புதன், 21 அக்டோபர், 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக 927 காலிப் பணியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக, 927 காலிப் பணியிடங்கள் உள்ளன.பட்டதாரிஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-இல் மாவட்டத்துக்குள்ளும், 27-இல் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல்கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு காலிப் பணியிட விவரங்கள் பெறப்படும்.
இதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள்,சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவிஉயர்வு செய்வதற்கானஇணைய வழியில் கலந்தாய்வு அக்டோபர் 30-இல் நடைபெறுகிறது.இந்த நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்காக 927
காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிக அளவில் உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக