சனி, 31 அக்டோபர், 2015

உலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக்?

* உலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான ஜோக், சுமேரியாவுக்குச் சொந்தமானது. காலம் கி.மு. 1900.

* மலைச் சிங்கங்கள் வேட்டையாடிய இரையை புதைத்து வைத்துவிட்டுச் சென்று விடும். பசிக்கும்போது திரும்பிவந்து உண்ணும்.

* மனிதர்களைப் போலவே, குரங்குகளும் 'ஆப்டிகல் இல்யூஷன்' என்கிற மாயத் தோற்றங்களுக்கு வசப்படுகின்றன.

* 1900வாக்கில் 40 சதவீத கார்களில் நீராவியே பயன்படுத்தப்பட்டது. 38 சதவீத கார்களில் மின்சாரம் சக்தி அளித்தது.22 சதவீத கார்களில் மட்டுமே பெட்ரோலியம் எரிபொருளானது.

* லேப்ரடார் வகை நாய்கள் நியூபவுண்ட்லேண்ட் என்ற இடத்தைச் சேர்ந்தவை. நியூ பவுண்ட்லேண்ட் வகை நாய்களோலேப்ரடார் பகுதியைச் சேர்ந்தவை!

* பணக்கார நாடுகளில் உள்ள கோல்ஃப் மைதானங்களில் தினமும் தலா 11 லட்சத்து 81 ஆயிரம் லிட்டர் தண்ணீர்செலவழிக்கப்படுகிறது.

* இறப்புக்கு சில மணி நேரம் முன்பு கூட 'தியரி ஆஃப் எவ்ரிதிங்' என்கிற தனது ஆராய்ச்சிப் பணிகளை
மேற்கொண்டிருந்தார் ஐன்ஸ்டீன்.

* கைக்குழந்தையின் ஆங்கிலச் சொல்லான 'இன்ஃபன்ட்' என்பது 'இன்ஃபன்ஸ்' எனும் லத்தீன் வார்த்தையிலிருந்துதோன்றியது. இதற்கு 'பேச முடியாதது' எனப் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக