பத்திரிகை படிக்கும் பழக்கம் இந்த லெவலில் இருக்கிறது. 'சார் பேப்பர் என்று வீசி எறியப்பட்ட பேப்பரை சிலர் அப்படியே வராந்தாவில் அதற்கான அட்டைப் பெட்டியல் அலட்சியமாகப் போட்டுவிடுவது உண்டு. அதான் எல்லாம் தெரிந்த மனைவி கூகுளாக வீட்டில் இருக்கிறாளே என்றிருக்கும். சிலர் கஞ்சத்தனமாக பெரிய எழுத்துத் தலைப்புகளோடு நிறுத்திக்கொள்வர். ஒரு சாரார், முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை அலசி, அலசி ஒரு எழுத்து, ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி, அச்சுப்பிழை விடாமல் படித்துவிட்டு கல்யாணத்திலிருந்து வீடு திரும்பிய மாதரசி பட்டுப் புடைவையை நீட்டாக மடித்து வைப்பதுபோல மடித்து வைத்துவிடுவர்.
ஒரு பத்திரிகைக்கு மேல் வாங்கிப் படிப்பவர் சிலரே. அதேபோல் அதில் எல்லாப் பக்கங்களையும், இணைப்புகளையும் பார்ப்பவரும் மிகச் சிலரே. அடுத்த வீட்டிலிருந்து பேப்பரை ஓசி வங்கும் காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சு. காரணம், அடுத்த வீட்டில் யார் இருக்கிறார் என்றே பலருக்குத் தெரியாது. அவர்களை எல்லாம் மனத்தில் கொண்டு, அவர்கள் படிக்கத் தவறிய, கண்களில் படாத ருசிகரமான பெட்டிச் செய்திகளை மேய்ந்து, சலிக்காமல் சலித்து, தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு 'கௌன்ட்டர்' கொடுத்து வழங்கப்படும் அரும்பெரும் சேவையே இந்த கொறிக்க! சிரிக்க!
இது மனத்தைப் பிராண்டும் சீரியஸான ரகம் அல்ல. சில்லென்ற மழைக் காலத்துச் சாரலில், சூடான வறுத்த வேர்க்கடலையாகக் கொறிக்க, ரசிக்கத் தோதானவை.
* பண்டைக் கால ரோமானியர்களின் பற்பசையின் மூலப் பொருளாக மனிதனின் சிறுநீரும் சேர்க்கப்பட்டிருந்ததாம்.
** இதை நெம்பர் ஒன் டூத்பேஸ்ட் என்று விளம்பரப்படுத்தி இருந்தார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக