வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

விண்வெளி சாதனை வாரத்தில் கல்பனா சாவ்லாவை போற்றுவோம்....

கல்பனா சாவ்லா
   கல்பனா சவ்லா 1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி ஹரியானா மாநிலத்தில் கர்னல் நகரில் பிறந்தவர்.பெற்றோர் பனார்சி லால் சாவ்லா, சன்யோகிதாதேவி. சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராகவேண்டும் என்பதே அவரது ஆசை
  கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடகக்கல்வி,  சண்டிகர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற கல்பனா பல தடங்கல்களுக்கு இடையில் மேற்படிப்பிற்காக அமெரிக்கப் பயணமானார்.  அங்கு விண்வெளிப் பொறியியலில்  இரண்டு முதுகலைப்பட்டங்களைப் பெற்றதுடன், முனைவர் பட்டத்தையும் பெற்றார். படிக்கும்போதே விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொண்டதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.  ,
 1983 ஆம் ஆண்டு ஜீன் பியரி ஹாரிஸன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்து அமெரிக்க குடிமகளானார்.
     விண்வெளி குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கி கல்பனாவை நாஸா தன்னுடைய ஆராய்ச்சி மையத்திற்கு 1994-ல் தேர்ந்தெடுத்தது. "பவர்டு லிப்ட் கம்ப்யூடேஷனல்", போன்ற கடினமான பயிற்சிக் பெற்றதனால் ஆறு மாதங்களிலேயே "ஜான்சன்" விண்வெளி ஆய்வு மையத்தின் 15 பேர் அடங்கிய விண்வெளி வீரர் குழுவில் இடம் பிடித்து   நாசாவின் நட்சத்திரம் ஆனார்.
     1996 ல் முதல் விண்வெளிப் பயணம். கொலம்பிய விண்வோடத்தில்  ஆறு வீரர்களில் ஒருவராக கல்பனா சாவ்லா பறந்து, ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை  பெற்றார்.
     ஜனவரி 16, 2003 இல் சாவ்லா கொலம்பிய விண்வோடத்தில் விஞ்ஞானிகளுடன் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்  பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு பிப்ரவரி 1,2003ல் "கொலம்பியா"  தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது  விண்ணில் வெடித்து சிதறியது.வானத்தை வசப்படுத்த விரும்பிய கல்பானவை வானம் வசப்படுத்திக்கொண்டது

 தன் கடைசி விண்வெளிப் பயணத்தின் பொழுது கல்பனா சாவ்லா மாணவர் உலகுக்கு அளித்த செய்தி கனவுகளிலிருந்து வெற்றிகளை சென்றைடையும் பாதைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றனஅவற்றைக் கண்டு அடையும் பார்வையும் அடைவதற்கான தைரியமும், அதில் பயணிக்கும் பொறுமையும் உங்களுக்கு உண்டாகட்டும்  என்பதுதான்

   

            இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் கேலியாகப் பார்த்த நேரத்தில் தன் தகுதியால் விண்ணுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. ஒரு சாதாரன பள்ளியில் படித்தும் பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் . சுட்டிகள்  நாமும் சிறந்த கல்வியோடு  கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்கமுடியும்!

கல்பனா சாவ்லா வேடத்தில் சுட்டிகள்-- நன்றி சுட்டிவிகடன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக