அரசியல் விளம்பரத்துக்காக, தமிழ் ஆய்வை சமரசம் செய்து கொள்ளாதவர், ஜப்பானை
சேர்ந்த தமிழ் ஆர்வலர் நொபுரு கராசிமா' என, தமிழ் அறிஞர்கள் புகழாரம்
சூட்டியுள்ளனர்.உலக தமிழ் ஆராய்ச்சி கழக முன்னாள் தலைவர், ஜப்பானை சேர்ந்த நொபுரு
கராசிமா; 2015, டிச., 26ல் மறைந்தார். இவரது நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை, அண்ணா
சாலையில் உள்ள, ஆனந்த் வளாகத்தில், 'நிமிர்' அமைப்பு சார்பில், நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் பேசியதாவது:ஜப்பான் நாட்டை சேர்ந்த நொபுரு கராசிமா, தமிழ் மீது அதீதபற்று கொண்டிருந்தார். பிற்கால சோழரின் பொருளாதாரம் பற்றி எழுதிய இவர், தென் இந்தியாவின்இடைக்கால வரலாறு பற்றியும் நுால் எழுதியுள்ளார். சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும், மத இயக்கங்களுக்கும், 12 - 13ம் நுாற்றாண்டில் இருந்த
தொடர்புகளை ஆய்வு செய்தவர். தமிழ் ஆராய்ச்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கராசிமா',உலக தமிழ் ஆராய்ச்சி கழக தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் தலைவராக இருந்தபோது தான், உலக தமிழ் மாநாட்டை நடத்த, தி.மு.க., தலைமையிலான அரசு முடிவுசெய்தது. இதற்கு, மூன்று விதமான நிர்பந்தங்களை, தி.மு.க., அரசுக்கு அவர் விதித்தார்.
'மாநாடு நடத்த குறைந்தது, ஒரு ஆண்டு அவகாசம் வேண்டும்; மாநாட்டிலிருந்து அரசியல் நிகழ்வு களை ஒதுக்கி வைக்க வேண்டும்; தஞ்சை உலக தமிழ் மாநாட்டு ஆய்வு கட்டுரைகளை புத்தகமாக வெளியிட
வேண்டும்' என்றார். மாநாட்டை, நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்பதில், தி.மு.க., அரசு தீவிரமாக இருந்தது. இதற்கு,நொபுரு கராசிமா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், உலகத் தமிழ் மாநாட்டிற்கு பதிலாக, 'செம்மொழிமாநாடு' என, பெயர் மாற்றி, நடத்தப்பட்டது. நொபுரு கராசிமா, அரசியல் ஆதாயங்களுக்காகவும்,விளம்பரத்துக்காகவும், தமிழ் ஆய்வை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. இவ்வாறு தமிழ் அறிஞர்கள் புகழாரம் சூட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக