சூரிய குடும்பத்தில் 9வது கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமியைவிட 10 மடங்கு பெரியது என கூறப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் ஏற்கனவே 8 கோள்கள் இருக்கின்றன. நெப்டியூனை தனி கோளாக
கருதுவதில்லை. இந்நிலையில் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருந்தபடி சூரியனை சுற்றிவரும் புதிய கோளை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தை விட, 50 மடங்கு தூரத்தில் இக்கோள்இருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். விண்வௌி விஞ்ஞானி கான்டான்டின் பாத்திஜின் மேலும் கூறும்போது, ''சூரிய குடும்பத்தில் இன்னமும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய உள்ளன. புதியகோளை நாங்கள் நேரடியாக காணவில்லை. அதற்கான அறிகுறிகள் தெறிகின்றன. அக்கோளின் ஈர்ப்பு விசை நன்கு உணரப்படுகிறது'' என்றார். 'நெப்டியூனை ஒரு கோளாக கருத முடியாது'' என 2006ம் ஆண்டு ஒரு பிரச்னையை எழுப்பி, அதை'பதவியிறக்கம்' செய்தவர் இதே விஞ்ஞானி தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக