உயர்மட்ட குழு உறுப்பினரான அ.மாயவன், ''இந்த15 கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தைப் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தத் துடித்தபோது அதை தைரியமாக எதிர்த்தவர் மம்தா பானர்ஜி. இன்று வரை மேற்கு வங்கத்தில் பழைய பென்ஷன் திட்டமே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 2004-ல் அமல்படுத்த வேண்டிய இந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2003-லேயே அமல்படுத்தினார். அதன் எதிரொளி 2006-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோற்கடிக்கப்பட்டது.ஆட்சிக்கு வந்த தி.மு.கவும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. 2011 சட்டமன்ற தேர்தல்
வாக்குறுதியில் ஜெயலலிதா 'புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும்' என்று உறுதியளித்திருந்தார். ஆட்சி அமைத்து மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. முன்னாள் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.கல்வித் துறை அதிகாரிகளுக்கு எங்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. செய்த தவறுகளை மறைக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஒளிவுமறைவின்றி நேர்மையாக செயல்பட வேண்டிய கல்வித் துறை காலிப் பணியிடங்களை வெளிப்படையாக நிரப்பவே தயங்குகிறார்கள். கிட்டதட்ட 3,000-க்கும் அதிகமான இட மாறுதல்களை ஆதாயங்களின் அடிப்படையில் நிரப்புகிறார்கள்'' என்று ஆவேசப்பட்டார் அவர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநில அரசுக்கு எதிரான இந்த கண்டனப்
பேரணி நடந்து முடிந்துள்ளது. வருகின்ற 21-ம் தேதி சென்னையில் ஜாக்டோ கூட்டமைப்பின் தலைமைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ கூட்டமைப்பில் இணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகக் கூறுகின்றனர்.இந்தப்பிரச்னை தொடர்பாகப் பேச கல்வித் துறை அதிகாரிகளோ, துறையின் அமைச்சரோ தயாராக இல்லை. துறை செயலரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, 'ஆசிரியர்களின் பெரும்பாலான பிரச்னைகள் மத்திய அரசை சார்ந்தது. மாநில அரசு இதில் ஏதும் செய்ய முடியாது' என்று கருத்து தெரிவித்தனர்.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

'தி இந்து':ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது


ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சில தனியார் பள்ளிகளே தங்கள் மாணவர்களுக்கு தேர்வில் உதவுவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தனியார் பள்ளி ஒன்றில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் கூறும்போது, "பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றுமுன் தினம் கணிதத் தேர்வு நடைபெற்றது. அப்போது, ஓசூர் தனியார் பள்ளியில் ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் தேர்வெழுத வேண்டிய மாணவர்களில் ஒருவர் வரவில்லை. இந்நிலையில் அந்த அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் தேர்வுக்கு வராத மாணவனின் வினாத்தாளில் இருந்து ஒரு மதிப்பெண் கேள்விகளை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து மற்றொரு ஆசிரியர் உதயகுமாருக்கு அனுப்பியுள்ளார். அந்நேரம், பறக்கும் படையினர் அறைக்குள் நுழைந்துள்ளனர். ஆசிரியர் மகேந்திரனிடம் இருந்து செல்போனை கைப்பற்றினர். உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன, கார்த்திகேயன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், வாட்ஸ்அப் மூலம் மற்றொரு ஆசிரியருக்கு கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களைப் பெற்று மாணவர்களுக்கு தெரிவிக்கவே அவ்வாறு செய்ததாக கைதான ஆசிரியர்கள் கூறினர்" என தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி அதிகாரிக்கு தொடர்பா?

பொதுவாக பிளஸ்-2 தேர்வு கண்காணிப்புப் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஆனால், ஓசூர் கல்வி வட்டத்தில் மட்டும் தேர்வு கண்காணிப்புப் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் மாவட்ட கல்வி அதிகாரி வேதக்கண் தன்ராஜூக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

'தி இந்து'வுக்கு அதிகாரி அளித்த பதில்:

தனியார் பள்ளிகள் சில முறைகேடுகளில் ஈடுபட்டாவது மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தவறான பாதையில் செல்வதாக தொடர்ந்து வரும் புகார்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடன் தி இந்து சார்பில் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், "அவ்வாறாக எந்தப் புகாரும் இல்லை" என்றார்.

தொடர்ந்து நமது தரப்பிலிருந்து, தனியார் பள்ளி ஆசிரியருக்கு எவ்வாறு அரசு தேர்வுகளை கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையையும் மீறி எப்படி ஆசிரியர் உதயகுமார் செல்போன் கொண்டு சென்றார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராமசாமி, "இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என ஒசூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் விசாரித்து வருகிறோம். அதன்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு:

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், கார்த்திகேயன், உதயகுமார் ஆகிய நான்கு பேரும் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


 

வியாழன், 19 மார்ச், 2015

பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்க இரு அரிய ஹோமியோபதி மருந்துகள் .

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்க ஹோமியோபதி மருத்துவத்தில் இரு அரிய மருந்துகள் உள்ளன. இதனைமக்கள் பயன்படுத்த உடல்நலமும், நீண்ட ஆயுளையும் பெற்று வாழலாம் எனசிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவரும், முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் முதல்வருமான வி.லட்சுமிநாராயணன்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தது:
1917- 1919ல்மனிதர்கள் சாதாரண காய்ச்சல், தலைவலி மூலம் அதிகளவில் மரணம் அடைந்தனர். இதன் காரணத்தை ஆய்வு செய்த போது ஃபுளூ (Flu) என்ற ஒரு கிருமி உடலில் பரவி மக்களை பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டு, இதற்கு 1940-ல் ஒரு தடுப்பு ஊசி கண்டிபிடிக்கப்பட்டு 1950-ல் இந்த காய்ச்சலின் தாக்கம்குறைக்கப்பட்டது. 1980-ல் இந்த கிருமி மனிதர்களோடு பழக்கத்தில் உள்ள மிருகங்கள் மூலமாக மனித உடலை தாக்குகிறது என்பதை உணர்ந்து செண்டர் ஃபார்டிஸ்ஸீஸ் கன்ட்ரோல் மற்றும் பிரிவென்ஷன் (Center For Disease Controlland prevention) என்ற அமைப்பு இந்த ஃபுளு வைரஸ் (Flu Virus)-ஐ 2005 முதல்பால பல இடங்களில் மரணம் ஏற்பட்டதை ஆராய்ந்தது. 2006 முதல் 2009 வரை N1 H1 என்ற கிருமி கலந்து சாதாரண காய்ச்சலில் தொடங்கி 10 நாட்களில் கட்டுப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டது.
இதற்கு உலகின் பல நாடுகளில் உள்ள ஹோமியோபதி வல்லுநர்கள் இந்த கிருமியை எதிர்க்கும் சக்தி கொண்ட ARSENIC ALB 30, INFLUENZINUM 30 ஆகிய இரு மருந்துகளை உண்டால் சாதாரண தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல்,தும்மல் ஏற்பட்டால் N1 H1 என்ற நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட மருந்துகளை நமது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுஷ் (AYUSH) என்ற அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

மருந்துகள் உன்னும் விபரம்: ARSENIC ALB 30 என்ற மருந்தை தினம் தோறும்ஒரு வேளை தொடர்ந்து 3 நாட்கள் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி காய்ச்சல் குணமாகும். INFLUENZINUM 30 என்ற மருந்தை தலைவலி,தும்மல், தலைபாரம், காய்ச்சல் வரும் போது உட்கொண்டால் உடலில் N1 H1 என்றநோய் கிருமி தாக்கமும் குறையும், இதனை மக்கள் பயன்படுத்தி உடல்நலமும், நீண்ட ஆயுளையும் பெறலாம் என்கிறார் மருத்துவர்

COMPUTER TEACHERS:நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் .

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து
செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி உமா, உசிலம்பட்டி பாண்டியராஜன் உட்பட 152 பேர் தாக்கல் செய்த மனு: அரசு
பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களாக 1999 ல் பணியில் சேர்ந்தோம். 2008 ல் பணி வரன்முறை
செய்யப்பட்டோம். 2013 ல் 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை அரசு பணிநீக்கம் செய்தது. இது
தொடர்பான வழக்கில் எங்களில் பி.எட்.,முடித்தவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் 652 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு
வாரியம் நிரப்ப உள்ளது. எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் எங்களுக்கு பணி வழங்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பள்ளிக் கல்வித்துறை செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், ஏற்கனவே இதுபோல் தாக்கலானவழக்குடன் சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மனுதாரர்களின் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் பேச்சு: ஒரு பிரிவினர் வாபஸ்; ஒரு பிரிவினர் போராட்டம்!

மூன்றாவது கட்டமாக, அமைச்சருடன் நடந்த பேச்சில், அவர் அளித்த உறுதிமொழியை
ஏற்று, போராட்டத்தை கைவிடுவதாக, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள்
சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு,
'கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும்' என, அறிவித்துள்ளது. ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், நேற்று, 10வது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாற்றுத் திறனாளிகளின் ஆசிரியர்
கூட்டமைப்பு சார்பில், இரண்டாவது நாளாக, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சமூக நலத்துறைஅமைச்சர் வளர்மதியை, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள், இம்மாதம், 11 மற்றும்16ம் தேதி சந்தித்து, பேச்சு நடத்தினர். ஆனால், தீர்வு எட்டப்படவில்லை. நேற்று, மூன்றாவது முறையாக,அமைச்சரை சந்தித்து பேசினர். அதேபோல், மாற்றுத் திறனாளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளும்,அமைச்சரை சந்தித்து பேசினர். அப்போது, அவர்களின் கோரிக்கையை, அரசு பரிசீலித்து வருவதாகவும், போராட்டத்தை கைவிடும்படியும், அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, கல்லூரி மாணவர் மற்றும்பட்டதாரிகள் சங்கத்தினர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ஆசிரியர்
கூட்டமைப்பு நிர்வாகிகள், கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

CRC:பயிற்சி நாட்களுக்கு, ஈடுசெய்ய விடுப்பு

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில்,
ஆண்டுக்கு, 10 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. இதையும் சேர்த்து, 220 நாட்கள் பணி நாட்களாக
வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சி நாட்களுக்கு, ஈடுசெய்ய விடுப்பு தருவதில்லை
என்று, ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், பயிற்சிக்கு வர பல ஆசிரியர்கள் தயங்கினர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள்சார்பில், அரசுக்கு மனு அளித்தனர். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி,குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, நேற்று வெளியிட்ட அரசாணையில்,'220 பணிநாட்களில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிஆசிரியர்களுக்கு, முடிந்த அளவுக்கு பணி நாட்களில் ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல், பயிற்சி நடத்தவேண்டும். விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டால், அதற்கு, 10 நாட்களில், ஈட்டு விடுப்பு எடுக்க அனுமதிக்கலாம்' என கூறப்பட்டுள்ளது.