ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளின் வினாத்தாளில் பிழைகள்இருப்பின், அதற்கு வாரியம்தான் பொறுப்பு, அதைத் தட்டிக் கழிக்கமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வுக்கான
முடிவுகளை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருந்தது. கடந்த ஜூலையில் நடந்த இத் தேர்வின் வினாத்தாளில் மொத்தம் உள்ள 150
கேள்விகளில், 47 பிழைகள் இருந்தன. பிழையானகேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என
மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலெட்சுமி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,
தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். மேலும்,
தேர்வு வாரியத் தலைவர் திங்கள்கிழமை (செப்.16) ஆஜராகி விளக்கம்
அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது, தேர்வு வாரியச் செயலர் டி.வசுந்தரா தேவி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வினாத்தாள் அச்சிடும் பொறுப்பு அரசுத் தேர்வுகள்துறை இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் அச்சிடும்அச்சக இடம் குறித்து தேர்வு வாரியத்துக்கோ அல்லது மற்ற
நபர்களுக்கோ தெரியாது. தேர்வின் பி பிரிவு வினாத்தாளில் உள்ள எழுத்துப் பிழைகள் அச்சகத்தாரால்ஏற்பட்டது. வினாத்தாள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால், அச்சடிக்கப்பட்ட
வினாத்தாளில் இருக்கும் எழுத்துப் பிழைகள் அரசுத் தேர்வுத் துறையாலோ,
தேர்வு வாரியத்தாலோ திருத்தப்படுவதில்லை. அச்சடிக்கப்பட்ட வினாத்தாள் கட்டுக்களாகக் கட்டி சீல் வைக்கப்பட்டு,தேர்வு நாளன்றுதான் திறக்கப்படும். மேலும், தமிழ் வினாத்தாளில்
ஏற்பட்டிருந்த பிழைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஆசிரியர்
தேர்வு வாரியம் நிபுணர் குழுவை அமைத்திருந்தது. அக்குழு, வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் மட்டுமே ஏற்பட்டிருந்தன.அதனால், கேள்வியின் பொருள் மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக முதுகலை தமிழாசிரியர் தேர்வு எழுதுவோர், சரியானவிடையைத் தேர்வு செய்வதில் பிரச்னை இருக்காது என கருத்துத் தெரிவித்து இருந்தது. ஆகவே, தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டஇடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி நாகமுத்து "வினாத்தாளில் பிழைகள்ஏற்பட்டதற்கு அச்சகத்தாரைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல. பிழைகள்இல்லாமல் வினாத்தாளை அச்சடிப்பது ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடமை' என்று பதில் மனு மீதான விசாரணையின்போது குறிப்பிட்டார். மேலும்,விசாரணைக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆஜராக வேண்டும்
என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், வாரிய உறுப்பினர் செயலர் ஜி.அறிவொளி ஆஜராகியிருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணையை செப்.18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் தேர்வு வாரியத் தலைவர் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக