திங்கள், 16 மார்ச், 2015

தமிழக இடைநிலை, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற வெள்ளி விழா

தமிழக இடைநிலை, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற வெள்ளி விழா, மாநிலச் செயற்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த மன்றத்தின் மாநிலத் தலைவர் துரை.பூங்காவனம் தலைமை வகித்தார். இதில், நிறுவனத் தலைவர் ஹரிஹரன், மாநில பொதுச்செயலர் இளம்பரிதி, மாவட்டத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், இடைநிலை ஆசிரியர் பணிக் காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, 50 சதம் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். கீழ்நிலை பணிக்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும். 2006- ஆம் ஆண்டு ஜனவரி முதல் இடைநிலை ஆசிரியர்களை அதே இடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய பதவி உயர்வு வழங்க வேண்டும். விருப்பத்தின் பேரில், இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியேற்ற நாள் முதல், பட்டதாரி ஆசிரியராக பணிவரன் முறை ஆணை வழங்க வேண்டும். எம்.பில்., எம்.எட்., முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாவது ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக