ஞாயிறு, 23 மார்ச், 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாளை ( 24.03.14 ) உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். இந்தாண்டு தேர்தல்நடத்தை விதி அமலில் உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயிற்கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக