வியாழன், 20 மார்ச், 2014

பத்தாம் வகுப்பு , "தட்கல்' :இன்று முதல், 22 வரை, செய்முறை தேர்வு

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, "தட்கல்' திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள்,தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, இன்று, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வுத்துறை அறிவிப்பில், " www.tndge.in' என்ற இணையதளத்தில், "தட்கல்' என்ற பகுதியை, "கிளிக்' செய்து, ஹால்டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை, பதிவு செய்ய வேண்டும். தட்கல் திட்ட மாணவர்களுக்கு, இன்று முதல், 22 வரை, செய்முறை தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட் மற்றும் செய்முறை பதிவேடு நோட்டுடன், செய்முறை பயிற்சி பெற்ற மையங்களுக்கு சென்று, செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக