புதன், 25 மார்ச், 2015

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடியோ விவரம்:

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடியோ விவரம்:
ஆசிரியர்: சார் வணக்கம்.. சொல்லுங்க சார்...
புரோக்கர்: வணக்கம்.. என்ன ஆச்சு சார். அதுக்கு அப்புறம்...
ஆசிரியர்: பஸ்ட் நீங்க தான் சார் சொல்லணும்... அன்னைக்கு ரெண்டே காலுக்கு (இரண்டே கால் லட்சம்) ஓகேன்னு
சொன்னீங்களே சார். புரோக்கர்: எப்போ சார்.
ஆசிரியர்: அன்னிக்கு போன் பண்ணீங்களே சார். அந்த அம்மாக்கிட்ட எவ்வளவு பேசுனீங்கன்னு சொன்னீங்களே.
புரோக்கர்: அது அன்னிக்கு.
ஆசிரியர்: ஆமா.
புரோக்கர்: அவரு அப்போ போட்டு தரேன்னு சொன்னார்ல.
ஆசிரியர்: ஆமாம் போட்டு தரேன்னு சொன்னாரு.. புரோக்கர்: அவரு இப்போ முடியாதுன்னு சொல்லீட்டாரு.
ஆசிரியர்: அப்படியா?
புரோக்கர்: இப்போ டீலிங் எல்லாம் மேலதான் பார்த்து வாங்குறாங்க.
ஆசிரியர்: சரி..சரி.
புரோக்கர்: ரெண்டே முக்காலுன்னா முடியுமா?
ஆசிரியர்: ரெண்டே முக்காலா? புரோக்கர்: ஆமா
ஆசிரியர்: சரி.. நான் கேட்டு சொல்றேன். நமக்கு இங்க மேனேஜ்மென்ட்ல குறைக்க மாட்டாங்க. நான் வசதியா
இருந்தா எம்ஏ பிஎட்டுக்கு போயிருப்பேன். வசதி இல்லாததால் தான் பி.எட்டுக்கே இறங்குறேன்.
புரோக்கர்: கேட்டு சொல்லுங்க.
ஆசிரியர்: சரி சார் பார்த்துக்கிடுவோம்.
புரோக்கர்: புது சிஇஓக்கிட்ட பேசியிருக்கேன். ஆசிரியர்: சரி சார்.
புரோக்கர்: இன்னைக்கு அவர் மெட்ராசுக்கு போறாரு. போய்ட்டு வந்து செய்வோம்னு சொல்லியிருக்கிறார்.
ஆசிரியர்: சரி சார். சரி சார்..
புரோக்கர்: அந்த அம்மா எவ்வளவு கேட்டாங்க.,
ஆசிரியர்: அந்த அம்மா வந்து ஒன்னே கால் கேட்டாங்க. அது போக ஆபிசுக்கு 50, சார் நீங்க 15 கூட கேட்டிங்க.
அதுக்கு அப்புறம் 65 கூட கேட்டிங்க. புரோக்கர்: சரி அப்புறம் ரெண்டே கால் கொடுத்திருங்க.
ஆசிரியர்: சரி சார். நான் பேசீட்டு சொல்றேன்.. ரெண்டு முடிச்சிருங்க.
புரோக்கர்: திங்கட்கிழமை தூத்துக்குடி திருமண்டலம் ஆபிசுக்கு போய் இருந்தோம். நம்ம எலிமென்ட்ரி
மேனேஜர் என்ன சொன்னார்னா... ஒன்னு 95க்கு பேசி வச்சிருக்கோம்னு சொன்னாரு.
ஆசிரியர்: அவங்க வாங்கி தருவாங்களா?
புரோக்கர்: ஒன்னு 95 கொடுத்தா நாங்க தாரோம்னு சொல்லிருக்காங்க. அதை எப்படி நம்புறதுன்னு தெரியல. அவர் என்ன சொல்றாருன்னா.. மெட்ராஸ்ல நாங்க டைரக்டர பார்த்தோம். டைரக்டர் மந்திரியை பாக்க சொன்னாங்க.
நாங்க மந்திரி பிஏவை பார்த்தோம். அவர் ரெண்டுன்னு சொன்னாரு. நாங்க ரொம்ப பாவ பட்டவங்க தான்.
எல்லாருமே அப்பாய்ன்மென்ட் வாங்கினவங்க தான். ஐந்தை குறைத்து ஒன்னு 95 கொடுத்துருங்க. நாங்க வாங்க
மாட்டோம். நாங்க ஒரு ஓட்டல் சொல்லுவோம் அங்கே போய் கொடுத்துருங்க.
ஆசிரியர்: நீங்க இரண்டு 50ன்னு சொல்றீங்க அது தான் ரொம்ப குழப்பமா இருக்கு...
புரோக்கர்: அங்க ஒன்னு 95ன்னு கொடுப்பாங்க, இங்க டி.இஓ. ஆபிசுக்கு கொடுக்கனும்ல. அதுலாம் சேர்த்து தான் இரண்டரை.
ஆசிரியர்: இரண்டரையை டி.இ.ஓ. கிட்ட கொடுத்துரவா.
சில நாட்கள் கழித்து பின்னர் பேச்சு...
புரோக்கர்: சார் இன்னக்கி ரெடி பண்ணி கொடுத்தா நாளை பார்க்க சொல்லலாம்னு சொன்னார்.
ஆசிரியர்: டிஇஓ சொன்னாரோ
புரோக்கர்: இது வேற சார், முடிக்குறது வேற சாரு. இது ஒரு சார் 2 மணிக்கு முடிக்குறாரு.. ஆசிரியர்: பணம் தந்தா தான் அவர் வருவாரா... இல்லன்னா வரமாட்டாரா
புரோக்கர்: பணம் வந்தா தான் தம்பி வருவாரு. அங்க இருந்து ரூபாய் கொடுத்தா மினிஸ்டர்கிட்ட போய்டும்.
அங்கே இருந்து மினிஸ்டர் பேசுவார். உடனே டைரக்டர் டி.இ.ஓ.வுக்கு தகவல் கொடுத்து, இதே போய்
பன்னுங்கன்னு சொல்லுவாரு. மற்றபடி டிஇ.ஓ. ஒன்னும் காசு வாங்க மாட்டார்.
ஆசிரியர்: எல்லாமே மினிஸ்டர் தானா
புரோக்கர்: இங்க ஒன்னும் கிடையாது தம்பி. எல்லாமே அங்க தான். ஆசிரியர்: முன்னாடி எல்லாம் ஏ.இ.ஓ. ஆபிசிலேயே முடிஞ்சிரும் என்ன சார்.
புரோக்கர்: 33 பேர்ல 5 பேருக்கு அப்ரூவல் ஆகியிருக்னு சொல்லிருக்காங்க..
ஆசிரியர்: நெய்வேலியில் எல்லாம் சம்பளம் போட்டுட்டாங்க.. ஓ.கே. ஆயிட்டு.
புரோக்கர்: அங்க அமவுன்ட் ரொம்ப அதிகம்னு சொல்றாங்களே.
ஆசிரியர்: அதுவும் இந்த ரெண்டு, ரெண்டரை தான்.
புரோக்கர்: மேனேஜர் மூணரையிலருந்து 5 வரை கொடுத்து 5 பேர் வாங்கியிருக்காங்க. ஆசிரியர்: அது தான் சார் நெய்வேலியில. அவங்க வேற வழியில போய்ட்டாங்க.
புரோக்கர்: அப்படி பாக்கும் போது யோகம் தான். குறைவு தான் உங்களுக்கு.
ஆசிரியர்: இது சேர்த்து பார்க்கும் போது கம்மி தான். இதுக்குன்னு மெனக்கெட்டு போறது இல்ல.
புரோக்கர்: பாஸ்கர் சார் என்கிட்ட சொன்னாரு... கொஞ்சம் பாருங்க... இல்லைன்னா அப்படி போய்ட்டே இருக்கும். நாள் போய்ட்டே இருக்கும்.
ஆசிரியர்: அவங்க டயோசிஸ்ல ஒன்னும் செய்ற மாதிரி இல்ல புரோக்கர்: அப்ப எதுக்கு சார் எங்களை கூப்பிட்டு இப்படி பண்றீங்க.
ஆசிரியர்: உங்க டயோசிஸ் அவ்வளவு ஆக்கமா இருக்கு. அதுக்கு நாங்க என்ன பண்றது. அவ்வளவு பேரும்-களவாணி பயங்க. அவங்க ஒரு லட்சத்த போட்டு வேலையை வாங்கி கொடுக்க வேண்டியது தானே. நாளை
வருவேன் அப்போ பார்ப்போம்.
புரோக்கர்: நாளை கண்டிப்பா வருவீங்களா?
ஆசிரியர்: நாளை கண்டிப்பா வருவேன். புரோக்கர்: உங்க டிஇஓ கிட்ட பார்த்து செய்ங்கன்னு பேசி பாருங்க.
ஆசிரியர்: எல்லாம் ரேட்டு தான். இதுக்கும் டி.இ.ஓ. சம்பந்தமே கிடையாது. அவரை பார்க்க வேண்டிய அவசியமே
இல்லை. டி.இ.ஓ.வுக்கு இதுல வேலையை கிடையாது. டிஇ.ஓ இருந்தா நானே முடிச்சு இருப்பேனே. இந்த வருஷமும் சனியன் இப்படி ஆகிவிட்டது.
புரோக்கர்: சீட்டுக்கு பணம் கொடுத்தா உடனே ஆர்டர் வந்துரும்..
ஆசிரியர்: அதுக்கு வாய்ப்பு இருக்கு. புரோக்கர்: பாஸ்கர் சார் சொன்னாரு இப்ப நீங்க போட்டிங்கன்னா ரூ.1 லட்சம் அரியர் வரும்... கூட ஒன்னு,
ஒன்னரை தான் கொடுக்க வேண்டியது வரும்.
ஆசிரியர்: கட்சியை மீறி வேற வழியில்லையா. இது தான் நடக்கு... வேற வழியிருந்த மாதிரி தெரியல.. உங்க டயோசிசன்லேயே ரூபாய் கொடுக்கனும்னு தானே சொல்றாங்க.
புரோக்கர்: மேனேஜர் தான் ரொம்ப ஆர்வமாக இருக்கார். யாரெலாம் கொடுக்கனுமோ சீக்கிரம் கொடுங்க.
ஆசிரியர்: இதுல யோசிக்றதுக்கு என்ன இருக்கு கம்பல்சரி எல்லாம் கிடையாது. புரோக்கர்: உங்களுக்கு தெரிந்த சார்னு சொல்றீங்களே பேசி குறைக்க முடியாதா?
ஆசிரியர்: அவங்க கிட்ட போய் பேசவும் முடியாது, குறைக்கவும் முடியாது. அவசரம் இல்ல முயற்சி செய்து பாருங்க.... வேற வாய்ப்பு இருந்தா பாருங்க.

(மற்றொரு டேப் வெளியீடு)
புரோக்கர்: நீங்க தட்டாங்குளம் ஏ.இ.ஓ. அய்யா தானே? நேத்து அப்ரூவல் விஷயமா பேசினோம்ல... இதை-எப்படியாவது முடிச்சு கொடுங்க... உங்களுக்கு வேணும்னா 50 வாங்கிகிடுங்க. வீட்டுக்கு வேணும்னா வர்றேன். ஏ.இ.ஓ.. எனக்கு ஒன்னுமே வேண்டாம். வேலை கிடைச்சா ரொம்ப சந்தோஷம்...
புரோக்கர்: வேலை தான் கிடைச்சிருச்சே. சம்பளம் தானே வரவேண்டியது. டிஇஓ கிட்ட வேணும்னா பேசுங்க.அமவுன்ட் வேணும்னா கொடுத்துரலாம்..
ஏ.இ.ஓ. நான் பேசிக்கிட்டு தகவல் சொல்றேன்.
புரோக்கர்: திருநெல்வேலி வந்தா உங்களை நேரில் பார்க்கலாமா? டிஇ.ஓ. பணம் வாங்குவாரா? வாங்கினா-கொடுத்துடலாம்.
ஏ.இ.ஓ.: அது எல்லாம் வாங்குவாரு..நான் பாத்து செய்றேன்.
புரோக்கர்: காலன்குடி என் கொளுந்தியா வேலை சொன்னேனே முடிந்து விட்டதா? நம்ப கொளுந்தியா பேரு சுந்தரேஸ்வரி.
ஏ.இ.ஓ.: நான் சொன்னேன். நமக்கு கெட்ட பெயர் வந்துருமோன்னு பயப்படுறார். ஒரு ஆள் கிட்ட கேட்டேன். நீங்க 2
ரூபா கொடுங்க நான் கேரண்டின்னு சொல்றாரு... டி.இ.ஓ. ஆபிஸ் ஸ்டெனோவையும் பார்க்கனும்னு சொல்றாரு. எப்படியும் ரெண்டரை ஆகிடும். எனக்கு வாங்கி கொடுக்குறதுல ஆர்வம் கிடையாது. ஆண்டவன் கொடுத்த சம்பளம் போதும்....
இவ்வாறு அந்த ஆடியோவில் உள்ளது. இது தற்போது எல்லோருடைய செல்போனிலும் பரவ ஆரம்பித்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News :DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக