ஏப்., 24ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்காக, பள்ளிகளில் ஓட்டு பதிவு நடத்த, ஓட்டுச்சாவடி அதிகாரி மற்றும் அலுவலர்கள், ஏப்., 22 ல், பள்ளிக்கு வர துவங்கி விடுவர். இதன் காரணமாக, மாணவர்களின் படிப்பு மற்றும் தேர்வுகள் பாதிக்க கூடாது என்பதற்காக, ஏப்., 16 க்குள், தேர்வுகள் நடத்தி முடிக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதற்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளை திறக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக