சனி, 8 மார்ச், 2014

counting of past service: GO 1072

 

 

GOVERNMENT OF TAMILNADU

 Fundamental Rules – Note under Fundamental Rule 26(a) regarding counting of past service of an officiating Government servant prior to his discharge for the purpose of increment – Amendment – Issued.

 

PERSONNEL AND ADMINISTRATIVE REFORMS (FR.III) DEPARTMENT

G.O.Ms.No. 1072                                                                                                                                    Dated 31st October, 1986.

1.
G.O.Ms.No.400, Personnel and Administrative Reforms (FR.III) Department, dated 7.4.86.

ORDER:

The following Notification will be published in the Tamil Nadu Government Gazette:

NOTIFICATION

In exercise of the powers conferred by the proviso to Article 309 read with Article 313 of the Constitution of India and of all other powers hereunto enabling, the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Fundamental Rules and the instructionsthereunder.

2. The amendment hereby made shall be deemed to have come into force 7th April, 1986.

AMENDMENT

In the said Fundamental Rules, in rule 26, in Clause (a), for Note.1 and Note.1-A, the following Note shall be substituted, namely :-

"Note-1.- If an officiating Government in a post, who has no substantive appointment, is discharged from service for want of vacancy he shall, on reappointment to the same post, draw the pay last drawn prior to his discharge from service.  The periods prior to the discharge from service shall count for purpose of future increment in the time scale of pay of that post".

(By Order of the Governor)

N.BALASUBRAMANIAN
DEPUTY SECRETARY TO GOVERNMENT.

To

All Secretaries to Government, Madras-9.
All Heads of Department including District Collectors and District Judges.
The Secretary, Tamil Nadu Public Service Commission, Madras-2.
The Registrar, High Court, Madras-1.
The Accountant-General(Accounts), Madras-18.
The Accountant-General-II, Madras-18.
The Accountant General, Madras-9.
The Accountant General, Madras-35.
The Pay and Accounts Officer, Madras (East/South/North)
The Assistant Pay and Accounts Officer, Madras-9.
The Director of Stationery and Printing, Madras-79 (2 copies for publication of Notification in the Tamil Nadu Government Gazette), 

 

   

 

 

சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட மருத்துவமனை :நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவு

சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட மருத்துவமனை :நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவு

கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர், வசந்தா, 52; ஒற்றை தலைவலியால்
அவதிப்பட்டு வந்தார். தொண்டாமுத்தூரில் உள்ள 'வாசன் ஐ கேர்' கண் மருத்துவமனை டாக்டர்கள்,'மல்டி போக்கல் லென்ஸ்' பொருத்த வேண்டும் என தெரிவித்தனர். 2012, நவ., 8 ம்தேதி வலது கண்ணிலும், நவ., 10ம் தேதி இடது கண்ணிலும், வசந்தாவுக்கு ஆபரேஷன்
செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு வீடு திரும்பிய வசந்தாவுக்கு, மீண்டும் தலைவலி வந்தது. பாதிக்கப்பட்ட வசந்தா,வேறு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த போது, அவரது இடது கண்ணில், 'மல்டி போக்கல் லென்சு'வைப்பதற்கு பதிலாக, 'ஒற்றை போக்கல் லென்ஸ்' பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. வசந்தா,கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த, நீதிமன்ற தலைவர் தண்டபாணி,
'சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட , வாசன் ஐ கேர் மருத்துவமனை, பாதிக்கப்பட்ட வசந்தாவுக்கு, இழப்பீடாக, 3லட்சம் ரூபாய், மருத்துவ செலவு தொகை, 1 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 1,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

'லேப்-டாப்'கள் மாயம் : தலைமை ஆசிரியை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் உத்தரவிற்கு,மதுரை ஐகோர்ட் கிளை தடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப் பள்ளியில் இலவச 'லேப்-டாப்'கள்
மாயமானதற்கு, தலைமை ஆசிரியை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் உத்தரவிற்கு,
மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
நத்தம்அருகே கோசுக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி ஸ்டெல்லா பாய் தாக்கல் செய்த மனு:
மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, பள்ளியின் ஆய்வக குடோனில் 61 'லேப்-டாப்'களை பாதுகாத்து வைத்திருந்தோம். ஆளுங்கட்சி நிர்வாகிகள் வழங்குவர் என்றனர். 2013 ஜூலை 25இரவு 26 'லேப்-டாப்'கள் மாயமாகின. பள்ளி வாட்ச்மேன், நத்தம் போலீசில் புகார் செய்தார். பள்ளிக்கல்வி இயக்குனர், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தேன். உங்கள் மீது ஏன்நடவடிக்கை எடுக்கக்கூடாது? என நோட்டீஸ் அனுப்பினர்; விளக்கமளித்தேன்.
எந்தெந்த பள்ளிகளில் 'லேப்-டாப்'கள் திருடுபோனதோ, அதற்கு ஈடாக சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், அதில் யாரிடம் பிடித்தம் செய்ய வேண்டும் எனகுறிப்பிடவில்லை. முதன்மைக் கல்வி அலுவலர், ' லேப்-டாப்'கள் மாயமானதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். அதற்குரிய தொகையை செலுத்த வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இரவில்தான், சம்பவம் நடந்தது.'லேப்-டாப்'களை யார் பராமரிப்பில் வைத்துக்கொள்வது என்பது பற்றி, தெளிவான உத்தரவு இல்லை.எனது தரப்பு விளக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை. முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவிற்கு,தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். மனுதாரரிடம் சம்பள பிடித்தம் செய்யும், முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு தடை விதித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

வெள்ளி, 7 மார்ச், 2014

சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

பிளஸ் 2 தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்எண்ணிக்கை குறைந்துள்ளது!

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், வெறும், 14
மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக,முறைகேடு எண்ணிக்கை குறைந்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில், சராசரியாக, 300 முதல், 400 மாணவர், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுவினரிடம் சிக்குகின்றனர். முறைகேட்டில் ஈடுபடும் மாணவர், சம்பந்தபட்ட தேர்வில் இருந்து நீக்கப்படுவது உடன், சில தேர்வுகளுக்கு தடையும்விதிக்கப்படுகிறது. ஆனாலும், முறைகேட்டில் ஈடுபடும் மாணவர் எண்ணிக்கை குறைவதில்லை.

கடந்தஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 397 மாணவர்கள், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டனர். தமிழ் பாடத்தேர்வு தவிர்த்து,இதர பாட தேர்வுகளில், முறைகேடு அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஆங்கில தேர்வுகளில், அதிகமாகஇருக்கும். ஆங்கிலம் முதற்தாள், இரண்டாம் தாள் ஆகிய இரு தேர்வுகளில் மட்டும், 100 மாணவர் வரை பிடிபடுவர். ஆனால், நேற்று நடந்த, பிளஸ் 2 ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், வெறும், 14 மாணவர்மட்டுமே பிடிபட்டனர். மதுரை, ராமநாதபுரம், கரூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில், தலா,ஒரு மாணவர், புதுக்கோட்டை 2, அரியலூர் 3 மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், நான்கு மாணவர் என, 14 பேர் மட்டுமே பிடிபட்டனர்.

பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வரமுருகன் கூறுகையில்,''தேர்வு அறைகளில்,கண்காணிப்பு, முழுமையான அளவில் உள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டால், எதிர்காலம் பாழாகிவிடும் என்ற விழிப்புணர்வும், மாணவர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என்றார்.

தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை, 'மெயின் ஷீட்' பக்கங்கள் குறைவாக இருந்தன. இதனால், மாணவர், கூடுதல் விடைத்தாள், கேட்டுக்கொண்டே இருப்பர். இதனால், அறை கண்காணிப்பாளர், சம்பந்தபட்ட மாணவரிடம், கூடுதல் விடைத்தாள் கொடுத்து, பட்டியலில், மாணவரிடம் கையெழுத்து பெறுவர். இதனால், ஒரு மாணவரிடம், 2 நிமிடம் நிற்க வேண்டியது இருக்கும். இந்த
வாய்ப்பை பயன்படுத்தி, இதர மாணவர், முறைகேட்டில் ஈடுபடுவர். தற்போது, 38 பக்கங்கள் கொண்ட, 'மெயின் ஷீட்' தரப்பட்டு உள்ளது. பெரும்பாலான மாணவர், இந்த பக்கங்களுக்கு உள்ளேயே, தேர்வை முடித்துவிடுவர். ஒருசிலர் மட்டும், கூடுதல் தாள் கேட்பர். இதனால், அறை கண்காணிப்பாளர் கவனம் சிதறாமல், முழுமையாக மாணவர் மீது உள்ளது. முறைகேடு குறைய, இது முக்கிய காரணம்.
இவ்வாறு, தேவராஜன் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, ஆசிரியர் பணிநியமன பணிகளை தொடரவோ, தேர்வுமுடிவை வெளியிடவோ இயலாது ?

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவு ஜனவரியில் வெளியிடப் பட்டது. அதில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 26 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதமாக குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை காரணமாக கூடுதலாக 47 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றனர். தேர்தல் நடத்தை விதிகளால் சிக்கல் அவர்களில் முதல்கட்டமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அதைத்தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதமும் ஆன்லைனிலேயே வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம், புதன்கிழமை (6-ம் தேதி) வெளியிட்டது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர் களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. தகுதித்தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அறிவிப்பு நடத்தை விதி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டதால், எஞ்சியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த அனுமதி அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி முடிவு தெரிவிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தாலும் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, ஆசிரியர் பணிநியமன பணிகளை தொடரவோ, தேர்வுமுடிவை வெளியிடவோ இயலாது என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



Sent from my iPad

வியாழன், 6 மார்ச், 2014

சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள்

சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள்(07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1. WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.2012 AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014- REGARDING WEIGHTAGE OF MARKS -4 writs

2.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD - 8writs
TRB PG CHALLENGING KEY ANSWERS

நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (06.03.14) TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.

பட்டம் என்பது கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கும் என்பதால் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 13–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பெரியார் கலையரங்கில் நேற்று மதியம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ரோசய்யா தலைமை தாங்கி பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகள் அளவிலும் முதலிடம் பெற்ற 114 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களையும், இதர மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார். இதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:–

2020–ல் இளைஞர் சக்தி
'உலக நாடுகளின் புள்ளி விபரங்கள்படி 2020 முதல் 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் தான் அதிகளவில் இளைஞர் சக்தி இருக்கும். முந்தைய காலங்களில் இலக்கியம், கலை, அறிவியல் சம்பந்தமான பாடங்கள் மாணவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றன. தற்போது வேலைவாய்ப்பு பெறும் வகையில் அறிவுசார் சமூகத்தில் அவர்களுடைய ஆக்கத்தை உரிய முறையில் உருவாக்கும் வகையில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் அதற்குரிய வகையில் அமைவதில்லை. அதனால் காணொலி காட்சிகள் மூலம் நடைபெறும் வகுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்மூலம் ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் குழுமியுள்ள மாணவர்கள் இடையே உரையாற்ற முடியும். மேலும், விரைவான தொழில்நுட்ப மாற்றங்களினாலும், ஆசிரியர்களின் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. அதற்காக ஆசிரியர்களும், கல்வி பெற வேண்டிய அவசியமாகிறது.

வளர்ந்து வரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தால் ஆசிரியர்களும், மாணவர்களும் தகவல் தொடர்பு சார்ந்த பயிற்சிகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். எழுச்சி பெற்ற கலை, அறிவியல் படிப்புகள் இன்றைய வேலைவாய்ப்பு சூழலும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது என்றே கூறலாம்.
முன்பெல்லாம் கலை, அறிவியல் சார்ந்த வேலைவாய்ப்புகள் கல்வி, ஆராய்ச்சி, வங்கி மற்றும் அலுவலகங்களில் கிடைக்கப்பெற்றன. அதன்பிறகு மருத்துவம், பொறியியல் சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் முக்கியத்துவம் பெற்றது. தற்போது மீண்டும் கலை, அறிவியல் படிப்புகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் எழுச்சி பெற்றுள்ளன.

இதுதவிர, ஊடகவியல், மருத்துவச் சுற்றுலா, ஆடை வடிவமைப்பு, ஓட்டல் போன்றவை சார்ந்த திறமைகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அதன்மூலம் கலை அறிவியல் சார்ந்த படிப்பு படித்தவர்கள் தொழிற்சாலைகளில் அதிகளவில் வேலையமர்த்தப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி பட்டங்கள் மூலம் வழங்கப்படும் போது திறமைசார்ந்த பயிற்சிகள் சான்றிதழ்கள் மூலம் அங்கீகாரம் பெறுகின்றன. அதன்மூலம் வேலை தேடும்போது நிறுவனங்கள் அவருடைய திறமைகளை எளிதாக மதிப்பிட இயலும். அதற்காக நாடு முழுவதும் ஒருங்கிணைந்த திறன் வளர்ச்சிக்கும் மையங்களை உருவாக்கி சான்றிதழ்கள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவு ஆகிய மூன்றும் உயர்கல்வியின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாகும். தொழில்நுட்பங்களை மேற்கொள்ளும்போது உரிய தொழில்நுட்பத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

திறமைகளை வளர்த்துக்கொள்ள...
படித்து பெறுகின்ற பட்டங்கள் வெறும் கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கின்றன. ஆனால் எழுத்து மற்றும் பேச்சுத்திறமை இருந்தால் மட்டுமே அந்தக் கல்வி தகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் என்பதை அனைவரும் உணரவேண்டும். இருப்பினும், வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்வது அவசியம் ஆகும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். அதற்கு தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.


Sent from my iPad

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு :ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன.

அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை பெறப்பட்டன. அதன்படி அவர்களுக்கான ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் மாற்றுத்திறனாளிகள் நிரப்பப்படுவார்கள். அரசுக்கான அனைத்து பணியிடங்களிலும் இனி 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.
உயர்கல்வி துறையில் கண்டறியப்பட்டுள்ள 91 பின்னடைவு பணியிடங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நிரப்ப வேண்டும். சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் உள்ள 259 பின்னடைவு பணியிடங்களை (அங்கன்வாடிகளில்) நிரப்ப, மாவட்ட கலெக்டர்கள் விளம்பரம் செய்வதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 5 மார்ச், 2014

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ( 05.03.14 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன், வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன. வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (06.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET வழக்குகள்

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (06.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET வழக்குகள்

இன்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு (06.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] 1.CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

2.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL

3 WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014
REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

4.WRIT PETITIONS RELATING TO SECONDARY GRADE ASSISTANT/ B.T. ASSISTANT/

நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் :இணையதளம் முடங்கியது

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில்இன்று வெளியிடப்பட்டன. இதையடுத்து தேர்வு எழுதியவர்கள் www.tnpsc.gov.in இணையதளத்தை முற்றுகையிட்டதால், இணையதளம் முடங்கியது.

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு
. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும் என்றும் இதற்காக இடஒக்கீட்டு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவின் கீழ் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். காலியாக இருக்கும் 5855 குரூப்-4 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

9 கட்ட தேர்தல்:

ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும். மே மாதத்தில் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 12.ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 2 மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் 92 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 3 மாநிலங்களில் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன் பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே 7-ஆம் தேதி நடைபெறும் எட்டாவது கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஏப்ரல் 24-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 5 வரை நடைபெறும். ஏப்ரல் 7-ல் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 24-ல் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், மே 16-ல் எண்ணப்படுகின்றன.

ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதியே ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறும். பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிஷா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திரத்தில் சீமாந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தனித்தனியே 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். அதன்படி, ஏப்ரல் 30-ல் தெலங்கானா பகுதியிலுள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கும். சீமாந்திராவிலுள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஒடிஷாவில் ஏப்ரல் 10-ம் தேதி 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 17 ஆம் தேதியில் 77 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஏப்ரல் 12-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

சிறப்பு முகாம்:

முன்னதாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும், அன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை:

மக்களவைத் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.

வாக்கு உரிமையை பயன்படுத்தவும்:

தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தேர்தலில் வாக்கு அளிக்கும் தகுதி உடைய இந்திய மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

வாக்காளர்கள் தேர்தலில் நியாயமான, ஜனநாயக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் உச்ச பட்ச நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணைய அறிவிப்புகள்:

*வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் இது கடந்த ஆண்டை விட 12% அதிகமாகும்.

*வாக்குச்சாவடிகளுக்கு அருகில் குடிதண்ணீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை போன்ற அடிப்படை வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

*தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்கும் 'நோட்டா' வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அமல் படுத்தப்படும்.

*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு முதல் முறையாக வழங்கப்படும்.

*வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த 1952.ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின் போது 176 மில்லியனாக இருந்ததது. அது தற்போது 16-வது மக்களவைத் தேர்தலில் 814 மில்லியனாக உயர்ந்துள்ளது.





Sent from my iPad

பயமா? ஜெயமா?

மகாபாரதத்தில் ஒரு சுவையான கதை உண்டு. காட்டில் தண்ணீர் பிடிக்க குளத்துக்குச் சென்ற பாண்டவர்களை ஒவ்வொருவராக குளத்தில் இருந்த ஒரு யட்சன் கொன்றுவிடுகிறான். இறுதியாக தருமன் வருகிறான். தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பாண்டவர்களை உயிர்ப்பித்துவிடுவதாகக் கூறி கேள்விகளைக் கேட்கிறான் யட்சன்.

அதில் ஒரு கேள்வி. 'எதை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்?'

இதற்கு தருமன் சொன்ன பதில்.. 'மன தைரியத்தை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்'.

ஆனால், தருமனே இக்காலத்தில் இருந்திருந்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மனம் கலங்கியிருப்பான். காரணம், தேர்வுகள். குறிப்பாக, ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்குகிறார்கள்.

பிளஸ் 2 தேர்வு எழுதச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலரைப் பார்த்தேன். பெரும்பான்மையரின் முகம் பதற்றத்தில் இருந்தன. அவர்களில் எனக்குத் தெரிந்த சிலரிடம் பேச்சு கொடுத்தேன். கடந்த தேர்வுகளில் அவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களையே எடுத்திருந்தார்கள். ஆனாலும், இப்போது தேர்வுக்குச் செல்லும்போது பயம். தேவையற்ற பயம்.

அதை எப்படி அகற்றுவது? மிகவும் எளிது மாணவர்களே.

பயத்தை போக்கிவிட்டாலே போதும்; உற்சாகம் பொங்கி வழியும். எப்போதோ படித்ததுகூட நினைவில் வந்து குவிந்து கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத்தரும்.

மாணவர்கள் மட்டுமா பயப்படுகிறார்கள்? பெற்றோர், உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என்று எல்லோரையும் தொற்றிக்கொள்கிறது, இந்த தேர்வுக் காய்ச்சல். இந்த பயத்தால் விளையும் தீமைகள் எண்ணிலடங்காதவை. ஆனால், பயப்படுவதால் எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை கண்மணிகளே. ஆகவே உங்களது முதல் தேவை, பயத்தை தூக்கி எறிந்துவிட்டு, தேர்வை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதுதான்.

பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் நான்கு. அவற்றில் முதன்மையானது அப்பிரச்சினையைப் புரிந்துகொள்வது. அதாவது பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் அலசுவது. 2-வது, நம் திறனை ஆராய்தல். 3-வது அதை அடையும் வழிகளை முறையாகத் திட்டமிடல். 4-வது, திட்டமிட்டதை நடைமுறையில் சாத்தியப்படுத்த உழைத்தல். ஆக, பிரச்சினையைப் புரிந்துகொள்ளுதல், நம் திறனை ஆராய்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகிய 4 நிலைகளில் வெற்றிகரமாக செயல்பட்டால் தேர்வுகளை எதிர்கொள்வது மிக மிக எளிது.

குறுகிய காலத்துக்குள் எவ்வளவு படிக்க வேண்டும்? நம்மால் எவ்வளவு வேகமாகப் படிக்க முடியும்? எப்படிப் படிக்க வேண்டும்? – என்பதை யோசித்துப் பின் செயல்படுத்தினால் தேர்வைக் கண்டு பயம்கொள்ள வேண்டியதில்லை.



Sent from my iPad

SG. TEACHER ஊதிய வழக்கின் நிலை

SG. TEACHER ஊதிய வழக்கு 33399/2013 வழக்கறிஞர் போராட்டம் மற்றும் முந்தய நீதிபதி விசாரித்து வந்த வழக்குகள் ஒரு வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உண்டா ?-கிப்சன் .TATA .பொதுசெயலாளர்

இன்று ( 4.3.14 ) தொடக்க கல்வி இயக்குனரகத்தை தொடர்புக் கொண்டு விசாரித்ததில் நடை பெறாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் நடத்திட அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது .இது வரை அனுமதி கிடைக்க வில்லை .மேலும் செயலர் 20 நாள் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்று உள்ளத்தால் அனுமதி தாமதப்படுவதாக தெரிவித்தனர் . மேலும் தேர்தல் தேதி நாளை ( 5.3.14 ) அறிவிக்கப் படுவதாக செய்தி வெளிவருவதால் பட்டதாரி ஆசிரியர் பதவி மற்றும் மாறுதல் இடை நிலை ஆசிரியருக்கு ''காணல் நீர் தான் ''
நமது சங்க தோழர்கள் நலன் கருதி 2013 பேணல் படி பதவி உயர்வு மே 2014 ல் நடத்திட நீதிமன்றத்தை நாடிட வழி கட்டியுள்ளோம் ..
கிப்சன் .TATA .பொதுசெயலாளர்

தமிழகம் ,புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாகவாக்குப்பதிவு

ஏப்ரல் 24ம் தேதி வாக்குப் பதிவும், மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மக்களவைக்கு நடைபெறும் 9 கட்ட தேர்தலில், தமிழகம் மற்றும்புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியானதுமே, தேர்தல் நடத்தைகளும் அமலுக்கு வருகின்றன. !

இந்த நிலையில், தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 29ம் தேதி துவங்குகிறது.வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 5ம் தேதி. வேட்பு மனுக்கள் ஏப்ரல் 7ம் தேதி பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 24ம் தேதி வாக்குப் பதிவும், மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

NTSE -2013 தேர்வு முடிவுகள் வெளியீடு

NTSE -2013 தேர்வு முடிவுகள் வெளியீடு

நவம்பர் 2013 ல் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறானாய்வு தேர்வு முடிவுகள் http://www.tndge.in/ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு நிலை -2 தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.இதற்கான நுழைவு சீட்டு மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதlல் வாரம் அனுப்பி வைக்கப்படும்

ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து உள்பட, ஏழு அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச், 6ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.
இதற்காக அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் மார்ச், 6ம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த போதிலும், மார்ச், 6ம் தேதி எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரியர்களை பயன்படுத்தி பள்ளியை நடத்த முடிவு செய்துள்ள கல்வித்துறை, இதற்காக போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை கேட்டுள்ளது.துவக்க, நடுநிலைப்பள்ளியின் சாவி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் இருக்கும். பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மார்ச், 6ல் (நாளை ) நடக்கும் ஸ்டிரைக்கில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால், பள்ளி சாவியை அந்தந்த ஒன்றிய, ஏ.இ.இ.ஓ.,க்களிடம் இன்று மாலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை: தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ்சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை மூலம் கூடுதலாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 5
இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90) மதிப்பெண் எடுத்து 29 ஆயிரம்
பேர் தேர்ச்சி பெற்றனர். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்
சலுகையைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம்செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் தேர்வில் கூடுதலாக 46 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றனர். ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றநிலையில், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுப்பணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படஉள்ளது. தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில்பொதுத்தேர்வு நடைபெறாத 5 பள்ளிகள் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களாகத்தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வுப் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்களைக் கொண்டு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்த வேண்டியுள்ளதால், 30 நாள்களுக்கும் மேல் சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் 200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், சுய விவர குறிப்புப் படிவம்மற்றும் அடையாள சான்றிதழ் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சரிபார்ப்பு மையங்கள் தொடர்பான விவரங்களும் இதில்வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட இந்தப் படிவங்களோடு, அசல் சான்றிதழ்கள், அவற்றின் 2 நகல்களோடு சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு வர வேண்டும். சான்றிதழ் நகல்களில் அரசிதழில் பதிவு பெற்ற ஏதேனும் ஒரு அதிகாரியிடம்"கெசடட் ஆபீசர்' சான்றொப்பம் பெற வேண்டும்.

இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக தனியாக அழைப்புக் கடிதங்கள்அனுப்பப்படாது என அவர்கள் தெரிவித்தனர்.
சரிபார்ப்பு மண்டல மையங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்:
1. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,
விருதுநகர், மதுரை
எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில்,
மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754
2. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல்,
திண்டுக்கல், தேனி
-ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி,
திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648

3. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி
சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7.
தொலைபேசி எண்: 0427-2412160

4. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம்
ஸ்ரீமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில்,
கும்பகோணம்-01. தொலைபேசி எண்: 0435-2431566

5. சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர்
ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319,
ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை - 44. தொலைபேசி எண்:
044-22417714


Sent from my iPad

மதுரைக் கிளையில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்.

.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

விசாரணைப் பட்டியலில் .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்மதுரைக் கிளையில் இன்றைய (05.03.14) இடம்பெற்றுள்ளன.
நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET 2012 relaxation 5% MARKS வழக்குகள்

நேற்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS 12 writs

2.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL-3 writs

3. EQUALENCE

4 WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

5..WRIT PETITIONS RELATING TO SECONDARY GRADE ASSISTANT/ B.T. ASSISTANT/

நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்

செவ்வாய், 4 மார்ச், 2014

மாணவர்களை தண்டிக்கலாமா?

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
புராணங்களில் கல்வி பயில குருகுல முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ராஜா மகன் முதல் சாதாரண பாமரன் வரை அனைவரும் சரிசமமாக குருவால் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வேலைகளும் சரிவிகிதமாக பங்கிட்டு செய்ய கட்டளையிடப்பட்டு வந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்விமுறை பல்வேறு கட்டங்களில் திசை மாறியுள்ளது.
கடந்த காலங்களில் பள்ளியில் சேர்க்கப்படும் தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும்போது தவறு செய்தால் கண்டிக்குமாறும், அடித்துத் திருத்துமாறும் பெற்றோர்களே ஆசிரியர்களிடம் தெரிவித்து வந்தனர். இதனால் ஆசிரியர்களைக் கண்டால் மாணவர்களுக்கு பயமும், படிக்க வேண்டும் என்ற அக்கறையும் இருந்து. அதே நேரம் ஆசிரியர்களிடும் பக்தியும், அன்பும் இருந்துவந்தது.

தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களை திட்டுவதற்கே நூறுமுறை யோசிக்க வேண்டியுள்ளது. கல்வித் துறையே ஆசிரியர்களிடம் மாணவர்களைத் திட்டக் கூடாது, எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் மாணவர்களை மிரட்டக்கூட ஆசிரியர்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி இழக்க வைக்கக்கூடாது என்ற உத்தரவாலும், மாணவர்கள் கல்வித் தரம் தாழ்ந்து வருகிறது.
பல இடங்களில் பெற்றோர்களே தங்கள் குழந்தையை யாரும் அடிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். மாணவர்களும் இதுபோன்ற நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலநேரம் ஆசிரியர் மிரட்டினாலும்கூட, தன்னை அடித்ததாகக் கூறி ஆசிரியர்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டு வருகின்றனர். இதை இன்றைய பல ஆசிரியர்கள் அனுபவித்தே வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை நமக்கு என்ன என்ற எண்ணத்துக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்டாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவிகள் உலகத்தை அறியும் நிலையில் அவர்களிடம் ஆசிரியர்கள் படும்பாடு அதிகமாகும்.
ஒருபக்கம் மாணவர்களை ஆர்வமுடன் படிக்க வைக்க ஆசிரியர்களை வறுத்தெடுக்கும் கல்வித்துறை, மறுபக்கம் அவர்களை திட்டக்கூடாது, அவர்கள் மீது விரல்கூட படக்கூடாது என்று உத்தரவிட்டு ஆசிரியர்களை இருதலைக்கொள்ளி எறும்பாக மாற்றி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி விளையாட்டுத் திறனை வெளிக்காட்டுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு மொபைல்போன், இன்டர்நெட், பேஸ்புக் போன்றவை பழகி விடுவதால் அவர்களின் கல்விச் சிந்தனை மிகவும் குறைந்து வருகிறது.
பல பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை கிண்டல் செய்வதையும், சில இடங்களில் ஆசிரியர்களை கொலை செய்யும் அளவுக்கும் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பெற்றோரே காரணமாகி விடுகின்றனர்.
இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளிக்கு நற் பெயரை ஈட்டி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை படிக்க வைக்க திண்டாடி வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் மாணவர்களை சேர்க்கவே பெற்றோர்கள் திக்குமுக்காடிய காலம் மாறி இப்பள்ளிகளை குறிவைத்து மிரட்டும் பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் பள்ளி நிர்வாகத்தையே திக்குமுக்காட வைக்கின்றனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகள் கல்வியில் மேம்படவும், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கவும் விரும்பினால், அவர்களை ஆசிரியர் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை ஆசிரியர் கண்டிப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியமாகும்.
மாணவர்களும் ஆசிரியரின் பெருமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.


Sent from my iPad

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வுப்பணி ஆசிரியர்கள் கவனத்திற்கு...

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்தில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில்உள்ள ஒரு அறையில் கண்காணிப்பாளராக
பணிபுரிந்த ஒருவர், தேர்வெழுதிக் கொண்டிருந்த ஒரு மாணவியின் முதுகில் 2
முறை தட்டி கொடுத்ததாகவும். சிறிது நேரம் கழித்து, தனது கையில் என்னை பிடித்திருக்கிறதா என எழுதி காட்டி, மாணவியிடம் சைகை தெரிவித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
தேர்வு முடிந்த பிறகு மாணவி,தனது பெற்றோரிடம் இது பற்றி கூறி, கண்ணீர்
விட்டு அழுதுள்ளார். உடனடியாக, மாணவியை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்ற
பெற்றோர், அந்த தேர்வு மைய அதிகாரியிடம்புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து அவர்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதை தொடர்ந்து அந்தஆசிரியரை நாமக்கல் அழைத்து வந்து, அவரிடம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார்,நேற்றிரவு விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: ராசிபுரம் தனியார்பள்ளி தேர்வு மையத்தில், பணியாற்றிய அறை கண்காணிப்பாளர் ஒருவர், மாணவிக்கு விடைத்தாள் கொடுக்கும் போது அவரது கை தவறுதலாக மாணவியின் மீது பட்டுள்ளது. நடந்தசம்பவத்துக்கு அறை கண்காணிப்பாளர் தேர்வு அறையிலேயே வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும்மையத்தில் நடந்த பிரச்னை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 தேர்வு: மாற்றங்களுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்பு

வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் மாணவர்களும்,தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 2,242 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக்
கல்வி அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர்தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு, மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள்கள்
பிரிப்பு, விடைத்தாள் முதல் பக்கத்தில் அனைத்து விவரங்களையும்அச்சிட்டு வழங்கியது, தேர்வுப் பணிகளில் வேலைப்பளு குறைப்பு போன்றபல்வேறு மாற்றங்களுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மொழிப்பாடம் என்பதால் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள 38 பக்கங்களில்அதிகபட்சமாக 25 பக்கங்கள் வரை மட்டுமே பயன்படுத்தியதாக மாணவர்கள்தெரிவித்தனர். கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு பக்கஅதிகரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வாகனங்களில் வந்த வினாத்தாள்: வழக்கமாக, வினாத்தாள் பாதுகாப்பு மையங்களிலிருந்து இருசக்கர வாகனங்களிலும்,ஆட்டோக்களிலும்தான் தேர்வு மையங்களுக்கு எடுத்துவரப்படும். ஆனால்,இந்த ஆண்டு வினாத்தாள்களை எடுத்துவர கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால், பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திலும் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வந்ததாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எளிமையாகிவிட்ட தேர்வுப் பணிகள்: பொதுத்தேர்வின்போது மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது,தேர்வறைகளுக்கான வினாத்தாள்களைப் பிரித்து வழங்குவது, போன்ற பல்வேறு பணிகள் தேர்வுக்கு முன்னதாகமேற்கொள்ளப்படும். எனவே, தேர்வு மையங்கள் பரபரப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு தேர்வின்போது வேலைப்பளுவையும், தவறுகளையும்குறைப்பதற்காக புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், தேர்வுப்பணிகள் மிகவும் எளிமையாகிவிட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர்கே.தேவராஜன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்கீடு, ஒரு கவரில் 20 வினாத்தாள்கள் எனபிரித்து வழங்கியது போன்ற நடவடிக்கைகளால் தேர்வுப் பணியில்ஈடுபடுவோரின் வேலைப்பளு பெருமளவு குறைந்துள்ளது. எனவே, பலதேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்ததாக தேர்வு கண்காணிப்பாளர்கள் எங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தேர்வு நாளன்று தபால் துறையினரிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்சலை ஒப்படைப்பதற்காக தேர்வு கண்காணிப்பாளர்கள்பதற்றத்தோடு இருப்பார்கள்.இப்போது எங்களது வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்ட
மையங்களுக்கு எடுத்துச்செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை எடுத்துச்செல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக வாகனங்கள் பணியமர்த்தப்பட்டன. விடைத்தாள்களை மாவட்டமையங்களுக்கு மாலை 6 மணிக்குள் கொண்டுவந்தால் போதும் என
உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பதற்றமில்லாமல் விடைத்தாள்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டதாக இயக்குநர்கே.தேவராஜன்கூறினார்.

News in detail :TET 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக்கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம்நடத்தினர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டபணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண்முறையைப் பின்பற்றக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60 சதவீதம் (90 மதிப்பெண்)
எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக(82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள்வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண்எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராகபணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப் படுத்தக்கூடாது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில்தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள்தெரிவித்தனர்.

ஆசிரியர் ஸ்டிரைக் :மார்ச் 6ம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மார்ச் 6ம் தேதி, வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்; அன்று,அனைத்து பள்ளிகளும், கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்; தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை,ரத்து செய்ய வேண்டும்; தொடக்கக் கல்வியில், தமிழ் வழி பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்தவேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச் 6ல், மாநிலம் தழுவிய, வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.

ஆனால், மார்ச் 6ம் தேதி, பள்ளிகள் கண்டிப்பாகசெயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. அன்று, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,
அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்றுனர்கள், ஆசிரியர்களாக நியமிக்க, கல்வித் துறை அதிகாரிகள்திட்டமிட்டு உள்ளனர். டிட்டோ ஜேக் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறேன் என,ஒவ்வொரு ஆசிரியர்களிடமும், தனித்தனியாக கையெழுத்து வாங்கியிருக்கிறோம். கையெழுத்து போட்டஆசிரியர்கள் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், சம்பந்தப்பட்ட
ஆசிரியர்கள் விரும்பினாலும், பணிக்கு செல்ல முடியாது. எனவே, 6ம் தேதி, எஸ்.எஸ்.ஏ.,
ஆசிரியர்களை நியமித்தாலும், பெரும்பாலான பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும். இவ்வாறு, அவர்கள்கூறினர்.

டி.இ.டி மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர்பணி நியமனம் - டி.ஆர்.பி அலுவலகம் முன் தேர்வர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர்
பணி நியமனம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, டி.இ.டி., தேர்வர்கள், நேற்று, ஆசிரியர்
தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்லூரி சாலையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், டி.இ.டி., தேர்வர்கள், நேற்று காலை,ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆகஸ்டில்,டி.இ.டி., தேர்வெழுதி, 90 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றோம். தற்போது, 5 சதவீத சலுகை அடிப்படையில், 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், நாங்கள், அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும்,வேலை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. முதுகலை ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண்இல்லை. எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கிறது. அதே முறையை, பட்டதாரி ஆசிரியர் தேர்விலும், கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.

ஆசிரியர்கள் சிந்தனைக்கு....

ஆசிரியர்கள் சிந்தனைக்கு....

சிவகங்கையில், வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசியதாக, ஆசிரியர் சங்க
நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு, திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரால்,
அதே பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, ஆசிரியர்
சங்கத்தினர் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, பேசிய, ஆசிரியர் சங்க நிர்வாகி சேவியர், "மாணவர்கள் கத்தி எடுத்தால், ஆசிரியர்களும் ஆயுதங்கள் தூக்கவேண்டிய அவசியம் ஏற்படும் என, வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசியுள்ளார்.
அவர் மீது உரிய முறையில்விசாரணை நடத்தி, தவறு இருக்கும் பட்சத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வித்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "மாவட்டநிர்வாகத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Sent from my iPad

பிளஸ் 2பொதுத்தேர்வு: மொழி முதற்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததாக,மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2பொதுத்தேர்வு, நேற்று துவங்கியது மொழி முதற்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததாக,மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும்புதுச்சேரி யில், பிளஸ் 2பொதுத்தேர்வு, நேற்று துவங்கியது.8.26 லட்சம் மாணவ, மாணவியர்,உற்சாகமாக தேர்வில் பங்கேற்றனர்.நேற்று நடந்த, மொழி முதற்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததாக,மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 2,210 மையங்களிலும், புதுச்சேரியில்,32 மையங்களிலும், நேற்று,மொழி முதற்தாள் தேர்வு நடந்தது. காலை, 10:15க்கு துவங்கிய தேர்வு, பகல்,1:15க்கு முடிந்தது. "பார்கோடிங்' : இந்த தேர்வில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளன. பெயர், பாடத்தின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை, கையால் எழுதும்போது, பல மாணவர்கள், தவறு செய்தனர். இது போன்ற பிரச்னை ஏற்படுவதை, முற்றிலும் தவிர்க்கும்
வகையில், தேர்வுத் துறையே, அனைத்து தகவல்களையும் அச்சிட்டு, மாணவர் புகைப்படம், "பார்கோடிங்' முறை என, பல திட்டங்களை, இந்த தேர்வில் அமல்படுத்தி உள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய, விடைத்தாள் முதல்பக்கத்தில், மாணவர்கள், கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்ற நிலை இருந்தது.
நேற்று, மாணவர்களுக்கு, விடைத்தாள் வழங்கியதும், அதன் முதல் பக்கத்தில், கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு,நேரடியாக, விடை எழுத ஆரம்பித்தனர். சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,தேர்வை முடித்து ?வளியே வந்த மாணவ, மாணவியர், "மொழித்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது' என,உற்சாகமாக கூறினர். இந்த மையத்தில், 565 மாணவ, மாணவியர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 11
மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆனதாக, மைய அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, தனித் தேர்வு மாணவர்கள் தான், "ஆப்சென்ட்' ஆவர். ஆனால், "ரெகுலர்' மாணவர்கள், 11 பேர், தேர்வுக்கு வராதது, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனினும், எவ்வித குழப்பமும் இல்லாமல், முதல் தேர்வு நடந்து முடிந்தது.
ஏன் இந்த பாகுபாடு? :
தேர்வு அறைக்குள், மாணவர்கள், "ஷூ' மற்றும் செருப்பு அணிந்து செல்ல, தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய, மாணவ,மாணவியர் அனைவரும், "ஷூ' மற்றும் "செப்பல்' ஆகியவற்றை, அறையின் வாயிலில், கழற்றி வைத்து, அறைக்குள் சென்றனர். ஆனால், இந்த விதிமுறை, பல தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், "விதிமுறை, அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கும்
பொருந்தும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும், தேர்வு அலுவலர், பணியாளர் அனைவரும், தேர்வுத் துறையின் விதிமுறையை, 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும்' என்றார்.

தமிழ் தேர்விலும் "பிட்' -- ஏழு மாணவர் சிக்கினர் : நேற்று நடந்த, பிளஸ் 2 மொழி முதற்தாள் தேர்வில், "பிட்'அடித்து, ஏழு மாணவர், பறக்கும் படையிடம் சிக்கினர். "தேர்வில், முறைகேடு செய்ய வேண்டாம்' என, தேர்வுத் துறை, வலியுறுத்தி உள்ளது. முறைகேடால் ஏற்படும் விளைவை, ஆசிரியர்களும்,மாணவர்களுக்கு விளக்குகின்றனர். ஆனாலும், தேர்வில் முறைகேடு நிற்கவில்லை. குறிப்பாக, தனித் தேர்வு மாணவர்கள், அதிகளவில், "பிட்' அடித்து சிக்குகின்றனர். நேற்று நடந்த, தமிழ் முதற்தாள் தேர்வில்,திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில், தலா, இரு மாணவர்; வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில், தலா, ஒரு மாணவர்; காரைக்கால் பகுதியில், ஒரு மாணவர் என, ஏழு மாணவர், பறக்கும் படைகளிடம் சிக்கியதாக,தேர்வுத் துறை தெரிவித்தது. ஏழு பேரில், ஆறு பேர், தனித் தேர்வு மாணவர்; ஒருவர், "ரெகுலர்' மாணவர்.
எதிர்பார்த்த வினாக்களால் மகிழ்ச்சி:
பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியர் கருத்து : "பிளஸ் 2 தமிழ் முதல் தாளில், எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றதால் எளிதாக இருந்தது' என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். மதுரைமாணவர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது: எம்.ஜெயலட்சுமி (மாணவி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை): எதிர்பார்த்த வினாக்கள்இடம் பெற்றன. ஒன்று மற்றும் இரண்டு மதிப்பெண் பகுதிகளில், பாடத்தின் பின் பகுதியில் இடம் பெற்ற
வினாக்களே கேட்கப்பட்டன. மனப்பாடப் பகுதியில், திருக்குறள், கம்பராமாயணம்(?) பகுதிகள் கேட்கப்பட்டன. இரண்டு பகுதியுமே பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிந்தவை. இலக்கணப் பகுதியும்எளிதாகவே இருந்தது.
டி.ஆர். லட்சுமி (மாணவி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி):"புளு பிரின்ட்' அடிப்படையில் தான்அனைத்து கேள்விகளும் இடம்பெற்றன. திருப்புதல் தேர்வு, பள்ளியில் நடந்த சிறப்பு தேர்வுக்கானவினாத்தாள்களில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. எளிதாக இருந்ததால், விரைவாக தேர்வு எழுதமுடிந்தது. திருப்பிப் பார்ப்பதற்கு அதிக நேரம் இருந்தது. முதல் தேர்வு எங்களுக்கு மகிழ்ச்சியாகஅமைந்துள்ளது. அதிக மதிப்பெண் பெறுவேன்.
எ.கவிதா (தமிழாசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை):செய்யுள் மற்றும் இலக்கணப்பகுதிகளில் இருந்து "புளு பிரின்ட்' அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. மறுமலர்ச்சி மற்றும்திருக்குறள் பகுதியில் இருந்து மனப்பாடம் பகுதி கேட்கப்பட்டதால், மாணவர்கள் எளிதாக எழுதினர். இலக்கணப்பகுதி யில், இலக்கணக் குறிப்பு, புணர்ச்சி, பகுபத உறுப்பிலக்கணம், திணை போன்ற எளிதான வினாக்கள்கேட்கப்பட்டன. சாதாரண மாணவர்களும், இப்பகுதியில் 22 மதிப்பெண் உறுதியாக பெற முடியும். செய்யுள்
பகுதியில், வாழ்த்து, தொகை நூல், சிற்றிலக்கியம், மறுமலர்ச்சி, வழிபாட்டுப் பாடல்கள் என, அனைத்துப் பகுதியிலும் சரிவிகிதத்தில் வினாக்கள் இடம் பெற்றன. கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன.


Sent from my iPad

அறிவுக் களஞ்சியங்களின் ஆதாரம்-காகிதத்தின் கதை

சாய் லூன் (Cai Lun), கியாங் (Guiyang) என்னும் ஊரில் கி.பி. 50இல் பிறந்தார். இவர் கி.பி. 75ஆம் ஆண்டு சீனாவின் ஹான்அரச வம்சச் சபையில் அடிமைப் பணியாளனாகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் சீனாவில் அரசவைப் பணியாளர்களுக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அதையெல்லாம் மீறித்தான் லூன் அங்கு வேலை பார்த்துவந்தார்.

முதலில் ஏவல் பணிகள் மட்டுமே லூனுக்கு வழங்கப்பட்டு வந்தன. எந்தப் பணியாக இருந்தாலும் தனக்குக் கொடுக்கப் பட்ட வேலைகளை முடிப்பதில் லூன் கண்ணும் கருத்துமாக இருந்தார். வேலையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பால் அவருக்கு வேலையில் உயர்ந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. அரசவை உயர்அதிகாரிகளின் செல்வாக்கும் அவருக்குக் கிடைத்தது. மேலும் மன்னன் ஹீயின் (He) நன்மதிப்பையும் வெகு சீக்கிரத்தில் பெற்றார். அதனால் பதவி உயர்வு அளிக்கப் பட்டுக் கி.பி. 89ஆம் ஆண்டு அரசின் 'கருவிகள் மற்றும் ஆயுதத் தயாரிப்பு அலுவலகத்தின் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டார்.

ஹான் அரச வம்சம் முறையான எழுத்து மரபு கொண்டது. அரசு ஆவணங்கள், ஒப்பந்தங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை எழுத்து முறையில் ஆவணப்படுத்தும் வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வந்தனர். களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலேட்டு போன்ற சாதனமும், பட்டுத் துணிகளுமே அதுவரை எழுதுவதற்குப் பயன்பட்டு வந்தன. அவை கையாள்வதற்குக் கடினமானதாகவும் பட்டுத்துணிகள் விலையுயர்ந்தவையாகவும் இருந்தன. அதனால் இந்தப் பழைய முறைகளுக்கு மாற்றாகப் புதிய பொருளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இந்நிலையில் அரச தயாரிப்பு அலுவலகத்தின் பொறுப்பாளரான சாய் லூன், சுய ஆர்வத்தால் புதிய பரிசோதனைகளை முயன்று பார்த்தார். அப்படித்தான், மரத் துகள்களைக்கொண்டு காகிதம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அவர் கண்டுபிடித்தார். இதற்கு ஆதாரமாக இருந்தது குளவி கூடு கட்டும் முறைதான். ஒரு நாள் குளவி மரத்தைத் துகள்களாக்குவதைக் கவனித்தார். அது கூடு கட்டுவதற்காக மரத்தைக் குடைந்து துகள்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. அப்படிச் சேகரித்த துகள்களை உமிழ் நீரில் நனைத்துக் கூடு கட்டியது அந்தக் குளவி. அப்போது எழுதுவதற்காகப் புதிய சாதனம் தயாரிக்கும் வேட்கையில் இருந்த லூனுக்குப் பொறி தட்டியது. இதுபோன்ற மரத் துகள்களையே எழுதுவதற்கான சாதனம் தயாரிக்கும் மூலப் பொருளாக மாற்றலாம் என நினைத்தார்.

சாய் லூன் முதலில் கண்டுபிடித்த தயாரிப்பு முறை, மல்பெர்ரி மரப்பட்டைகளை மூலப்பொருளாகக் கொண்டதாகும். இத்தயாரிப்பு முறையைக் குளவியின் செயல்முறையை அடிப்படையாகக்கொண்டு ஐந்து நிலைகளாகப் பிரித்தார். நசுக்கப்பட்ட மரநார்களை நீரில் ஊறவைத்து, வேகவைத்து, நன்கு ஊறி ஒன்றுடன் ஒன்று அவை கலக்க வேண்டும். பிறகு அக்கலவையில் உள்ள நீரை வடிகட்ட வேண்டும். எஞ்சும் மரத் துகள்களை விரிப்பில் இட வேண்டும். விலங்குகளின் தோல்களால் ஆன விரிப்பில் வைக்கப்பட்ட மரத் துகள்களின் கலவைக்கு நல்ல அழுத்தம் கொடுக்க வேண்டும். இறுதியில் விரிப்பில் உலர்ந்த பொருள்தான் காகிதம் என இன்று நாம் அழைக்கும் எழுதப் பயன்படும் சாதனம். ஆனால் லூன், இந்த முறையை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை.

சாய் லூன் கண்டுபிடித்த இந்தக் காகித வடிவம் முதலில் ச்சீ (chi) என அழைக்கப்பட்டது. அவர் தன் புரவலர்களில் ஒருவரான அரச துணைவி டெங்க்கிடம் கி.பி.102இல் முதலில் காண்பித்தார். ச்சீ மாதிரிகள் அரசி டெங் மூலமாக அப்பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுக் கருத்து கேட்கப்பட்டது.

இறுதியில் செம்மைப்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட காகிதத்தையும் தயாரிப்பு முறைகுறித்தான அறிக்கையையும் கி.பி. 105இல் ஹான் வம்ச அரசர் ஹீயின் அவையில் சாய் லூன் அறிமுகப்படுத்தினார். அவரின் தொழில்நுட்ப முறை அங்கீகரிக்கப்பட்டது. சாய் லூனுக்கு பிரபு அந்தஸ்து அளிக்கப்பட்டது. இன்றைய நவீனத் தொழில்நுட்ப முறைக்குச் சாய் லூன் கண்டுபிடித்த இந்த முறைதான் ஆதாரம்.

பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ ?அச்சத்தில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள் !

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தகுதி 5 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 45 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். முதல்கட்டமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்க்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் அச்சம்

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்ற பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்ததுமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்.

புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த காலதாமதம் ஆகி வருகிறது. இதற்குள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பழைய அறிவிப்புக்கு பொருந்துமா?

ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொருத்தவரை, அதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு தேர்வும் முன்னரே நடத்தப்பட்டுவிட்டது. எனவே, நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தாது என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது இதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாது. அரசு உத்தரவுப்படி பணிகளை மேற்கொள்வோம்" என்று பதிலளித்தனர்.



Sent from my iPad

திங்கள், 3 மார்ச், 2014

சோதிடம் அறிவியலின் ஓர் அங்கமா?

எம். ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.

இந்தச் சம்பவத்துக்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார். நேரு, அவரிடம் "நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்" என்று சொல்லியிருக்கிறார். சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்: "இல்லை. குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன். சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன."

நேருவின் பிறந்தநாள் 14 நவம்பர் 1889.

மக்கள் நம்புகிறார்கள்

இந்தச் சம்பவங்கள் வாழ்க்கையின் புதிர்களை அவிழ்க்க மனிதன் செய்யும் முயற்சியின் பல பரிமாணங்களில் இரண்டைக் கோடிட்டுக் காட்டுகின்றன. நம்மில் பலருக்கு சோதிடம் துல்லியமாகப் பலித்த அனுபவங்கள் இருக்கலாம். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர்கூட அவரது மனைவி மரணம் எய்தும் நாளை, மரணம் அடைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சோதிடர் துல்லியமாகக் கணித்ததைப் பற்றி மிகுந்த வியப்போடு குறிப்பிட்டார். இதற்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை என்னால் சொல்ல முடியும். என்னுடைய தாய்வழித் தாத்தா ஒரு சிறந்த சோதிடர் என்று குடும்பத்தில் சொல்லிக்கொள்வார்கள். எனது பெரியம்மாவை நன்றாக ஜாதகம் கணித்துக் கல்யாணம் செய்துவைத்தார். 20 வயதில் பெரியம்மா தன் கணவனை இழந்தார்.

இன்று இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், சோதிடத்தை நம்பாதவர்களைவிட, நம்புகிறவர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். குருப்பெயர்ச்சிப் புத்தகங்கள் இட்லி, வடையைவிட அதிகம் விற்பனையாகின்றன. செவ்வாய்தோஷம் என்று அவர்கள் ஜாதகம் சொல்வதால், பல அழகிய பெண்களும் வசீகரமான ஆண்களும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் காலம்தள்ளுகிறார்கள். சோதிடர்கள் பரிகாரம் உண்டு என்று உறுதியளித்தாலும் மரணத்துக்குப் பரிகாரம் உண்டு என்பதை மறுதரப்பினர் நம்பத் தயாராக இல்லை.

ஐந்து கேள்விகள்

சோதிடத்தை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள். அது மனம் சார்ந்தது. ஆனால், சோதிடம் அறிவியலின் ஓர் அங்கமா? பல சோதிடர்கள் ஆம் என்கிறார்கள். அதற்கு அவர்களில் பலர் ஐந்து காரணங்களைத் தருகிறார்கள் என்று புகழ்பெற்ற விஞ்ஞானி நர்லிகர் சொல்கிறார்.

1. வானவியலைப் போலவே சோதிடமும் கோள்களை ஆதாரமாகக் கொண்டது. வானவியல், அறிவியலின் அங்கமாக இருக்கும்போது சோதிடம் ஏன் இருக்கக் கூடாது?

2. சில சோதிடர்களின் கணிப்பு துல்லியமாக இருக்கிறது என்பது உலகறிந்த ஒன்று. எனவே, அவர்களது சோதிடத்தையாவது அறிவியல் என்று ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?

3. வானிலை மற்றும் மருத்துவத் துறையை எடுத்துக்கொள்வோம். வானிலை அறிவிப்புகள் பொய்த்துப்போகின்றன. மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் போகிறது. இவற்றை அறிவியலின் அங்கமாக எடுத்துக்கொள்ளும்போது, சோதிடத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?

4.சோதிடத்தைச் சரியாகப் படிக்காதவர்கள் சொல்வதுதான் பொய்த்துப்போகிறது. நன்றாகப் படித்தவர்கள் சொல்வது பொய்க்காது. அவர்கள் சொல்வதையாவது அறிவியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். போலிகளை வைத்துக்கொண்டு, இந்தத் துறையையே குறைசொல்ல முடியாது.

5. அறிவியலுக்குக் கொடிபிடிப்பவர்கள் சோதிடத்தைப் படிக்காமலும் சோதனைக்குள்ளாக்காமலும் அகந்தை யோடு அதைப் புறந்தள்ளுகிறார்கள்.

அறிவியல் என்றால் என்ன?

அறிவியலைப் பொறுத்தவரையில், அதன் எந்த ஒரு முடிவும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒருவர் சோதனைசெய்து அடைந்த அதே முடிவை, அதே சோதனையைச் செய்த அனைவரும் அடைய வேண்டும். "எனக்குத்தான் சரியாக வரும்; உங்களுக்கு வராது" என்று எந்த விஞ்ஞானியும் சொல்ல முடியாது. ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் பிசுபிசுத்துப்போனதன் முக்கியக் காரணம் இதுதான். அறிவியல் சோதனைகளும் கண்டதறிதல்களும் புள்ளியியல் முறைப்படி விளக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும். இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும் அறிவியல் நாள்தோறும் நுண்ணிய மாறுதல்களை அடைந்துகொண்டே இருக்கிறது. நியூட்டனின் விதிகள் ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தால் மாறுதல்களை அடைந்தன என்பது நாம் அறிந்ததே.

ஐந்து பதில்கள்

இனி பதில்களுக்கு வருவோம்.

1.அறிவியல் கடும் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது. அதனால், மாறுதல்களையும் அடைந்திருக்கிறது. உதாரணமாக, புளூட்டோ என்ற 'முன்னாள்' கோள், இன்று கோளாக அடையாளம் காணப்படுவது இல்லை. சோதிடம் இதே போன்று சோதனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முடியுமா? அதற்கென்று தனிப்பட்ட விதிகள் ஏதாவது இருக்கின்றனவா? கணிப்புகள் பொய்யானால் தத்துவம் பொய்யானது என்று ஏற்றுக்கொள்ளப்படுமா? இவற்றுக்கெல்லாம் பதில், 'இல்லை' என்றுதான் வரும்.

2.கார்ல் பாப்பர் என்ற அறிஞர் கூறியதுபோல் எந்த அறிவியல் கொள்கையும் ஒரே ஒரு தடவை உண்மையற்றது என்று நிரூபிக்கப்பட்டால், அந்தக் கொள்கையே உண்மையற்றதாக ஆகிவிடும். உதாரணமாக, நியூட்டனின் விதிகளின்படிதான் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்குக் குறித்த நேரத்தில் வந்தடைகிறது. ஒரே ஒரு நாள் அது எழும்பூருக்குப் பதிலாக திருவனந்தபுரம் சென்றால் விதிகள் பொய்த்துவிடும். மாறாக, சோதிடத்தில் பலிப்பதைவிட பொய்ப்பதுதான் அதிகம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள். யார் சொல்வதை உண்மை என்று எடுத்துக்கொள்வது? சோதிடத்துக்கான பாடப் புத்தகங்களை எப்படித் தயாரிப்பது?

3.வானிலை அறிவிப்புகளிலும் மருத்துவத்திலும் பிழைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை அறிவியல் முறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றின் முடிவுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே, இன்று ஏறத்தாழ, அல்லது துல்லியமாக வானிலையைக் கணிக்க முடிகிறது; நோயின் தன்மையை அறிய முடிகிறது. சிகிச்சை முறைகள் சீர்படுத்தப்படுகின்றன. இதுபோன்று சோதிடத்தில் நடக்கிறதா?

4. உங்களில் யாருக்காவது சொன்னவை 'அனைத்தும்' பொய்க்காத சோதிடரைத் தெரியுமா? அல்லது சொன்னவை ஏன் பொய்த்தன என்பதை அறிவியல் முறைப்படி விளக்க முடியுமா?

5.சோதிடத்தை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளின் நூல்கள் பல உள்ளன. இவற்றில் ஒன்றுகூட சோதிடத்துக்குச் சாதகமான தீர்ப்பைத் தரவில்லை.

பார்னம் விளைவு

உளவியலில் பார்னம் விளைவு என்ற அம்சம் ஒன்று உண்டு. பார்னம் சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம், அதன் விதவிதமான ஆட்டங்கள் பலதரப்பட்ட மக்களுக்குப் பிடித்திருப்பதுதான். எல்லோருக்கும் எல்லாமும் பிடித்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனாலும், ஒன்றிரண்டு ஆட்டங்கள் பிடித்திருப்பதால் சர்க்கஸ் முழுவதும் பிடித்திருக்கிறது. இதே போன்று பல கணிப்புகள் சொல்லப்பட்டாலும், பலித்திருக்கும் கணிப்பை மட்டும் மனம் நினைவில்கொள்கிறது.

நம்பிக்கை சார்ந்த எதையும் மக்களுக்குத் தர்க்கரீதியாகப் புரியவைப்பது கடினம். சோதிடம் நம்பிக்கையைச் சார்ந்தது.

பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com



Sent from my iPad

சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்ச் 4 ல் TRB. PG /TET 2012 relaxation 5% MARKS வழக்குகள்

சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்ச் 4 ல் TRB. PG /TET 2012 relaxation 5% MARKS வழக்குகள்

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS 12 writs

2.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL-3 writs

3. EQUALENCE

4 WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014
REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

5..WRIT PETITIONS RELATING TO SECONDARY GRADE ASSISTANT/ B.T. ASSISTANT/

நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்

NEWS UPDATE TODAY( 03.03.2014 )TRB PG வழக்குகள்சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG வழக்குகள் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணிக்காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG வழக்குகள் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணிக்காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

TNPSC துறை தேர்வுகள் மே -2014 அறிவிப்பு. விண்ணபிக்க இறுதி தேதி -31.03.2014

TNPSC துறை தேர்வுகள் மே -2014 அறிவிப்பு. விண்ணபிக்க இறுதி தேதி -31.03.2014


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
DEPARTMENTAL EXAMINATIONS – MAY 2014 NOTIFICATION
Applications are invited from candidates THROUGH "ONLINE" ONLY for
admission to the Departmental Examinations to be held in May-2014 (Application
Forms will not be supplied by the Commission)

Name of the Examination: Departmental Examination - May 2014
Date of Notification. : 01.03.2014
Date & time of closing : 31.03.2014 5.45 PM
Date of Examination. : 24.05.2014 to 31.05.2014

லேப் டாப்கள் திருட்டு: பள்ளிகல்வி துறையின் உத்தரவை தலைமை ஆசிரியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்

லேப் டாப்கள் திருட்டு: பள்ளிகல்வி துறையின் உத்தரவை தலைமை ஆசிரியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ம் தேதிகாலை சுமார் 4.30 மணியளவில் 53 லேப் டாப்கள் திருடபட் டிருந்தது.இது தொடர்பாக அன்றையதினமே அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ் .அம்சவேணி கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் பிப்ரவரி 12ம் தேதி திருடப்பட்ட லேப் டாப் களுக்கு ரூ 8,47,470 கட்ட வேண்டும் என பள்ளி கல்வி துறையிடமிருந்து தலைமை ஆசிரியைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.தலைமை ஆசிரியை சில மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள தால் பள்ளிகல்வி துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார் .

157 ஆண்டுக்கு முந்தைய ஆங்கிலேயர் கொடுமை அம்பலம்

பஞ்சாபில், பிரிட்டீஷ்ஆட்சியின் போது, கிணற்றில்தள்ளி படுகொலை செய்யப்பட்ட இந்திய
வீரர்கள், 100 பேர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆங்கிலேயேர்களுக்கு எதிராக, 1857ல்,நாடு முழுவதும், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில்இருந்த நம் வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களில், 'பெங்கால் நேட்டிவ் இன்பேன்ட்ரி' என்ற,ராணுவ படைப்பிரிவில் இருந்த, நம் வீரர்கள் பலர்,ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டில், அமிர்தசரஸ் பகுதியை நிர்வாகம் செய்த ஆங்கிலேய அதிகாரிகளான துணை கமிஷனர், பிரடெரிக் ஹென்சி கூப்பர் மற்றும் ராணுவ அதிகாரி, கர்னல்,ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் ஆகியோர், இந்திய வீரர்கள் ஏராளமானோரை கொடூரமான முறையில் கொன்றனர்.
கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், அவர்கள் கையில் சிக்கிய, வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 150வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர், கை, கால்களை கட்டி, ஆற்றில் வீசப்பட்டனர்.283 வீரர்கள், கைகளை கட்டி, அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னாலா என்ற நகருக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை, அங்கிருந்த பாழுங்கிணற்றில் தள்ளி, 10 அடி உயரத்திற்கு மண்ணை போட்டு மூடிவிட்டனர், வெள்ளைக்கார அதிகாரிகள்.
இந்த தகவலை சமீபத்தில்தான், அப்பகுதி வரலாற்று ஆசிரியர், சுரிந்தர் கோச்சார் என்பவர் கண்டறிந்தார்.அப்பகுதியில் உள்ள, குருத்வாரா ஷாஹீத் குஞ்ச் நிர்வாக குழுவின் ஆதரவுடன், அந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு நாட்களாக தோண்டப்பட்டது. அப்போது, 100 பேரின் மண்டை ஓடுகள், தாடை எலும்புகள், தொடை எலும்புகள், ஆயுதங்கள், வீரர்கள் அணிந்திருந்த தங்க,வெள்ளி ஆபரணங்கள், வைத்திருந்த நாணயம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

100 சதவீத, இ-கல்வியறிவு: கேரள மாநில பள்ளிச்சால் தேர்வாகியுள்ளது

கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள, பள்ளிச்சால்
பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின், முதல், 100 சதவீத, "இ-கல்வியறிவு' கிராமமாக
தேர்வாகியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது,
இணைய தளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற
கல்வியறிவை பெற்றுள்ளனர். இதன் மூலம், இந்த கிராமம் தான், நம் நாட்டிலேயே, முதல், 100சதவீத, இ-கல்வியறிவு கிராமமாக தேர்வாகியுள்ளதாக, மாநில, காங்கிரஸ் முதல்வர், உம்மன் சாண்டி, நேற்று அறிவித்தார். பிற கிராமங்களுக்கும் இந்த கல்விமுறையை பரவலாக்க உள்ளதாகவும் அவர்
கூறினார்.

பிளஸ்–2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு தேர்வு முடியும் வரை தடையில்லா மின்சாரம் வினியோகம்

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிரொலியாக மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு தேர்வு முடியும் வரை தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி 25–ந்தேதி வரை நடக்கிறது. அதேபோல் 10–ம் வகுப்பு தேர்வு வரும் 26– ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி நிறைவடைகிறது. இதனால் தேர்வு நடக்கும் மையங்களுக்கு பொதுத்தேர்வு முடிவடையும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சாரவாரியத்திற்கு கல்வித்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தலைமை பொறியாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:– கனிவுடன் பதில் கல்வித்துறை கோரிக்கையை ஏற்று பள்ளிகளில் பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கவிருப்பதால் இன்று முதல் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்கள் இருக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்தப்பகுதிகளுக்கு தேர்வு முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் குடியிருப்பு பகுதிகளுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுவதால் மாணவர்களுக்கு படிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்தடை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் துணை மின்நிலையங்களில் மின்தடை ஏற்படும்போது, பொதுமக்கள் அதுகுறித்து விளக்கம் கேட்டால், பொறுமையாகவும், கனிவுடன் பதில் அளிக்க வேண்டும். தேவையற்ற முறையில் பதில் அளிப்பது, மின்சார அலுவலக தொலைபேசிகளை எடுத்து பேசாமல் இருப்பது போன்ற விரும்பதகாத நிகழ்வுகள் இனி நடக்க கூடாது. அவ்வாறு நடப்பது குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


Sent from my iPad

பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை

பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :தேர்வுத்துறை அறிவுரை

பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது செய்யக்கூடிவை பற்றியும் செய்யக்கூடாதவை பற்றியும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:–

செய்யக்கூடியவை பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள், மாணவிகள் செய்யக்கூடியவை வருமாறு:–
* விடைத்தாள் முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிடவேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுதவேண்டும்.
* விடைத்தாளின் இருபுறங்களிலும் எழுதுவது அவசியம்.
* 'ரப்' வேலைகள் அனைத்தும் விடைத்தாளின் பகுதியில் இடம்பெறவேண்டும்.
* வினா எண் தவறாமல் குறிப்பிடவும்.
* இரு விடைகளுக்கும் இடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.
* வினாத்தாளின் வரிசை ஏ அல்லது பி எழுதவேண்டும்.
* விடைத்தாளில் நீலம் அல்லது கறுப்பு மை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுதவேண்டும்.
* விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இடவேண்டியது அவசியம்.

மாணவர்கள் செய்யக்கூடாதவை வருமாறு:–
* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயர் ஆகியவற்றை எழுதக்கூடாது
* விடைத்தாள்கோட்டின் இடது பக்கத்தில் எழுதக்கூடாது.
* வண்ணக்கலர் கொண்ட பேனா, வண்ணக்கலர் கொண்ட பென்சில் எதையும் பயன்படுத்தக்கூடாது.
* விடைத்தாளின் எந்த பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Sent from my iPad

ஞாயிறு, 2 மார்ச், 2014

வெல்க மாணவர்களே..

1 தேர்வுக்கு முந்தைய நாள் சீக்கிரமே தூங்குங்கள். குறைந்தது ஆறுமணி நேர தூக்கம்
அவசியம். காலையில் வழக்கமான நேரத்தில் எழும்புங்கள். உடல் உற்சாகமாய் இருக்க
வேண்டியது தேர்வு காலத்தின் முக்கியத் தேவை.

2. அரக்கப் பரக்க வியர்க்க விறுவிறுக்க தேர்வுக் கூடத்தை அடைந்தால் நீங்கள் படித்தவையும்மறந்து போகும். எனவே ஒரு அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வுக் கூடத்தை அடையும்படி திட்டமிடுங்கள். லேட்டாகக் கிளம்பி, ஆட்டோக்காரரைத் திட்டி, டிராபிக்கை சபித்து,டென்ஷனாகி படித்ததை கோட்டை விடாதீர்கள்.

3 ரொம்ப அடிப்படையான விஷயம். இருந்தாலும் சொல்கிறேன். ஹால்டிக்கெட், சில
பென்சில்கள், சில பென்கள், ரப்பர் போன்றவற்றைத் தனியே ஒரு பாக்ஸில் போட்டு வையுங்கள்.அதை தேர்வுக்கு முந்திய நாளே தயாராய் வைத்திருங்கள். ! நீங்கள் வகுப்பறையில்பயன்படுத்தும் பேனாவையே பயன்படுத்துங்கள். புதுப் பேனாக்கள் சும்மா வைத்திருங்கள்,தேவைப்பட்டால் பயன்படுத்த !
4.தேர்வுத்தாளில் கேள்விகள் எந்தெந்த வகையில் வரும் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள்.உதாரணமாக, ஒரு வரிக் கேள்விகள் எத்தனை, பெரிய கேள்விகள் எத்தனை என்பது போல.மாதிரி வினாத்தாள்கள் இந்த விஷயத்தில் உங்களுக்குப் பேருதவியாய் இருக்கும். எனவே அவற்றை ஒருமுறை புரட்டிப் பாருங்கள்.

5. தேர்வு அறைக்குள் நுழையும் போதும், அதற்கு முன்பும் மற்றவர்கள் என்ன
படித்திருக்கிறார்கள், என்ன படித்துக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்
சேகரிப்பது சிலருடைய வழக்கம். அது உங்களைக் குழப்பும். அடுத்தவர்கள் படித்ததும்,
படிக்காததும் உங்களுடைய தேர்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அந்த
சிந்தனையே இல்லாமல் நீங்கள் படித்ததை மட்டும் நினைவில் வைத்திருங்கள் !

6. கேள்விகளை நன்றாக வாசிக்க வேண்டும் என்பது பாலபாடம். உங்களைக்
குழப்பவேண்டுமென்றே கேள்விகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்க
வாய்ப்பு நிறையவே உண்டு.எனவே கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை வாசித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

7. தேர்வு எழுதும்போது கூட உங்களுடைய கவனம் எல்லாம் உங்கள் கேள்வித் தாளிலும்,
விடைத்தாளிலும் மட்டுமே இருக்கட்டும். பக்கத்து இருக்கைக்காரன் இரண்டாவது பக்கம்
எழுதிவிட்டானே, ஏதோ படம் வரைகிறானே என பதட்டப் படாதீர்கள்.

8. தேர்வுத் தாளைத் திருத்துபவரை ஒரு முறை மனதில் நிறுத்துங்கள். முதல் கோணல் முற்றும் கோணலாகலாம். எனவே நன்றாகத் தெரிந்த விடையை முதலில் எழுதுவது சிறப்பானது.தெளிவாய் வினா எண்களோடு விடைகளை எழுதுவது, முக்கியமான பாயின்ட்களைக்கோடிடுவது, தேவையான இடங்களில் படங்கள் போடுவது எனும் ஆசிரியரின்
அறிவுரைகள் இங்கே நினைவில் இருக்கட்டும்.

9.ஒரு நேரத்தில் ஒரு தேர்வு ! ஒரு தேர்வுக்குத் தயாராகும் போதோ, தேர்வு எழுதும்
போதோ, அடுத்த தேர்வைக் குறித்த சிந்தனையில் இறங்காதீர்கள். அடுத்த
தேர்வு எவ்வளவு கடினமாய் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்த
சிந்தனையில் மூழ்கி இந்த தேர்வையும் வீணடிக்க வேண்டாம்.

10. தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு அறையை விட்டு வெளியே வராதீர்கள்.
எழுதி முடித்தபின் நேரம் கிடைத்தால் எழுதியதை மறுபடி ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.
உங்கள் விடைகளின் தரமும், மெருகும் கூடும் !

11. தேர்வு முடிந்தபின் அந்த தேர்வைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். கேள்வித் தாள்களையும்
புத்தகத்தையும் புரட்டிப் புரட்டி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். அது அடுத்த
தேர்வுக்கான தயாரிப்புகளைத் தாமதப்படுத்தும். உங்களை அழுத்தத்திலும் தள்ளிவிடலாம்.
எல்லா தேர்வுகளும் முடிந்தபின் ஆர அமர உட்கார்ந்து கூட்டிக் கழித்துப் பாருங்கள்.
தப்பில்லை !

வெல்க மாணவர்களே..


Sent from my iPad

மனிதநேயம்.....

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

'முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு' (100 பேர் வரை), 'பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்', 'வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்', '1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு' இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், "பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்" பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. "பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது" என்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் 'வாடி நிற்கும்' நாகராஜ்.

‘நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் மோதட்டும்’

'நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் மோதட்டும்'
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. இன்றுவரை தமிழர்களின் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்பட்டுவருகிறது. இன்றும்கூட அதில் கூறப்பட்டுள்ள ஊர்கள், நதிகள் எங்குள்ளன என்பதுபற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்க இளைஞர் ஒருவர் கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து பிழைப்புத் தேடி மதுரைக்குச் சென்ற வழியை அடையாளம் கண்டு, அதே வழியில் தானும் பயணித்து எழுதிய அனுபவக் கட்டுரை ஒன்று வெளியானது.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி சிலப்பதிகாரக் கதைநாயகி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது. தலைவிரி கோலத்துடன் கையில் சிலம்பேந்தி 'சான்றோரும் உண்டுகொல்' என்று மதுரை வீதிகளில் ஆவேசத்துடன் கேட்பதுபோல் நிறுவப்பட்ட அந்தச் சிலை திடீரென்று அகற்றப்பட்டது. மக்கள் எதிர்ப்புக்குப் பின் அந்தச் சிலை மீண்டும் அங்கே நிறுவப்பட்டது. எந்தக் காரணத்துக்காக அந்தச் சிலை அகற்றப்பட்டது என்று இன்றுவரை எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இலக்கியங்கள் மிஞ்சாது

20-ம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட அந்தச் சிலையையொட்டி எழுந்த பிரச்சினைகள் போதாதென்று, இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தையே பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற குரல்களும் எழுப்பப்பட்டுவருகின்றன. சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்ட-கொலைக்களக் காதையில் 'காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன்' என்றொரு வரியுண்டு. பொற்கொல்லர் சாதியினரை அவமானப்படுத்துவதாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள், அந்தக் காவியத்தைப் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கக் கோருகின்றனர்.

சிலப்பதிகாரத்தில், கோவலனிடம் இருந்த சிலம்பு திருடப்பட்டது என்று அவனுக்கு மரண தண்டனை அளித்த பாண்டிய மன்னனிடம் கண்ணகி முறையிட்ட பின், தனது தவறை உணர்ந்து மன்னன் உயிரைவிட்டதாகவும் ஆனால், பொற்கொல்லர்கள் பழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கதையையொட்டிய கூற்றாக அதைப் புரிந்துகொள்ளாமல், சமூகத்தையே பழிப்பதாகக் கருதி பள்ளிப் பாடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது சரியல்ல. குறிப்பிட்ட தொழிலைச் செய்யக்கூடியவர்களையே தனி சாதியாகக் கருதுவதனால் வரக்கூடிய ஆபத்தையே இந்தச் சம்பவம் விளக்குகிறது. இப்படி ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது சமூகத்தைக் குறிப்பிட்ட இலக்கியம் தவறாகச் சித்தரிக்கிறது என்று போர்க்கொடி தூக்கினால், பின்னர், தமிழில் பழைய இலக்கியம் ஏதும் மிஞ்சாது.

பாடப் புத்தகங்களில் உள்ள தவறான கருத்துகளை அல்லது நச்சுச் சிந்தனைகளை நீக்க நிபுணர் குழுக்களை அரசுகள் அமைப்பதில்லை. அதன் விளைவு, ஒவ்வொரு சிறு குழுவினரும் குறிப்பிட்ட பாடங்களோ அல்லது கருத்துச்சித்திரங்களோ தங்களது சமூகத்தை அவமதிக்கிறது என்று கூறிப் போராட்டங்களில் ஈடுபடுவதும் பின்னர் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதற்காகக் கட்சிகள் ஆதரவுக் குரல் கொடுப்பதும், அதையொட்டி பாடப் புத்தகங்களைப் பரிந்துரைத்த கல்விக் குழு, புத்தகங்களைத் திரும்பப் பெறுவதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

கேலிச்சித்திரம்

சி.பி.எஸ்.இ. வெளியிட்ட பாடப் புத்தகம் ஒன்றில், அரசியல் நிர்ணய சபை என்ற ஆமையின் மீது டாக்டர் அம்பேத்கர் உட்கார்ந்திருப்பதுபோலவும் ஆமையைப் பண்டித நேரு சவுக்கால் அடித்துச் சீக்கிரம் போகச்சொல்வதுபோலவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கரின் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. அம்பேத்கரின் புகழை மங்கச் செய்வதாகக்கூறி ஒரு குழுவினர் போராட்டம் நடத்தவே, அந்தக் கேலிச்சித்திரம் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தை எழுதப் பணிக்கப்பட்ட தலைமைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் ஒருவரால் மட்டுமே அந்தச் சட்டத்தை எழுதியிருக்க முடியாது. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தாய்ச் சட்டத்தை வரிவரியாக அரசியல் நிர்ணய சபை விவாதித்து, பின்னர் ஓட்டெடுப்பின் மூலம்தான் இறுதி வடிவம் பெற்றது என்பது யாவரும் அறிந்ததே. பல மொழி, பல சமயங்கள் உள்ள இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டுக்கான அரசமைப்புச் சட்டம் மந்திரத்தில் விளைந்திருக்க முடியாது.

1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய குடியரசுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதில் மக்களுக்கு ஏற்பட்ட சோர்வினைப் பண்டித நேரு பிரதிபலிப்பதாகவே கேலிச்சித்திரத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களை அச்சடித்த வரிவடிவமாக மனப்பாடம் செய்யாமல், கேலிச்சித்திரங்கள் மூலம் மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டினால், பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் நல்ல கருத்தைப் பதிவுசெய்ய முடியும்.

வரவேற்பும் அலைக்கழிப்பும்

சி.பி.எஸ்.இ. தயாரித்த சமூகவியல் பாடத்தில், இந்தியாவின் பலதரப்பட்ட மக்களைப் பற்றி கூறும் வகையிலிருந்த நாடார் இனத்து மக்களைப் பற்றிய பாடக் குறிப்பு அந்த மக்களை அவமதிக்கிறது என்று நாடார் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர். பணிந்து/பயந்துபோன கல்வி அதிகாரிகள், அந்தப் பாடத்தைப் புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டனர். அந்தப் பாடக் குறிப்பை எழுதிய கல்வி நிபுணர், அந்தக் குறிப்பைத் தயார்செய்ய அமெரிக்க அறிஞர் ஹார்டு கிரேவ் ஜூனியர் எழுதிய புத்தகத்திலிருந்து ஆதாரமாகத் திரட்டியதாகச் சமாதானம் கூறினார். அந்தப் புத்தகம் முதன்முறையாக எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட, பொருளாதார சமூகமாக இருந்த நாடார் சமுதாயம் தனது கடுமையான முயற்சிகளால் ஒரு வலிமை வாய்ந்த சமூகமாக மாறிய அதன் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிகளை வெளிப்படுத்தியது. அந்தப் புத்தகம் வெளியானபோது, அந்தச் சமூகத்தின் பெருமக்கள் பலர் அதை வாங்கித் தங்களது வரவேற்பறையில் பெருமையாக வைத்திருந்தனர். ஆனால், அப்படிப்பட்ட கருத்துகளைக் கூறிய பாடக் குறிப்பை மட்டும் நீக்கக் கோரிப் போராடியதும் அந்தச் சமூகத்தின் இரு நூற்றாண்டுக்கான சரித்திர வரலாற்றை மாணவர்களிடம் புரியவைப்பதில் தவறென்ன என்றும் புரியவில்லை.

அதே வரிசையில் சென்னைப் பல்கலைக்கழகம்

கல்விக்கான ஏடுகளைத் தணிக்கைக்கு உட்படுத்தி, இருட்டடிப்பு செய்வது பள்ளிக்கூடங்களில் மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களிலும் அதிகரித்துள்ளது. கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதைகளுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்னால் தடை விதித்தது. அதன் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது வேதனைக்கு உரியது. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் இரண்டு தற்போது பலியிடப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் ஆளுமையும் ஆக்கங்களும்பற்றி எழுதிய சுந்தர ராமசாமி இவ்வாறு கூறுகிறார் :-

"புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்பு களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவரைப் பற்றி ஒரு முழுமையான விமர் சனத்தை உருவாக்கியவர் க.நா. சுப்ரமண்யம். கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பது போல, தமிழில் இந்த நூற்றாண்டில் வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்துக்கு இட மில்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம்'' என்கிறார்.

புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' என்ற சிறுகதையைப் பாடமாக வைத்தால், "இந்தக் கதைகள் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். ஒற்றுமையாக இருக்க வேண்டிய

வகுப்பறைச் சூழலை இது சீர்குலைக்கும்" என்று யாழன் ஆதியும், "குற்றமுள்ள கதைகளை ஆதிக்கச் சிந்தனைதான் இலக்கியமாகப் பார்க்கும்" என்று சத்தியச்சந்திரனும் எழுதியுள்ளனர். பாடப் புத்தகத்திலிருந்து அந்தக் கதையை அகற்றக்கோரி இரண்டாமவர் போட்ட வழக்கு முடியும் முன்னரே சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் இரு கதைகளைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டது. இதைக் கண்டித்துப் பல தமிழறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தலித் சிந்தனையாளர் ரவிக்குமார் விடுத்த எதிர்ப்புக் குரல் வரவேற்கத்தக்கது.

இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட காலம், சூழ்நிலை, இலக்கியவாதியின் கருத்துச் சுதந்திரத்தைக் கருதாமல் விடுக்கப்படும் எதிர்வினைகள் ஆரோக்கியமானதல்ல.

ஒருவேளை… புத்தகங்கள் சொல்லும் கருத்து தவறானதாகவே இருந்தாலும்கூட, அந்தக் கருத்துகளை எதிர்க் கருத்துகளின் மூலம்தான் வெல்ல முடியுமெயொழிய நீதிமன்ற உத்தரவுகளாலும், சிறு குழுக்களின் அதிகார ஆணைகளாலும் முறியடிக்க முடியாது. வெண்டி டோனிகரின்

புத்தகத்தை 'பெங்குயின்' பதிப்பகம் திரும்பப் பெற்றாலும், அந்தப் புத்தகம் இன்று வலைத்தளங்களின் மூலம் உலகெங்கிலும் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளது என்னும் செய்தி யாவருக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும். 'நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் மோதட்டும்' என்பதே நமது லட்சியமாகட்டும்.​

- சந்துரு, ஓய்வு பெற்ற நீதிபதி, சமூக விமர்சகர்
The Hindu


Sent from my iPad

தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் : பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் : பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும்.

தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட விவரங்கள்
தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் நடந்தால், அதற்கு, பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால்,சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும் என இயக்குனர் தெரிவித்தார்

தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும், கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.விடைத்தாள் கட்டுகளை, அஞ்சல் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், கார்கள்மூலமாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தடையற்ற மின்சாரம்தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்க, மின்சார வாரியம் மூலம், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனினும், ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ளவும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

"பிட்' வைத்திருத்தல், "பிட்'டை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல்,
தேர்வு அதிகாரிகளிடம், முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடுமையான குற்றங்களாகும்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் அடிப்படையில், உரிய தண்டனை
வழங்கப்படும்.கடந்த தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 397 மாணவர்கள், தண்டனை பெற்றுள்ளனர். எனவே,.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

"பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும்.

"பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே, முதல் வாரத்தில்,
தேர்வு முடிவு வெளியாகும்'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்

பிளஸ் 2 தேர்வு நாளை ஆரம்பம் : 8.26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்குகிறது. 8.26 லட்சம் மாணவர்கள்பங்கேற்கும் தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்,தேர்வுத் துறை, முழுவீச்சில் செய்து முடித்து, தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில், 5,884மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 8.12 லட்சம் மாணவர்கள், 2,210 மையங்களில்,தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 3 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர்; மாணவியர், 4லட்சத்து 38 ஆயிரத்து 392 பேர்.
புதுச்சேரி மாநிலத்தில், 120 பள்ளிகளில் இருந்து, 13 ஆயிரத்து, 528 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 6,091 பேர் மாணவர்; 7,437 பேர் மாணவியர். 32மையங்களில் தேர்வு நடக்கின்றன. தமிழகம், புதுச்சேரி இரண்டிலும் சேர்த்து, 8.26 லட்சம் மாணவர்கள்,
தேர்வை எழுதுகின்றனர். 2,242 மையங்களில், தேர்வு நடக்கின்றன. கடந்த ஆண்டை விட, மாணவர், 8,838 பேரும்,மாணவியர், 17,766 பேரும், கூடுதலாக எழுதுகின்றனர்.

பள்ளி மாணவர்களுடன், தனித் தேர்வு மாணவர்கள், 53,629 பேரும்,தேர்வை எழுதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சிறைவாசிகள், சிறையிலேயே தேர்வெழுத,
அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு, சென்னை, புழல் சிறையில், 58 பேர், பிளஸ் 2தேர்வை, தனித் தேர்வாக எழுதுகின்றனர். சிறப்பு மாணவர் நரம்பு சம்பந்தமான குறைபாடு உள்ள மாணவர், காது கேளாதோர், பார்வையற்றோர், பேசமுடியாதோர் மற்றும் இதர உடல் குறைபாடு உடைய மாணவ, மாணவியர், 1,000 பேர், தேர்வை எழுதுகின்றனர்.

.பறக்கும் படை : மாநிலம் முழுவதும், 4,000 உறுப்பினர்கள் அடங்கிய, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அடங்கிய ஒரு குழுவும், கணிதம், அறிவியல் போன்ற, முக்கிய பாடத் தேர்வுகளின்போது, அண்ணா பல்கலை ஆசிரியர் அடங்கிய குழு, மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழு உட்பட, பல்வேறு பறக்கும் படை குழுக்களும், தேர்வு மையங்களை பார்வையிட உள்ளன.
இயக்குனர் பேட்டி : தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறியதாவது: அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையங்களுக்கு, வினாத்தாளை, பாதுகாப்பாக கொண்டு செல்லவும், தேர்வு முடிந்த பின், விடைத்தாள் கட்டுகளை, குறிப்பிட்ட மையத்திற்கு கொண்டு செல்லவும், வாடகை கார்கள் மூலம், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட, அனைத்து அடிப்படை வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வை, எவ்வித புகாருக்கும் இடமின்றி,சுமுகமாக நடத்துவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு, தேவராஜன் கூறினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால்,உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு

ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால்,
உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு உருவாகியுள்ளது.

இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த
பள்ளி நிர்வாகத்தினர், தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, ஆசிரியர்
பணியிடங்களை விலைபேசி வருகின்றன. ஆசிரியர் பணி : தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம், 2010 ஆகஸ்ட் முதல்அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்தும்பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்மட்டுமே நியமிக்க முடியும்.

இதன் அடிப்படையில், 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வு நடைபெற்றது.
ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வெழுதினாலும், 20 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே, உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக நியமிக்க வேண்டும்என்பதால், காலியாக இருந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் பணி கிடைத்ததால், உதவி பெறும் பள்ளி களில்வேலைவாய்ப்பை பெற யாரும் ஆர்வம் காட்டவில்லை.

47 ஆயிரம் பேர் தேர்ச்சி : பெரும்பாலான உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர் பணியிடங்களுக்கு,ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில்,ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க முடியாமல், இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்தன. கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வு முடிவில், 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனத்துக்கு தயாராகும் நிலையில், தமிழக
அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால், கூடுதலாக, 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஆனால், அரசு பள்ளிகளில் அதிக பட்சம், 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பமுடியும் என்பதால், மீதமுள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நடப்பு ஆண்டில் அரசு பணி கிடைக்கவாய்ப்பில்லை.

அதே போல், அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்வு நடத்தி, அதன் பின் கிடைக்கும் வெயிட்டேஜ்
மதிப்பெண் முன்னுரிமையில், பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலை கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இவர்களின் பார்வை, தற்போது உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகம் அடைந்து உள்ளன. ஆசிரியர் பணியிடங்களுக்கு நிர்ணயித்திருந்த, "விலை'யையும், உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கிடைக்காமல், உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. தற்போது, அளவுக்கதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டாத, பலபள்ளி நிர்வாகத்தினர், தற்போது அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றன. அதே போல், ஒரு ஆசிரியர்பணியிடம் நிரப்ப, பல லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, தற்போதே புகாரும்
வரத்துவங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Sent from my iPad

சனி, 1 மார்ச், 2014

PAPER II 5% RELAXATION SOME MORE DETAILS

COMMUNITY WISE PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)

COMMUNITY PASS %

BC 13371 ( 53.09%)
BCM 481 (1.91%)
MBC 6729 (26.72%)
SC 4058 ( 16.11%)
SCA 458 (1.81%)
ST 80 ( 0.31%)

TOTAL = 25,187
-----------------------------------------------------------------------------------------------------------------

PH - DETAILS IN (82-89) PASSED CANDIDATES

PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)

visually impaired (VI)

BC-49
BCM-2
MBC-25
SC-14
SCA-1
ST- NIL
OC- 2

TOTAL - 93

Ortho (O)

BC-152
BCM-4
MBC-96
SC-36
SCA -4
ST-1
OC- 8

TOTAL - 301

Grand Total

BC-201
BCM-6
MBC-121
SC-50
SCA-5
ST-1
OC-10

TOTAL - 394


TOTAL 394/25187 = 1.56%


Sent from my iPad

"டிட்டோஜாக்': மார்ச் 6ல் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்'.

மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாகஅறிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், பிப்., 25, 26 ல் போராட்டம்நடத்தினர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, "டிட்டோஜாக்' அமைப்பினரும், மார்ச் 6ல், போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களை (டிட்டோஜாக்) சேர்ந்த, ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் முருகன் கூறுகையில், ""மதுரை மாவட்டத்தில் 3,000 ஆசிரியர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எங்கள் கோரிக்கை குறித்து, கல்வி அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டவில்லை. இதனால்,வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது கல்வித் துறை எடுத்த நடவடிக்கைகளையும் வாபஸ்பெற வேண்டும்,'' என்றார்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு மின்தடை விலக்கு

கடந்தாண்டு கடுமையான மின்தடைகாரணமாக, பொதுத்தேர்வு மையங்களில், ஜெனரேட்டர்கள் பயன்படுத்த பட்டன. மார்ச் 3ல்பிளஸ் 2, மார்ச் 26ல் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளநிலையில், மின்உற்பத்தி குறைந்ததால், சில நாட்களாக,சராசரியாக தினமும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.இதுமேலும் அதிகரிக்கவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், முதன்மைக்கல்விஅதிகாரிகள் மூலம், மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி கூறுகையில்," தேர்வுத்துறை இயக்குனர் ஆலோசனைப்படி, பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கால அட்டவணை, தேர்வு மைய விபரங்கள் குறித்து, அக்கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டு,தேர்வுநேரத்தில்,அம் மையங்களுக்கு, மின் தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே,இம்முறை, மின்தடை பிரச்னை இருக்காது என நம்புகிறோம். எனினும், மையங்களில், ஜெனரேட்டரையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,என்றார்.

பள்ளிக் கல்வி இயக்குனர் அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு

,பள்ளிக் கல்வி இயக்குனர் அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி,ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர்.
மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, வரும், 6ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம்செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், முதல்வரின், ஸ்ரீரங்கம் தொகுதி யில், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல், வேறு சில சங்கத்தினரும், போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால், தமிழக அரசின் கோபத்திற்கு, தாங்கள் ஆளாக நேரிடும் என்பதால், போராட்டத்தை அடக்குவதற்கான வேலைகளில், கல்வித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.இதற்காக, சங்க நிர்வாகிகள் மீது, பாசமழை பொழிந்து வருகின்றனர். பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று, அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு விடுத்து, அவர்களிடம் நலம் விசாரித்து, பின், அவர்கள் கோரிக்கை குறித்து, பிற்பகல், 2:30 மணி வரை, பேச்சு நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர் சங்கம் என, பல சங்கங்களின்நிர்வாகிகள், தனித்தனியே, இயக்குனரை சந்தித்தனர். அப்போது, "உங்க கோரிக்கை எதுவா இருந்தாலும் சொல்லுங்க;அரசின் கவனத்துக்கு கொண்டு போய், உடனே, தீர்த்து வைச்சுடலாம்' என, ஆரம்பித்து, கோரிக்கை தொடர்பாக,துறை பணியாளர்களை உடனுகுடன் அழைத்து, சங்க நிர்வாகிகள் முன், சீரியசாக விவாதித்தார். இதனால், கோரிக்கைகள் ஏற்கப்பட்டது போன்ற திருப்தியுடன், அலுவலகத்தில் இருந்து, நிர்வாகிகள், நடையை கட்டினர்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்ச் 3ல் TRB. PG வழக்குகள்:நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்

சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG /TET I/TET II உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதன் காரணமாக தமிழ் தவிர்த்த பிற PG பாடங்களுக்கான பணி நியமனம் தள்ளிப்போனது இந்நிலையில் மார்ச் 3 முதல் இவ்வழக்குகளை நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார் ..TRB வழக்குகள் பலவற்ரை விரைந்து விசாரித்து தீர்ப்பு அளித்துள்ள நீதியரசர் தற்போது நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளையும் விரந்து விசாரித்து தீர்ப்பளிப்பார் என தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்

மார்ச் 3 TRB. PG வழக்குகள்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMEN
CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 WP.451/2014 -

2 WP.2200/2014

3. WP.2332/2014

3. WP.1710/2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

CHALLENGING KEY ANSWERS
PG ASSISTANT EXAMS IN TAMIL


1. WP.1187/2014

2. WP.1063/2014

3. WP.1775/2014 -

4 WP.1494/2014

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~