இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது
இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காக
விசாரணை செய்யப்பட்டது.
இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.
அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
வழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக