புதன், 4 செப்டம்பர், 2013

ெப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்,
திமுக தலைவர் கருணாநிதி தமிழக ஆசிரியர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் திங்கள் 5ஆம்நாள், ஆண்டுதோறும், “ஆசிரியர் தினம்” என நாடு முழுதும்
கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆசிரியர் தின நாளில் தமிழக
ஆசிரியர் சமுதாய அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த
நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். ஆசிரியர்களுக்கு, ‘நல்லாசிரியர் விருது’ என்ற பெயரில் வழங்கப்பட்டநடைமுறையால் விருது பெறாத ஆசிரியர்கள், ‘நல்ல ஆசிரியர்கள் இல்லையா?’என்ற கேள்வி எழும் என்பதால், ‘நல்லாசிரியர் விருது’ என்ற விருதின் பெயரை,
‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்;
விருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000
என்பதை முன்னர் ரூ.2000 என்றும்; பின்னர் அதனை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணைத்து வந்துள்ளது திராவிடமுன்னேற்றக் கழக அரசு என்பதைச் சுட்டிக்காட்டி; தமிழக ஆசிரியர்சமுதாயம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்; அவர்கள் குடும்பம் செழிக்கவேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்ச்சமுதாயம் என்றும் அறிவார்ந்த
சமுதாயமாக எழுச்சிபெற்று திகழும் என்ற விழைவோடு தமிழக ஆசிரியப்
பெருமக்களுக்கு இந்த ஆண்டின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன், வாழ்க ஆசிரியர்கள் என்று தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இந்தியாவில் ஆசிரியர்நாளைக் கொண்டாடும், 

தமிழ்த்தாமரை · இடுகை

   
 
உங்களின் இடுகையை சேமிக்கும் போதும் வெளியிடும் போதும் பிழை ஏற்பட்டது. மீண்டும் முயற்சிக்கவும். எச்சரிக்கையைப் புறக்கணி
பின்னூட்டம் அனுப்புக
 ஏழைக் குடும்பத்தில்                  பிறந்து, ஆசிரியராக பணி செய்து , இந்தியாவின் முதல்
குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.
ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள்
தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக
அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும்
அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்
 தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழி வழிக் கல்வியின் மகத்துவத்தை நன்றாக உணர்ந்த
இராதாகிருஷ்ணர், அனைத்து மாநிலங்களிலும்  அவரவர்
தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
பட்டப்படிப்புகளையும் தாய் மொழியிலேயே வழங்க வகை செய்யப்பட
வேண்டும் என்று வலியுறுத்தி வந்த இராதாகிருஷ்ணன் பிறந்த தமிழ்நாட்டில்
ஆங்கில வழிக் கல்வி மோகம் தலைவிரித்தாடுவது மிகுந்த கவலையளிக்கிறது.
 அதிலும், தமிழக அரசே போட்டிப்
போட்டுக்கொண்டு  அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத்
தொடங்கி, அரைகுறை படிப்பை வழங்குவதைப் பார்க்கும்போது, இந்த
சமுதாயத்தைக் காப்பாற்ற இன்னொரு இராதாகிருஷ்ணன் பிறந்துவர
மாட்டாரா? என்ற ஆற்றாமை தான் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்
தங்களைத் தாங்களே இராதாகிருஷ்ணர்களாக கருதிக்
கொண்டு தாய்மொழி வழிக் கல்வியை வளர்க்கவும், ஒப்புவிக்கும்
திறனை மட்டும் ஊக்குவிக்கும் ஆங்கில வழிக்கல்வி முறையை விரட்டி 
அடிக்கவும் பாடுபட வேண்டும். இதற்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  எளிமையின்
இருப்பிடமாகவும், உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத்
தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத்
தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின்
பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக
கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன். “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்” -
 என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற
ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில்
அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும்
அக்கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்ற வள்ளூவர்
வழங்கிய கருத்திற்கேற்ப டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் தான் கற்ற
கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் 
என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன்
உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த
சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார். ஆசிரியர் பணியின் அருமை 
பெருமைகளைக் குன்றாது,
குறையாது போற்றிப்   பாதுகாக்கும் தமிழக அரசு, எதிர்கால இந்தியாவின்
தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளித்திடும்
வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப்
பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு 
வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 1660 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 
ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை,
ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச்
செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னத
பணியாகும். இத்தகைய சிறப்புமிக்க உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப்
பெருமக்கள் சமுதாய உணர்வோடு பணியாற்றி எதிர்காலத்தில் இந்த நாட்டின்
புகழை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்திடும் ஒரு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து,
ஆசிரியர் தினத்தினை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும்
ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்
கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: 6 பேருக்கு ஜாமீன்

  டி.இ.டி., வினாத்தாள் மோசடி வழக்கில்
கைதான ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை சேர்ந்த அசோக்குமார்,
கொடுத்த புகாரின் பேரில் டி.இ.டி. தேர்வில்
வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட
கிருஷ்ணகிரியை சேர்ந்த டாஸ்மாக் கண்காணிப்பாளர் 
கணேசன், 39, அவரது மனைவி எஸ்டர்தேகிருபை, 34,
ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த
கிருஷ்ணப்பா,42, ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த
(சாக்ஷி நாளிதழ் நிருபர்) சந்திரசேகர்,33,
பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த
டாஸ்மாக் விற்பனையாளர் அசோகன்,37, பாப்பிரெட்டிப்பட்டியை 
அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தஇளையராஜா, 30 ஆகிய
ஆறு பேரை தனிப்படை போலீஸார் கடந்த, 17ம்
தேதி கைது செய்தனர். இவர்கள் ஜாமீன்
கோரி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். நீதிபதி தாரணி முன்னிலையில் 
நேற்று மனு விசாரணைக்கு வந்தது. கணேசன் உள்ளிட்ட
ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை, ஆறு பேரும்
தர்மபுரி குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் தினம்
கையெழுத்து இடவும் உத்தரவிட்டார்.

ள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமன குளறுபடி. -Dinamalar news

                                                  மதுரை: உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில்
வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அமைச்சர்,எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்ததாக தாக்கலானவழக்கில், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம்
பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்நியமனத்திற்கு,தகுதியானவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் 2012
ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. நேர்காணல் தேர்வில்பங்கேற்க, மேலூர் கல்வி அலுவலர், நேர்காணல் கடிதம் அனுப்பினார். வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல்நேர்காணலில் பங்கேற்றேன். நான் 8 வது வகுப்பு படித்து,1993ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். நான் வாய்பேச முடியாதnமாற்றுத்திறனாளி. வேலைவாய்ப்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனக்கு கூடுதல் தகுதி இருந்தும்,பணி நியமனம் வழங்கவில்லை. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 57 பேரை வாட்ச்மேன்,துப்புரவு பணியாளர்களாக நியமித்தனர். மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் மேற்கண்ட பணி நியமனங்கள் குறித்த பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலர்களிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரினேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மட்டும்பட்டியல் வழங்கினர். அதில் நியாயமற்ற முறையில், அரசியல்வாதிகளின் சிபாரிசுப்படி பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மற்ற இரு கல்வி மாவட்ட அதிகாரிகள் பதில் தரவில்லை.உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் சமூக நீதியை தோற்கடித்துள்ளனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை இத்துடன் இணைத்துள்ளேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள்
நியமனம் சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். புதிய நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன்(தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர்), பணியாளர் தொகுதி முன்னாள் இணை இயக்குனர் கண்ணன் (தற்போது இடைநிலைக்கல்வி ஆராய்ச்சிக் கல்வி இயக்குனர்), கல்வி மாவட்ட அலுவலர்கள்ஜெயமீனாதேவி (மதுரை), சீமான் (மேலூர்), ரவிக்குமார் (உசிலம்பட்ட), உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலக "டெஸ்க்' கண்காணிப்பாளர் மாயன் ஆஜராயினர் மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பாலமுருகன் ஆஜரானார். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில், பணி நியமன ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்தார். அதில்,"எம்.எல்.ஏ.,மாவட்டச் செயலாளர் பரிந்துரைப்படி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்,' என, ஒரு குறிப்பு இருந்தது.
இதை போன் தகவல் அடிப்படையில் எழுதியது யார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மாயன்: பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து 2012 ஜூலை 26 ல் வந்த போன் தகவல் அடிப்படையில் எழுதினேன்.
நீதிபதி: உண்மையைக் கூறுங்கள்; சட்டப்படி எல்லாம் நடக்கும். கற்பனையாக நீங்களே எழுதி விடுவீர்களா? இது சாதாரண துப்புரவு பணியாளர்கள் நியமனம் தொடர்பானது. இதைப் பார்க்கையில், நாட்டில் சட்டத்தின்ஆட்சி உள்ளதா? என கேட்கத் தோன்றுகிறது. போனில் பேசியது ஆண் குரலா? பெண் குரலா?
மாயன்: தெரியவில்லை.
நீதிபதி: பணி நியமனம் தொடர்பாக மதுரை, மேலூர் கல்வி மாவட்ட அலுவலர்கள்ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளனர். சிலவற்றை மறைத்துள்ளனர். தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சாதாரணமாக எடுக்க முடியாது. மாநில போலீஸ் விசாரித்தால் சரியாகாது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும். மனுதாரருக்கு தகவல் உரிமைச் சட்டம் நன்றாக பயன்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளின் பதில்,பதிவு செய்யப்படுகிறது. அரசு வக்கீல், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணை செப்., 6க்கு தள்ளிவைக்கப்படுகிறது, என்றார். தகவல் உரிமை சட்டத்தால் வெளியான உண்மை: துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு 38 பேர் தேர்வான விபரத்தை,தகவல் சட்டத்தின் கீழ் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் வழங்கிய பட்டியலை மனுதாரர் வக்கீல் தாக்கல்
செய்தார். அதில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர்,மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச்செயலாளர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியாகபிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

Source : DINAMALAR

2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. 
ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள், நடத்தப்படும். இதற்கு, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும்பணி, 150 அச்சகங்களில் நடந்து வருகின்றன. 90 சதவீதம்
அளவிற்கு, பாடப்புத்தகங்கள் தயாராகிவிட்டன. 
பாடநூல் கழகம் : இதையடுத்து, அச்சகங்களில் இருந்து,நேரடியாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு, புத்தகங்கள்,அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பாடநூல்கழக வட்டாரங்கள்கூறியதாவது: பெரும் அளவிற்கு, புத்தகங்கள், அச்சிடப்பட்டு விட்டன. எனவே, பெரும்பாலான மாவட்டங்களுக்கு, புத்தகங்கள் சென்று விட்டன. எனவே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதில்,எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மாணவர்களுக்கு, முன்கூட்டியே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், அக்., 3ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இருந்தாலும், இந்த மாதத்திற்கு உள்ளாகவே, முழுமையான அளவில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிக் கல்வித் துறை : சி.இ.ஓ., அலுவலகங்களில்இருந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும்,புத்தகங்களை கொண்டு சென்று, வினியோகம்செய்வதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை,முழுவீச்சில் செய்து வருகிறது.
இவ்வாறு, பாடநூல்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாத இறுதியில் இருந்து, பாடநூல்கழகஅலுவலகத்தில், இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

செப்டம்பர் 8-ல் சென்னையில் உண்ணாவிரதம்: நாமக்கல் மாவட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்பு

 சென்னையில் வருகிற 8ஆம் தேதி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தலைமையாசிரியர்கள் பெருமளவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில  துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டப். 
பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் பதவி  உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய  அமைக்கப்பட்டுள்ள சீராய்வுக் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று,  அதன்பிறகே, மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்
பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில்ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தஅனைத்து தலைமையாசிரியர்கள் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா நன்றி கூறினார்.

Source : DINAMANI

TNTET NEWS UPDATE : ANSWER KEY 2,000 பேர் ஆட்சேபனை

 கடந்த ஆக., 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதிக்கான, டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, 6.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்து, 2,000 பேர், ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக, டிஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், மேலும் கூறியதாவது: பெற்றுள்ள விண்ணப்பங்களில் பெரும்பாலும் தமிழ்ப் பாட விடைகள் மீது தான், ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். பல விடைகள், எங்களுக்கே குழப்பமாக உள்ளன. குறிப்பாக, குமரகுருபரர், எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது கேள்வி. இதற்கு, 6ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், 8ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு புத்தகங்களையும், பாடநூல் கழகம் வெளியிட்டு உள்ளது. நிபுணர் குழு, 17ம் நூற்றாண்டு தான் சரி என, தெரிவித்து உள்ளது. பாடநூல் கழகம், தவறான தகவலை வெளியிட்டு உள்ளதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இதுபோல், பல தவறுகள் உள்ளன. அவற்றை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. ஒரு பாடத்திற்கான விடைகளை, மூன்று ஆசிரியர் குழு, ஆய்வு செய்கிறது. அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வு விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும், இரண்டாம் தாள் விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். ஆட்சேபனை விண்ணப்பங்கள் மீது, முழுமையாக ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கப்பட்டதும், இறுதி விடைகள் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. பாடத்திட்டங்களின் அடிப்படையில், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து, கேள்விகளும், விடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பாட வாரியாக, அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. இதில், ஏதாவது சில கேள்விகளுக்கான விடைகள், தவறாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி அமைந்திருந்தால், அதைப் பற்றி, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் போது, அது குறித்து ஆய்வு செய்து, தவறான விடைக்குரிய மதிப்பெண்களை வழங்குகிறது அல்லது சம்பந்தபட்ட கேள்வியை நீக்கி, மீதமுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, முடிவை வெளியிடுகிறது.ஆட்சேபனைகளுக்குப் பின், இறுதி விடைகள் தயாரிக்கப்பட்டு, மீண்டும், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதன்பிறகே, பணி நியமனத்திற்கான தேர்வுப் பட்டியல் தயாராகிறது. தேர்வர்கள் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தற்காலிக விடை, இறுதி விடை என்ற முறையை, டி.ஆர்.பி., கையாள்கிறது. இதே முறையை, டி.என்.பி.எஸ்.சி.,யும் கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில்.

 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில்
வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும்
பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள்
முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான
போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான
முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள்
பெறப்பட்டன. முக்கிய விடைகள் தொடர்பாக 1,500 பேர் ஆட்சேபம்
தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு அளித்திருந்தனர். இந்த
ஆட்சேபங்களைப் பரிசீலித்த நிபுணர் குழுக்கள் தங்களது பரிந்துரைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சமர்ப்பித்தனர்.
370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 196 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 ஆசிரியர்களுக்கும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 10 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர்.மாவட்டங்களில் இருந்து இந்த விருதுக்கு 860 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அவர்களிலிருந்து விருதுக்கான 370 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் அரங்கில் ஆசிரியர் மற்றும் அவருடன் ஒருவரும் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.
SOURCE : தினமணி

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

TNTET NEWS UPDATE: தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் தொடர்பாக 1800 பேர் ஆட்சேபம்

  ஆசிரியர் தகுதித் தேர்வின் முக்கிய விடைகள் தொடர்பாக திங்கள்கிழமை (செப்.2) வரை 1800 பேர் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மாதம் 17,18-ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர். தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்பட்ட வினாக்களுக்கான முக்கிய விடைகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.
விடைகள் குறித்த ஆட்சபனைகளை ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்க திங்கள்கிழமை (செப்.2) வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, 1800 பேர் விடைகள் குறித்த ஆட்சபனை மனுக்களை தேர்வு வாரியத்தில் அளித்துள்ளனர்.
 தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளின் விடைகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான ஆட்சேபனை மனுக்கள் வந்துள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவுக்கு ஆட்சேபனைகள் அனுப்பப்பட்டு, அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Source : தினமணி 

POLICE DEPARTMENT RECRUITMENT UPDATS IN DETAIL


 "தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அறிவிப்பை தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் துவங்கியது. 
மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர் பதவிக்கு தேர்வுபெற தமிழ்நாட்டில் வசிக்கும் ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் 

. 1, வயது O.C. - 18 முதல் 25 வயது வரை (01,01,1988 முதல் 01,01,1995), B.C (or) BC(Muslim) (or) MBC/DNC - 18 முதல் 27 வயது வரை (01,01,1986 முதல்
01,01,1995), SC/SC (அருந்ததியர்), ST - 18 முதல் 30 வயது வரை (01,01,1983 முதல் 01.01.1995), 01.01.2013 அன்று வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 
2, கல்வித் தகுதி - இந்த அறிக்கை வெளிவரும் தேதியில் பத்தாம் வகுப்பு-எஸ்,எஸ்,எல்,சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 3, பதவிகளின் மொத்த எண்ணிக்கை்கை - 10.500 (ஆண்கள்) 
4, வகுப்புவா ஒதுக்கீடு OC – 31%, BC-26.5%, BC(Muslim)-3.5%,MBC/DNC-20%, SC-15%, SC (அருந்ததியர்) -3%, ST-1%வழங்கப்படும்.ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினருக்கான 3%, இடங்கள் முன்னுரிமையில் நிரப்பப்பட்ட பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மிகுதியாக இருந்தால் அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கான ஒதுக்கீ;ட்டின் கீழும் தேர்வு செய்யப்படுவார்கள், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அப்பதவியிடங்கள் பிற ஆதிதிராவிடர் வகுப்பினரைச் சார்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். 
5, பிற ஒதுக்கீடுகள் - இத்தேர்வில் பணி நியமனம் பெறுவதற்கு. முன்னாள் இராணுவத்தினர். மாற்றுத் திறனாளிகள். விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறருக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை.
 6, விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் அல்லது மாநகரத்தில் தேர்வு செய்ய விரும்புகிறhர்களோ அந்த மாவட்டம் அல்லது மாநகரை விண்ணப்பத்தின் பத்தி 1ல்
குறிப்பிட வேண்டும், 
7.விரும்பிய மாவட்டம் அல்லது மாநகரத்திற்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள், இவ்விருப்பத்தை பிறகு மாற்ற முடியாது 
 8, மதிப்பூதியம்- மாதாந்திர மதிப்பு{தியம் ரு், 7.500 இதரப் படிகள் ஏதுமில்லை), 
9, செயற்பாடுகள் மற்றும் பணிகள் - காவல் வாகனங்களை ஓட்டுதல். அலுவலகக் கடிதங்களைப் பட்டுவாடா செய்தல் மற்றும் கணினி விவரப் பதிவுப் பணிகள். காவலர் குடியிருப்புகளைப் பராமரித்தல், விபத்தில உயிர்ப்பலிகள் ஏற்படாவணண்ம் தடுக்கும் பணியில் காவல் படைக்கு உதவி செய்தல்,
 1,0 அழைப்புக் கடிதம் - கல்வி மற்றும் வயதுத் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அவர்களது முகவாpக்கு அனுப்பப்படும், தேர்வு தினத்திற்கு முன்னர் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறhத விண்ணப்பதாரர்கள.; அவர்கள் விண்ணப்பதின் நகலை அவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ள மாவட்டம்- மாநகர காவல் அலுவலகத்தில்  பெற்றுக்கொள்ளலாம. 
11, எழுத்துத் தேர்வு -விடைகளை தெரிவு செய்து எழுதும் வகையிலானது கொள்குறி வகை.தேர்வு நேரம்- 1 மணி 40 நிமிடங்கள்,வினாத்தாள் தமிழில் இருக்கும், மொத்த மதிப்பெண்கள் 1,00 எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெறவேண்டும், பாடத்திட்டம்- பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ். ஆங்கிலம். கணிதம். பொது அறிவியல். இந்திய வரலாறு. புவியியல். பொருளாதாரம் மற்றும் வணிகம். இந்திய தேசிய இயக்கம், ,நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்துச் சைகைகள் மற்றும் முதலுதவி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில். அந்தந்த மாநகர-மாவட்ட காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:5 விகிதாச்சாரப்படி இன வாரியாக அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 
12, உடற்கூறு அளவு - விண்ணப்பதாரர்களின் உடற்கூறு அளவு கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும், உயரம் - பொது. பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- சீர்மரபினர் 170 செ,மீ, இருக்க வேண்டும், ஆதிதிராவிடர். ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் 167 செ,மீ இருக்க வேண்டும், மார்பளவு - அனைத்து வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ,மீ இருக்க வேண்டும் மூச்சினை முழுமையாக இழுத்த
நிலையில் குறைந்தபட்சம் 5 செ,மீ மார்பு விரிவாக்கம்  இருக்க வேண்டும். 
13, உடற்தகுதி தேர்வு உடற்கூறு அளவில் தேறியவர்கள் கீழ்க்கண்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், (1) 1500 மீட்டர் ஓட்டத்தினை 7 (ஏழு) நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நிமிடத்தில் ஓடி முடிக்கவேண்டும், (2) உயரம் தாண்டுதல்-1.20 மீட்டர் (அல்லது) நீளம் தாண்டுதல்-3.80 மீட்டர் (3) 100 மீட்டர் ஓட்டம் - 15 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்கவேண்டும் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்-80 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்கவேண்டும், (4) கயிறு ஏறுதல் - 5 மீட்டர் ஏறுதல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட 4 நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தகுதிபெற வேண்டும், ஏதேனும் ஒரு நிகழ்வில் தகுதியிழந்தால் மீதமுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள தகுதியற்றவராவார், இந்த 4 நிகழ்வுகளும் தகுதிச் சுற்றுத் தேர்வுகளே, மதிப்பெண் வழங்கப்படமாட்டாது, இந்நிகழ்வுகளில் உயரம் தாண்டுதல் - நீளம் தாண்டுதல் நிகழ்வுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும், இரண்டு வாய்ப்புகளில் விண்ணப்பதாரர் பெறும் உயர் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கயிறு ஏறுதல் நிகழ்வுகளுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்படும், கயிறு ஏறும் போது கைகளைத் தவிர கால்களையோ அல்லது மற்ற எந்த உடல் பாகங்களையோ பயன்படுத்தக் கூடாது.
 14, அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் - உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்படும், விண்ணப்பத்துடன் அனுப்பிய சான்றோப்பிமிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் தேர்வு மையத்திற்கு சரிபார்ப்பதற்காகக் கொண்டு வரவேண்டும், உடற்கூறு அளத்தல். உடற்தகுதித்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் வரை பெறும் தகுதிகள் தற்காலிகமானது, 
15, பணிபுரியும் வயது வரம்பு - இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் 40 வயது வரை இப்படையில் பணிபுரியலாம்.
 16, காவல் துறைக்குத் தேர்வு செய்தல் - இப்பணிக்கான அனைத்துப் பயிற்சிகளிலும் முழுமையாகத் தேர்ச்சியடைந்து. ஒரு வருட காலம் முழுமையாக இப்படையில் பணிபுரிபவர்கள். காவலர் தேர்வுக்கான தகுதிகளிருப்பின் தமிழ்நாடு காவல் துறைப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்படும் சிறப்புப் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். 

முக்கியத் தேதிகள்
i) அறிவிக்கை நாள்-02.09.2013
ii) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்-01.10.2013 மாலை 5,45 மணி வரை
iii) எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 10.11.2013CLICK HERE FOR DOWNLOAD APPLICATION FORM ALL DISTRICTS

அரசு தொடக்கப்பள்ளிகளில் இரு மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் .....,,ஒரு பள்ளியில் ஒருவருக்கு, இரு ஆசிரியர் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மூன்று பள்ளிகளில்
இரண்டு மாணவர்களுக்கு, இரண்டு ஆசிரியர்களும், ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு,
இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்து வரும்நிலையில், ஒருபுறம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கையைவிட
அதிகரித்தும் வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் குமிழியேந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருவாடானை கீழகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கட்டியனேந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய 
பள்ளிகளில் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். 

திருவாடானை ஒன்றியம் கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒரு மாணவருக்கு,
இரண்டு ஆசிரியர்களும், பரமக்குடி ஒன்றியத்தில்கவுரிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, போகலூர் ஒன்றியத்தில் சேமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் தலா மூன்று மாணவர்களுக்கு, இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர். குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், பள்ளிக்கு விடுமுறை கணக்கில்
கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஒரு மாணவர் உள்ள பள்ளியில், மாணவரை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க முயற்சித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட         தொடக்கக்கல்வி அலுவலர்(பொறுப்பு) பானுமதி கூறுகையில், ""கூடுதல் மாணவர்களை ,   
   சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.

115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

  தொடக்க கல்வித்துறையில், 115ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக,
பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், 
அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54பேரும், 
பதவி உயர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, 
சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

TNTET NEWS UPDATE: டி.இ.டி., தேர்வில் முரண்பாடான வினா - விடை

 நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளிலும், அதற்காக தேர்வு வாரியத்தால்
வெளியிடப்பட்ட விடைத்தாளிலும் தவறுகள் இருப்பதாக,புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும்எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில், மூன்றாவது முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில் நடந்தது. முதல் நாள், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கும்; இரண்டாம் நாள், பி.எட்., முடித்தவர்களுக்கும் தேர்வு நடந்தது. இவை, இரண்டிலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தேர்வெழுதினர். இதில்,இரண்டு தேர்வுகளிலும் வினாத்தாளிலும், அதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைத்தாளிலும் தவறுகளும், முரண்பாடும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் பட்டயப் பயிற்சி தகுதித் தேர்வில், ஏழு வினாக்கள் முரண்பாடாக கேட்கப்பட்டுள்ளன. 
  தமிழ்ப் பிரிவில், குமரகுருபரின் காலம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 17ம் நூற்றாண்டு என்பது சரியான விடை. அதுவே விடைத்தாளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏழாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், அவருடைய காலம், 16ம் நூற்றாண்டு என்றும், எட்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டு என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை அறிவியல் பகுதியில், மரபுசாரா ஆற்றல் மூலத்துக்கு எடுத்துக்காட்டு என்ற கேள்விக்கு, கொடுக்கப்பட்ட அனைத்து பதில்களுமே சரியான விடை என, புத்தகத்தில் உள்ளது. ஆனால், வெளியிடப்பட்ட  விடைத்தாளில், சூரிய ஆற்றல் மட்டுமே சரியான விடை என, கொடுக்கப்பட்டுள்ளது. இது போல், ஏழு முரண்பாடான கேள்விகள், முதல் தாளில் உள்ளன. 

அதே போல் பி.எட்., தகுதித் தேர்வுக்கான, சி டைப் வினாத்தாளில், குழந்தை மேம்பாடு மற்றும் கருத்துக்கள் பிரிவில், குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் போது, அறிதிறன் அமைப்பில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் முறை என்ற கேள்விக்கு, முதல் விடையும், மூன்றாவது விடையும் சரியானது. 
ஆனால், தேர்வு வாரியம்  வெளியிட்ட  விடையில், நான்காவதாக கொடுக்கப்பட்டதே சரியான விடை என,கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலப் பிரிவில், 68வது கேள்விக்கு கொடுக்கப்பட்டசரியான பதில், இலக்கண முறைப்படி தவறாக உள்ளது.66வது கேள்வியில் இலக்கண பிழை உள்ளது. அதனால், இரண்டு விடை கேள்விக்கு பொருத்தமாகிறது.
 

கணக்கு மற்றும் அறிவியல் பிரிவில், 133வது கேள்விக்கு, "சி'
விடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு "ஏ' என்பதும் சரியான விடை. 120வது கேள்விக்கு, "ஏ'வும் "சி'யும் சரியான விடை. ஆனால், தேர்வு வாரியம் வெளியிட்ட விடைத்தாளில், "சி' மட்டுமே சரியானது என, கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு "ஏ' என்பதும் சரியான விடை என, பிளஸ் 2 புத்தகத்தில் உள்ளது. தமிழ்ப் பிரிவில், 50வது கேள்வியில், "பி' சரியான விடை என, கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், "சி' என்பதும் சரியான விடை என்று, எஸ்.எஸ்.எல்.சி., தமிழ்ப் புத்தகத்தில் உள்ளது.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி தகுதித் தேர்வில், ஏழு முரண்பாடான கேள்விகளும், பி.எட்., தகுதித் தேர்வில், 11 கேள்விகளும், பதில்களும் முரண்பாடாக உள்ளது. இதை ஆசிரியர் தேர்வு வாரியம் கவனத்தில் கொண்டு, முரண்பாடான கேள்விகளுக்கு, சரியான பதில்களுக்கும் மதிப்பெண் அளிக்க வேண்டும் என, தேர்வில் பங்கேற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த முறை நடந்த தகுதித் தேர்வில், ஒரு மதிப்பெண் முதல், 10 மதிப்பெண் வரை, குறைவாக பெற்றவர்கள்,தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்து, ஆசிரியர் பணியையும் இழந்துள்ளனர். அதே போல் இம்முறை நடக்காமல் இருக்கும் வண்ணம், முரண்பாடான கேள்விகளுக்கு, முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

நன்றி : தினமலர்

புறநகர் பேருந்துகளிலும் மாதாந்திர பயண அட்டை அறிமுகம்

 தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் பேருந்துகளில்
சலுகைக் கட்டணத்தில் மாதாந்திர பயண அட்டை வழங்கும் திட்டம்
ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்.1) அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இதுவரை நகரப் பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்தில் பயணிக்க மாதாந்திர பேருந்து பயண அட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புறநகர் பேருந்துகளிலும் மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்தில் மாதாந்திர பயண அட்டை விநியோகம் செய்யும் திட்டம்
ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக 133 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்கும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இரண்டு அட்டைகளுக்கு மிகாமல் வழங்கப்படுகிறது. இந்த மாதாந்திர பயண அட்டையைப் பயன்படுத்தி சாதாரண, விரைவுப் பேருந்துகளில்  பயணிக்கலாம்
.  விரைவுப் பேருந்துக்கான சலுகைக் கட்டண அட்டை பெற்றால் சாதாரணப் பேருந்திலும் பயணிக்கலாம். சாதாரணப் பேருந்துக்கான சலுகைக் கட்டண பயண அட்டையைப் பெற்றால் விரைவுப் பேருந்தில் பயணிக்க முடியாது. 40 முறை சென்று வருவதற்கான கட்டணம் 
மாதாந்திர பயண அட்டைக்கு வசூலிக்கப்படும். இந்தப் பயண அட்டையின் மூலம் ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 15-ஆம் தேதி.  வரை பயணம் செய்யலாம். முதல் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை இந்த சலுகை அட்டைகள் பேருந்து
 கிளை அலுவலகம், பேருந்து நிலையங்களில் வழங்கப்படும். . அரசுப் பேருந்தில் தினமும் பயணிக்கும்
பல்வேறு தரப்பினருக்கும் இது நல்ல திட்டமாகும் .

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர விரும்புவோருக்கு, நவம்பர், 10ம் தேதி, எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு உறுப்பினர் தேர்வு : செப்டம்பர் 2 முதல் விண்ணப்பங்கள் வினியோகம் 
. இதற்கான விண்ணப்பங்கள், செப்டம்பர் 2 முதல் வினியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப, அக்., 1ம் தேதி,
கடைசி நாள்.
 "தமிழகத்தில், போலீசாருக்கு உதவியாக, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர்
படை உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர்' என, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிறப்பு காவலர் இளைஞர் படை அமைக்க, கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்வுக்கானஅறிவிப்பு, வெளியிடப்பட்டு உள்ளது. நவம்பர், 10ம்தேதி, எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தகுதி : சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;
திடகாத்திரமாக, நல்ல நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்; தமிழகத்தில் வசிக்க வேண்டும்; 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். தேர்வு நடைபெறும் ஆண்டின், ஜனவரி, 1ம் தேதி, 25 வயது முடிந்திருக்கக் கூடாது; 
எஸ்.சி., - எஸ்.டி.,இளைஞர்களின் வயது வரம்பு, 30. 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது வரம்பு, 27.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர், 40 வயது வரை பணிபுரியலாம். 
ஒவ்வொரு மாதமும்,கவுரவத் தொகையாக, 7,500 ரூபாய் வழங்கப்படும். 
எழுத்து தேர்வு : தேர்வில் வினாக்கள்,நான்கு விடைகளில், ஒன்றை தேர்வு செய்யும் முறையில்
இடம்பெறும். வினாத்தாள் தமிழில் இருக்கும். 10ம்வகுப்பு நிலையிலான, பாடக் கேள்விகள்,
நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்து சைகைகள்,முதலுதவி குறித்த கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வில், குறைந்தபட்சம், 35 மதிப்பெண் பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோரில், மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்ப, 1:5 விகிதாசாரப்படி, அடுத்தக் கட்ட தேர்வான, உடல் தகுதி தேர்வுக்கு, விண்ணப்பதாரர் அழைக்கப்படுவர். 
விண்ணப்பம் : விண்ணப்பிக்க விரும்புவோர், 100 ரூபாய்க்கான தேர்வு கட்டணத்தை, மாவட்டத்தில் உள்ள,எஸ்.பி., அலுவலகங்களில் செலுத்தி, விண்ணப்பம் மற்றும் அறிவுரை கையேடினை, நாளை (2ம் தேதி) முதல்,காலை, 10:00 மணியிலிருந்து, 30ம் தேதி மாலை, 5:45 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும், பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக விண்ணப்பத்தை பெற இயலாதோர், www.tnsurb.tn.gov.in, www.tnpolice.gov.in ஆகிய இணையதளங்களில், பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவர்கள் விண்ணப்பிக்கும்போது, 100 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, விண்ணப்பிக்க விரும்பும், மாவட்ட எஸ்.பி., அல்லது மாநகர காவல் துணை கமிஷனர் பதவி பெயருக்கு எடுத்து, விண்ணப்பத்துடன் இணைத்து, இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர், எந்த மாவட்டத்தை பணிபுரிய தேர்வு செய்கிறாரோ, அந்தமாவட்டத்திற்கு, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை, வரும், அக்., 1ம் தேதி, மாலை, 5:45மணிக்குள் கிடைக்கும்படி, தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

4,340 பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திட்டம்: ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர்

 "தமிழகத்தில் 4,340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில்
வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சங்கர் பேசினார். 

 மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் "இன்ஸ்பையர்டு" விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாக (இன்னோவேஷன் இன்
சயின்ஸ் பர்சூட் பார் இன்ஸ்பைர்டு ரிசர்ச்- இன்ஸ்பையர்) நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட கண்காட்சியிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள், படைப்புகளுடன் பங்கேற்றனர். கண்காட்சியை கலெக்டர் சுப்ர மணியன், மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தனர். 

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ""மதுரையில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,"என்றார். அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வரவேற்றார். 

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ஏ.சங்கர் பேசியதாவது: இளம் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, இதுபோன்ற நிகழ்ச்சிகளை முதல்வர் செயல்படுத்துகிறார். கல்வித்துறையில் 4,340 பள்ளிகளில், ஐ.சி.டி., என்னும் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 21ம் நூற்றாண்டில் மரபணு பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை மனித வளர்ச்சிக்கு பலவகை களில் உதவி வருகிறது, என்றார். 

ஆசிரியர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது  உடனுக்குடன் நடவடிக்கை

ஆசிரியர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது,உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து,
அது தொடர்பான அறிக்கையை, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்" என தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

 மாவட்ட அதிகாரிகளுக்கு, இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1.5 லட்சம் ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர், சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனில், அவர்களின், நியாயமான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட கோரிக்கைகளை, உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மாதத்தின் முதல் சனிக்கிழமை, உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர், தங்கள் கோரிக்கை தொடர்பான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மீது, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அளவில், நடவடிக்கை எடுக்க முடியும் எனில், உடனடியாக செயல்பட்டு, உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முடிவை எடுக்க வேண்டும் எனில், அவர்களுக்கு, விண்ணப்பங்களை,  அனுப்பி வைக்க வேண்டும். 

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்கள், உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். இயக்குனர் அளவில்,முடிவை எடுக்க வேண்டிய விண்ணப்பங்களை மட்டும், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம், மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும். 

விண்ணப்பங்கள், முறையற்றதாகவும், சரியில்லாமலும் இருந்தால், குறைகளை சுட்டிக்காட்டி, அதை சரிசெய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். குறைதீர்ப்பு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிக்கையை,  
மாவட்ட.தொடக்கக் கல்வி அலுவலர்கள், இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். 

இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார். இந்த துறையில்