'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள்எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள்திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது.
தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல் படி, மதிப்பெண் சி.டி., தயாரிப்புபோன்ற பணிகள்நடக்கின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கஉள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள்கூறியதாவது:விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல், 17ல் முடிக்க திட்டமிட்டோம். சில நாட்கள் நீட்டித்து விட்டது. வரும், 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், 'ரிசல்ட்' வெளியாகும் தேதி முடிவாகும்.எப்படியும், மே, 4ம் தேதி
முதல் 7ம் தேதிக்குள், 'ரிசல்ட்' வெளியாகலாம். பெரும்பாலும், மே, 7ம் தேதியே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக