பிழையான வினாக்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார் வாரியத்தலைவர் விபு நய்யார்.
முதுகலைப்பட்டதாரி தமிழாசிரியர் நியமன எழுத்து தேர்வு வினாக்களில் பிழை என புகார் எழுந்தது. மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. வினாத்தாளில் 47கேள்விகள் பிழையாக இருப்பதாக மனுவில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். 47 வினாக்களுக்கும்கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடவும் மனுவில் கோரரிக்கை வைத்திருந்தார்.
விசாரணையில் வினாக்களில் பிழை இருப்பதை வாரிய தலைவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் தமிழ்மறு தேர்வு நடத்தமுடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வாரிய தலைவர் அரசிடம்ஆலோசனை பெற்றே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.பிரச்சினை பற்றி அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு தெரிவிப்பதாக நய்யார் விளக்கமளித்து உள்ளார்.
Lவாரியத் தலைவரின் பதிலை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக