வெள்ளி, 28 மார்ச், 2014

இலவச இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் : அரசு பதிலளிக்க இறுதி வாய்ப்பு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச இடங்களுக்கு விண்ணப்பிக்க, "கட் - ஆப்'
தேதி நிர்ணயித்ததை எதிர்த்த வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்க, கடைசி வாய்ப்பாக, ஒரு வாரகால அவகாசத்தை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிஉள்ளது.

சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, "பாடம்' நாராயணன் தாக்கல் செய்த, கூடுதல் மனு: இலவசமற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை, சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என, கடந்த ஆண்டு,ஏப்ரலில், பள்ளிக்கல்வித் துறை, ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், "25 சதவீத இடங்களுக்கு, மே 3ல் இருந்து,9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் மட்டுமே,பெற்றோருக்கு அவகாசம் வழங்கியது. விண்ணப்பம் பெற்று நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதில்,இரண்டு நாட்கள், வார விடுமுறை வந்து விடுகிறது. கர்நாடகாவில், கல்வித் துறை வகுத்த விதிகளின்படி, 25
சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தர வால், 69 சதவீத மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை, 2013 - 14 கல்வியாண்டில் இழந்துள்ளனர்.எனவே, தமிழக அரசு, "கட் - ஆப்' தேதி நிர்ணயித்து பிறப்பித்த அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இந்தமனு மீது, முடிவெடுக்கும் வரை, 25 சதவீத இடங்களை நிரப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. "அரசாணையை எதிர்த்து, கடந்த ஆண்டு தாக்கல் செய்தமனுவுக்குப் பதிலளிக்க, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்பியும், பதில் மனு தாக்கல் செய்யவில்லை' என, நாராயணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய,கடைசி வாய்ப்பாக, ஒரு வார கால அவகாசத்தை, அரசுக்கு வழங்குவதாக, "முதல் பெஞ்ச்' தெரிவித்தது;விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக