ஞாயிறு, 23 மார்ச், 2014

பிளஸ்–2 :நாளை ( 24.03.14 ) விடைத்தாள்களில் விடைத்தாள்கள் திருத்தும்பணிதொடங்கப்பட உள்ளது . மே முதல் வாரம்தேர்வு முடிவு வெளியாகும் !

பிளஸ்–2 விடைத்தாள்கள் திருத்தும்பணிதொடங்கப்பட உள்ளது . தேர்வு விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்து மே முதல் வாரத்தில் முடிவு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள்இயக்குனர்கு.தேவராஜன் தெரிவித்தார்.

பிளஸ்–2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு 25– ந்தேதி முடிவடைகிறது. தொழில் கல்விக்கு தேவையான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய தேர்வுகள் முடிவடைந்துவிட்டன.

தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான முதன்மைத்தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வர்கள் விடைத்தாள்களை கடந்த 21 ம் தேதி முதல் திருத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்து மதிப்பெண் பதிவு செய்யும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவுரைகளையும்.குறும்படம் மூலம் பயிற்சியினையும் முகாம் அலுவலர்கள் வழங்கினர்.

நாளை ( 24.03.14 ) பிளஸ்–2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் உதவித்தேர்வர்கள் திருத்தும்பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது அதற்கான அறிவுரைகள் உரிய முறையில் முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அரசு தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. .உதவித்தேர்வர்களுக்கான பயிற்சிக்குப் பின்னர் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி முழுவீச்சில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் கூறுகையில் பிளஸ்–2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்பணி தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் 24–ந்தேதி தொடங்குகிறது. விரைவாகவும், விவேகமாகவும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்களிடம் சொல்லி இருக்கிறோம். அவர்கள் விரைவாக மதிப்பீடு செய்தால் நல்லது. மே மாதம் முதல்வாரத்தில் எப்படியும் பிளஸ்–2 தேர்வு முடிவை வெளியிடுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக