சனி, 15 மார்ச், 2014

தேர்வுத்துறைக்கு சபாஷ் !

சாலை விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்,மருத்துவமனையில் கணிததேர்வு எழுதினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 கணித தேர்வு எழுத, அஜீத் குமார் என்ற மாணவர், தன் பைக்கில் நண்பர்கள், சீனு, சுந்தரமூர்த்தியுடன் சென்றுக் கொண்டிருந்தார்.மேலக்கொந்தை சாலை பிரியும் இடத்தில், பைபாஸ் சாலையைக் கடக்க முயன்ற போது, மாருதி கார், பைக்மீது மோதியது. இதில், மூவரும் காயமடைந்தனர். சீனுவிற்கு கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்; மற்ற இருவரும் முதலுதவி பெற்று, தேர்வு மையம் சென்றனர். விபத்தில் மாணவன் காயம்அடைந்தது குறித்து, தென்பேர் பள்ளி தலைமை ஆசிரியர், சி.இ.ஓ.,விற்கு தகவல் தெரிவித்தார். மாணவன் நிலை குறித்து, மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனை தனி அறையில், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் கணித ஆசிரியை இந்திரா உதவியுடன், மாணவன்சீனு தேர்வு எழுதினார். மாணவன் உடல் நிலை கருதி, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி தரப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக