தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டமனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.
ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்யுமாறு அந்த தேர்வில்பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகிதமதிப்பெண் விலக்கும், மேலும் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்இந்த விவகாரம் தொடர்பாக சென்னைஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் சென்னைஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாகஇருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவகாசம் தேவையில்லை
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவின் மீதான பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல்செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம்கலிபுல்லா மற்றும் கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் பதில்மனுவை தாக்கல் செய்ய மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் கோரி கடிதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்
காட்டிய மனுதாரர் தரப்பு வக்கீல்கள் நீதிபதிகளிடம் 'சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளஅனைத்து மனுக்களுக்கும் பொதுவானவை. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன்வைத்து இருப்பவை என்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதிலளிக்க தமிழக அரசுசார்பில் அவகாசம் கோரத்தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள். இறுதி விசாரணை இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு ஏற்கனவே பதில் மனு
தாக்கல் செய்துள்ளது. அதுவே இந்த வழக்கு விசாரணையில் தொடர்புடைய மற்ற அனைத்து மனுக்களுக்கும் பொருந்தும்என்றனர்.
எனவே முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த பதிலையே இந்த வழக்கு விசாரணைதொடர்புடைய மற்ற மனுக்களுக்கும் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணயை வரும் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக