வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர்உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தனியார் பள்ளி செயலர் பி.சுப்பிரமணியன்புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்களை ஆண்டுத் தேர்வு முடியும் நாளில் வழங்கி விட்டு கோடைவிடுமுறையிலே பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையில் கடும் வெப்பம்வாட்டிவதைக்கும் நிலையில் ஆண்டுப் பொதுத்தேர்வு முடிந்த உடனேயே வகுப்புகளை நடத்த கட்டாயப்படுத்துவதுமாணவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என உளவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களகூறுகின்றனர். சனிக்கிழமை தோறும் வகுப்புகள், மாலை நேரப் படிப்பு மற்றும் விடுமுறை நாள்களில் சிறப்புத்தேர்வுகள் என மாணவர்களுக்குத் தரப்படுகின்ற தொடர் அழுத்தங்கள் ஆசிரியர்- மாணவர் உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பள்ளிக் கல்வித் துறை உணர மறுக்கிறது. கோடை விடுமுறையில் வகுப்புகள் என்ற பெயரில் சில தனியார் பள்ளிகள்மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும். எனவே மாணவர்கள் கோடை விடுமுறையை அனுபவித்து தெளிந்த மனநிலையோடு ஜூன் மாதத்தில் பள்ளிக்கு வருவது தான்சரியான நடவடிக்கையாகும். எனவே கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக