திங்கள், 2 செப்டம்பர், 2013

புறநகர் பேருந்துகளிலும் மாதாந்திர பயண அட்டை அறிமுகம்

 தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் பேருந்துகளில்
சலுகைக் கட்டணத்தில் மாதாந்திர பயண அட்டை வழங்கும் திட்டம்
ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்.1) அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இதுவரை நகரப் பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்தில் பயணிக்க மாதாந்திர பேருந்து பயண அட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புறநகர் பேருந்துகளிலும் மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்தில் மாதாந்திர பயண அட்டை விநியோகம் செய்யும் திட்டம்
ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக 133 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்கும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இரண்டு அட்டைகளுக்கு மிகாமல் வழங்கப்படுகிறது. இந்த மாதாந்திர பயண அட்டையைப் பயன்படுத்தி சாதாரண, விரைவுப் பேருந்துகளில்  பயணிக்கலாம்
.  விரைவுப் பேருந்துக்கான சலுகைக் கட்டண அட்டை பெற்றால் சாதாரணப் பேருந்திலும் பயணிக்கலாம். சாதாரணப் பேருந்துக்கான சலுகைக் கட்டண பயண அட்டையைப் பெற்றால் விரைவுப் பேருந்தில் பயணிக்க முடியாது. 40 முறை சென்று வருவதற்கான கட்டணம் 
மாதாந்திர பயண அட்டைக்கு வசூலிக்கப்படும். இந்தப் பயண அட்டையின் மூலம் ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 15-ஆம் தேதி.  வரை பயணம் செய்யலாம். முதல் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை இந்த சலுகை அட்டைகள் பேருந்து
 கிளை அலுவலகம், பேருந்து நிலையங்களில் வழங்கப்படும். . அரசுப் பேருந்தில் தினமும் பயணிக்கும்
பல்வேறு தரப்பினருக்கும் இது நல்ல திட்டமாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக