திங்கள், 20 ஏப்ரல், 2015

தலைமை ஆசிரியர் காலியிட கவுன்சிலிங் 2015 மே இறுதியில்?

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமைஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 2012 வரை யிலும், முதுகலை ஆசிரியர்கள் 2009 வரையிலானஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்படஉள்ளது.இதற்கான விபரங்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே சேகரித்து அனுப்பியது. இப்பதவி உயர்வு பட்டியலில் குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி உயர்வு பட்டியல்ஒன்றை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட விபரங்களை நேரில்வரவழைத்துகல்வித்துறை ஊழியர்கள் சேகரிக்கின்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில்," நடப்பு கல்வியாண்டில் ஜூனில்பள்ளிகள் திறக்கும் நிலையில், மே மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள் நிரப்பும் திட்டம் உள்ளது.இதற்கான கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த கல்விக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக