தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில்,
ஆண்டுக்கு, 10 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. இதையும் சேர்த்து, 220 நாட்கள் பணி நாட்களாக
வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சி நாட்களுக்கு, ஈடுசெய்ய விடுப்பு தருவதில்லை
என்று, ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், பயிற்சிக்கு வர பல ஆசிரியர்கள் தயங்கினர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள்சார்பில், அரசுக்கு மனு அளித்தனர். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி,குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, நேற்று வெளியிட்ட அரசாணையில்,'220 பணிநாட்களில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிஆசிரியர்களுக்கு, முடிந்த அளவுக்கு பணி நாட்களில் ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல், பயிற்சி நடத்தவேண்டும். விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டால், அதற்கு, 10 நாட்களில், ஈட்டு விடுப்பு எடுக்க அனுமதிக்கலாம்' என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக