திங்கள், 17 மார்ச், 2014

முன்கூட்டியே ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்?

ப்ளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 21ம் தேதி துவங்க உள்ளதாக தமிழக
தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள்களை 10 நாட்களுக்குள் திருத்தி முடிக்க
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மதிப்பெண் மதிப்பீட்டில் எந்த தவறும் நடக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்தஆண்டை விட முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக