இத்தாலியில் வாழ்ந்த மேக்லியாபெச்சி (Magliabechi) என்ற நூலகருக்குப் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பற்றிய விபரங்கள் அவரது விரல் நுனியில் இருந்தனவாம். ஆசா க்ரே Asa Gray என்ற அமெரிக்கத் தாவரவியலாளருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் பெயர் மனப்பாடமாகத் தெரியுமாம். அவ்வளவு தூரம் செல்வானேன்? நமது நடிகர் சிவாஜி கணேசன் பக்கம் பக்கமாகச் செந்தமிழ் வசனங்களை மனப்பாடமாகச் சொல்பவர்தானே? இதெல்லாம் சிலருக்கு இறைவன் தந்த கொடை என்று சொல்லி ஒதுங்கிவிடக் கூடாது. அற்புதமான நினைவாற்றல் கொண்டவர்களில் அபூர்வமாக வெகு சிலரைத் தவிர, பலரும் தமது இடைவிடாத பயிற்சி மூலமே இத்திறமையை அடைந்துள்ளனர்.
அவர்களது வாழ்க்கையில் இருந்து நமக்குப் புலனாவது என்ன? அவர்கள் கடமைக்காக மனப்பாடம் செய்யவில்லை. படிப்பதை மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகமாகச் செய்கிறார்கள். 'நமக்குதான் நல்ல நினைவுத்திறன் இருக்கிறதே' என்று அலட்சியமாக இருந்துவிடாமல் கடும் முயற்சியும் பயிற்சியும் செய்கிறார்கள். எனவே, பாடங்களைப் படிக்கும்போது அதை ஒரு சுவாரஸ்யமான பயிற்சியாகச் செய்யத் தொடங்குங்கள். தொடர்ச்சியாகச் செய்யுங்கள். கணினியில் எவ்வளவோ விளையாடுகிறோம். அதுபோல நினைத்துச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக