செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஒகேனக்கல் உச்சிமலைக்கு ஒரு உற்சாகப்பயணம்......


ட்ரக்கிங்க்ஸ்  சுட்டிகள்

பாலமுருகன்

           சுட்டிகளான நாம் பல சுற்றுலாக்கள் சென்றுஎஞ்ஜாய்செஞ்சிருக்கோம்….வித்தியாசமா மலைப்பகுதியில்ட்ரக்கிங்போனால் எப்படியிருக்கும்நம் யோசனையை இமயமலையில்  ட்ரக்கிங்சென்றவரான பாலமுருகன் அங்கிளிடம் தெரிவித்தவுடன் நமக்காக புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான ஒகேனக்கல் மலைப்பகுதியில்ட்ரக்கிங்க்கு ஏற்பாடு செய்தார். மலையேறும் குழுவில்   ஆர் எஸ் உயர்நிலைப்பள்ளி, பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 15 சுட்டிகள் இடம்பெற்றனர். குழுவுக்கு வழிகாட்டியாக முனுசாமி தாத்தாவும் கேப்டனாக பாலமுருகன் அங்கிளும் பொறுப்பேற்றனர்.
   பென்னாகரத்தில் தொடங்கியது நமது வாகனப்பயணம் வழிநெடுக மலைப்பகுதியின் இயற்கைக்காட்சிகளை ரசித்தபடி பயணித்தனர் சுட்டிகள் ஒகேனக்கல், ஊட்டமலை வழியாக ஆலம்பாடி பரிசல்துறையை அடைந்தோம்அங்குதான்ட்ரக்கிங்குக்கானபேஸ்கேம்ப்
   அங்கே பாலா அங்கிள் சுட்டிகளுக்குட்ரக்கிங்பற்றி குட்டி கிளாஸ் எடுத்தார்…”நாம சதரணமா தரைப்குதியில் நடப்பதற்கும் மலையேறுவதற்கும் நெறைய வித்தியாசம் இருக்குஇதுல ஒவ்வொரு அடியையும் ரொம்ப ஜக்கிரதையா எடுத்துவைக்கனும்..முதல் அடியை ஸ்ட்ராங்கா எடுத்துவச்ச பிறகுதான் அடுத்த அடியை நாம் எடுத்துவைக்கனும்அவசரம்கூடாதுதவறி கீழே விழ நேர்ந்தால் முதலில் நம் கையை மடக்கி முகத்துக்கு பாதுகாப்பாக வைத்தபடி தரையில் கையை ஊன்றிக்கொள்ள வேண்டும்..முன்னாடி போகிறவங்க ஷோல்டர் பேக்கை பிடிச்சி எக்காரணங்கொண்டும் இழுக்கக் கூடாதுஎனட்ரக்கிங்கில் நாம் செய்யவேண்டியது என்ன..செய்யக்கூடாதது என்ன என்று விளக்கினார்.
 நாம்ட்ரக்கிங்போகின்ற இந்த மலைப்பகுதியைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்என சிவா கேட்க, “நாம் ஏறப்போகின்ற மலைப்பகுதிமேலகிரிமலைப்பகுதி என்று அழைக்கப்படுகின்றது..சுமார் 1295 சதுர கிலோமீட்டரில் இது அமைந்துள்ளது அதில்காவிரி ரிவர் டாப் வீவ்மலைக்குன்றுக்கு நாம்ட்ரக்கிங்போகின்றோம்என்றார்.
   முதுகில் லன்ச் பாக்ஸ், வாட்டர்பாட்டில்,ஸ்னாக்ஸ்,சின்னதா டவல் அடங்கிய ஷோல்டர்பேக்….தலையில் வெய்யிலுக்கு பாதுகாப்பாக தொப்பிகாலில்ட்ரக்கிங்ஷூ என அசல் மலையேற்ற வீர்ர்களாக நம் சுட்டிகள் மலையேற்றத்தை தொடங்கினர்.
   கரடுமுரடான கற்கள்சிறிதும் பெரிதுமாக புதர்கள்விதவிதமான மரங்கள் நிறைந்த குறுகலான பாதை வழியாக முனுசாமி தாத்தா வழிகாட்ட சுட்டிகள் ஒருவர் பின் ஒருவராய் பின்தொடர்ந்தனர். சற்றே சறுக்கினாலும் நாம் கீழே அதளபாதளத்துக்கு உருண்டு செல்லவேண்டியதான்..படுஜாக்கிரதையாக சுட்டிகளின் சுறுசுறு பயணம் சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது தொடர்ந்தது.
   இதுவரை நாம் பார்த்தேயிராத பலவிதமான மரங்களைக் காட்டி துரைஇவையெல்லாம் என்ன மரங்கள்?’ எனக் கேட்டான்

முனுசாமி

    இம்மலைப்பகுதியில் ஆச்சா,கருங்காலி,சந்தனம்,தேக்கு,வேங்கை, ஈட்டி என பலவகைப்பட்ட மரங்கள் உள்ளனஅதுமட்டுமில்லாமல் பல அரியவகை மூலிகைத் தாவரங்களும் இருக்குஎன்ற முனுசாமி தாத்தா சிலவற்றை அடையாளம் காட்டினார்.
   அதோ பாருங்க….. நம்ம முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக போறாங்க…’
என்று சதிஷ் காட்டிய திசையை நோக்கி எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்
குரங்குகள் மரத்துக்கு மரம் தாவியபடி போய்க்கொண்டிருந்தன…”நாம் குரங்கிலிருந்து பிறந்தவங்கதானேஎன விளக்கமளித்தான்.
  அப்ப நீ உங்க அம்மா வயிற்றிலிருந்து பிறக்கலையாநங்க எல்லோரும் அம்மா வயிற்றிலிருந்துதான் பிறந்தோம்பா…” என கலாய்த்தாள் சத்யா.
    இந்த மலைப்பகுதியில என்னென்ன விலங்குகள் இருக்குது?..” இது பாலஜியின் கேள்வி
  முயல்,உடும்பு,காட்டுப்பன்றி, மான்,குரங்கு,காட்டெருமை ஆகியவை சாதரணமாக இங்கே இருக்கும்என்றார் தாத்தா.
 ‘’நம்மஜீபாஎல்லாம் இங்கே வரமாட்டாரா?...” இது காயத்திரியின் சந்தேகம் ஜீபா யாரென்று நம்மிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்ட தாத்தா ‘’ஜீபா வரமாட்டார்ஆனா ஜீபாவின் உறவினர்கள் இங்கிருந்து உள்ளே அடர்ந்த காட்டுப்பகுதிக்கு போனா கூட்டம் கூட்டமாக இருக்காங்கவறட்சியான கோடைகாலங்களில் தண்ணீரைத் தேடிகொண்டு இந்த ஆற்றுப்பகுதிக்கு அவங்க கூட்டமா வருவது ரொம்ப சகஜம்..’ என்றார்.

           ட்ரக்கிங்தொடங்கி சுமார் அரைமணி நேரம் ஆகியிருக்கும் சுட்டிப்பசங்க முன்னேறிக்கொண்டே செல்லசுட்டிபொண்ணுங்க மட்டும் நடிகர் வடிவேல் அங்கிள் பாணியில்அப்பப்பாஅப்பப்பா…” என மூச்சுவாங்கியபடி வியர்த்து விறுவிறுத்துப்போக அருகில் உள்ள மரத்தடியில் ஹால்ட் அடித்தனர். ஆளுக்கு கொஞ்சம் குளுகோஸ்பவுடர் அளிக்கப்பட்டது
பையிலிருந்த ஸ்னாக்ஸ் எல்லாம் சுட்டிகளின் கையில்பிஸ்கட் பாக்கட்டை காலி செய்துவிட்டு பிளாஸ்டிக் உறையை கீழே எறியப்போனாள் லட்சுமி.
   ஹேய்….கண்ட இடத்துல காகிதம், பிளாஸ்டிக் எல்லாம் போட்டு குப்பைக்காடாக மாத்தக்கூடாதுஅதை உன் பேக்கில் போட்டுக்கோ..கீழே இறங்கியதும் குப்பைத்தொட்டியில போட்டுடலாம்  என்று சுகன்யா தடுக்க அனைவரும் தங்களிடம் இருந்த காலி ஸ்னாக்ஸ் உறைகளையெல்லாம் கீழே எறியாமல் தமது பேக்கில் போட்டுக்கொண்டனர்
  சிறிது நேரத்தில் ரிலாக்ஸ் ஆன சுட்டிகள் மீண்டும் மலையேறத் தொடங்கினர்.சில இடங்களில் மெதுவாக கையை ஊன்றியும் சில இடங்களில் தவழ்ந்தும் ஏறவேண்டியதாயிற்றுசுமார் 1 மணி நேரத்தில் தாத்தாவை தொடர்ந்து ஹரிநமோவும் சூர்யாவும் உச்சியைத்தொட்டுநாங்கதான் பர்ஸ்ட்என் உற்சாக குரல் எழுப்பினர்.மற்ற சுட்டிகளும் 15 நிமிட இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராய் உச்சியை அடைந்தனர்.
  மலை உச்சியிலிருந்து கீழே பார்த்த சுட்டிகள்வாவ்’ ’சூப்பர்என ஆச்சர்ய ஒலி எழுப்பினர். நாமும் பார்த்தோம்பரந்த காவிரி ஆறு பாய்ந்தோடிவரஇடையே குட்டிகுட்டி தீவுகளாக நிலப்பகுதிஅதில் பச்சைப்பசேலென மரங்கள் என அற்புதக்காட்சியாக நம் கண்களுக்கு விருந்தளித்ததுமெல்லிய குளுமையான தூய காற்று வீச…. எங்கு திரும்பினாலும் பச்சைப்பட்டாடை உட்டுத்தியதுபோல மலைப்பகுதி ரம்மியமாக காட்சியளித்தது….சுட்டிகளின் மலையேறிய களைப்பெல்லாம் சட்டென மறைந்தேபோனது
   முனுசாமி தாத்தாவாங்க சுட்டிகளா உங்களுக்கு இந்த மலைப்பகுதியில் இன்னொன்றையும் காட்டப்போகின்றேன்…” என அழைத்தார். பெரிய கருங்கற்பாறையைச் சுற்றிவந்து குறுகலான வழியில் சற்றே கீழிறங்கினோம்.. அங்கே பிரம்மாண்டமான பாறை ஒன்றில் கடவுள் உருவங்கள் அழகிய புடைப்புச் சிற்பங்களாக செதுக்கியிருந்த்தைப் பார்த்து சுட்டிகள் அதிசயித்தனர் அந்த காட்சிகளையெல்லாம் சுட்டி சுபா தனது கேமராவில் சுட்டுத்தள்ளினாள்.
    அங்கிள்நீங்க இமயமலையில ட்ரக்கிங்போனிங்க இல்லையாஅதுவும் இதேமாதிரிதான் இருக்குமா..?” என்று தனது சந்த்தேகத்தைக் கேட்டான் ஸ்ரீராம்.
   இங்கே நல்ல வெய்யில் அடிக்குது இல்லையா.. ஆனா அங்கு இதுமாதிரி இல்லைபனிகொட்டும்கடுமையான குளிரா இருக்கும்..சில இடங்களில் தரையெல்லாம்கிலேசியரால்மூடப்பட்டிருக்கும் அதனால அதுக்கேத்தமாதிரி கைகளுக்கு க்ளவுஸ், தலைக்கு மங்கிகேப்,ஸ்வெட்டர்  போன்ற குளிரை தாங்கற மாதிரியான ஆடைகளை போட்டுகிட்டுதான் ட்ரக்கிங்போகனும்என்றார் பாலா அங்கிள்.
   நமக்கு இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த சுட்டிவிகடனுக்கு ஒருபோடுவோம் என சஞ்சித் சொல்ல..சுட்டிகள் போட்டஓஓஓ……..’அங்கிருந்த மலைகளில் எதிரொலித்தது……
   ஆட்டம், பாட்டம்,கொண்ட்டாட்டம் என அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.
  சுட்டிகளா கீழே இறங்கலாமா?....” என கேட்ட பாலா அங்கிள்இறங்கும்போது ஈஸியா இருக்கும் ஆனால் ஜாக்கிரதையா இறங்கனும்அவசரப்படாம.. ஒருத்தரை ஒருத்தர் முந்தாமல் இறங்கனும்என எச்சரித்தார். மடமடவென இறங்கிய சுட்டிகள். சுமார் 45 நிமிடங்களில் தரைப்பகுதியைத் தொட்டனர்

ஒகேனக்கல்

   காவிரி ஆற்றங்கரையோரத்தில் லன்ச்சுக்குப்பின் ஜாலியாக ஆற்றில் குளியல் போடத் தயாரானார்கள். கொஞ்சமாக தண்ணீர் ஓடுமிடத்தில் பெரியவர்களின் பாதுகாப்போடு இறங்கிய சுட்டிகள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இரைத்தபடி  ஜிலீர் குளியல் போட்டனர். ஆற்றிலிருந்து சுட்டிகளுக்கு கரையேற மனசே இல்லை. ‘’அங்கிள் இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கிறோம்என்று வேண்டினாள் காவியா.
 குளித்துவிட்டு கரையேறிய சுட்டிகள் ஒகேனக்கலில் உள்ள முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன் காட்சியகம்.. சிறுவர் விளையாட்டுப் பூங்கா என ஒரு குட்டி விசிட் அடித்து மகிழ்ந்தனர்.
   கடின உழைப்பு சவாலை எதிர்கொள்ளும்திறன்,விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் இயற்கயை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுத்தந்த இந்த இனியட்ரக்கிங்அனுபவத்தை சுமந்தபடி சுட்டிகளுடன் நாமும் இல்லம் திரும்பினோம்



பங்கேற்ற சுட்டிகள்
1.எஸ். சுபதர்ஷினி [சுபா]      2ஆம் வகுப்பு விஜய் மகளிர் மேநிப தருமபுரி
2.எம்.சத்யா                    4 ஆம் வகுப்பு ஸ்ரீவிநாயகா மெட்ரிக் பள்ளி
3.பி. காயத்திரி                  7 ஆம் வகுப்பு, .மே நி , பி. அக்ராகரம்
4.எஸ்.காவியாப்ரியா [காவியா]   9 ஆம் வகுப்பு .நி, பி. அக்ராகரம்
5.ஆர்.இலட்சுமி                  9 ஆம் வகுப்பு .மே நி , பி. அக்ராகரம்
6.எம்.சுகன்யா                   9 ஆம் வகுப்பு கிருபானந்த வாரியர் நி தருமபுரி
7.எம்.அனிதா                   9 ஆம் வகுப்பு அமமேநிப பென்னாகரம்
8.’பி. சூர்யா                     6  ஆம் வகுப்பு ஊஒநநிப அரங்காபுரம்
9. பி.ஹரிநமோ                 7 ஆம் வகுப்பு .மே நி , பி. அக்ராகரம்
10.எஸ்.ஸ்ரீராம்                   7.ஆம் வகுப் ஏசுராஜா மேநிப பாப்பாரப்பட்டி
11.எஸ்.சிவசுப்ரமணியன்[சிவா]     8 ஆம் வகுப்பு செந்தில் மேநிப தருமபுரி 12.எஸ்.சதிஷ்                     9 ஆம்வகுப்பு .ஆர்.எஸ்.உநிப தின்னூர்
13.எம். துரை                      9 ஆம்வகுப்பு .ஆர்.எஸ்.உநிப தின்னூர்

14.எம்.பாலாஜி                     9 ஆம்வகுப்பு .ஆர்.எஸ்.உநிப தின்னூர்
15.எம். சஞ்ஜித்                    10 ஆம் வகுப்பு அமேநிப பி.அக்ராகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக