புதன், 30 ஜூலை, 2014
FLASH NEWS :110விதியின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கான முதல்வரின் முக்கிய அறிவிப்பு
செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாதமாநிலம் தமிழகம் என்றகுறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில்,கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
# கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர்இடைநிலை ஆசிரியர்என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய
உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய்செலவு ஏற்படும்.
# 2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர்சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கபபள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள்தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
# கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக,சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப்பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம்நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
#கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகநிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ்,வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும்நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும்பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய்அரசுக்கு செலவு ஏற்படும்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து:10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளையில், இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்னர் 94 குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்பார்த்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலை முதலே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் குவிந்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர், மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர். | படிக்க - கும்பகோணம் தீ விபத்து வழக்கின் தீர்ப்பு வேதனையளிக்கிறது: பெற்றோர் குமுறல் |
ஜூலை 16, 2004-ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சத்துணவு சமையலறையில் தீப்பிடித்து, பள்ளியின் முதல் மாடிக்குப் பரவியதில், அங்கு கூரை வேயப்பட்ட நீண்ட வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் கடும் தீக் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர விபத்துதான் பள்ளிகளின் பாதுகாப்பு நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.
இங்கு, ஒரே சிறிய கட்டிடத்தில் 3 பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. விபத்துக்குப் பிந்தைய கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு மாறி மாறிச் சென்று, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில், அரசு அதிகாரிகள் 3 பேர் தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் 10-வது எதிரியான மாவட்டக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன் றத்தில் மனு செய்தபோதுதான், இந்த வழக்கு இன்னும் முடிவடை யாமல் உள்ளது உச்ச நீதி மன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2012, செப்.12 முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரிகள் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் குறித்தும், சாட்சிகளிடமும் விசாரணை செய்தார்.
501 சாட்சியங்கள்
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் 15,000 பக்கங்களும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் 5,000 பக்கங் களும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
மொத்தமுள்ள 501 சாட்சியங்களில், இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உயிர் பிழைத்த குழந்தைகள் உள்ளிட்ட முக்கியமான 230 சாட்சியங்களிடம் நடைபெற்ற நீண்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னட் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் குற்றவாளிகள்:
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி, பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
விடுதலையானோர் விபரம்:
தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, அப்போதைய தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
TRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்
பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ''இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்'' என்றார்.
கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு
I started hearing this case on 15.07.2014 (that day the Advocates
were on court boycott). I found the petitioner a woman and a school
teacher appearing before me with the folded case bundle in her hands like
the anklet in the hands of Kannagi - the heroine of Silapathikaram, one of
the five great epics of Tamil Literature, her eyes filled with tears; she
declared in a meek voice, I have a complaint, where can I go except coming
to this Court which has a tradition of justice? Uphold justice and undo the
grave injustice done to me. I have been suffering for the past two years.
She placed point after point, like an experienced Advocate, exposing the
injustice caused to her. I was amazed. I consoled her and advised her to be
bold to fight against any injustice. The case was adjourned at the request
of the learned Government Advocate to get further instructions from the
respondents. I was extremely happy that the people, more particularly the
common man, have immense faith in the judiciary. The appearance of the
petitioner in person seeking justice and the narration of her woes and
sufferings is a caution to all the stakeholders in the justice delivery
system that Fail not to do timely justice.
2.Today, again she appeared. Her grievances are as follows:
The petitioner is presently working as B.T.Assistant in
Mathematics Subject at Government High School, Puluthipatti in Sivagangai
District. Her native place is Madurai District. Stating certain genuine
reasons, the petitioner submitted an application on 26.04.2012 seeking
transfer to any one of the schools in Madurai District. The said application
was entertained and she was permitted to participate in the transfer
counselling conducted by the Chief Educational Officer, Madurai, on
24.07.2012. The petitioner had chosen the post of B.T.Assistant in
Mathematics Subject at Government High School at Tiruppalai in Madurai
District. The 7th respondent was previously working in Sevalpatti Government
High School, Trichy District. She also participated in the transfer
counselling. Since the petitioner being the senior, opted the post at
Government High School, Tiruppalai, Madurai District. It was accepted by the
Chief Educational Officer, Madurai and accordingly he issued an order of
transfer, to the petitioner, transferring her to Government High School at
Tiruppalai, as per order in Na.Ka.No.4938/A4/2012, dated 24.07.2012.
3.Having armed with the said order, when the petitioner
approached the Headmaster of the Government High School at Puluthipatti,
Sivagangai District, the petitioner was informed that there was no
instruction to relieve her. When she approached the Chief Educational
Officer, Sivagangai District, she was informed that from the Chief
Educational Officer, Madurai District, the order of transfer dated
24.07.2012, had not been received. As a result, the petitioner was not
relieved from Sivagangai District so as to enable her to join duty at the
Government High School at Tiruppalai in Madurai District.
4.While so, the Joint Director (Personnel), School Education
Department, Chennai-6, by his proceedings in Na.Ka.No.32714/C3/E2/2012, dated
02.08.2012, transferred the 7th respondent from Government High School at
Sevalpatti, Tiruchirappalli District, to the Government High School at
Tiruppalai in Madurai District, as against the vacancy against which the
petitioner had earlier been transferred in the transfer counselling. Armed
with the said order of the Joint Director, the 7th respondent approached the
Chief Educational Officer, Madurai and the other officials and wanted to join
duty as B.T.Assistant in Mathematics in Government High School at Tiruppalai.
On knowing this, the petitioner raised objection in person. She also sent
telegrams and representations to various authorities. But, the same were not
considered. Instead, the 7th respondent was permitted to join duty at the
Government High School at Tiruppalai, as a result, the petitioner was neither
relieved from the Sivagangai District nor allowed to join duty at Tiruppalai
Government High School in Madurai District. She was, thus, forced to
continue to work in the Government High School at Puluthipatti in Sivagangai
District. Since all her efforts, by means of a number of representations to
the higher authorities, proved futile, she was forced to file the present
writ petition on 05.12.2012.
5.When this writ petition came up for hearing on 07.12.2012, the
learned Additional Government Pleader took notice for the respondents 1 to 3
and 5 and 6. The petitioner was directed to take out notice to the 7th
respondent. Accordingly, notice was take. On 05.07.2013, the writ petition
was admitted by this Court. Thereafter, the writ petition came-up for
hearing atleast for 10 hearings, on various dates.
6.The 3rd respondent has filed counter on 02.01.2013. In the
counter, the 3rd respondent has virtually blamed the petitioner for not
having reported for duty in the Government High School at Tiruppalai. The
crux of the counter is that it is true that the petitioner participated in
the transfer counselling and accordingly transfer order was issued by the 3rd
respondent as early as on 24.07.2012 itself, transferring her to the 6th
respondent school. But, the petitioner did not join at the transferred
school till 22.08.2012, i.e. for about 29 days. The counter further proceeds
to state as follows:
In normal practice the person who has been issued with the transfer
order should join to the concerned post within a week as per prevailing rules
and conditions. If the concerned person has not joined to the transfer post
within the time, he should intimate the same with the authorities concerned.
But the petitioner miserably failed to send any intimation to the officials
regarding the delay in joining the post at the 6th respondent school. .... IN
the meanwhile the 7th respondent who was working as B.T.Assistant
(Mathematics) at Government Higher Secondary School, Sevalpatti, Trichy
District, had approached the 6th respondent school with a transfer order as
well as the relieving order and therefore she was allowed to join.
7.The 7th respondent has filed a counter affidavit stating that
narrating the family circumstances, she approached the Joint Director with a
request and considering her case the Joint Director had issued the transfer
order. Therefore, the 7th respondent has tried to justify her transfer to
the Government High School at Tiruppalai in Madurai District.
8.I have considered the above. In my considered opinion, the
counter of the 3rd respondent, I should say, with regret, is so reckless and
highly misleading. It is not as though the petitioner was responsible for
not reporting for duty at the transferred place. It is also not as though
the petitioner did not intimate the higher authorities that she was not
relieved by the School Headmaster where she was working. The fact remains
that she was not relieved by the Headmaster of Puluthipatti Government High
School in Sivagangai District, for which petitioner cannot be blamed. Even
now there is no explanation offered as to why the transfer order issued to
the petitioner was not duly intimated by the third respondent to the Chief
Educational Officer, Sivagangai District and the Headmaster of the Government
High School at Puluthipatti. I am sure, had it been intimated, certainly,
the Headmaster of the Government High School at Puluthipatti would have
relieved her so as to enable her to report for duty at the Government High
School at Tiruppalai. It was because of the fact that the order was not
communicated, the petitioner was not relieved and as a result she was not
able to report for duty. But, to the contrary, the petitioner is now blamed
in the counter of the 3rd respondent, which really deserves to be condemned.
9.Apart from that, the order dated 24.07.2012, issued by the
Chief Educational Officer, Madurai, transferring the petitioner to the
Government High School at Tiruppalai was not all cancelled. The moment the
said transfer order, dated 24.07.2012, was passed, the post of B.T.Assistant
(Mathematics) in the Government High School at Tiruppalai, was no more
vacant. When that be so, it is really surprising rather shocking that the
then Joint Director had transferred the 7th respondent to the Government High
School at Tiruppalai. A reading of the order passed by the Joint Director
would go to show that the Joint Director had no back file to transfer the
7th respondent. There is no reference also in the order as to whether the
same was made at the request of the 7th respondent or on any administrative
grounds. The order further states that the 7th respondent should be
immediately relieved from the Government High School at Sevalpatti but, she
should be allowed to report for duty at the Government High School at
Tiruppalai provided there was vacancy. This would only go to show that the
then Joint Director was not even aware of whether there was vacancy in the
Government High School at Tiruppalai or not. It is very strange that the
Joint Director, without even ascertaining as to whether there was any vacancy
at the Government High School at Tiruppalai and without even verifying
whether the said vacancy had been filled-up by means of transfer counselling,
has passed the order dated 02.08.2012, transferring the 7th respondent to the
6th respondent school, in an arbitrary manner. The 7th respondent, who was
not able to succeed in the transfer counselling has managed to get this
transfer order dated 02.08.2012, issued by the Joint Director. It is not
explained to me as to how the Joint Director could pass an order of transfer
when the vacancy had already been filled-up by the transfer counselling and
without even knowing the factual situation. It is because of this
transfer order, the petitioner has been put to turmoil and therefore the
blame now thown upon her in the counter is totally baseless and the same
deserves to be deprecated. The fact remains that the transfer ordered issued
to the petitioner is still in force. However, the 7th respondent has been
allowed to join duty.
10.When this writ petition came up for earing on 15.07.2014, the
petitioner, who appeared in person, projected her case expressing her
agonies. The present Chief Eduational Officer, Madurai, was also present in
Court. When he was questioned in the open Court as to how the Joint Director
could pass an order of transfer when the post had already been filled-up by
means of transfer counselling, by transferring the petitioner, he assured the
Court that he would get instruction from the Joint Director and report the
matter to this Court, today.
11.Today, when the matter was taken up, the petitioner was
present in person. She was not represented by her counsel, as today also
Court Boycott by the Advocates is going on. The present Chief Educational
Officer, Madurai, is also present. However there is no representation for
the 7th respondent and therefore I am not able to hear the stand of the 7th
respondent.
12.Today, the learned Special Government Pleader
Mr.V.R.Shanmuganathan, representing the respondents 1 to 6, would submit that
the present Chief Educational Officer, Madurai, has by his proceedings
Na.Ka.No.14328/A3/2012, dated 15.07.2014,transferred the petitioner to the
Government High School at Tiruppalai in Madurai District in tune with the
earlier order of transfer. He would further submit that the 7th respondent,
who has been all along allowed to work as B.T.Assistant in Mathematics in the
Government High School at Tiruppalai has now been transferred to the
Government Higher Secondary School in Kulamangalam in Madurai, by his
proceedings in Na.Ka.No.14328/A3/2012, dated 15.07.2014. The Chief
Educational Officer, Madurai, who is present in the Court would submit that
the 7th respondent has agreed for this transfer and she has got no grievance
regarding her transfer to the Government Higher Secondary School at
Kulamangalam.
13.The petitioner, who is present in person, would submit that
she would get relieved from the Government High School at Puluthipatti in
Sivagangai District within two days and join duty at the Government High
School at Tiruppalai in Madurai District, within next two days. The said
statement is recorded. In view of the above, no further adjudication is
required. Thus, the petitioner has succeeded in her fight for justice. I am
only hopeful that this kind of injustice would not be caused to anyone in
future by these officials.
Sent from my iPad
MADURAI BENCH OF MADRAS HIGH COURT :வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி
DETAILS OF JUDJEMENT
Pommakkal ... Petitioner
Vs.
The Teachers Recruitment Board,
... Respondent
Writ petition filed under Article 226 of the Constitution of India
praying for issuance of a Writ of Certiorarified Mandamus calling for the
records relating to the impugned order dated Nil issued by the respondent and
quash the same as illegal and consequentially to direct the respondent to
consider the petitioner for appointment to the post of Graduate Assistant
(History) for the year 2009 - 2010 taking into account the seniority of the
petitioner in the Employment Exchange.
:ORDER
The petitioner originally had Undergraduate Degree in Home Science and
B.Ed. Degree. She registered the same on the file of the local Employment
Exchange on 17.12.1987. Subsequently, she secured B.A. Degree in History in
the year 2006. Thereafter, she registered the same in the month of December
2006. Subsequently, she secured M.A. Degree in History in the year 2009.
During the year 2006, several names were sponsored by the local Employment
Exchange in Madurai District, for appointment as Post Graduate Assistant in
History. But the petitioner was not considered for being sponsored, because
the petitioner did not come within the zone of consideration. Subsequently,
during the year 2009-2010, another Recruitment Notification was issued and at
that time, the petitioner was called for certificate verification. But she
was not selected. Therefore, she is before this Court with this writ
petition, seeking a direction to direct the respondent to consider the
petitioner for appointment to the post of Graduate Assistant (History) for
the year 2009-2010 taking into account the seniority of the petitioner in the
Employment Exchange.
2.In the counter filed by the respondent, it is stated that the
petitioner suffers two disqualifications and therefore, she was not selected.
The first one is that, B.A. Degree in History had been done by her in one-
year period. According to the respondent, B.A.Degree obtained without
undergoing a course for three full years, cannot be considered for
appointment. This has been held so by this Court and the same has been
confirmed by the Division Bench. The second disqualification is, the cut-off
date for Most Backward (Women) Communal Turn, is 04.10.1990. As on
04.10.1990, the petitioner had neither B.A. History qualification, nor M.A.
History Post Graduate Degree. Therefore, as on the cut-off date, she was not
qualified for appointment.
3.Only for the above reasons, she was not selected. For the said
action, I do not find any infirmity warranting interference by this Court.
Thus, I do not find any merit in this writ petition.
4.In the result, the writ petition fails and accordingly the same is
dismissed. Consequently, the connected miscellaneous petitions are closed. No
costs.
கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.
JUDGEMENT IN DETAIL
ORDER
The Teachers Recruitment Board, Government of Tamil Nadu issued
prospectus for Recruitment of Lecturers in Tamil Nadu Collegiate Educational
Service for Government Arts and Science Colleges - 2008. In the said
prospectus, the scheme of selection is dealt with in paragraph 11, which
states that for teaching experience, the candidates will be awarded maximum
of 15 marks, for Ph.D and M.Phil. with NET qualification a total of 9 marks,
for research contribution 5 marks and for interview 10 marks and thus the
maximum marks for selection is 39. The petitioner is aggrieved by the award
of 10 marks for interview. Therefore, the petitioner has come up with this
Writ Petition, challenging the said scheme of selection (vide paragraph 11
alone).
2. I have heard the learned counsel for the petitioner and the learned
Additional Government Pleader for the respondents and also perused the
records carefully.
3. It is the contention of the learned counsel for the petitioner that
the Hon'ble Supreme Court has held in a number of judgments that marks for
interview shall not exceed 25% of total number of marks. According to the
Hon'ble Supreme Court, prescribing more marks than 15% to interview leads to
arbitrariness. It is on this ground the petitioner has challenged the scheme
of selection.
4. This Writ Petition was admitted on 10.08.2009. But, there was no
interim order of stay or any other nature. It is now brought to the notice of
this Court that the Teachers Recruitment Board had completed the selection
process and the vacancies have been filled up. When that be so, at this
length of time, the challenge made in this Writ Petition cannot be examined.
Because, in the event, this Court found the Scheme of Selection is arbitrary,
it will disturb many candidates, who have undergone the selection process.
Further, those candidates, who have been selected and appointed are not
before this Court. Without hearing them, it is not possible for this court to
examine the matter as any decision taken in this Writ Petition may have
adverse impact on those candidates. In such view of the matter, the Writ
Petition deserves only to be dismissed.
5. In the result, the Writ Petition is dismissed. No costs.
Consequently, connected M.P.(MD) No.2 of 2009 is also dismissed.
TET PAPER I : 887 பேர் மட்டுமே பணி நியமனம்
கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக,இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ளநிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
885 ஆசிரியர் பயிற்றுனர்களை (BRTE) பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். மதுரை ஐகோர்ட் கிளையில்தாக்கல் செய்த மனு:
நான் அனைத்து வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கபொதுச் செயலாளர். தமிழகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமையமேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுனர்கள் என 4582 பேர் பணியாற்றுகின்றனர்.
2006ல் அரசு உத்தரவில், ஒவ்வொரு ஆண்டும் 500 ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகளில் ஏற்படும்
காலியிடங்களில் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2011 வரை இந்நியமனம் பின்பற்றப்பட்டது. ஆனால், 2012 -13ல் 115 பேர் மட்டுமே அவ்வாறு நியமனம் செய்யப்பட்டனர். மீதியுள்ள 385பேருக்கும், அடுத்த ஆண்டுக்கான 500 பேர் உட்பட மொத்தம் 885 பேர்நியமிக்கப்படவில்லை. எனவே அவர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இதற்கிடையில் ஆசிரியர்
தேர்வு வாரியம் நேரடி நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை 14ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நியமனஅறிவிப்புஎங்களை பாதிக்கும். எனவே அதை ரத்து செய்ய வேண்டும். 885 பட்டதாரி ஆசிரியர்களை நியமித்த பின்னர் ஏற்படும் காலியிடங்களில் அவர்கள் தெரிவித்துள்ள நியமனத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு மனுவில்தெரிவிக்கப்பட்டது.
இம்மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி, நியமனங்கள் வழக்கின் இறுதித்தீர்ப்பை பொறுத்து அமையும். இதுதொடர்பாக கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டார்.
செவ்வாய், 29 ஜூலை, 2014
மெய்ப்பாட்டியலில் வளரும் காதல்
மெய்ப்பாட்டியலில் வளரும் காதல்
காதலினால் மானுடர்க்குக் கல்வி உண்டாம்; கவலை தீரும்; கவிதை உண்டாம்; கலைகள் உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர் உலகத் தீரே என்றான் பாரதி. காதல் இல்லா மனிதன் மிருகத்திற்குச் சமமானவன். தமிழர் வாழ்வும் பண்பாடும், காதலையும் வீரத்தையும் தழுவி நிற்பதாகும். அவற்றை இரு கண்களாக மதித்துப் போற்றினர் என்பதற்கு அவர்களின் இலக்கியங்களே சான்று. இவற்றிற்கு மேலாக வாழ்வியலைச் சொல்லப்புகும் தொல்காப்பியர், களவின் நிலைகளையும், அற்கானக் காரணத்தையும், களவில் ஒழுகும் தலைமக்களின் இயல்புகளையும் அவர்களின் மன உணர்வுகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். அவ்வாறு கூறிய செய்திகளில் தலைமகளுக்கு ஏற்படும் காதல் இயல்புகளையும் அதன்வழி, அவளின் அவத்தைகளையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.களவும் மெய்ப்பாடும்
வடவர் திருமண முறை எட்டு; ஆனால் தமிழர் திருமண முறையோ களவின் வழி கற்பில் புகுவதாகும், ஊழ்வகையால் பிறவிதோறும் சேர்தல் என்ற நம்பிக்கையை உடையவர்கள் தமிழர்கள். எதிர்பட்டுக் களவில் ஒழுகும் தலைமக்களுக்குச் சில இயல்புகள் ஏற்படுவதாகவும், அத்தகைய இயல்புகளின் வழி அவர்களிடம் அவத்தைகள் அதாவது, மெய்ப்பாடுகள் ஏற்படுவதாகவும், தொல்காப்பியர் விளக்குகிறார். காதல் என்றால் அவத்தைத்தான், அதை தொல்காப்பியர் மெய்ப்பாடுகளாக கூறுகிறார். களவுக்காலத்தில் தலைமகளுக்கு ஒன்பது வகையான இயல்புகளும் தலைமகனுக்கு ஏழு வகையான இயல்புகளும் நிகழ்வதாக களவியலில் தொல்காப்பியர் அறிவிக்கிறார்.
மெய்ப்பாடு என்பது இலக்கியத்தில் வரும் போது மெய்ம்மைப் பாடாகிறது. மனித உணர்வு அருவம்; அதனைப் பருப்பொருட்டாக்கித் தர இலக்கியம் முயல்கிறது. மீண்டும் படிக்கும் உள்ளம் அதனை வாங்கிக் கொண்டு அருவமாகவே உணர்கிறது. மெய்ப்பட - உருப்பட - மெய்ம்மைப்படத் தோன்றிப் படிப்பவருக்குச் சென்று சேர்தற்கு உதவுதலால் இஃது மெய்ப்பாடு எனப்பட்டது.
(தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கை மெய்ப்பாடுகள். ப.53)
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும் (தொ.நூ.1460)
மெய்ப்பாடுகள் எட்டு என்றாலும், அவை விரியும் பொழுது 34 ஆகிறது. அவத்தைப் பத்தாகும். முதல் ஆறு அவத்தைகள் ஐந்திணைக்குரிய அவத்தைகளாகவும், ஏழாவது அவத்தை பெருந்திணைக்குரியதாகவும் எட்டாவது அவத்தை கைக்கிளைக்குரியதாகவும், ஒன்பதாவது மயக்கம், பத்தாவது சாக்காடாகவும் தொல்காப்பியர் கூறுகிறார். இனி களவில் தலைவியின் இயல்புகளைக் காண்போம்.
தலைவியின் இயல்புகள்
மாற்றம் என்பது மனிதத்தத்துவம். களவில் ஏற்படும் மாற்றம் மனிதனின் இயல்புகளில் குறிப்பிடத்தக்கது. பெருமையும் உரனும் ஆடுஉ மேன.... எனவும், அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்.... எனவும் கூறியவாறு உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறுபுணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்ப என்றார் தொல்காப்பியர். அந்த வழியில் களவு மேற்கொள்ளும் தலைமகன் இயல்புகள் ஏழாகவும் தலைமகளின் இயல்புகள் ஒன்பதாகவும் கூறுகிறார். இவற்றை அவத்தை என்பர். அதில் தலைவியின் இயல்புகளாக
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அல்
சிறப்புடைய மரபின் அவை களவு என மொழிப (பொருள்.களவியல்.நூற்பா.9)
என்னும் நூற்பா மூலம் உரைக்கின்றார். களவு காலத்தில் தலைமகள், தன் சிந்தனை முழுவதும் தன் தலைவனையும் காதலையுமே நினைத்திருப்பாள். அதை ஒருதலை உள்ளுதல் என்றும்; தலைவனைப் பெற வேண்டும் என்ற வேட்கையும்; அவ்வாறு தொடர்ந்து காதலை எண்ணி நினைத்திருப்பதால் உணவு மறந்து உடம்பு மெலிதல்; உறங்காமையின் காரணமாக உளறுவது; சிந்தனையின் மயக்கத்தால் நாணத்தை மறத்தல், எதைக் கண்டாலும் தன் தலைவனின் அங்க அடையாளங்கள் போல் தோன்றல் பித்துப்பிடித்தது போல் இருத்தல்; மோகத்தின் காரணமாக மயக்கமாதல், எண்ணமெல்லாம் நிறைந்து சிந்தனையின் முடிவில் இறத்தல் போல்வன தலைவிக்கான களவுகால இயல்புகளாம். இந்த இயல்புகள் அவத்தைகள் என்று கொள்ளப்பட்டாலும் மெய்ப்பாட்டியலில் ஐந்திணைக் குரிய மெய்ப்பாடுகளைப் பத்து அவத்தைகளுள் ஆறு அவத்தைகளைத் தனியாக கூறுகிறார்.
களவின் அவத்கைள்
மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் முதலில் அகத்திணைக்கும், புறத்திணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகளைச் சொல்லி, பின் அகத்திற்கே உரியனவற்றை உணர்த்துகிறார். அவத்தைகளாகச் சொல்லும் பத்தில் பெண்பாலருக்கு உரியனவும் உள்ளன. ஆண் பாலுக்கும் உரியனவும் உள்ளன. களவியலில் தலைவியின் களவு கால இயல்புளைக் கூறிவிட்டு இங்கு அவளின் அவத்தைகளைச் சொல்கிறார். பத்து அவத்தைகளின் முதல் புணர்ச்சிக்குமுன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப்பின் நிகழும் மெய்ப்பாடுகள், களவிற்கும் கற்பிற்குமுரிய மெய்ப்பாடுகள் வரைந்து எய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகள் கற்பிற்குரிய மெய்ப்பாடுகள் என விரித்துரைக்கின்றார்.
களவொழுக்கத்தில் பெண்களின் இயல்பு மாற்றங்கள் அவத்தைகளாகக் கொள்கிறார் தொல்காப்பியர். காதல் ஏற்பட்டால் தலைமகள் தன் காதலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்தாலே அவள் செயலாகயிருக்கும். அதன் நிமித்தமே அவள் இயல்புகள் மாறுகின்றன. தலைவனுக்கும் கூட தன் இயல்பு வெளிப்படாவண்ணம் அவள் நடந்துகொள்வாள். தொல்காப்பியர் இந்த நிகழ்வுகளையே முதல் அவத்தையாகக் கூறுகிறார். அதை,
"புகுமுக புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவு பிறர்க் கின்மையொடு"
(தொல்.மெய்.நூ.257) என வரும் நூற்பா விளக்கும்.
அடுத்து, தலைமகள் காதலின் காரணத்தால் தன் அழகை மேன்படுத்துவாள். எதைச் செய்தாலும் நன்றாகயிருக்கவேண்டும். என்பதற்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வாள். கூந்தலை வரிப்பதும் கட்டுவதும் காதணிகளைக் களைவதும் அணிவதும், முறையாக அணிந்துள்ள அணிகளைச் சரிபார்ப்பதும், ஆடையைக் குலைந்து உடுத்தலுமாகிய செயல்களில் ஈடுபடுவாள். இதை தலைவியின் இரண்டாம் அவத்தையாகக் கூறுகிறார். இரண்டாம் அவத்தையின் கண்ணும் நேரில் தலைவனைப் பார்க்காவிடத்து அவள் செய்யும் செயல்களைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். இதை,
கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்ந்து உடுத்தல்..... (தொல்.மெய்.258) என்ற நூற்பா விளங்கும்.
இனி, நேரில் தலைமகனைப் பார்த்தவிடத்து அவள் செய்யும் செயல்களை,
அல்குல், தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு...... (தொல்.மெய்.நூ.259)
என்னும் நூற்பா வழி உணர்த்துகிறார். தனது இல்லத்தின் பெருமைகளைப் பேசி அவள் செய்யும் செய்கைகளை இவ்விடம் காணலாம். தலைமகனும் தலைமகளும் சந்திக்குமிடத்தில் இவை நிகழும் என தொல்வழி அறியலாம்.
மேற்கண்ட மூன்று கட்ட அவத்தைகளும் தலைவனோடு புணர்த்தலுக்கு முன் நடக்கும் அவத்தைகளாம்.
புணர்ச்சிக்குப்பின் தலைமகளிடத்தில் காணும் அவத்தைகளைப் பின் விளக்குகிறார். அதில் இடந்தலைப்பாடு காரணமாக தலைமகள் அலருக்கு நாணுதல் போன்ற செயல்களைக் காணலாம்.
பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் (தொல்.மெய்.நூ.260)
கொடுப்பவை கோடல்....
என்ற நூற்பா அவற்றை விளக்கும்.
ஐந்தாம், அவத்தையாக, காதலின் காரணமாக தலைமகனையே எந்தநேரமும், நினைத்திருப்பதால் தலைமகளானவள் தன் விளையாட்டை மறக்கிறாள். அலர் காரணமாக தலைவனை மறைவாக காணுதல் தலைமகனைக் காணாதவிடத்து உள்ள சோகத்தை அவனை கண்டவுடன் மறத்தல் பன்முறை ஆராய்ந்து புணர்ச்சிக்கு உடன்படல் போல்வனற்றைத் தொல்காப்பியர் கூறுகிறார். இதை,
தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தல்.... (தொல்.மெய்.நூ.261)
தலைமகன் மேல் கொண்ட மிகுந்த காதலால் தலைமகனின் கோலம் அழித்தலோடு, தன் கோலத்தையும் அழித்துக்கொள்ளுதல், அலரின் காரணமாக, தலைமகள் தலைமகனைச் சந்தேகப்பட்டுக் கலக்கமுற்றுக் கூறல் போல்வனவற்றை,
புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தல்....... (தொல்.மெய்.நூ.262)
என்ற நூற்பா கூறுகிறது. இவை ஆறாம் அவத்தையாம்.
அடுத்து வருகின்ற அவத்தைகளைத் தொல்காப்பியர் அகத்திணைக்குக் கூறாமல் பெருந்திணை, கைக்கிளை உள்ளீட்டவற்றிற்குக் கூறுகிறார்.
இந்த ஐந்திணை அவத்தைகளைக் காணும் போது, காதல் கொண்ட பெண்ணின் வளர்கின்ற காதல் புலப்படும். களவின்கண் ஒரு பெண்ணின் மாறும் இயல்புகளைக் களவியலில் கூறிவிட்டு மெய்ப்பாட்டியலில் களவின் காரணமாக அவள்படும் அவத்தைகளை விவரிக்கிறார் தொல்காப்பியர். பத்து அவத்தைகளில் ஐந்திணை அவத்தைகள் பெரும்பாலும் பெண்பாலுக்குரியவனவாக அமைந்துள்ளன. களவியலில் கூறிய இயல்புகளையே ஒட்டியே மெய்ப்பாட்டியலில் அவத்தைகளாக விவரிக்கிறார். இதன்மூலம் இயல் தொடர்புக்கும் கருத்துத் தொடர்புக்கும் தொல்காப்பியர் முதன்மைத்தந்திருப்பது தெரிகிறது. அதோடு காதலின் பல நிலைகளும், அத்தகைய நிலைகளில் தலைமகளின் அவத்தைகளால் இயல்புகள் எவ்வாறு மாறுபடும் என்பதையும் தெளிவாக சொல்கிறார். தொல்காப்பியர் பொருள் மெய்ப்பாடு பற்றிப் பொதுவாக கருதினும் திணை இலக்கியமே அவர் கண்முன் நிற்கிறது. அகத்திணை மாந்தர்கள் பண்பு நலன்களை அவர்களின் தோற்றத்தின்வழி அறிகிறோம். அவர்களுடைய மன நிகழ்வுகளை அவர்களது தோற்றம், செயல், பழக்கவழக்கம் கொண்டு அறிந்து கொள்கிறோம். அந்தவகையில் இந்த பத்து வகை அவத்தைகள், களவில் ஈடுபடும் தலைமக்களின் மன உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுவதோடு, காதலின் வளர்ச்சி நிலைகளையும் காட்டுகின்றன.
நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில்
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் :600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம்?
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர். இவர்களில் சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல் சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (CTET) அறிவிப்பு
Sent from my iPad
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 paper II :இதுவரை தேர்ச்சிசான்றிதழ் பெற்றுக்கொள்ளதவர்கள் details
TNTET BALANCE CERTIFICATE - PAPER - II | ||||||
DISTRICT : | DHARMAPURI | |||||
S.NO | CERTIFICATE NO | ROLL NO | NAME | PAPER | YEAR OF PASSING | |
1 | 13120 | 23350061 | RAJESWARI.V | II | ஜூலை-12 | |
2 | 13121 | 23350149 | VASANTHI.K | II | ஜூலை-12 | |
3 | 13123 | 23350388 | MARTIN CHRISTU DOSS.P | II | ஜூலை-12 | |
4 | 13198 | 23455553 | VANNIARASU.C | II | ஜூலை-12 | |
5 | 13440 | 23551930 | SRINIVASAN.R | II | ஜூலை-12 | |
6 | 16355 | 33350092 | NITHYA.D | II | ஜூலை-12 | |
7 | 16359 | 33350275 | RIZWANA FATHIMA.G | II | ஜூலை-12 | |
8 | 16371 | 33350383 | SARASWATHI.K | II | ஜூலை-12 | |
9 | 19383 | 12TE33350295 | MURUGESAN.R | II | அக்.-12 | |
10 | 19386 | 12TE33451091 | DEVIKA.K | II | அக்.-12 | |
Chief Educational Officer, Dharmapuri |
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 PAPER I :இதுவரை தேர்ச்சிசான்றிதழ் பெற்றுக்கொள்ளதவர்கள் PARTICULARS.
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 :இதுவரை தேர்ச்சிசான்றிதழ் பெற்றுக்கொள்ளதவர்கள் முதன்மைக்கல்வி அலுகவத்தை தொடர்புகொள்ளவும்
TNTET BALANCE CERTIFICATE - PAPER - I DHARMAPURI DISTRICT S.NO CERTIFICATE NO ROLL NO NAME PAPER YEAR OF PASSING1 18713 12TE33500802 SUMATHI.N I ஜூலை-12 2 18936 12TE33500117 AMUDHA.R I ஜூலை-12 3 18960 12TE33501194 VIMALA.G I ஜூலை-12 4 7008 12TE33350246 VENKATACHALA REDDY.G I ஜூலை-12 5 7019 12TE33350316 MUNIRAJ.K I ஜூலை-12 6 9607 12TE33500247 SURESHBABU.R.V I ஜூலை-12 7 9672 12TE33500691 SIVAPPA.K I ஜூலை-12 8 9748 12TE33500208 SUDHA.K I ஜூலை-12 9 9833 12TE33500542 MUBEEN TAJ.M I ஜூலை-12 10 9995 12TE33500207 DEEPA.T I ஜூலை-12 11 19126 12TE13456591 SANTHOSH KUMAR.M I அக்.-12 Chief Educational Officer,
Dharmapuri