திங்கள், 23 செப்டம்பர், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
கடந்த 2010ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயமாக்கியது தேசிய ஆசிரியர் பயிற்சி கல்வி வாரியம். ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே தேர்வெழுதாமல் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. 18 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படவில்லை. இதையடுத்து இவர்கள் சார்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே ஆசிரியர் பணியில் சேர தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நிறைவு பெற்றிருந்தால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவுக்குப் பிறகும் அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, பணி கிடைக்காதவர்களின் சார்பில் . இதை பின்பற்ற கோரி சுமார்  156 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி,சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 
சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை  . தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்என்று கூறி அவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர். 

 வழக்கில் இன்று தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக