சிவாவின் அவா ......
“எனது மதம் பாரதிய மதம், எனது சாதி பாரத சாதி,எனது தாய் பாரதமாதா, எனது தொழில் ஞானப்பிரச்சாரம்,பரிபூரண சுதந்திரமே எனது இலட்சியம்”என்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் நடந்தே சென்று சொற்பொழிவுகள், நாடகங்கள் மூலம் விடுதலைக்கனலைமூட்டியர்வர்தான் சுப்பிரமணிய சிவா.
வத்தலக்குண்டு கிராமத்தில் ராஜம் அய்யர், நாகலட்சுமி அம்மையாருக்கு 04.10.1884 ல் பிறந்த இவருக்கு சுப்பராமன் என்று பெயரிட்டனர்.பின்னாளில் இவரது ஆன்மீக குருவான சதானந்த சுவாமிகள் ‘சுப்பிரமணிய சிவா’ என்று சூட்டிய பெயரே இன்றும் நிலைத்து நிற்கிறது.
1906 ல் வங்கபிரிவினையின்போது திலகரின் அடியொற்றி,வ உ சி யின் தோழனாகி, பாரதியாரின் பாடல்களை பாடியும்,‘வந்தேமாதரம்’என்று முழங்கியும், ஆங்கில ஏகாதிபத்தியத்தை தடுமாற வைத்தார். ஆங்கிலேய அரசு சிவாவையும்,வ உ சி யையும் கைது செய்து கோவை சிறையில்
அடைத்தது.வ உ சி க்கு செக்கிழுக்கும் தண்டனையும், சிவாவுக்கு சுண்ணாம்பில் கம்பளியை நனைத்து ஊறவைத்து பதப்படுத்தும் கடும்
தண்டனையையும் அளித்தது
கெளரிவிலாஸ் |
.சிவா பின்னர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். இச் சிறைவாசங்கள் தீராத தொழு நோயை பரிசாக அளித்ததபோதும் தீரம் தனியாத சிவாவை தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரவணைத்துக்கொண்டது. தியாகி சின்னமுத்து முதலியார்
‘கெளரிவிலாஸ் ' என்ற மாளிகை போன்ற தனது வீட்டில் சிவாவுக்கு தங்க இடம் கொடுத்ததுடன் உற்றதோழனாகவும் திகழ்ந்தார்..
சிவா வணங்கிய பாரதமாதா |
இதுபற்றி தியாகி சின்னமுத்து முதலியாரின் பேரன் ஜெயபால் மேலும் கூறுகையில், “சிவா பாப்பாரப்பட்டியில் தங்கியிருந்தபோது மக்கள் சாதி மத வேறுபாடின்றி வழிபடும் வகையில் பாரதமாதாவுக்கு கோயில் கட்ட விரும்பினார். என் தாத்தா உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் உதவியுடன் 7 ஏக்கர் நிலத்தினை வாங்கி அங்கு ‘பாரத ஆஸ்ரம’த்தைநிறுவி அதற்கு ‘பாரதபுரம்’ என்று பெயரிட்டார். ஜுன் 1923 ல் காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸை அழைத்துவந்து பாரதமாதா கோயிலுக்குஅடிக்கல் நாட்டினார்.சிரசில் இமயத்தையும் பாதத்தில் குமரிக்கடலும் பொருந்தியிருக்குமாறு தானே முன்னின்று வடிவமைத்த பாரதமாதாவின் சிலையை அங்கு நிறுவி ஓலைக்கூரைகளால் வேயப்பட்ட ஒரு சிறிய ஆலயத்தையும்அமைத்து வழிபட்டார். அக் காலத்தில் நவராத்திரியின்போது
ஊரெ திரண்டுவந்து சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டதாம்!" என்று கூறி முடித்தார். சிவா நிறுவிய அச் சிலையினை இவர்தான் இன்றும்
பாதுகாத்து வருகிறார்.
ஜெயபால் |
“எல்லாம் வல்ல இறைவியாம் ஸ்ரீபாரதமாதாவை உருவகப்படுத்தி எல்லோரும் ஏக மனதுடனே தியானித்தால் இப்பரந்த பாரத நாட்டிலடங்கிக் கிடக்கும் அகண்டசக்தி தட்டுப்பாடின்றி தாராளமாகக் கிளம்பி அடிமைத்தனத்தைப் போக்கி தர்மத்தை வளர்த்து ஸ்வதந்தரத்தை யுண்டு பண்ணிவிடுமென்று நான் நிச்சயமாய் நம்புகின்றேன்” என்று பாரதமாதா கோயிலுக்கான நோக்கத்தை 17.04.1924 தேதியிட்ட ‘நவசக்தி’ இதழில் வெளியிட்ட சிவா, அந்நோக்கம் நிறைவேறாமலேயே தொழுநோயின் தீவிரத்தால் 23.07 1925 ல் மறைந்தார்
சிவா மணிமண்டபம் |
. தமிழக அரசு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாப்பாரப்பட்டியில் சுமார் 40 இலட்சம் செலவில் அமைத்த அழகிய மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.
நாம் 66 வது சுதந்திரதினம்
கொண்டாடும் இவ் வேளையில் அவரது விருப்பப்படி பாரதமாதாவுக்கு கோயில் அமைத்து எதிர்கால சந்ததியினருக்கு நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.
சுப்பிரமணிய சிவாவின் நாட்டுப்பற்று நம்மை ‘பாரதமாதாவுக்கு ஜே!’ போடச்சொல்லுதில்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக