தமிழகத்தில் 2 ஆயிரத்து 243 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின்னும்,
நியமனம் உத்தரவு வராததால் தேர்வு எழுதிய செவிலியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் தனியார் செவிலியர் பள்ளியில் டிப்ளமோ நர்சிங் 3 ஆண்டுகள் படித்தவர்களுக்கு,
அரசு பணியில் கடந்த 30 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் தனியார்
செவிலியர் பள்ளியில் படித்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.அரசு மற்றும் தனியார்
செவிலியர் பள்ளிகளில் முடித்தவர்களுக்கு தேர்வு நடத்தி, அதனடிப்படையில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பணிநியமன தேர்வுக்கு, 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில்7ஆயிரத்து 243 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.இதில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
மீதி 2 ஆயிரத்து 243 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், பணிநியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை
தனியார்பள்ளிகள் நர்சிங் பயிற்சி பெற்றோர் சங்க தலைவர் செந்தில்நாதன் கூறியதாவது: அரசு பள்ளிகளில் நர்சிங் முடித்தவர்களுக்குத்தான் அரசு தொடர்ந்து வேலை வழங்கி வந்தது. 30 ஆண்டு போராட்டத்திற்கு பின் தனியார்நர்சிங் பள்ளிகளில் முடித்தவர்களுக்கும் தேர்வு வைக்கும் அளவிற்கு சென்றுள்ளோம். காலிப்பணியிடங்களைஅரசு நிரப்பாததால், கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லை. விரைந்து பணி நியமனம் செய்ய அரசு உத்தரவுகளை வழங்க வேண்டும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக