ஆசிரியர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது,உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து,
அது தொடர்பான அறிக்கையை, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்" என தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட அதிகாரிகளுக்கு, இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1.5 லட்சம் ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர், சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனில், அவர்களின், நியாயமான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட கோரிக்கைகளை, உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மாதத்தின் முதல் சனிக்கிழமை, உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர், தங்கள் கோரிக்கை தொடர்பான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மீது, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அளவில், நடவடிக்கை எடுக்க முடியும் எனில், உடனடியாக செயல்பட்டு, உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முடிவை எடுக்க வேண்டும் எனில், அவர்களுக்கு, விண்ணப்பங்களை, அனுப்பி வைக்க வேண்டும்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்கள், உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். இயக்குனர் அளவில்,முடிவை எடுக்க வேண்டிய விண்ணப்பங்களை மட்டும், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம், மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும்.
விண்ணப்பங்கள், முறையற்றதாகவும், சரியில்லாமலும் இருந்தால், குறைகளை சுட்டிக்காட்டி, அதை சரிசெய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். குறைதீர்ப்பு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிக்கையை,
மாவட்ட.தொடக்கக் கல்வி அலுவலர்கள், இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார். இந்த துறையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக