திங்கள், 4 ஜனவரி, 2016

உதவி பேராசிரியர் பணியிடம் உடனடியாக நிரப்ப 'நெட்' தேர்வர்கள் வேண்டுகோள்!

தமிழகத்தில் காலியாக உள்ள 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆராய்ச்சி மற்றும்'நெட்' தேர்வில் தேர்வானவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 76 அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை பல்கலைக்கழக
மானியக்குழுவால் (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வு (நெட்) நடத்தப்படுகிறது. அந்த தேர்விலும் வெற்றிபெற்று ஏராளமானவர்கள் பணி கிடைக்கப்படாமல் உள்ளனர்.கடந்த 2015 செப்., 25ல் சட்டசபையில் 110 விதியின் கீழ், தமிழகத்தில் 1,144 உதவிபேராசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்தார். இந்த அறிவிப்பின் படி காலியாக உள்ள 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முன் வர வேண்டும்என ஆராய்ச்சிபடிப்பு முடித்தவர்களும், எம்.பில்., முடித்து 'நெட்' தேர்வில் தகுதி பெற்றவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்கள் முதல்வர் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.'நெட்' தேர்வில் வெற்றி உதவி பேராசிரியர்கள் சிலர்கூறுகையில்,சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு அறிவிக்கப்பட்டு 4 மாதகாலம் முடிந்த நிலையில், எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.அரசு பணியிடங்களை நிரப்ப முன் வர வேண்டும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக