செவ்வாய், 4 மார்ச், 2014

ஆசிரியர் ஸ்டிரைக் :மார்ச் 6ம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மார்ச் 6ம் தேதி, வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்; அன்று,அனைத்து பள்ளிகளும், கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்; தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை,ரத்து செய்ய வேண்டும்; தொடக்கக் கல்வியில், தமிழ் வழி பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்தவேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச் 6ல், மாநிலம் தழுவிய, வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.

ஆனால், மார்ச் 6ம் தேதி, பள்ளிகள் கண்டிப்பாகசெயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. அன்று, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,
அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்றுனர்கள், ஆசிரியர்களாக நியமிக்க, கல்வித் துறை அதிகாரிகள்திட்டமிட்டு உள்ளனர். டிட்டோ ஜேக் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறேன் என,ஒவ்வொரு ஆசிரியர்களிடமும், தனித்தனியாக கையெழுத்து வாங்கியிருக்கிறோம். கையெழுத்து போட்டஆசிரியர்கள் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், சம்பந்தப்பட்ட
ஆசிரியர்கள் விரும்பினாலும், பணிக்கு செல்ல முடியாது. எனவே, 6ம் தேதி, எஸ்.எஸ்.ஏ.,
ஆசிரியர்களை நியமித்தாலும், பெரும்பாலான பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும். இவ்வாறு, அவர்கள்கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக