பிளஸ் 2பொதுத்தேர்வு, நேற்று துவங்கியது மொழி முதற்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததாக,மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும்புதுச்சேரி யில், பிளஸ் 2பொதுத்தேர்வு, நேற்று துவங்கியது.8.26 லட்சம் மாணவ, மாணவியர்,உற்சாகமாக தேர்வில் பங்கேற்றனர்.நேற்று நடந்த, மொழி முதற்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததாக,மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 2,210 மையங்களிலும், புதுச்சேரியில்,32 மையங்களிலும், நேற்று,மொழி முதற்தாள் தேர்வு நடந்தது. காலை, 10:15க்கு துவங்கிய தேர்வு, பகல்,1:15க்கு முடிந்தது. "பார்கோடிங்' : இந்த தேர்வில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளன. பெயர், பாடத்தின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை, கையால் எழுதும்போது, பல மாணவர்கள், தவறு செய்தனர். இது போன்ற பிரச்னை ஏற்படுவதை, முற்றிலும் தவிர்க்கும்
வகையில், தேர்வுத் துறையே, அனைத்து தகவல்களையும் அச்சிட்டு, மாணவர் புகைப்படம், "பார்கோடிங்' முறை என, பல திட்டங்களை, இந்த தேர்வில் அமல்படுத்தி உள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய, விடைத்தாள் முதல்பக்கத்தில், மாணவர்கள், கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்ற நிலை இருந்தது.
நேற்று, மாணவர்களுக்கு, விடைத்தாள் வழங்கியதும், அதன் முதல் பக்கத்தில், கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு,நேரடியாக, விடை எழுத ஆரம்பித்தனர். சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,தேர்வை முடித்து ?வளியே வந்த மாணவ, மாணவியர், "மொழித்தாள் தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது' என,உற்சாகமாக கூறினர். இந்த மையத்தில், 565 மாணவ, மாணவியர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 11
மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆனதாக, மைய அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, தனித் தேர்வு மாணவர்கள் தான், "ஆப்சென்ட்' ஆவர். ஆனால், "ரெகுலர்' மாணவர்கள், 11 பேர், தேர்வுக்கு வராதது, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனினும், எவ்வித குழப்பமும் இல்லாமல், முதல் தேர்வு நடந்து முடிந்தது.
ஏன் இந்த பாகுபாடு? :
தேர்வு அறைக்குள், மாணவர்கள், "ஷூ' மற்றும் செருப்பு அணிந்து செல்ல, தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய, மாணவ,மாணவியர் அனைவரும், "ஷூ' மற்றும் "செப்பல்' ஆகியவற்றை, அறையின் வாயிலில், கழற்றி வைத்து, அறைக்குள் சென்றனர். ஆனால், இந்த விதிமுறை, பல தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், "விதிமுறை, அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கும்
பொருந்தும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும், தேர்வு அலுவலர், பணியாளர் அனைவரும், தேர்வுத் துறையின் விதிமுறையை, 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும்' என்றார்.
தமிழ் தேர்விலும் "பிட்' -- ஏழு மாணவர் சிக்கினர் : நேற்று நடந்த, பிளஸ் 2 மொழி முதற்தாள் தேர்வில், "பிட்'அடித்து, ஏழு மாணவர், பறக்கும் படையிடம் சிக்கினர். "தேர்வில், முறைகேடு செய்ய வேண்டாம்' என, தேர்வுத் துறை, வலியுறுத்தி உள்ளது. முறைகேடால் ஏற்படும் விளைவை, ஆசிரியர்களும்,மாணவர்களுக்கு விளக்குகின்றனர். ஆனாலும், தேர்வில் முறைகேடு நிற்கவில்லை. குறிப்பாக, தனித் தேர்வு மாணவர்கள், அதிகளவில், "பிட்' அடித்து சிக்குகின்றனர். நேற்று நடந்த, தமிழ் முதற்தாள் தேர்வில்,திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில், தலா, இரு மாணவர்; வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில், தலா, ஒரு மாணவர்; காரைக்கால் பகுதியில், ஒரு மாணவர் என, ஏழு மாணவர், பறக்கும் படைகளிடம் சிக்கியதாக,தேர்வுத் துறை தெரிவித்தது. ஏழு பேரில், ஆறு பேர், தனித் தேர்வு மாணவர்; ஒருவர், "ரெகுலர்' மாணவர்.
எதிர்பார்த்த வினாக்களால் மகிழ்ச்சி:
பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியர் கருத்து : "பிளஸ் 2 தமிழ் முதல் தாளில், எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெற்றதால் எளிதாக இருந்தது' என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். மதுரைமாணவர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது: எம்.ஜெயலட்சுமி (மாணவி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை): எதிர்பார்த்த வினாக்கள்இடம் பெற்றன. ஒன்று மற்றும் இரண்டு மதிப்பெண் பகுதிகளில், பாடத்தின் பின் பகுதியில் இடம் பெற்ற
வினாக்களே கேட்கப்பட்டன. மனப்பாடப் பகுதியில், திருக்குறள், கம்பராமாயணம்(?) பகுதிகள் கேட்கப்பட்டன. இரண்டு பகுதியுமே பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிந்தவை. இலக்கணப் பகுதியும்எளிதாகவே இருந்தது.
டி.ஆர். லட்சுமி (மாணவி, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி):"புளு பிரின்ட்' அடிப்படையில் தான்அனைத்து கேள்விகளும் இடம்பெற்றன. திருப்புதல் தேர்வு, பள்ளியில் நடந்த சிறப்பு தேர்வுக்கானவினாத்தாள்களில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. எளிதாக இருந்ததால், விரைவாக தேர்வு எழுதமுடிந்தது. திருப்பிப் பார்ப்பதற்கு அதிக நேரம் இருந்தது. முதல் தேர்வு எங்களுக்கு மகிழ்ச்சியாகஅமைந்துள்ளது. அதிக மதிப்பெண் பெறுவேன்.
எ.கவிதா (தமிழாசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை):செய்யுள் மற்றும் இலக்கணப்பகுதிகளில் இருந்து "புளு பிரின்ட்' அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. மறுமலர்ச்சி மற்றும்திருக்குறள் பகுதியில் இருந்து மனப்பாடம் பகுதி கேட்கப்பட்டதால், மாணவர்கள் எளிதாக எழுதினர். இலக்கணப்பகுதி யில், இலக்கணக் குறிப்பு, புணர்ச்சி, பகுபத உறுப்பிலக்கணம், திணை போன்ற எளிதான வினாக்கள்கேட்கப்பட்டன. சாதாரண மாணவர்களும், இப்பகுதியில் 22 மதிப்பெண் உறுதியாக பெற முடியும். செய்யுள்
பகுதியில், வாழ்த்து, தொகை நூல், சிற்றிலக்கியம், மறுமலர்ச்சி, வழிபாட்டுப் பாடல்கள் என, அனைத்துப் பகுதியிலும் சரிவிகிதத்தில் வினாக்கள் இடம் பெற்றன. கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக