மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் சீரிய தலைமையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மிளிரும் இவ்வேளையில் அதற்கு உறுதுணையாக கீழ்கண்ட கோரிக்கை பணிந்து அனுப்பப்படுகின்றது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன எனத்தெரியவருகின்றது. அவை நிரப்பப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவர்.2015-16 ஆம் கால்வியாண்டு கூடுதலாக மேனிலை வகுப்புகளில் சேர்க்கை நடைபெற்றுள்ளதால் அதற்கேற்ப பள்ளிகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டுகிறேன். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்களும் பயனடையும் வகையில் போட்டித் தேர்வு மூலம் 1062 முதுகலை ஆசிரியர்கள் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 2 (டி) எண் 24 நாள் 10.02.2016 மூலம் அனுமதி வழங்கப்பட்டது. 1600 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவிப்பினை நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன.ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புகள் வெளிவரவில்லை. எனவே காலியாக உள்ள முதுகலை பணியிடங்களை நிரப்பப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிந்து வேண்டப்படுகின்றது.
முதுகலை ஆசிரியர் பணிநியமனக் கோரிக்கையினை முதலமைச்சர் தனிப்பிரிவு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிநியமனக் கோரிக்கையினை முதலமைச்சர் தனிப்பிரிவு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக