செவ்வாய், 3 செப்டம்பர், 2013

POLICE DEPARTMENT RECRUITMENT UPDATS IN DETAIL


 "தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அறிவிப்பை தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் துவங்கியது. 
மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர் பதவிக்கு தேர்வுபெற தமிழ்நாட்டில் வசிக்கும் ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் 

. 1, வயது O.C. - 18 முதல் 25 வயது வரை (01,01,1988 முதல் 01,01,1995), B.C (or) BC(Muslim) (or) MBC/DNC - 18 முதல் 27 வயது வரை (01,01,1986 முதல்
01,01,1995), SC/SC (அருந்ததியர்), ST - 18 முதல் 30 வயது வரை (01,01,1983 முதல் 01.01.1995), 01.01.2013 அன்று வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 
2, கல்வித் தகுதி - இந்த அறிக்கை வெளிவரும் தேதியில் பத்தாம் வகுப்பு-எஸ்,எஸ்,எல்,சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 3, பதவிகளின் மொத்த எண்ணிக்கை்கை - 10.500 (ஆண்கள்) 
4, வகுப்புவா ஒதுக்கீடு OC – 31%, BC-26.5%, BC(Muslim)-3.5%,MBC/DNC-20%, SC-15%, SC (அருந்ததியர்) -3%, ST-1%வழங்கப்படும்.ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினருக்கான 3%, இடங்கள் முன்னுரிமையில் நிரப்பப்பட்ட பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மிகுதியாக இருந்தால் அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கான ஒதுக்கீ;ட்டின் கீழும் தேர்வு செய்யப்படுவார்கள், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அப்பதவியிடங்கள் பிற ஆதிதிராவிடர் வகுப்பினரைச் சார்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். 
5, பிற ஒதுக்கீடுகள் - இத்தேர்வில் பணி நியமனம் பெறுவதற்கு. முன்னாள் இராணுவத்தினர். மாற்றுத் திறனாளிகள். விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறருக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை.
 6, விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் அல்லது மாநகரத்தில் தேர்வு செய்ய விரும்புகிறhர்களோ அந்த மாவட்டம் அல்லது மாநகரை விண்ணப்பத்தின் பத்தி 1ல்
குறிப்பிட வேண்டும், 
7.விரும்பிய மாவட்டம் அல்லது மாநகரத்திற்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள், இவ்விருப்பத்தை பிறகு மாற்ற முடியாது 
 8, மதிப்பூதியம்- மாதாந்திர மதிப்பு{தியம் ரு், 7.500 இதரப் படிகள் ஏதுமில்லை), 
9, செயற்பாடுகள் மற்றும் பணிகள் - காவல் வாகனங்களை ஓட்டுதல். அலுவலகக் கடிதங்களைப் பட்டுவாடா செய்தல் மற்றும் கணினி விவரப் பதிவுப் பணிகள். காவலர் குடியிருப்புகளைப் பராமரித்தல், விபத்தில உயிர்ப்பலிகள் ஏற்படாவணண்ம் தடுக்கும் பணியில் காவல் படைக்கு உதவி செய்தல்,
 1,0 அழைப்புக் கடிதம் - கல்வி மற்றும் வயதுத் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அவர்களது முகவாpக்கு அனுப்பப்படும், தேர்வு தினத்திற்கு முன்னர் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறhத விண்ணப்பதாரர்கள.; அவர்கள் விண்ணப்பதின் நகலை அவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ள மாவட்டம்- மாநகர காவல் அலுவலகத்தில்  பெற்றுக்கொள்ளலாம. 
11, எழுத்துத் தேர்வு -விடைகளை தெரிவு செய்து எழுதும் வகையிலானது கொள்குறி வகை.தேர்வு நேரம்- 1 மணி 40 நிமிடங்கள்,வினாத்தாள் தமிழில் இருக்கும், மொத்த மதிப்பெண்கள் 1,00 எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெறவேண்டும், பாடத்திட்டம்- பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ். ஆங்கிலம். கணிதம். பொது அறிவியல். இந்திய வரலாறு. புவியியல். பொருளாதாரம் மற்றும் வணிகம். இந்திய தேசிய இயக்கம், ,நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்துச் சைகைகள் மற்றும் முதலுதவி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில். அந்தந்த மாநகர-மாவட்ட காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:5 விகிதாச்சாரப்படி இன வாரியாக அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 
12, உடற்கூறு அளவு - விண்ணப்பதாரர்களின் உடற்கூறு அளவு கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும், உயரம் - பொது. பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- சீர்மரபினர் 170 செ,மீ, இருக்க வேண்டும், ஆதிதிராவிடர். ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் 167 செ,மீ இருக்க வேண்டும், மார்பளவு - அனைத்து வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ,மீ இருக்க வேண்டும் மூச்சினை முழுமையாக இழுத்த
நிலையில் குறைந்தபட்சம் 5 செ,மீ மார்பு விரிவாக்கம்  இருக்க வேண்டும். 
13, உடற்தகுதி தேர்வு உடற்கூறு அளவில் தேறியவர்கள் கீழ்க்கண்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், (1) 1500 மீட்டர் ஓட்டத்தினை 7 (ஏழு) நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நிமிடத்தில் ஓடி முடிக்கவேண்டும், (2) உயரம் தாண்டுதல்-1.20 மீட்டர் (அல்லது) நீளம் தாண்டுதல்-3.80 மீட்டர் (3) 100 மீட்டர் ஓட்டம் - 15 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்கவேண்டும் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்-80 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்கவேண்டும், (4) கயிறு ஏறுதல் - 5 மீட்டர் ஏறுதல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட 4 நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தகுதிபெற வேண்டும், ஏதேனும் ஒரு நிகழ்வில் தகுதியிழந்தால் மீதமுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள தகுதியற்றவராவார், இந்த 4 நிகழ்வுகளும் தகுதிச் சுற்றுத் தேர்வுகளே, மதிப்பெண் வழங்கப்படமாட்டாது, இந்நிகழ்வுகளில் உயரம் தாண்டுதல் - நீளம் தாண்டுதல் நிகழ்வுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும், இரண்டு வாய்ப்புகளில் விண்ணப்பதாரர் பெறும் உயர் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கயிறு ஏறுதல் நிகழ்வுகளுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்படும், கயிறு ஏறும் போது கைகளைத் தவிர கால்களையோ அல்லது மற்ற எந்த உடல் பாகங்களையோ பயன்படுத்தக் கூடாது.
 14, அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் - உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்படும், விண்ணப்பத்துடன் அனுப்பிய சான்றோப்பிமிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் தேர்வு மையத்திற்கு சரிபார்ப்பதற்காகக் கொண்டு வரவேண்டும், உடற்கூறு அளத்தல். உடற்தகுதித்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் வரை பெறும் தகுதிகள் தற்காலிகமானது, 
15, பணிபுரியும் வயது வரம்பு - இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் 40 வயது வரை இப்படையில் பணிபுரியலாம்.
 16, காவல் துறைக்குத் தேர்வு செய்தல் - இப்பணிக்கான அனைத்துப் பயிற்சிகளிலும் முழுமையாகத் தேர்ச்சியடைந்து. ஒரு வருட காலம் முழுமையாக இப்படையில் பணிபுரிபவர்கள். காவலர் தேர்வுக்கான தகுதிகளிருப்பின் தமிழ்நாடு காவல் துறைப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்படும் சிறப்புப் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். 

முக்கியத் தேதிகள்
i) அறிவிக்கை நாள்-02.09.2013
ii) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்-01.10.2013 மாலை 5,45 மணி வரை
iii) எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 10.11.2013CLICK HERE FOR DOWNLOAD APPLICATION FORM ALL DISTRICTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக