திங்கள், 13 ஏப்ரல், 2015

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் உணவு தயாரிக்க அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு


வரும் 15-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட உள்ளதால், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சத்துணவு தயாரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதற்கு தலைமை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே உணவு தயாரிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் துரை.அரங்கசாமி கூறும்போது, "இந்தப் போராட்டத்தில், சுமார் 80,000 மையங்களில் பணியாற்றும் 1.20 லட்சம் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பர்.எனவே, அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தால் போராட்டத்தைக் கைவிடுவோம்" என்றார்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறும்போது, "போராட்டம் தொடர்பாக சத்துணவு ஊழியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், அந்தந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சத்துணவு தயாரிக்க வேண்டும் எனவும், இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண் டும் எனவும் தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

இந்த முடிவைக் கைவிட்டு, சத்துணவு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கை களை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்" என்றார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக