புதன், 2 செப்டம்பர், 2015

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர்கே.சி.வீரமணி கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 76 ஆயிரத்து 338 ஆசிரியர் பணியிடங்கள்நிரப்பப்பட் டுள்ளன. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 17ஆயிரத்து 43 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 448 உதவியாளர், 370இளநிலைஉதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 30 முதுநிலைவிரிவுரையாளர், 41 விரிவுரையாளர், 18 இளநிலை விரிவுரையாளர் உட்பட 97 பணியிடங்கள் நிரப்பப்படும்.

அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களின் திறமைகளை மதிப்பிட்டு பதிவுசெய்ய ரூ.8.48 கோடிசெலவில் மாணவர் திரள் பதிவேடு அறிமுகப்படுத்தப்படும்.

ரூ.16.29 கோடி செலவில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படும்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தேசிய திறனறிவுத் தேர்வு, ஐஐடி நுழைவுத்தேர்வு, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற சிறப்புப் பயிற்சிஅளிக்கப்படும்.

கோவை, கரூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்ட மைய நூலகங்களில் ரூ.15 லட்சம் செலவில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சென்னை கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அனைத்து மாவட்டமைய நூலகங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

10 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ரூ.50லட்சம் செலவில் மொழி ஆய்வகங்கள் நிறுவப்படும்.

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வெ ழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் தனித்தனி பதிவெண் வழங்குவதற்குபதிலாக அனைத்து பருவங்களுக்கும் ஒரே பதிவெண் வழங்கப்படும்.

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வை பல பருவங்களில் எழுதிதேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Certificate)
வழங்கும் திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக