ஞாயிறு, 1 நவம்பர், 2015

மத்திய நிதியுதவி பெறும் வகையில், 12 தமிழக கல்லுாரிகளுக்கு, 'நாக்' அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது

மத்திய நிதியுதவி பெறும் வகையில், 12 தமிழக கல்லுாரிகளுக்கு, 'நாக்' அங்கீகாரம் வழங்கப்பட
உள்ளது.பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் நிதி மற்றும் சலுகைகளை பெற, 'நாக்'
எனப்படும் தேசிய தர அங்கீகார நிறுவனத்தின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
கல்லுாரிகளின் உள் கட்டமைப்பு, மாணவர் - ஆசிரியர் விகிதம், பாடப்பிரிவுகள், தேர்ச்சி, நுாலகம்
என, ஏழு வகை வசதிகளின் படி, 'நாக்' அங்கீகாரம் தரப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில், 12 தமிழக கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 146 கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் தர,
மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.அதன்படி சென்னையில் உள்ள, ராணிமேரி, காயிதேமில்லத் (ஆண்கள்),திருத்தங்கல் நாடார் கல்லுாரிகள் மற்றும் சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்பப் பல்கலை; மேல்மருவத்துார்ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லுாரி; மதுரை விவேகானந்தா, உதகை அரசு ஆர்ட்ஸ், செய்யார் இந்தோஅமெரிக்கன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா (பெண்கள்) கல்லுாரிகள்; நாமக்கல் ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி, ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லுாரி ஆகிய வற்றுக்கு, நாக் அந்தஸ்து
வழங்கப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக