புதன், 25 செப்டம்பர், 2013

 "விரிவுரையாளர் பணிக்கு,தகுதி தேர்வுக்குப் பின்,இறுதி தகுதியை முடிவு செய்ய, பல்கலைக்கழகமானியக் குழு, பல்கலைக் கழகத்துக்கு உரிமை உள்ளது-உயர்நீதிமன்றம்

 "விரிவுரையாளர் பணிக்கு,தகுதி தேர்வுக்குப் பின்,இறுதி தகுதியை முடிவு செய்ய, பல்கலைக்கழகமானியக் குழு, பல்கலைக் கழகத்துக்கு உரிமை உள்ளது'
என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு, மாநில தகுதி தேர்வான,"ஸ்லெட்'டை, பல்கலைக்கழகங்களும், தேசிய அளவில் தகுதி தேர்வான,"நெட்'டை, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி.,யும் நடத்துகின்றன. கடந்த ஆண்டு,ஏப்ரல் மாதம், யு.ஜி.சி., ஒரு அறிவிப்பை வெளியிட்டது. பேப்பர்-1, பேப்பர்-2, பேப்பர்-3 என, மூன்று தேர்வுகளும், ஒவ்வொரு தேர்விலும், குறைந்தபட்ச மதிப்பெண்  
வேண்டும் என்றும், இறுதி தகுதிக்கு இந்த மதிப்பெண்பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்படுவதற்கு முன், இறுதி தகுதி முறை பற்றி, முடிவு செய்யப்படும்என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் அறிவிப்பை பின்பற்றி, பாரதியார் பல்கலைக் கழகமும்,அறிவிப்பை வெளியிட்டது. 
இதையடுத்து, 'ஸ்லெட், நெட்' தேர்வுகளை, விண்ணப்பதாரர்கள் எழுதினர். இதில்,
குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்த பலர், தகுதி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இறுதி தகுதியாக, "கட்-ஆப்'மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டதால், இவர்கள் தகுதி பெறவில்லை என, கூறப்பட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில், 150க்கும் மேற்பட்ட மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன. 
மனுக்களை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். அரசு தரப்பில், அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, யு.ஜி.சி., சார்பில், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர். யு.ஜி.சி., வெளியிட்ட விதிமுறைகளை பின்பற்றி, பாரதியார் பல்கலைக் கழகமும், அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அறிவித்த பின்,இறுதி தகுதி முறையை நிர்ணயிக்க, யு.ஜி.சி., மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு உரிமை இல்லை என,ஏற்கனவே உயர்நீதிமன்றம் எடுத்த முடிவு, இப்போது செல்லாது. இத்தகைய நிபந்தனைகளை விதிப்பதில், எந்தசட்டவிரோதமும் இல்லை என, ஒரு வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, இறுதி தகுதியை நிர்ணயிக்க, யு.ஜி.சி., பாரதியார் பல்கலைகழகம் பின்பற்றும் நடைமுறையை எதிர்த்த, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக