வியாழன், 9 ஏப்ரல், 2015

கிட்டப்பார்வை-தூரப்பார்வை குறைபாட்டைப் போக்கும் "ஸ்மைல்' நவீன லேசர் கருவி சிகிச்சை

கிட்டப்பார்வை-தூரப்பார்வை குறைபாட்டைப் போக்கும் "ஸ்மைல்' எனப்படும் நவீன லேசர் கருவி சிகிச்சை முறை சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர்-நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-
பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய கடந்த சில ஆண்டுகளாக லாசிக் லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழிவெண்படலத்தில் ("கார்னியா') பிளாப் போன்று கீறல் செய்யப்பட்டு, லேசர் மூலம் திசு அகற்றப்பட்டு பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகிறது. எனினும் விழிவெண்படலம் ("கார்னியா') மெலிதாக இருந்தால் லாசிக் லேசர் சிகிச்சையைச் செய்ய முடியாது. மேலும் கீறல் செய்து லாசிக் லேசர் சிகிச்சை அளிக்கப்படுவதால், காயம் ஆறுவதற்கு சிறிது காலமாகும். ஆனால் ரூ.4 கோடி மதிப்புள்ள "ஸ்மைல்' கருவி சிகிச்சையில், 2 மி.மீ. அளவுக்கு மட்டுமே துளையிடப்பட்டு லேசர் மூலம் விழிவெண்படல திசு அகற்றப்பட்டு பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகிறது. விழிவெண்படலம் மெலிதாக இருந்தாலும், "ஸ்மைல்' சிகிச்சை முறை மூலம் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய முடியும். குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் பார்வைக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு "ஸ்மைல்' சிகிச்சை முறை மிகுந்த பலனை அளிக்கும். மொத்தம் 5 நிமிஷத்தில் இந்த நவீன முறையில் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய முடியும்''
என்றார் டாக்டர் அமர் அகர்வால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக