பிளஸ் 2 பொதுத்தேர்வருக்கான உயிரியல் வினாத்தாளில், நான்கு ஒரு மதிப்பெண்
வினாவும், ஒரு மூன்று மதிப்பெண் வினாவிலும் பிழை இருப்பதால், தேர்வர்கள்
குழப்பத்துக்கு ஆளாகினர். அதனால், உயிரியல் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெறும்
மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
நேற்று முன்தினம், உயிரியல், வணிக கணிதம், வரலாறு, தாவரவியல் பாடங்களுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. அதில், உயிரியல் பாடத்திற்கான வினாத்தாளில், தமிழ்வழி மற்றும்ஆங்கிலவழி வினாக்களில், அச்சுப்பிழைகளும், அர்த்தம் மாறிய வார்த்தைகளும் அதிகமாக இருந்தது. அதனால்,உயிரியல் பாடத்தில் சென்டம் எடுக்கும் மாணவரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. . தமிழ்வழி கற்ற தேர்வர், தமிழில் உள்ள வினாக்களை மட்டுமே அர்த்தம் கண்டறிந்து எழுதுவர். அதேபோல்,ஆங்கிலவழி கற்ற தேர்வர், ஆங்கிலவழி உள்ள வினாக்களை புரிந்து கொண்டு எழுதுவர். இரண்டிலும் மாற்றி மாற்றி வெவ்வேறு அர்த்தத்திலும், சிலது சரியாகவும், எழுத்துப்பிழையுடனும், சில வினாக்கள்கேட்கப்பட்டதால், 'சென்டம்' மதிப்பெண் எடுக்கும் தேர்வரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. 'மருத்துவபடிப்புக்குச் செல்லும் மாணவருக்கு, உயிரியல் பாடம் முக்கியமானது என்பதால், அதில், சென்டம் எடுத்தாகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதில் பல வினாக்கள் குளறுபடியாக உள்ளதால், சென்டம் எடுப்பது குறைந்துவிடும். பிழையான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக