தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 26–ந் தேதி நடத்த இருந்த குரூப்–1 தேர்வை ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி நடத்த இருந்த குரூப்–2 ஏ தேர்வு, தேர்தல் காரணமாக ஜூன் 29–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்–1, குரூப்–2, குரூப்– 2 ஏ, குரூப்–4 ஆகிய தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது.
குரூப்–2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வாகும். குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது தேர்தல் காரணமாக ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி குரூப்–2 ஏ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16–ந் தேதி நடைபெறுவதால், அதைத் தொடர்ந்து மே 18–ந்
தேதி நடைபெறுவதாக இருந்த குரூப்–2 ஏ தேர்வு ஜூன் மாதம் 29–ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக