பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு
கட்டணம் வசூலிக்க, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், உயர் பிரிவு மாணவர்கள் தவிர,
மற்றவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட இன மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கு
அதிகமாக இருந்தால், அவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு
கட்டணம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக