திங்கள், 13 ஏப்ரல், 2015

TRB PG TAMIL:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.

 குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

 சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை 'ஜனசக்தி' பத்திரிகை வெளியிட்டுவந்தது.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய 'குயில்' இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். 'படித்த பெண்' திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 'சின்னப் பயலே சின்னப் பயலே', 'தூங்காதே தம்பி தூங்காதே', 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே', 'எல்லோரும் இந்நாட்டு மன்னரே', 'செய்யும் தொழிலே தெய்வம்' ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.


 

அம்பேத்கர் பிறந்த நாளை (செவ்வாய்க்கிழமை) முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

அம்பேத்கர் பிறந்த நாளை (செவ்வாய்க்கிழமை) முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட செய்தி குறிப்பில், "அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14, 2015 -செவ்வாய்கிழமை) மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர்கள் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இதை அறிவித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு"

தமிழ்ப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக உற்சாகமாய்க் கொண்டாடி வருகிறார்கள்.தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை மீண்டும் நிலைநாட்டியதை நினைவு கூர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திடும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.

இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் உணவு தயாரிக்க அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு


வரும் 15-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட உள்ளதால், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சத்துணவு தயாரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதற்கு தலைமை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே உணவு தயாரிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் துரை.அரங்கசாமி கூறும்போது, "இந்தப் போராட்டத்தில், சுமார் 80,000 மையங்களில் பணியாற்றும் 1.20 லட்சம் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பர்.எனவே, அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தால் போராட்டத்தைக் கைவிடுவோம்" என்றார்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறும்போது, "போராட்டம் தொடர்பாக சத்துணவு ஊழியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், அந்தந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சத்துணவு தயாரிக்க வேண்டும் எனவும், இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண் டும் எனவும் தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

இந்த முடிவைக் கைவிட்டு, சத்துணவு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கை களை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்" என்றார்.

 

நினைவாற்றலை வளர்க்கும் கலையாற்றல்!

கலை, கைவினைத் துறைகளில் ஈடுபடுவோருக்கும், பிறருடன் சகஜமாகப் பழகுவோருக்கும் வயதான காலத்தில் நினைவாற்றல், புரிதல் திறன் ஆகியவற்றில் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ரோசஸ்டர் நகரிலுள்ள மேயோ மருத்துவமனையைச் சேர்ந்த ரோஸ்பர்ட் ராபர்ட் என்பவர் இதுகுறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்கு, சராசரியாக 87 வயது கொண்ட, நினைவாற்றல், புரிதல் திறனில் எந்தக் குறைபாடும் இல்லாத 256 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓவியக் கலை, சிற்பக் கலை, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றில் அவர்களது பங்கேற்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நண்பர்களுடன் பழகுவது, புத்தகங்கள் படிப்பது, சுற்றுலா செல்வது, கணினி, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, இணையதளம் மூலம் தகவல்களைத் தேடுவது, மின் வணிகத்தில் பொருள்களை வாங்குவது ஆகிய அவர்களது பழக்க வழக்கங்களும் பதிவு செய்யப்பட்டன.
சராசரியாக நான்கு ஆண்டுகள் கழித்து, இந்த 256 பேரில் 121 பேருக்கு "எம்.சி.ஐ.' எனக் கூறப்படும் மிதமான புரிதல் குறைபாடு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குறைபாடு ஏற்பட்டவர்களையும், அவர்களது கலை ஈடுபாடு, பழக்க வழக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கலைத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு நினைவாற்றல், புரிதலில் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு 73 சதவீதம் குறைவு எனத் தெரிய வந்தது. மேலும், நண்பர்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டோரை அந்தக் குறைபாடு தாக்கும் வாய்ப்பு 55 சதவீதம் குறைவு எனவும் தெரிய வந்தது. கணினியைப் பயன்படுத்துவதாலும் எம்.சி.ஐ. குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கணினி பயன்படுத்தாதவர்களைவிட இவர்களது நினைவாற்றல், புரிதல் திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 53 சதவீதம் குறைவு என அந்த ஆய்வில் தெரிய வந்தது. அமெரிக்க நரம்பியல் அகாதெமி வெளியிடும் "நியூராலஜி' அறிவியல் இதழில் இந்த ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முதன்மைத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்தத் தேர்வை 16,933 பேர் எழுதினர். இவர்களிலிருந்து 3,200 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதிய 904 பேரில் 240-க்கும் மேற்பட்டோர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்முகத் தேர்வுக்கான முதல் கட்ட அழைப்புக் கடிதங்கள் அதே இணையதளத்தில் ஏப்ரல் 18-க்குள் வெளியிடப்படும். அதன்பிறகு, இரண்டாவது, மூன்றாவது கட்ட அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறாத தேர்வர்களின் மதிப்பெண் விவரங்கள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாட் இட ஒதுக்கீடு: ஜாட் சமூகத்துக்கான இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக மறுஆய்வு மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான இறுதி முடிவுக்குப் பிறகே முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பிரதான தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. ஜாட் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவை மார்ச் மாதம் 17- ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, இதுதொடர்பான மறு ஆய்வு மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probationary officer (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 2393 Probationary officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/PO/2015-16/02
நிறுவனம்: State bank of India (SBI)
மொத்த காலியிடங்கள்: 2000 + 393
பணி: Probationary officer (PO)
பிரிவு வாரியான காலியிடங்கள் விரம்: SC – 308 ST – 339 OBC – 541 GEN – 812
Backlog Vacancies: SC – 67 ST – 219 OBC – 107
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 01.09.2015 தேதிக்கு முன்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். வயதுவரம்பு: 1.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1985 முதல் 01.04.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலும், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015 ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.05.2014
மேலும் சம்பளம், தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/ documents/44978/7348676/SBIPO-2015-Full+English+Advertisement.pdf/fa1e559b-0504-4df6-9d11-534790f1dd95 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

போலியாக கல்விச் சான்றிதழ்களை தயாரித்து விற்ற மூன்று பேர் கைது

பிரபலமான பல்கலைக்கழகங்களின் பெயரில், போலியாக கல்விச் சான்றிதழ்களை தயாரித்து விற்ற, பா.ம.க., மகளிர் அணி தலைவி உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கிளைகள் துவக்கி, போலி சான்றிதழ்கள் விற்று, கோடிக்கணக்கில், அவர்கள் பணத்தைச் சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி, கடந்த மாதம், 25ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'அருண்குமார், அழகிரி மற்றும் கார்த்திகேயன் என்ற மூவர், பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பத்துடன் அவர்கள் இணைத்துள்ள, எல்.எல்.பி., (சட்ட படிப்பு) சான்றிதழ்கள் போலியானவை. எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த, உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், பா.ம.க., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் சண்முகசுந்தரி, 32, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ் பிரபு, 28, போலி சான்றிதழ்
பெற்ற மாணவர் அருண்குமார், 36, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். சண்முகசுந்தரியும் மற்றும் சிலரும் சேர்ந்து, தமிழகம் முழுவதும் கிளைகள் துவக்கி, நுாற்றுக்கணக்கான
இளைஞர்களுக்கு போலி சான்றிதழ்களை வழங்கி, கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் மேலும் கூறப்படுவதாவது: பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம்சமர்ப்பித்த மூன்று பேரில் ஒருவர் அருண்குமார். பெரம்பூரைச் சேர்ந்த அவர், விண்ணப்பத்துடன் இணைத்திருந்த சான்றிதழ் போலியானது என்பதால், முதலில் அவரிடம் விசாரணை நடத்தினோம்.டிப்ளமோ படித்த அருண்குமார், வழக்கறிஞராக ஆசைப்பட்டு, கோவை, காந்திபுரத்தில் இயங்கிய, 'ஹய் மார்க் எஜுகேஷன் இன்ஸ்டிடியூஷன்' என்ற நிறுவனத்தின் இயக்குனரான சண்முகசுந்தரியை அணுகியுள்ளார்.
இவர், பா.ம.க., மாநில மகளிர் அணி துணைத் தலைவராக உள்ளார்.'படிக்க வேண்டாம்; வகுப்புக்கு போக வேண்டாம்; 3.5 லட்சம் ரூபாய் கொடு; சான்றிதழ் உன்னைத் தேடி வரும்' என, அவர் ஆசை காட்டியுள்ளார். அதை நம்பி, சண்முக சுந்தரியிடம் பணத்தைக் கொடுத்த அருண்குமாருக்கு, ஒரு மாதத்தில், உ.பி., மாநிலம், பந்தல்கண்ட் பல்கலையில், ஐந்து ஆண்டுகள் படித்ததாக எல்.எல்.பி., சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.போலி சான்றிதழ் வழங்க, சண்முகசுந்தரிக்கு உடந்தையாக, சேலம், குரங்குசாவடியைச் சேர்ந்த கணேஷ்பிரபு என்பவர் செயல்பட்டு உள்ளார்.இரண்டு பேரும் சேர்ந்து, போலி சான்றிதழ்கள் கேட்டு வந்தவர்களிடம், பல்கலையின் பெயரைப் பொறுத்து, இரண்டு லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.பலருக்கு இவர்கள், எஸ்.எஸ்.எல்.சி., முதல், எல்.எல்.பி., - பி.இ., - பி.காம்., - பி.எஸ்சி., என, பல பட்டப் படிப்புகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாற்றுச் சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து வழங்கி உள்ளனர்.அதற்காக,
உ.பி., பந்தல்கண்ட் பல்கலை, கான்பூர்பல்கலை, லக்னோ மாநில டெக்னிக்கல் எஜுகேஷன் போர்டு, டில்லி போர்டு ஆப் சீனியர் செகண்டரி எஜுகேஷன் உட்பட, பல மாநில பல்கலைகளின் பெயரை பயன்படுத்தி உள்ளனர்.
இந்தக் கும்பல்,தமிழகம் முழுவதும், பல இடங்களில் கிளைகள் அமைத்து, இதேபோல, ஏராளமான இளைஞர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியிருக்கலாம் என, தெரிகிறது.அதனால், எந்தெந்த இடங்களில், இவர்கள் கிளைகள் நடத்தினர்; கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது
குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன், பார் கவுன்சிலில், இவர்கள் தந்தது போன்ற, சந்தேகத்துக்கு இடமான கல்வி நிறுவனங்கள் பெயரில் சான்றிதழ்கள் இருந்தால், மறு பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.போலி சான்றிதழ் கொடுத்து, பார் கவுன்சிலில் விண்ணப்பித்து தலைமறைவாகியுள்ள அழகிரி, கார்த்திகேயன் உட்பட, சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேரம் தவறாமையை கடைபிடியுங்கள்.

நேரமும் காலமும் என நாம் பார்க்கப்போவது பஞ்சாங்கம் பார்த்து ஜோதிடரிடம் கேட்டுக்
குறிக்கின்ற நேரம் அல்ல. எந்த வேலையையும் தொழிலையும் சரியான நேரத்திலும் மிகப்
பொருத்தமான தருணத்திலும் செய்கின்ற போதுதான் வெற்றி கிடைக்கிறது.சில நிமிடம் கால
தாமதமானதால் ரயிலையும், பஸ்சையும், விமானத்தையும் கோட்டை விட்டவர்கள் உண்டு.
சரியான நேரத்தில் சரியான மனிதர்களைச் சந்திக்க முடியாமல் போனதால் வாழ்க்கையில் ஏற்படவேண்டிய நல்ல தருணங்களை இழந்தவர்கள் நம்மில் அதிகம் பேர். சரியான நேரத்தில் சரியான நபரை நேரம்தவறாது சந்தித்ததின் விளைவால் வாழ்க்கையில் உச்சத்தினைத் தொட்டவர்களும் உண்டு. நாம் எந்த வகை என்பதைச்சிந்திப்போம்.
வரலாறு ஆகட்டும் தொழில் ஆகட்டும்-- நேரமும் காலந்தவறாமையும் மிக முக்கியமானவை.
நெப்போலியனும் ஜெர்மானியர்களும் தவறான நேரத்தில் ரஷ்யாவிற்குள் நுழைந்ததால்தான், சிறந்த தளபதிகள் இருந்தும் வெற்றி பெற இயலவில்லை. மாவீரர் அலெக்சாண்டரின் தோல்விகளே இல்லா வெற்றிகளுக்கும் அவர் எடுத்த முடிவுகளுக்கும் சரியான நேரம் தான் முதல் காரணமாக இருந்திருக்கிறது. போரஸ் மன்னரிடம் போரிடுவதற்கு முன்பாக ஜீலம் நதிக்கரையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தன் படை
பரிவாரங்களுடன் அலெக்சாண்டர் காத்திருந்தார். சரியான நேரத்தில் படைகளுக்கு எந்தவொரு சேதாரமும் இல்லாது, ஆற்றைக் கடந்தார். வெற்றியும் பெற்றார்.நேரம்தான் அவரின் வெற்றியைத் தீர்மானித்தது. எதற்காக அலெக்சாண்டரைச் சொல்கிறேன் என்றால், அவர்தான்
முதன்முதலில் படைகளை மட்டுமில்லாது அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, ஒரு
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சரியான நேரத்தில் விரயமில்லாது கொண்டு சென்று சாதனை செய்தவர்.
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தவருக்கும் இரண்டாவது வந்தவருக்கும் சில
நொடிப்பொழுது தான் வேறுபாடு. அனால் அந்த நொடிப் பொழுது தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
வியாபார உலகில் தொழில் வியூகம் அனைத்தும் ஜெயித்திட சரியான நேரத்தின் செயல்பாடுகள்தான் உதவியாகஇருக்கும்.எந்த ஒரு சிறு விஷயமானாலும் நேரம் தவறாமையை கடைபிடியுங்கள். இது வெளிநாடுகளில் மிக
முக்கியமான செயலாகப் பார்க்கப்படும். ஆனால் நம் நாட்டில் எந்த ஒரு கூட்டத்திற்கும் சரியான நேரத்திற்குவருபவர் ஏதோ ஒரு தவறு செய்தவர் போல பார்க்கப்படுவார். மற்றவர்கள் வரும்வரை காக்கவைக்கப்படுவார். நீங்கள் மட்டும் நேரம் தவறாமல் போனால் போதாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேரத்தின் முக்கியத்துவத்தைபுரிய வையுங்கள். நாளடைவில் உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் மாற்றம் நடக்கும்.

மதுரை காமராஜ் பல்கலை தொலைதூர கல்வி தேர்வுபல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்கக மாணவர்களுக்கான
நான்செமஸ்டர் தேர்வுகளுக்கு ஏப். 21க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்த வேண்டும்.

இளநிலை மற்றும் பி.எட். படிப்பிற்கு மே 16லும், முதுநிலை படிப்புக்கு மே 23லும் தேர்வு
துவங்குகிறது.எம்.பி.ஏ. எம்.சி.ஏ. டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் அடிப்படை நிலை
பட்டப்படிப்புக்கு ஏப். 27 க்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மே 27 ல் தேர்வு
துவங்குகிறது. தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெறலாம். முதுநிலை மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு கால அட்டவணை அனுப்பப்படாது. www.mkudde. org இணையதளம் மூலம் பெறலாம். இத்தவலை கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அனுமதியின்றி 5 ஆயிரம் நர்சிங் பள்ளிகள்

" தமிழகத்தில் அனுமதியின்றி 5 ஆயிரம் நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன," என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகள் சங்க மாநிலத்தலைவர் பாலாஜி தெரிவித்தார்.திண்டுக்கல்லில்நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 25 அரசு நர்சிங் பள்ளிகள் உட்பட 200 மட்டுமேஅங்கீகாரம் பெற்றவை. இவற்றில் 3 ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் போலி நர்சிங் பள்ளிகள் இயங்குகின்றன.இவை கேரளாவில் தடைசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் செயல்படுகின்றன. இங்கு 10 ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் கூட சேர்த்து கொள்ளப்படுகின்றனர். 10 க்கு 10 அடி அறையில் பள்ளியை நடத்துகின்றனர். இதில் பயின்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம், நர்சிங் கவுன்சிலில் பதிய முடியாது. இதனால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அரசு உத்தரவு இருந்தும் போலிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 7 ஆயிரம் நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காகஅங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பள்ளிகளில் படித்தோருக்கு மாவட்டந்தோறும் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் விபரங்களை www.tamilnadunursingcouncil.com ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

கிராமத்து முன்னோடி, தாயம்மாள்!


பேருந்து வசதிகூட இல்லாத குக்கிராமத்தைச் சேர்ந்த தாயம்மாள், 'சிறந்த முன்மாதிரி' விருதை மத்திய நிதியமைச்சர் கையால் பெற்றிருக்கிறார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படும். கல்வித் துறையில் புதிய மாற்றங்களை முன்னெடுத்ததற்காகத் தாயம்மாளுக்கு இந்த விருதை இந்தியத் தொழில் கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த விழாவில் விருது பெற்றுத் திரும்பியிருக்கும் தாயம்மாள், திங்களுக்கு மறுநாள் செவ்வாய் என்பதுபோல்தான் இந்த விருதையும் இயல்பான ஒரு நிகழ்வாகக் குறிப்பிடுகிறார்.

பாதியில் நின்ற படிப்பு

தூத்துக்குடி மாவட்டம் இசவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாயம்மாள், வறுமை நிரந்தரமாகக் குடியிருக்கும் குடும்பத்தின் நான்காவது பெண். விவசாயக் கூலி வேலையை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பத்தில் படிப்பு இரண்டாம்பட்சம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அக்காவும் அண்ணன்களும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட, அவர்களைப் பின் தொடர்ந்து தாயம்மாளுக்கும் ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு நிற்க வேண்டிய கட்டாயம்.

பள்ளியை விட்டு நின்றாலும் எப்படியாவது மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆவல் தாயம்மாளின் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்தது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படிப்பைத் தொடர்ந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மீண்டும் படிப்பைத் தொடர முடியாத நிலை. பிறகு எப்படியோ போராடி படிப்பைத் தொடர்ந்த தாயம்மாள், அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி!

மாலை நேரப் பள்ளி

"எங்க தாத்தா, பாட்டியோட வீட்லதான் நாங்க குடியிருக்கோம். என்னோட சேர்த்து வீட்ல மொத்தம் 7 பிள்ளைங்க. எல்லாரும் கூலி வேலைக்குப் போனாதான் சாப்பிட முடியும்? இதுல நாங்க பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டா எங்களைப் பெத்தவங்க மட்டும் எப்படித் தனியா சமாளிக்க முடியும்? ஆனா, எப்படியோ முட்டி மோதி நாங்க ஓரளவுக்குப் படிச்சோம். இப்போ என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கறாங்க" என்று சொல்லும் தாயம்மாள், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறார். அவரது அந்த முனைப்புதான் இன்று விருது வாங்கக் காரணம்.

கோபத்தால் விளைந்த நன்மை

சில வருடங்களுக்கு முன் இவரது கிராமத்துக்கு டி.வி.எஸ். நிறுவனத்தினர் வந்திருக்கிறார்கள். இசவன்குளம் கிராமத்தைத் தத்தெடுத்து இருப்பதாக ஊர்ப் பெரியவர்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். அப்போது அங்கே நின்றிருந்த தாயம்மாள், "நீங்க என்ன பெருசா செஞ்சிட போறீங்க. இங்கே பாருங்க, மழை பெஞ்சு அங்கன்வாடியைச் சுத்தி பாம்பும் தவளையுமா போகுது. இதை உங்களால சரிசெய்து தரமுடியுமா?" என்று கோபத்துடன் பேசியிருக்கிறார். அங்கிருந்த ஊர்ப் பெரியவர்கள் தாயம்மாவை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தாயம்மாளின் கோபத்தில் இருக்கிற நியாத்தைப் புரிந்துகொண்ட டி.வி.எஸ். நிறுவனத்தினர் அவர் கேட்டுக் கொண்டதுபோல அங்கன்வாடியைச் சீரமைத்துத் தந்திருக்கிறார்கள்.


"எங்களை இத்தனை கேள்வி கேட்கிறாயே? உன் ஊருக்காக நீ என்ன செய்வாய்?" என்று தாயம்மாள் முன்னால் விழுந்த கேள்வி, அவரை இன்னும் உத்வேகப்படுத்தியது. எப்படியாவது தன் ஊரை முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேரச் சொல்லி அழைத்தார். சில வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லாமல் பெரிய குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதைக் கண்டார். உடனே பள்ளி ஆசிரியர்களிடம் பெற்றோர்களிடமும் பேசி, குழந்தையுடனேயே பள்ளிக்கு வர அனுமதி வாங்கினார். மாலை நேரங்களில் மாணவர்களுக்குப் பாடம் கற்றுத் தந்தார். இவரிடம் படித்த பலர் இன்று கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். இதுவரை கிட்டத்தட்ட 400 குழந்தைகளுக்கு மேல் இவரிடம் மாலை நேரத்தில் பாடம் பயின்றிருக்கிறார்கள்.

"பாடம் சொல்லித் தர்றதுக்காகப் பணம் வாங்கறது இல்லை. வீட்டுக் கஷ்டம் அதிமானப்போ ஒரு முறை பத்து ரூபாய் டியூஷன் பீஸ் கேட்டேன். அதுக்கு அந்தக் குழந்தைகளோட அம்மாக்கள் எல்லாம், நாங்களே கூலி வேலைக்குப் போறோம். எங்ககிட்டே பணம் கேட்டா எப்படிக் குடுக்கறதுன்னு கேட்டாங்க. இப்படிதான் எல்லாரோட நிலைமையும் இருக்கு. கல்வியும் வேலைவாய்ப்பும் எங்க ஊரோட நிலைமையை மாத்தும்னு நம்புறேன்" என்று சொல்லும் தாயம்மாள், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களின் துணையோடு ஊரைச் சுத்தப்படுத்தும் பணியையும் செய்துவருகிறார்.

கிராம முன்னேற்றமே இலக்கு

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் இவர் கற்றுக் கொண்ட தையல் கலை, கல்லூரிப் படிப்புக்கான கணிசமான ஊதியத்தைப் பெற்றுத் தந்தது. தற்போது அரசுத் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருக்கிறார். இருபத்தேழு வயதாகும் அவர் தன் திருமணம், பணத் தட்டுப்பாட்டால் தள்ளிப்போவது குறித்துக் கவலைப்படாமல் தனக்கு அடுத்து தன் தங்கைகளும் ஊர் நன்மைக்குப் பாடுபட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

"நான் விருது வாங்கியிருக்கேன்னு சொன்னப்போ எனக்கு எதுவும் புரியலை. 'விருது குடுக்கறதுக்குப் பதிலா ஏதாவது வேலை கொடுத்திருக்கலாம்'னு அம்மா சொன்னாங்க. அதை வாங்குறதுக்கு டெல்லி போகணும்னு சொன்னப்போ அம்மா வேணாம்னு சொன்னாங்க. அப்புறம் எல்லாரும் எடுத்துச் சொல்லி அவங்களுக்குப் புரிய வச்சோம். இதைப் பார்க்க எங்க அப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்" என்று தாயம்மாள் சொல்லும்போதே குரல் உடைகிறது. தாயம்மாளின் தந்தை பரமசிவன் சில மாதங்களுக்கு முன் இடி தாக்கி இறந்துவிட்டார். தேரிக் காட்டில் பாடுபடும் தாய்க்கு உதவியாகத் தாயம்மாளும் அவருடன் பிறந்தவர்களும் துணைநிற்கிறார்கள்.

"எங்க ஊருக்குக் குடி தண்ணீர் வசதியும் பஸ் வசதியும் இல்லை. அதுக்காக எவ்வளவோ பேர்கிட்டே முறையிட்டாச்சு. எதுவும் நடக்கலை. அடிப்படைத் தேவைகள் கிடைச்சாதானே மக்களால வாழ முடியும். எங்க கிராமத்தோட முன்னேற்றம் இந்த நாட்டோட முன்னேற்றம் இல்லையா?" என்ற தாயம்மாளின் கேள்விக்குப் பதில் கிடைக்கிற நாளில்தான் ஒரு கிராமத்தின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படும்.


 

கூட்டுறவு பணியாளர்களில் 3 ஆயிரம் பேர்பணியில் சேருவதில் சிக்கல்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு பணியாளர்களில் 3 ஆயிரம் பேர்பணியில் சேருவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.அவர்கள் ஓராண்டுக்குள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியை முடிக்காவிட்டால், தேர்ச்சி பெற்றது ரத்து செய்யப்படும் என்றுஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டு றவு வங்கிகள், கூட்டுறவு சங்கங் களில் 3,589 உதவியாளர் பணியிடங் களை நிரப்ப மாநிலகூட்டுறவு பணியாளர் தேர்வுவாரியம் கடந்த 2012 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தியது. 2 லட்சத்துக்கும் மேற் பட்டபட்டதாரிகள் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 7,200 பேருக்கு 2012 டிசம்பர், 2013 ஜனவரி, 2014செப்டம்பர் என 3 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கு முடிந்த நிலையில், கடந்த மார்ச்கடைசியில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 3,589 பேருக்கும்கூட்டுறவு பணியாளர் தேர்வு வாரியத் தில் இருந்து தேர்ச்சிக் கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. 'தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக் காதவர்கள் என்றால், ஓராண்டுக்குள் அப்பயிற்சியை முடிக்க வேண்டும். அதன் பிறகே
பணிநியமன ஆணை வழங்கப்படும். ஓராண்டுக்குள் முடிக் காவிட்டால் தேர்ச்சி ரத்துசெய்யப் படும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக் கையில், 2 ஆண்டுக்குள் இப்பயிற் சியை முடிக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. தற்போது ஓராண்டுக்குள் முடிக்கவேண்டும் என்று கூறப் பட்டிருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெற்றவர்களில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவு பயிற்சி முடிக்காதவர்கள்தான். புதிய நிபந்தனை காரணமாக, அவர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தேர்ச்சியாளர்கள் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ''கூட்டுறவு பட்டயப் பயிற்சியை 2 ஆண்டுக்குள் முடிக்கலாம் என்றுகூறிவிட்டு, இப்போது திடீரென ஓராண்டு என்கிறார்கள். இல்லாவிட் டால் தேர்ச்சி பெற்றது ரத்தாகிவிடும் என்றும் புதிதாகநிபந்தனை விதிக் கின்றனர். இதுதொடர்பாக பத்திரத் தில் உறுதிமொழி எழுதித் தரவேண் டும் என்கின்றனர். தமிழ்நாடுகூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் பட்டயப் படிப்பு அல்லது தேசிய கூட்டுறவு ஒன்றியம் சென்னையிலும் மதுரையில்
நடத்தும் கூட்டுறவு பயிற்சியை முடித்த பிறகே பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியை நடத்துகிறது. 10 மாத காலம் கொண்ட இப்பயிற்சி ஜூன் மாதம் தொடங்கும். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டு ஜூன் மாதவாக்கில் தேர்வு முடிவு வெளி யாகும். அதற்குள் ஒன்றரை ஆண்டு ஆகிவிடும். பிறகு எப்படி நாங்கள் ஓராண்டில் இப்பயிற்சியை முடிக்க முடியும்? எனவே, நாங்கள் கூட்டுறவுப் பட்டயப் பயிற்சியை முடிக்க, தேர்வு அறிவிக்கையில் கூறப்பட்டபடி 2 ஆண்டு அவகாசம் தரவேண்டும். படிக்கும் காலத்தில் உதவித்தொகை வழங்கவேண்டும். அல்லது பணியில் இருந்தவாறே அஞ்சல்வழியில் படிக்க அனுமதி அளிக்கவேண்டும்.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது

கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி.

சமூகக் கல்வி நிறுவனம் மற்றும் யுனிசெஃப் இணைந்து குழந்தைகள் நேயப் பள்ளிகளை உருவாக்குவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நேற்றுநடைபெற்றது.கூட்டத்துக்கு தலைமை வகித்து வசந்திதேவி பேசியதாவது: தற் காலத்தில் கல்வியின் போக்கு சீரழிந்து வருவதை எதிர்த்து
ஆசிரிய சங்கங்கள் குரல் கொடுக்க வில்லை, ஆசிரிய சமுதாயம் எங்கே போனது என்ற சந்தேகம் எழுகிறது. 1980-களில் பல்வேறு கோரிக் கைகளுக்காக போராடிய ஆசிரி யர்களுக்கு பெற்றோர்களும், பொதுமக்களும் துணை நின்றனர். ஆனால்,அந்த உணர்வு, உறவு இப்போது இல்லை. இதற்கு காரணம் ஆசிரியர்- பெற்றோர் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. தனியார்மயத்தை ஊக்குவிக் கும் அரசுகளால், அரசுப் பள்ளி களுக்கும் ஆபத்துதான். தனியார் பள்ளிகள் பெருகுவதற்கு அரசின் கொள்கைகளே காரணம். ஆசிரியர் களும், அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களும்தான்
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் 17,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இங்கேயும் அந்த நிலை ஏற்படலாம். அதற்கு முன்பாக நாம் விழித்துக்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைவுக்குகாரணம் என்ன, நாம் அக்கறையுடன்தான் கல்வி போதிக்கிறோமா என்பதை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசுப்
பள்ளிகளை குழந்தைகள்நேயப் பள்ளிகளாக உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. இதற்கான நடவடிக்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்றார் அவர். யுனிசெஃப் குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் வித்யா சாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்புதேர்வெழுதி, 2015-16ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க,உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் புத்தகத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும்,பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். பொதுத்தேர்வில், இவற்றிலிருந்தே பெரும்பாலும் கேட்கப்படும். நடந்து முடிந்ததேர்வில் கூட, 100 சதவிகிதம், 'புக் பேக்' வினாக்களாக இருந்ததால், மிகவும் எளிமையாக இருந்ததாகவும், சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டை விட, இரு மடங்கு, 'புக் பேக்' வினாக்கள்அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஐந்து மதிப்பெண் வினா, 25 லிருந்து, 108 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வினாக்களைபடிக்க, மாணவர்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 11 ஏப்ரல், 2015

விண்வெளிக்குப் போக வேண்டும். அதுமட்டுமே என் லட்சியம்-தேனி மாணவி உதய கீர்த்திகா


தேர்வு முடிந்துவிட்டாலும் முடிவுகள் வரும் வரையில் திக்திக்கென்ற மனநிலையிலேயே இருப்பார்கள் பிளஸ்2 மாணவர்கள். ஆனால், ரொம்பத் தெளிவாக இருக்கிறார் தேனி மாணவி உதய கீர்த்திகா. "விண்வெளிக்குப் போக வேண்டும். அதுமட்டுமே என் லட்சியம். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்" என்று சொல்லும் இவர், அதற்கு முழுத் தகுதி பெற்றவர் என்று சான்றளிக்கிறார்கள் ஆசிரியர்கள்.

இஸ்ரோ தந்த பரிசு

இளமையிலேயே அறிவியல் ஆர்வம் கொண்ட உதய கீர்த்திகா, 2011-ம் ஆண்டு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் வென்றவர். அடுத்து 2012-ம் ஆண்டு இஸ்ரோ சார்பில் 'சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

2013-ம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 487 மதிப்பெண்கள் பெற்று தேனி கான்வெண்ட் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த இவர், அறிவியல் பாடத்தில் சென்டம் அடித்திருந்தார். ஏழ்மையான குடும்பம்தான் இவருடையது. இவருடைய அப்பா அல்லிநகரம் தாமோதரன் எழுத்தார்வம் கொண்டவர் என்பதால், நிறையப் புத்தகங்களைப் படிப்பதோடு, இவருக்கும் வாசிப்புப் பழக்கத்தைத் தந்துள்ளார். ஆகவே விண்வெளி தொடர்பான கதைகளையும், துணுக்குகளையும் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்துள்ளார் உதய கீர்த்திகா. 2014-ம் ஆண்டு இஸ்ரோ நடத்திய 'வழி நடத்தும் விண்வெளி' என்ற கட்டுரைப் போட்டியில் மீண்டும் முதல் பரிசு பெற்றார்.

"நிலவைக் காட்டி அப்பா கதை சொன்ன காலத்திலேயே, என்னை நிலாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கப்பான்னு அடம்பிடிச்சிருக்கேன். 9-ம் வகுப்புப் படித்தபோது, எந்தத் துறையைத் தேர்வு செய்தால் என் சுபாவத்துக்கு நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, விண்வெளி ஆராய்ச்சி தான் என்ற முடிவுக்கு வந்தேன்" என்கிறார் இவர். அதன் பிறகு விண்வெளி, அறிவியல் தொடர்பான எந்தப் போட்டி என்றாலும் முதல் ஆளாகப் பெயர் கொடுக்க ஆரம்பித்துள்ளார். 'அந்தப் போட்டிகளுக்குத் தயாராவதே சுவாரசியமான அனுபவமாக இருந்தது' என்கிறார் இவர்.

விண்வெளிக்குச் செல்லும் வழி

இஸ்ரோ கட்டுரைப் போட்டிகளில் வென்றதால், இரண்டு முறை மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் உதய கீர்த்திகா. இந்தியாவின் அதி நவீன பி.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களுக்குத் தேவையான கிரையோஜெனி இஞ்ஜின்கள் உள்பட 60 சதவிகிதப் பணிகள் அங்குதான் நடக்கின்றன. அதனை நேரில் பார்த்து விளக்கங்களைப் பெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.

அவருடைய ஆர்வத்தைக் கவனித்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணன், பிளஸ்2 முடித்ததும் ஐ.ஐ.எஸ்.டி. (Indian Institute of Space Science and Technology) யில் சேர். உன் லட்சியத்தை அடைய அது உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். பிளஸ்2 தேர்வுடன், ஐ.ஐ.எஸ்.டி. நுழைவுத் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் உதய கார்த்திகா, இந்த வாரம் நுழைவுத் தேர்வு எழுதுகிறார்.

"பல லட்சம் பேர் எழுதுகிற இந்தத் தேர்வில் நான் தேர்வு பெறுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது" என்று சொல்லும் இவர், சமீபத்தில், நெதர்லாந்து நிறுவனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் மனித காலனி ஒன்றை அமைக்க முடிவெடுத்து, 100 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளது பற்றியும், கோவை பொறியியல் மாணவி சாரதா பிரசாத்துக்குக் கிடைத்த வாய்ப்பை பற்றியும் நிறையப் பேசுகிறார்.

"2024-ல் இந்த 100 பேரும் செவ்வாய் கிரகம் செல்வார்கள். அதே காலகட்டத்துக்குள் உரிய கல்வித் தகுதியைப் பெற்று விண்வெளி வீராங்கனையாக, விஞ்ஞானியாக முத்திரை பதிக்க வேண்டும். அதுதான் என் லட்சியம்" என்கிறார் உதய கீர்த்திகா.

அதுமட்டுமல்ல தேனி மாவட்டத்தில் இவரைப் போன்ற ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் சர்வதேச தரத்தில் விண்வெளி தொடர்பான கல்வி நிறுவனத்தையும் தொடங்கும் விருப்பமும் இவருக்கு உள்ளது.


 

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது.


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளன்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ,மாணவிகள் அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் உற்சாக காணப்பட்டனர்.

இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதி தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் கூறுகையில், "விடைத்தாள் மதிப்பீட்டு பணி வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 75 மையங்களில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அஞ்சல்துறை லாஜிஸ்டிக்ஸ்

தமிழகத்தில் நேற்றுடன் முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடைத்தாள்களை அவற்றை மதிப்பிடும் மையங்களுக்கு அஞ்சல்துறையின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு வெற்றிகரமாகக் கொண்டுபோய் சேர்த்துள்ளது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து தமிழக அஞ்சலக வட்டாரத் தலைமையக உயரதிகாரிகள் கூறும்போது, "முன்பெல்லாம், விடைத்தாள்கள் தபால் நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும்.

இந்த ஆண்டிலிருந்து, நாங்களே எங்களது வாக னங்களைக் கொண்டு போய் 68 கல்விமாவட்டங்களிடமிருந்து, விடைத்தாள்களைப் பெற்று, உரிய இடத்தில் 'டோர் டு டோர்' முறையில் பட்டுவாடா செய்தோம்" என்றனர்.


 

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

பழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

பழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்,சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி 15 மாவட்டங்களில் 40நாட்களுக்கு இலவச பயிற்சி

ஆசிரியர் தகுதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்தபட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40நாட்களுக்குஇலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து இந்த இலவச பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அதன் இயக்குனர்வி.சி.ராமேஸ்வர முருகன் நடத்த உள்ளார்.பயிற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்(டயட்) நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்பும் பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பை சேர்ந்த பி.எட்.முடித்தவர்கள் சேரலாம்.

அவ்வாறு சேருவதற்கு விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
பதிவு செய்ய 30–ந்தேதி கடைசி.பயிற்சி கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்,சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அளிக்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பயிற்சி பெறலாம்.

தகுதித்தேர்வில் 2013 ல் தேர்ச்சிப்பெற்று 26.09 2014 ல் பணியில் சேர்ந்தவர்களின் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் சேகரிக்கப்படுகின்றது

காஞ்சிபுரம் மாவட்டம் வில்வாராய நல்லூரை சேர்ந்த திரு E.வேல்முருகன் என்பார் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களிடம் தகுதித்தேர்வில் 2013 ல் தேர்ச்சிப்பெற்று 26.09 2014 ல் பணியில் சேர்ந்தவர்களின் விவரம் மற்றும் அவர்கள் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் குறித்து அக்டோபர் 2014 ல் தகவல்கேட்டுள்ளார்.

அம் மனு 6 மாதங்களுக்கு பிறகு தற்போது அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.அதற்கு பதில் அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மேற்கண்டவிவரங்கள் சம்மந்தப்பட்டவருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பதிலளிக்க முதன்மைக்கல்வி அலுவலகத்தால் சேகரிக்கப்படுகின்றது.

கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி: அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு



 கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ராமானுஜன் கணினி மையம் ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை காலத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு "சி" புரோகிராமிங் கணினிப் பயிற்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் கணினி பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இப்பயிற்சி ஒரு வார காலம் நடைபெறும். ஏப்ரல் 15, 22, 29, மே 7, 14 என 5 கட்டங்களாக பயிற்சி நடத்தப்படும். (இந்த தேதிகளில் பயிற்சி தொடங்கும்) தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும். சேர்க்கை கட்டணம் ரூ.1,000. இதை "Co-ordinator, C Programming" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் இயங்கும் (கேண்டீன் அருகில்) ராமானுஜன் கணினி மையத்துக்கு மாணவர்கள் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.


வியாழன், 9 ஏப்ரல், 2015

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தங்களது பிள்ளைகள் மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுப் படித்தாலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் போவதும் தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை மிகவும் எளிதாகப் பெற்றுவிடுவதற்கான காரணம், இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதற்கு கல்வித் துறை உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.


தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்களை ரத்து செய்து, அரசுப் பள்ளிகளில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்பது நல்ல யோசனை. இதை அரசு கவனத்தில் கொண்டு, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்போது, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.




சமையல் எரிவாயு பதிவு செய்ய 21 நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை RTI மூலம் தகவல்


 There is no time bar taking refill cylinder


Most of Gas distributors do not book the cylinder before a periodd of say more than n 20 days after the cylinder has been supplied. But there is no such bar. Through a RTI Application I have confirmed from the Oil Companies. as details below.

Since the issue is related to all of us and all over India.

Please provide maximum publicity to the issue in the larger benefit of all Gas users.

On 14th Nov.2009 I filed a RTI Application with Various Oil Companies to which I have received following reply:

Q:-Copy of rules for refilling of Gas Cylinder both for domestic & Commercial specifying the time gap between receipt of filled up Gas Cylinder and Re-booking of refill.

INDIA OIL COPORATION LTD Sector 19 A Chandigarh through PIO-cum-Dy. Gen Manager (LPG) vide Letter NO.PSO/LPG/RTI dated 16th Dec.2009 informed as under 
Refill can be booked as and when required by a customer to meet his/her genuine requirement of LPG for domestic cooking purpose. No time gap has been specified between the date of supply of a domestic LPG cylinder and the date for booking of the next refill. The same is also true for commercial LPG supplies

HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED lpg Regional Office at Rohtak Road Jind-126012 through Chief Regional Manager cum-CPIO Jind LPG RO Letter NO.LPG/SM/RTI dated 12.12.2009 informed as under :
There is no time bar taking refill cylinder. However it should be used for Domestic cooking by genuine domestic customer. There is no time bar for Non Domestic refill


R K Garg
Convener

RTI Chandigarh

 

இலக்கிய பிதாமகனை இழந்தோம்!


தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81.

சென்னை கே.கே.நகர் நாகாத்தம்மன் கோயில் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபா என்ற மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர்.

ஜெயகாந்தன் 1934-ம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் விழுப்புரத்தில் அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அங்கு அவருக்கு பொதுவுடைமைக் கோட்பாடுகளும் பாரதியாரின் எழுத்துகளுக்கும் அறிமுகமாயின. பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

அங்கு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ஜனசக்தி அச்சகத்தில் பணிபுரிந்தா. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது தஞ்சையில் கடை ஒன்றில் பணிபுரிந்தார். அப்போது முதல் ஏராளமான படைப்புகளை உருவாகினார்.

பின்னர் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கிய அவர் தீவிர எழுத்துப்பணியில் ஈடுபட்டார். 1950-ல் அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. தொடர்ந்து சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாகின. இவரது படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். சில படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றது.

இத்தகைய எழுத்து ஆளுமைமிக்க இலக்கிய பிதமாகன் ஜெயகாந்தனின் இழப்பு சகலதரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தனை நினைவு கூரும் பதிவு:

எழுத்து அவர் ஜீவனமல்ல; ஜீவன்!- டாக்டர் என்.ராம்

ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தன்னுடைய ஞானத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர். ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே., பாலதண்டாயுதம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர்கள் மூலம் மார்க்ஸையும் பாரதியையும் கற்றவர்.

இதனால், மனிதநேயம் என்பது அவருடன் இரண்டறக் கலந்த இயல்பாகிவிட்டது. எனவேதான், மக்கள் கவனத்தைப் பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை - அவலம் அனைத்தையுமே தன் கதைகளின் பாடுபொருளாக்கிக் காட்டினார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி வாழ்ந்தவர் என்ற காரணத்தால், அவருடைய பாத்திரங்கள் உயிர்த் துடிப்புடன் இலக்கிய வீதியில் உலா வருகிறார்கள்.

மனிதநேய ஆன்மிகம் "பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்க வர்ணனை நடத்தி விடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து, அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்" என்று அவரே விளக்கிக் காட்டியபடி சேரிவாழ் மக்களையும், நடைபாதைவாசிகளையும் இலக்கியப் பாத்திரங்களாக நடமாட விட்டார். 'உன்னைப் போல் ஒருவன்' சிட்டியும், 'யாருக்காக அழுதான்' சோசப்பும், 'பிரளயம்' அம்மாசிக் கிழவனும், ரிக்ஷாக்காரன் கபாலியும் மறக்கக் கூடிய பாத்திரங்களா? அதற்குக் காரணம் 'வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் தண்டிக்கப்பட்டவர்களிடமும் சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவை' அவர் நாடிச் சென்றதே ஆகும். ஜெயகாந்தனுடைய ஆன்மிகம் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

"எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனிதநேய அடிப்படையில் மனுஷகுல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றத் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லௌகிக லாபங்களை எல்லாம் மறுத்து அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறானோ அவனே ஆன்மிகவாதி" என்பது அவர் தரும் விளக்கம். சிறுகதைச் சக்ரவர்த்திகள் ஏழை எளிய மக்களை மனமார நேசிக்கும் ஜெயகாந்தன் சொல்லுகிறார்: "நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.

"45 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் வரவேற்புரையில் 'சிறுகதை மன்னர்' என்று யாரோ அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழின் வெளிச்சத்தையும் ஏழை மக்களை நோக்கியே திருப்பி அந்த மேடையில் அவர் கேட்டார்: "என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங் களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்'

ஏதோ அவர்களிடம் கேட்டதை, அவர்களிடம் பார்த்ததை நான் உங்களுக்குத் தருகின்றேன் - எழுதத் தெரிந்த ஒரே காரணத்தால். ஆனால், சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?" அரங்கத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று! அடித்தட்டு வாழ்க்கையின் கலைமனநோயாளிகளைப் படம்பிடித்துக் காட்டிய 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' மக்களைச் சிந்திக்க வைத்த தொடர். 'பிறருக்குத் தெரியாத, தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற, தெரிந்துவிடக் கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்துகொள்ளுகிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி - என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட - என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?' என்ற சாட்டையடிக் கேள்வி மனசாட்சியை உலுப்பி மனநோயாளிகளை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. ஏழை மக்களை வசதி படைத்தோர் ஏமாற்றுவதை 'பிரளயம்' கதையில் எடுத்துக்காட்டி, இலவசங்களை நம்பி உழைப்பை மறந்துவிடும் சோம்பேறித்தனத்தைச் சாடுகிறார்.

சிற்பி கூறியதுபோல, 'தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! 'குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன்.



 

PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !


முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 30க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வானோர் பட்டியல் வெளியீடு

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகஉள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம்மேற்கொண்டது. 2013 நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற்றன. பின்னர், 2014 ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 3-4-2009 தேதிக்கு முன்னர் எம்.ஃபில்.முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒருபணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இப்போது நேர்முகத் தேர்வு முடிந்து, இறுதியாக பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, புவியியல், சுற்றுலா, அரசியல் அறிவியல், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷுவல் கம்யூனிகேஷன், இந்திய கலாசாரம், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (சர்வதேச வணிகம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் (80) சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) காலமானார். ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறிது காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்தார். அவருக்கு 2 மனைவிகள், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பன்முகத் திறமை கொண்டவர்:
தமிழ் இலக்கிய உலகில் புரட்சிகர சிந்தனைகளுக்கு வித்திட்ட ஜெயகாந்தன், கடலூரில் 1934-ஆம் ஆண்டு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர். கடந்த 2002-ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறையாகப் பெற்றார். இது தவிர, 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதும், 2011-ஆம் ஆண்டு ரஷிய விருதும் பெற்றார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்...
ஜெயகாந்தனுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். தனது 12-ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவரது மாமா கம்யூனிஸ கொள்கைகளையும், சுப்பிரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலக்கியம் மீது ஆர்வம்:
சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தனை அவருடைய தாய் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த உறவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது இளமைக்காலத்தை கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு பரிச்சயமானார். அந்தக் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியினஅப்போதைய உறுப்பினர் ஜீவானந்தம், அவருக்குத் தமிழாசிரியர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை பார்த்தார். 1949-இல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், தஞ்சாவூரில் காலணி விற்கும் கடையில் தாற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். காலப்போக்கில் கம்யூனிஸ கொள்கைகளிலிருந்து மாறுபட்ட ஜெயகாந்தன், காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் அவரது தொண்டனாக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை:
ஜெயகாந்தன் தனது இலக்கிய வாழ்க்கையை 1950-களில் தொடங்கினார். "சரஸ்வதி', "தாமரை', "கிராம ஊழியன்', "ஆனந்த விகடன்' "அமுதசுரபி', "தினமணி கதிர்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. அவரது படைப்புகள் அனைத்தும் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது படைப்புகளான "உன்னைப் போல் ஒருவன்', "சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. "உன்னைப் போல் ஒருவன்" படத்துக்கு, சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

படைப்புகள்:
ஜெயகாந்தன், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். "வாழ்விக்க வந்த காந்தி 1973', "ஒரு கதாசிரியனின் கதை', "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', "ரிஷிமூலம்', "கருணையினால் அல்ல', "கங்கை எங்கே போகிறாள்' ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

எழுத்தாளர்களின் பார்வையில்...
மறைந்த ஜெயகாந்தன் குறித்து எழுத்தாளர்கள் அசோகமித்திரன், வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கெனவே தெரிவித்த புகழாரங்கள்:-
"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து நீடிக்காமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்திரன்
"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ஜெயகாந்தன் என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் தத்ரூபம் என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான விஷயம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன்
"பாரதியார் வாழ்ந்த காலங்களில் கெüரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பரிசு பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கெüரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கெüரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ். ராமகிருஷ்ணன்

கிட்டப்பார்வை-தூரப்பார்வை குறைபாட்டைப் போக்கும் "ஸ்மைல்' நவீன லேசர் கருவி சிகிச்சை

கிட்டப்பார்வை-தூரப்பார்வை குறைபாட்டைப் போக்கும் "ஸ்மைல்' எனப்படும் நவீன லேசர் கருவி சிகிச்சை முறை சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர்-நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-
பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய கடந்த சில ஆண்டுகளாக லாசிக் லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழிவெண்படலத்தில் ("கார்னியா') பிளாப் போன்று கீறல் செய்யப்பட்டு, லேசர் மூலம் திசு அகற்றப்பட்டு பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகிறது. எனினும் விழிவெண்படலம் ("கார்னியா') மெலிதாக இருந்தால் லாசிக் லேசர் சிகிச்சையைச் செய்ய முடியாது. மேலும் கீறல் செய்து லாசிக் லேசர் சிகிச்சை அளிக்கப்படுவதால், காயம் ஆறுவதற்கு சிறிது காலமாகும். ஆனால் ரூ.4 கோடி மதிப்புள்ள "ஸ்மைல்' கருவி சிகிச்சையில், 2 மி.மீ. அளவுக்கு மட்டுமே துளையிடப்பட்டு லேசர் மூலம் விழிவெண்படல திசு அகற்றப்பட்டு பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகிறது. விழிவெண்படலம் மெலிதாக இருந்தாலும், "ஸ்மைல்' சிகிச்சை முறை மூலம் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய முடியும். குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் பார்வைக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு "ஸ்மைல்' சிகிச்சை முறை மிகுந்த பலனை அளிக்கும். மொத்தம் 5 நிமிஷத்தில் இந்த நவீன முறையில் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய முடியும்''
என்றார் டாக்டர் அமர் அகர்வால்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள்:கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஜூன் 17-ஆம் தேதிக்குள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவின் மத்திய முன்னாள் ரயில்வே அமைச்சர் ஆர்.வேலு கடந்த 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. இதில், தனியார் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1973-இன் கீழ் செயல்படுகிறது. அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொதுவான பாடத்திட்டம், பொதுத் தேர்வுகள்தான். தனியார் பள்ளிகள் தொடங்குவதற்கு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைச்சட்டம் இருக்கும் போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இது, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுவதாகும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும், புதிய தனியார் பள்ளிகளை திறப்பதற்காகவும் தமிழக அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வந்தது. எனவே, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளை சட்ட விரோதம் எனவும், செல்லாதது எனவும் அறிவிக்க வேண்டும். மேலும், இந்த விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கே.பாலு ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் தற்போது அவகாசம் கோரப்படுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பள்ளிக்கல்வித்துறை :வரும், 23ம் தேதி முதல் கோடை விடுமுறை

பத்தாம் வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன.
தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல் கோடை விடுமுறை
துவங்குகிறது. ஜூன், 1ம் தேதி புதிய வகுப்புகள் துவங்கும்.பத்தாம் வகுப்புக்கு, கடந்த, 19ம்
தேதி பொதுத் தேர்வு துவங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வுகள்
முடிந்துள்ளன. நாளை, சமூக அறிவியல் தேர்வுடன் பொது தேர்வு முடிகிறது. அனைத்து வகுப்புகளுக்கும்வரும், 22ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. வரும், 23ம் தேதி முதல் கோடை விடுமுறை
விடப்படுகிறது.
ஆனால், ஒன்று முதல் ஐந்து வரையிலான தொடக்கப்பள்ளிகள் ஏப்ரல், 30ம் தேதி வரை இருக்கும்
என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன், 1ம் தேதி பள்ளிகளை திறக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் என புகார்

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்,
டி.ஆர்.பி.,யின் தேர்வுப் பணிகளில், சந்தேகங்கள் எழுந்துள்ளன.சமீப காலமாக, டி.ஆர்.பி.,யின்
தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பில் குழப்பம், இறுதிப் பட்டியலில் குளறுபடி, நேர்முகத் தேர்வில்
பாரபட்சம் என, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
சந்தேகம்
ஆனால், தமிழக கல்வித்துறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளதால், வேளாண் துறை போல் முறைகேடுகள் நடக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துஉள்ளன.
*ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, டி.ஆர்.பி.,க்கு எதிராக, மாற்றுத் திறனாளிகள் போராட்டம்நடத்தினர்.
*இதேபோல், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரியஒதுக்கீடு தரவில்லை. இதற்கு, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
*மற்றொரு பிரச்னையாக, போலி ஜாதி சான்றிதழ் கொண்டு வந்தவரை, டி.ஆர்.பி.,
தேர்வு செய்ததும், வெட்ட வெளிச்சமாகிஉள்ளது. கடந்த, 2012 ஜூனில் நடந்த ஆசிரியர் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்பவர், முன்னுரிமைக்காக போலி ஜாதி சான்றிதழ் கொடுத்துள்ளார். அதைசரிபார்க்காமல், ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
உயர் நீதிமன்ற உத்தர வின்படி, இந்த சான்றிதழை, திருவள்ளூர் உதவி கலெக்டர், ராஹுல் நாத் ரத்து செய்துள்ளார். ஆனால், நியமனத்தை இன்னும், டி.ஆர்.பி., ரத்து செய்யவில்லை.
*அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின், 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப,
டி.ஆர்.பி.,யில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பாடவாரியாக நேர்முகத் தேர்வுகள் அறிவித்து, மதிப்பெண்பட்டியலும் வெளியிடப்பட்டது.இதில், இறுதி மதிப்பெண் பட்டியலில், வரலாறு பாடத்துக்கு, ஒருவரை மட்டும்,டி.ஆர்.பி., தேர்வு செய்துள்ளது. ஆனால், டி.ஆர்.பி., அறிவித்த நபரின் பெயர், நேர்முகத் தேர்வு அழைப்பில் இடம்பெறவில்லை. அவருக்கு தனியாக நேர்முகத் தேர்வு நடத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மறைமுக நடவடிக்கைபணி நியமன விதிகளின்படி, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அறிவிக்கப்பட்ட பின், யாரையும்தனியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்க முடியாது. அதனால், அரசியல் கட்சிகளின் சிபாரிசு, அதிகாரிகளின்பரிந்துரை என, மறைமுக நடவடிக்கை அதிகரித்துள்ளதோ
என்று, பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
*கடந்த வாரம், கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவைகள், கலப்புத் திருமணம் புரிந்தோர் ற்றும் ுன்னாள் ாணுவத்தினருக்கான ஒதுக்கீடுகளை, டி.ஆர்.பி., பின்பற்றவில்லை என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. இறுதிப் பட்டியலை நிறுத்தி வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டது.
சுதாரிப்புஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதிப் பட்டியலை அவசர அவசரமாக, கல்வித்துறைக்கு அனுப்பிவிட்டனர். பின், கல்வித்துறை சுதாரித்து, 133 கணினி ஆசிரியர் கவுன்சிலிங்கை நிறுத்தி வைத்தது.
மிரட்டல் புகார் டி.ஆர்.பி., அதிகாரி களிடம் கேட்டபோது, 'மனிதத் தவறுகள் நடக்கத் தான் செய்யும்; அதை ஒன்றும் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளனர். ஒரு சில உயரதிகாரிகளுக்கு, டி.ஆர்.பி.,யில் உள்ள கட்சி சார்பு அரசியல்வாதிகள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளின் மிரட்டல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன.

புதன், 8 ஏப்ரல், 2015

TRB RELEASED CERTIFICATE VERIFICATION LIST FOR UNFILLED RESERVED VACANCIES


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

 

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15

PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

PHYSICAL DIRECTOR GRADE I

CERTIFICATE VERIFICATION LIST FOR UNFILLED RESERVED VACANCIES

ENGLISH

MATHEMATICS

PHYSICS

CHEMISTRY

BOTANY

HISTORY

ECONOMICS

COMMERCE

          

  

 

Member Secretary

 


SUBJECT.          TOTAL CANDIDATES 
                            CALLED FOR CV

ENGLISH.   BC G.     19.    

Maths.        BcW.        1.    

Physics.                     2.    

Chemistry.                  1.   

BOTONY.                   3    

History.                     32      

ECONOMICs.           17


Commerce.                11

அருமருந்தாகப் பயன்படும் நெருஞ்சி முள்

அருமருந்தாகப் பயன்படும் நெருஞ்சி முள்

என் வயது 67. நான் லாரி ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். பத்து
வருடங்களாக எனது கால், பாதம் இரண்டும் வீங்கியுள்ளன. நின்று வேலை
செய்வதால் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் எனது இரு முழங்கால் மூட்டுகளும் மிகவும் வலிக்கிறது. நிற்க,
நடக்க, உட்காரக் கூட முடிவதில்லை. இப்பிரச்னைகள் தீர ஆயுர்வேதத்தில்
வழிகள் கூறப்பட்டுள்ளனவா? .பழனி - மடிவாலா, பெங்களூர்.

நீங்கள் பல ஆண்டுகள் உடலைக் குலுக்கும் வாகனத்தில் பயணம் செய்ததாலும்,
பயணத்தின் நடுவே எளிதில் செரிக்காத பரோட்டா, மாமிசவகை உணவுகளை
அதிக அளவில் உண்டதாலும், நேரம் தவறி உண்டதாலும், போய்ச் சேர
வேண்டிய சரக்கை விரைவாகச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் துரிதமாக
உட்கொண்டதாலும், முறைகேடான அளவில் பல இடங்களிலும் நீரைக்
குடித்ததாலும், நன்றாகத் தூங்காததாலும், கண்விழிப்பு ஆகியவற்றாலும், உங்களுடைய உடம்பிலுள்ள தோஷங்களாகிய வாத பித்த கபங்கள்
சிறுநீர்பையில் தங்கியதால் உடலின் கீழ் பாகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடலில் உள்ள வாயு கோபமடைந்து
வயிற்றிற்கு கீழே அமைந்துள்ள இரத்தக்குழாய்களின் வழியாக கபம் எனும்
தோஷத்தை தன்னுடன் சேர்த்து கவர்ந்து இரத்தம் கபம் ஆகியவற்றை
வெளிப்புற இரத்தக்குழாய்களை நோக்கித் தள்ளுவதுடன் அதனால் ஏற்படும்
தடைபட்ட வாயுவினுடைய பாதையால் சருமம், மாமிசம் ஆகியவற்றில் தங்கி
நெருக்கமுற்று உயர்ந்து வீக்கத்தை உண்டாக்கும். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது பிரேக், ஆக்ஸிலரேட்டர், கிளட்ச் ஆகியவற்றை அடிக்கடி
கால்களால் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் கால் தசைகளுக்கும்,
தசைநார்களுக்கும், எலும்புகளுக்கும், இரத்தக் குழாய்களுக்கும் ஏற்படும்
சோர்வானது கவனிக்கத்தக்கது. அப்பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள சோர்வை
உதாசீனப்படுத்தாமல் தகுந்த ஓய்வை நீங்கள் அளித்திருந்தால் இந்த
வயோதிகத்தில் இப்பிரச்னைகளை முடிந்தவரை தவிர்த்திருக்கலாம். பசியினுடைய தன்மை உங்களுக்குக் கெடாதிருந்து மலச்சிக்கலும், சிறுநீர்
வெளியேற்றமும் நன்றாக இருக்கும்பட்சத்தில் வீக்கத்தை நம்மால் எளிதாகப்
போக்கிவிட முடியும். அதற்கு நெருஞ்சி விதை ஓர் அருமருந்தாகப்
பயன்படும். நெருஞ்சி முள் விதையை சுமார் 15 கிராம் அளவில் எடுத்து ஒரு
லிட்டர் தண்ணீரில் வேக வைத்து அரை லிட்டராகக் குறுக்கி ஒரு நாளில் பல
தடவை சிறிது சிறிதாக பருகி வருவதால் வீக்கம் வடியக்கூடும். இதை சாப்பிடும் நாட்களில் உணவில் இனிப்பு, புளிப்பு ஆகியவற்றை அறவே
நீக்கிவிட வேண்டும். அரை உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பகல் தூக்கம் கூடாது. மாமிசவகை உணவுகளை முழுவதுமாக தவிர்க்க
வேண்டும். வீக்கம் மூட்டில் வந்து தங்கியிருந்து ஒரு குத்துவலியையும் ஏற்படுத்திக்
கொண்டிருந்தால் நெருஞ்சி விதையை விட நீர்முள்ளி கஷாயம் பெரிதும்
பயன்படும். இந்த கஷாயம் கோகிலாக்ஷம் என்ற பெயரில் விற்பனை
செய்யப்படுகிறது. கற்றாழைச் சோறு 10 மில்லி லிட்டரில் கால் ஸ்பூன்
சுத்தமான மஞ்சள்தூளைக் கலந்து அதனுடன் 10 சொட்டு பசு நெய் விட்டுக்
குழைத்து மதியமும், இரவிலும் உணவிற்கு சுமார் அரைமணிநேரம் முன்பாகச் சாப்பிடுவதால் இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய கேந்திரங்களாகிய கல்லீரல்
மற்றும் மண்ணீரல் பகுதிகள் சுத்தமடைவதால் இரத்தத்தில் ஏற்பட்டுள்ள காந்தல்
குறைந்து சுத்தமான இரத்தம் இரத்தக் குழாய்களின் வழியாக எடுத்துச்
செல்லப்படுவதால் மூட்டுப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீக்கம், வலி போன்றவை
நன்றாகக் குணமடையும் என்று ஆயுர்வேத நூல் கூறுகிறது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலம் தங்களுக்குப்
பயன்படக்கூடும். உண்ணும் உணவு நன்றாக செரிக்கக் கூடிய நபராக நீங்கள்
இருந்தால் இந்த தைலப் பிரயோகமானது காலையிலும், மாலையிலும் சிறிது
சூடாக்கி முழங்கால் மூட்டின் மீது இதமாக உருட்டித் தேய்ப்பதாலும்,
வெதுவெதுப்பான எண்ணெய்யை ஒரு பஞ்சில் முக்கி மூட்டின் மீது சுமார்
அரைமணிநேரம் போட்டு வைப்பதாலும் இம்மருந்தினுடைய வீரியமானது அப்பகுதியில் உட்சென்று எலும்புகளுக்கு இடையே காய்ந்து போயுள்ள
சவ்வுப் பகுதியில் நெய்ப்பை ஏற்படுத்தி இரண்டு எலும்புகளுக்கு இடையே
ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தித் தருவதாலும் வீக்கத்தையும் வலியையும்
குறைத்து உங்களால் நிற்க முடியும், நடக்கவும் முடியும். கால்களில் வீக்கம், அதனால் ஏற்படக் கூடிய வலி ஆகியவற்றால்
துன்பப்படுபவர்கள் கீழ்கண்டவற்றை முறையாக கடைப்பிடிப்பது நலம் - புளிப்பு, எண்ணெய்ப் பசை, குளிர்ச்சி ஆகியவற்றை உணவில்
சேர்க்காமலிருப்பது நலம். அதிக அளவில் தண்ணீரை அருந்தக் கூடாது. பிராணிகளின் மாமிசம், வறண்ட மாமிசம் ஆகியவற்றை உண்ணக் கூடாது. உணவு செரிக்காத நிலையிலும், உடல் களைத்த நிலையிலும் பெண் சேர்க்கை
தகாது. அதிகமான கால்நடை, உடலைக் குலுக்கும் வாகனங்களில் பிரயாணம் செய்வது
போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771