ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

அறியாமை..இருள் .....

அன்று...அறியாமை...என இருள் அனைத்து பகுதிகளிலும்
பரவி கிடக்க...ஒவ்வொரு துறைகளிலும்
இந்தியா பின்தங்கிய நிலையில்...தற்போது இந்த
அருளை அகற்றும் தீபமாய்...எழுத்தறிவு தீபம்
ஏற்றப்பட...இன்று...உலக வல்லரசு நாடுகளுடன்
பல்வேறு துறைகளில் போட்டி போட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம்... எழுத்தறிவு...
கல்வி அறிவு வளர்ச்சி அடைந்ததுதான்...இந்த
சாதனை பயணத்திற்கான கால பதிவு சுவடுகள்
ஏராளம்...ஏராளம்... இன்று (8ம் தேதி) உலக
எழுத்தறிவு தினத்தில் அவற்றை நினைவு கூர்வதில்
பெருமை கொள்வோம்... நாட்டில் ஒவ்வொரு மக்களும் எழுதவோ,
படிக்கவோ தெரிந்திருப்பதுதான் எழுத்தறிவு.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக
இருப்பதில் எழுத்தறிவு முக்கிய பங்கை வகிக்கிறது.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல்
பிரச்னைகளுக்கு ஆணி வேராக இருப்பது மக்கள்
போதிய கல்வி அறிவு பெறாததுதான்.
எழுத்தறிவுக்கு தடைகள்:
தற்போது எழுத்தறிவை வளர்க்க மத்திய, மாநில அரசுகள்
ஐந்தாண்டு திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாயை நிதி
ஒதுக்கீடு செய்வது ஒருபுறமிருக்க...பல நடைமுறை சிக்கல்கள்
எழுத்தறிவுக்கு தடையாகவே உள்ளன. வறுமையின் காரணமாக
ஆரம்ப கல்வியை கற்க முடியாத நிலையில்
எழுத்தறிவு "அ' போடுவதற்கே திணறுகிறது.
வறுமையால் உணவு, உடை, கல்வி இல்லாமல் பள்ளிக்கு
செல்ல இயலாமல் குழந்தை தொழிலாளர்கள்
உருவாகின்றனர். 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும்
எழுத்தறிவை அளிப்பதுதான் மிகப் பெரிய சவாலாகும்.
2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 12.66 மில்லியன் குழந்தை
தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்பது அவலம்.
இது நாட்டின் மக்கள் தொகையில் 1.23 சதவீதம் என்பது
வெட்க கேடான விஷயமாகும்.

இந்த ஆரம்ப கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும்
என்ற லட்சியத்துடன் 2010ம் ஆண்டிற்குள்
அனைவருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி வழங்க எஸ்.எஸ்.ஏ திட்டம்
தொடங்கப்பட்டது. ஆனால் இதற்குள்
லட்சியத்தை அடைய முடியாமல் தற்போது மேலும் சில
 ஆண்டுகளுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதே நடைமுறை 
சிக்கல்களுக்கு சாட்சியாகும். தேசிய எழுத்தறிவு குழு வயது வந்தோர்
கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் தற்போது இக்கல்வி செயல்படாமலேயே
 உள்ளது.
பன்முக சிந்தனை எழுத்தறிவு:
எழுத்தறிவை அனைவருக்கும் கொடுத்து கல்வி வளர்ச்சியை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டர்
ராதாகிருஷ்ணன், லட்சுமணசாமி முதலியார் குழுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த
நடவடிக்கைகள் பல கட்டங்களில் கல்வி வளர்ச்சி அடைந்து சமுதாய பள்ளிகள், அண்மை பள்ளிகள், "ஸ்மார்ட்'
பள்ளிகள், தொகுப்பு பள்ளிகள், தொலை தூர கல்வி, திறந்த வெளி கல்வி, வெப்சைட் மூலம் கல்வி,
மல்டி மீடியா, டச் ஸ்கீரின் முறை, நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், சைனிக் பள்ளிகள், வெளிநாட்டில் "மிதவை' பல்கலைக் கழகம்...என பரந்து விரிந்து வருகிறது.
கல்வி புதுமை அவசியம்:
எழுத்தறிவை மேம்படுத்த கல்வி அறிவில் பல புதுமைகளை படைக்க வேண்டிய அவசியமும், கட்டாயமும்
ஏற்பட்டுள்ளது. பள்ளி அமைப்பு, கற்கும் சூழிலை, மாணவர் செயல்பாடு, ஆசிரியர் செயல்பாடு, பாட திட்டம்,
கற்பித்தல் முறைகள், கல்வி மதிப்பீடு, கற்பித்தல் ஊடகங்கள், ஆசிரிய பயிற்சிகள்...என கல்வியில், கல்வியின்
நுட்பவியல் புதுமைகளை படைத்து அவை செயல்படுத்தப்படுகிறது.எழுத்தறிவுக்கு இந்திய தத்துவ ஞானிகள், அறிஞர்கள், முக்கிய தலைவர்களான காந்தி, தாகூர், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி உட்பட
பலரும்...வெளி நாட்டை சேர்ந்த ரூசோ, புரோபெல், ஜான் டூயி, மரியா மாண்டிசோரி, இவான் இலிச்,
டால்டன், ஹெலன் பார்ஹர்ஸ்ட் உட்பட பலரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சிக்கும் எழுத்தறிவுதான் முக்கியம் என்பதால்
எழுத்தறிவு தீபத்தை அனைத்து பகுதிகளிலும் ஏற்றி அதனை அணையாமல் பாதுகாத்து சாதி, மத, அரசியலில்
அறியாமை இருளை அகற்றுவோம்...இந்தியாவை உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம் பெற செய்வோம்...இன்று உலக எழுத்தறிவு தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போம்...எழுத்தறிவித்தவன்
இறைவன்...எழுத்தறிவு இடைவெளிவேண்டவே...வேண்டாம்...அகில இந்திய அளவில் 1901ம் ஆண்டு ஆண்கள் 9.80
சதவீதம், பெண்கள் 0.60 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். 2001ம் ஆண்டில் இதில்
ஆண்களின் சதவீதம் 79.56 ஆகவும், பெண்களின் சதவீதம் 54.28 சவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 1901ம் ஆண்டில் ஆண்கள் 14.10 சதவீதம், பெண்ள் 1.08 சதவீதம்
எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். 2001ம் ஆண்டில் இந்த சதவீதம் ஆண்கள் 82.33 சதவீதமாகவும், பெண்கள் 64.55 சதவீதமாகவும் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவு பெற்றதில்
முதலிடமும், தர்மபுரி மாவட்டம் கடைசி இடமும் பிடித்துள்ளது.
2011ம் ஆண்டில் இந்தியாவில் 82.14 சதவீத ஆண்கள், 65.46 சதவீத பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக
திகழ்கின்றனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே கல்வி அறிவு வித்தியாசம் 16.68
சதவீதம்தான்...ஆணுக்கு பெண் நிகர் என்பதை உறுதிபடுத்த இந்த இடைவெளி இருக்கவே கூடாது...
எழுத்தறிவு வளர்ந்த பாதை...சுவடுகள்.. ஆங்கிலேய ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்ட காலத்தில் 1813ம் ஆண்டு வரை கல்வி தனியார்
வசமாகவே இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியினர் இந்திய மக்கள் கல்வி அறிவு பெற்று விட கூடாது என
நினைத்தனர். சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோ 1826ம்
ஆண்டு கல்வி வளர்ச்சிக்கு விதை ஊன்றினார். தொடர்ந்து 1854ம் ஆண்டு "உட்ஸ்' அறிக்கை இந்திய மக்களின்
எழுத்தறிவுக்க முக்கியத்துவம் அளித்தது. 1855ம் ஆண்டு பள்ளிகளுக்கு முதற்கட்ட நிதி உதவி வழங்கும்
திட்டம் அறிமுகமானது. 1881ம் ஆண்டு தனியார் பங்களிப்பு கல்வித் துறையில் ஊக்குவிப்பு செய்யப்பட்டது. 1920ம் ஆண்டு தொடக்க கல்விக்கு தனி போர்டுகள் ஏற்படுத்தப்பட்டன. 1934ம் ஆண்டு தாலுகா அளவிலான
போர்டுகள் தொடங்கப்பட்டு பின்னர் மாவட்ட கல்வி கவுன்சில்களும் அமைக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1948-49 பல்கலைக்
கழக மானிய குழு தாய் மொழி கல்வியை வலியுறுத்திய. 1968ல் நாடு முழுவதும்
ஒரே கல்வி கொள்கை (10+2+3) அறிமுகப்படுத்தப்பட்டது. 1986ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை ஆரம்ப
கல்வியை கட்டாயமாக்கியது. 1992ல் கரும்பலகை திட்டம் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியது. 1991ம் ஆண்டு தாவே குழு குறைந்த பட்ட கற்றல் அளவை வலியுறுத்தியது.
இந்த பல்வேறு சுவடுகளை கடந்து தமிழகத்தை கணக்கிட்டால் 2005-2006ம் ஆண்டில் 6-11
வயது வரையிலானவர்கள் 63.78 லட்சம், 11-14 வயது வரை 36.34 லட்சம், 14-16 வயது வரை 19.25 லட்சம், 16-18
வயது வரை 10.83 லட்சம் பேர் உள்ளனர். மொத்தமாக கணக்கிட்டால் 6 வயது முதல் 18 வயது வரை 67.11 லட்சம்
ஆண்களும், 63.09 லட்சம் பெண்களும் உட்பட மொத்தம் 130.20 லட்சம் பேர் அனைத்து கல்வி நிறுவனங்களிலும்
துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, உயர் கல்வி நிறுவனங்களிலும் பல்வேறு எழுத்தறிவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக